Lem'alar

The Twenty-Eighth Gleam

ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

(சில பகுதிகள் இங்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள இந்த மின்னல் முழுமையாக விரிவான மின்னல்கள் தொகுப்பில் வெளியிடப்பட்டுள்ளது.)

§2

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ وَمَا خَلَق۟تُ ال۟جِنَّ وَال۟اِن۟سَ اِلَّا لِيَع۟بُدُونِ ۝ مَٓا اُرٖيدُ مِن۟هُم۟ مِن۟ رِز۟قٍ وَمَٓا اُرٖيدُ اَن۟ يُط۟عِمُونِ ۝ اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو ال۟قُوَّةِ ال۟مَتٖينُ இந்த மறை வசனத்தின் அர்த்தம் பல்வேறு தஃப்ஸீர்களின் வியாக்கியானப்படி, உன்னதமான குர்ஆனிய அற்புதங்களை வெளிக்காட்டாமையினால், பல முறை எமது சிந்தனையில் நிழலாடியது. இங்கு குர்ஆனுடைய பேரொளியிலிருந்து வருகின்ற மிகவும் அழகிய உன்னதமான அர்த்தங்களிலிருந்து மூன்று வகையானவற்றை மாத்திரம் இங்கு சுருக்கமாக தெளிவுபடுத்துகின்றோம். முதலாவது சத்திய இரட்சகன் அல்லாஹ், தனது ரஸூலை கண்ணியப்படுத்துவதற்காகவும் கௌரவப்படுத்துவதற்காகவும், தனது ரஸூலோடு சம்பந்தப்பட்டதாக அமைய முடியுமான சில நிலைமைகளை, சில போது தன் மீது எடுத்துக்கொள்கின்றான். ஆம், இந்த இடத்திலும் கூட: “எனது ரஸூல், உங்கள் மத்தியில் புரிகின்ற ரிஸாலத் பணிக்காகவும், உங்களை உபூதிய்யத் பணியை நிறவேற்றுவதற்காக அழைக்கின்ற பணிக்காகவும் உங்களிடமிருந்து எந்தவொரு கூலியோ பிரதிபலனோ வாழ்வாதாரங்களோ வேண்ட மாட்டார்கள்.” என்ற அர்த்தத்தில் “நான் உங்களை என்னை வணங்கி வழிபடுவதற்காகவே படைத்தேன். எனக்கு நீங்கள் வாழ்வாதாரமோ, ஆகாரமோ வழங்க வேண்டும் என்பதற்காக அல்ல.” என்ற நேரடி அர்த்தத்தைக்கொண்ட வசனத்தில், ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாதுவஸ்ஸலாம் அவர்களுடைய ஆகாரமும் வாழ்வாதாரமும் நோக்கமாககக்கொள்ளப்பட்டிருப்பது அவசியப்படுகின்றது. இல்லாவிட்டால், அப்பட்டமாக அறியப்பட்ட ஒரு விடயத்தை அறிவிப்புச் செய்வதாக அமைந்து விடும். இது குர்ஆனுடைய அற்புதத்தன்மையில் பொதிந்திருக்கின்ற சொல்லாட்சிக்கு (பலாகத்) உகந்ததாக அமையாது. இரண்டாவது கோணம் மனிதர்கள் ரிஸ்க் மீது அதிக பிடிப்புள்ளவர்களாக இருக்கின்ற காரணத்தினால், ரிஸ்க்கைப் பெற்றுக்கொள்வதற்காக உழைக்கின்ற சாட்டை வைத்து, உபூதிய்யத்தை அதற்கான தடையாக சித்திரித்து, தனக்குள் ஒரு நியாயத்தைக் கட்பித்துக்கொள்ளாதிருக்க வேண்டும் என்பதற்காக மேற்படி வசனம் பின்வருமாறு கூறுகின்றது. “நீங்கள் உபூதிய்யத்திற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றீர்கள். உங்கள் படைப்பின் விளைவும் உபூதிய்யத்தே ஆகும். ரிஸ்க்கிற்காக உழைப்பதும் இறை கட்டளை என்ற வகையில் ஓர் இபாதத்தாகும். நீங்கள் எனது படைப்புக்களினதும் நான் ரிஸ்க்குகளை பொறுப்பேற்றுக்கொண்ட உங்களது நஃப்ஸினதும் உங்கள் குடும்பத்தினரதும் உங்கள் கால்நடைகளினதும் ரிஸ்க்குகளை வழங்குவதற்காக, அதாவது ஏதோ எனக்குறிய ரிஸ்க்குகளைத் தயார்படுத்துவதற்காக நீங்கள் படைக்கப்படவில்லை. ஏனெனில் ரஸ்ஸாக் நானாவேன். நீங்கள் தொடர்புபட்டிருக்கின்ற அடியார்களின் ரிஸ்க்கையும் நானே வழங்குகின்றேன். எனவே நீங்கள் இதைச் சாட்டாக வைத்து உங்களது உபூதிய்யத்தைப் புறக்கணித்து விடாதீர்கள்!” நாடப்பட்ட அர்த்தம் இதுவல்லாவிட்டால், சத்திய இரட்சகனுக்கு ஆகாரமும் வாழ்வாதாரமும் வழங்குவதில் இருக்கின்ற அப்பட்டமான அசாத்தியப்பாடு, தெட்டத் தெளிவானதாகவும் அறியப்பட்டதாகவும் இருப்பதால், அறியப்பட்ட ஒரு விடயத்தை அறிவிக்கின்ற வகைக்குட்பட்டதாக அமைந்து விடும். இல்முல் பலாகத் எனப்படுகின்ற சொல்லாட்ச்சிக் கலையில் இருக்கின்ற ஒரு மாறா விதி என்னவென்றால், ஒரு வார்த்தையுடைய அர்த்தம் அறியப்பட்டதாகவும் தெளிவானதாகவும் இருக்குமென்றால், அந்த வார்த்தையால் நாடப்படும் அர்த்தம் அதுவல்ல, மாறாக குறித்த அர்த்தம் கட்டாயப்படுத்துகின்ற அல்லது குறித்த அர்த்தத்தோடு தொடர்புபட்ட ஓர் அர்த்தமாகவே இருக்கும் என்பதாகும். உதாரணமாக, நீங்கள் ஒருவரைப் பார்த்து “நீங்கள் ஒரு ஹாஃபிஸ்” என்று கூற்கின்றீர்கள். இது அறியப்பட்ட ஒரு விடயத்தை அறிவிக்கின்ற வகையைச் சேர்ந்ததாகும். எனவே இங்கு உண்மையில் நாடப்படுகின்ற அர்த்தம் என்னவென்றால் “நீங்கள் ஹாஃபிஸ் என்பதை நான் அறிவேன்.” என்பதாகும். அதாவது “நான் அறிந்திருப்பதை அவர் அறியாதிருப்பதால் அதனை அவருக்கு அறியக்கொடுக்கின்றேன்.” என்பதாகும். ஆம், இந்த விதியின் அடிப்படையில், மேற்படி வசனம் சத்திய இரட்சகன் அல்லாஹ்வுக்கு ரிஸ்க் அளிப்பதை அசாத்தியமானதாகக் காட்டுவதன் மூலமாக சாடையாக நாடுகின்ற அர்த்தம் என்னவெனில், “ரிஸ்குகள்தனை நான் உத்தரவாதப்படுத்திய, எனக்குறியவையாக இருக்கின்ற, எனது படைப்பினங்களுக்கான ரிஸ்குகளைத் தயார்படுத்துவதற்காக நீங்கள் படைக்கப்படவில்லை. நான் போட்ட வரையறைகளுக்குள் நின்று ரிஸ்கிற்காக உழைப்பதும் ஒரு வகை இபாதத்தாகும்.” மூன்றாவது கோணம் ஸூரதுல் இஹ்லாஸில் لَمْ يَلِدْ وَ لَمْ يُولَدْ என்ற வசனத்தின் நேரடி அர்த்தமானது அப்பட்டமானதாகவும் அறியப்பட்டதாகவும் இருப்பதால், அந்த அர்த்தத்தால் கட்டாயப்படுத்தப்படுகின்ற ஒரு விடயமே இங்கு நாடப்பட்டுள்ளது. அதாவது: “பெற்றோரோ, பிள்ளைகளோ இருக்கின்ற ஒருவர் “இலாஹ்” ஆக முடியாது.” என்ற அர்த்தத்தில் ஹழரத் ஈஸா (அலை), ஹுஸைர் (அலை), மலக்குமார்கள், நட்சத்திரங்கள் மற்றும் பொய்க் கடவுள்களுக்கு வழங்கப்படுகின்ற உலூஹிய்யத் நிராகரிப்புக்குறியவை என்பதை அழுத்திச் சொல்வதற்காக ஆதி அந்தங்களை உள்ளடக்குகின்ற அர்த்தப்பாட்டில் தெளிவானதும் அறியப்பட்டதுமான لَمْ يَلِدْ وَ لَمْ يُولَدْ என்ற தீர்ப்பை சத்திய இரட்சகனாகிய அல்லாஹ் வழங்குகின்றான். சரியாக இதைப் போன்றே, எமது இந்த உதாரணத்திலும் கூட “ஆகாரங்கள் மீதும் வாழ்வாதாரங்கள் மீதும் தேவையுடைய வஸ்துக்கள் இலாஹ் ஆகவோ மஃபூத் ஆகவோ முடியாது” என்ற அர்த்தத்தில், “உங்கள் இலாஹ் ஆகிய ரஸ்ஸாகு துல் ஜலால் அல்லாஹ் உங்களிடமிருந்து தனக்கான ரிஸ்க்கை வேண்டவும் மாட்டான், அவனுக்கு ஆகாரமளிப்பதற்காக நீங்கள் படைக்கப்படவுமில்லை.” என்ற அர்த்தப்பாட்டுக்குறிய வசனம், வாழ்வாதாரங்கள் மீது தேவையுடைய, ஆகாரமளிக்கப்படுகின்ற வஸ்துக்கள், மஃபூதிய்யத்துக்கு லாயக்கற்றவையாகும். ஸஈத் நூர்ஸி

§3

ரஃபத், اَوْ هُمْ قَائِلُونَ சங்கை மிக்க வசனத்திலிருக்கின்ற قَائِلُونَ என்ற சொல்லின் அர்த்தத்தைப் பற்றிய ஆவலில் என்னிடம் கேட்டதால், சிறைச்சாலையில் சுபுஹுத் தொழுகையின் பின்னர் பிறரைப் போன்று தூங்குவதால் ஏற்படுகின்ற சோம்பல் காரணமாக, அவருடைய வைரப் பேனாவும் தளர்வடைந்துவிடக்கூடாது என்பதற்காக அவருக்கு இதை எழுத வைத்தேன். சிறு தூக்கம் மூன்று வகைப்பட்டதாகும். முதலாவது غகைலூலாத் தூக்கமாகும். இது ஃபஜ்ருடன் ஆரம்பித்து கராஹத்துடைய நேரம் முடிவடையும் வரையிலாகும். இந்தத் தூக்கம் ஹதீஸின் அடிப்படையில் ரிஸ்கில் குறைபாடு ஏற்படுவதற்கும் பரக்கத் நீங்குவதற்குமான காரணியாக இருப்பதால் சுன்னத்திற்கு முரனானதாகும். ஏனெனில் ரிஸ்கைத் தேடுவதற்கான உழைப்பை ஆரம்பிப்பதற்கான மிகப் பொருத்தமான நேரம், இதமான அந்த நேரமாகும். அந்த நேரம் கடந்த பின்னர் ஒரு சோம்பல் தொற்றிக்கொள்ளும். இது அந்த நாளைக்குறிய உழைப்பிலும், அதன் காரணமாக ரிஸ்கிலும் பாதிப்பை ஏற்படுத்துவதைப் போன்றே பரக்கத் நீங்குவதற்கான காரணியாகவும் அமையும் என்பதற்கு ஏராளமான அனுபவங்கள் சான்றாக உள்ளன. இரண்டாவது ஃபைலூலாத் தூக்கமாகும். இது அஸர் தொழுகைக்குப் பிறகு மஃரிப் தொழுகை வரையுள்ள நேரமாகும். இந்தத் தூக்கம் ஆயுளில் குறைபாட்டை ஏற்படுத்தும். அதாவது, இந்தத் தூக்கம் காரணமாக ஏற்படுகின்ற ஒரு வகை மயக்க நிலை காரணமாக, அந்த நாள் அரைத் தூக்க நிலையில் அதாவது தூக்க மயக்கத்தில் கழிவதால் பௌதீக ரீதியான குறைபாட்டை ஏற்படுத்துகின்றது. மாத்திரமன்றி ஆன்மீக ரீதியிலும் கூட அன்றைய நாளையின் ஆன்மீக மற்றும் லௌகீக ரீதியான விளைவுகள் பெரும்பாலும் அஸருக்குப் பிறகு வெளிப்பட ஆரம்பிப்பதால், அந்தப் பொழுதை தூக்கத்தில் கழிப்பது, அந்த விளைவுகளைக் காணாதிருக்கக் காரணியாக அமைவதால், ஒரு வகையில் ஏதோ, வாழ்க்கையில் அந்த நாள் இல்லாததைப் போன்று ஆகி விடுகின்றது. மூன்றாவது கைலூலாத் தூக்கமாகும். இந்தத் தூக்கம் சங்கைமிக்க சுன்னத்துக்களிலிருந்துமுள்ளதாகும். லுஹாவுடைய நேரத்திலிருந்து லுஹருக்குச் சற்றுப் பின்னர் வரையிலுமுள்ள நேரமாகும். இந்தத் தூக்கம், நல்லிரவில் விளித்திருப்பதற்குக் காரணமாக இருப்பதோடு, அராபியத் தீபகட்பதில் வக்துஸ் ழுஹுர் என்ற கொதிக்கின்ற வெப்பநிலை நிலவுகின்ற அந்த நேரத்தில், ஒரு சிறிய ஓய்வெடுப்பது, அப்பிரதேச மக்களுடைய பரவலான ஒரு வழக்கம் என்பதனாலும், இவை அந்த சங்கைமிக்க சுன்னத்திற்கு இன்னும் வலுச் சேர்க்கின்றன. இந்தத் தூக்கம் ஆயுளிலும் ஆகாரத்திலும் அதிகரிப்பு ஏற்படுவதற்கான காரணமாகும். ஏனெனில் அறை மணித்தியாலக் கைலூலா, இரண்டு மணித்தியால இரவுத் தூக்கத்துக்குச் சமனானதாகும். இந்த வகையில் ஒவ்வொரு நாளும் ஆயுளுக்கு ஒன்றரை மணித்தியாலங்களை அதிகமாகச் சேர்த்து விடுகின்றது. அவ்வாறே, மரணத்தின் சகோதரனான தூக்கத்தின் கையிலிருந்து ஒன்றரை மணித்தியாலத்தைப் பறித்தெடுத்து ரிஸ்கிற்காக உழைப்பதற்கான காலத்துடன் சேர்த்து விடுகின்றது. ஸஈத் நூர்ஸி

§4

اَلْفُ اَلْفِ صَلاَةٍ وَ اَلْفُ اَلْفِ سَلاَمٍ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ என்ற வசனத்தை, தொழுகைக்குப் பின்னரான தஸ்பீஹாத்தில் ஓதும்போது பிரகாசித்த ரம்மியமான ஒரு விடயத்தை தொலை தூரத்தில் கண்டுகொண்டேன். கண்ட விடயத்தை முழுவதுமாகப் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. ஓர் அடையாளப்படுத்தலுக்காக மாத்திரம் ஒரு சில வார்த்தைகளைச் சொல்கிறேன். எனக்குப் பின்வருமாறு காட்சியளித்திருந்தது. இரவுலகம், பூமிப் பந்தின் மீது புதிதாகத் திறக்கப்பட்ட ஒரு வீட்டைப் போன்றதாகும். இஷாத் தொழுகையின் போது அந்த உலகத்தினுள் நுழைந்த போது, எனது கற்பனை அபரிமிதமாக விசாலமடைந்தமையினாலும், மனிதனுடைய இயல்பான தன்மையானது முழு உலகத்தோடும் தொடர்புபட்டிருக்கின்ற காரணத்தினாலும், பிரமாண்டமான இந்த உலகத்தை அந்த இரவில் ஒரு வீட்டைப் போன்று கண்டேன். ஜீவராசிகளும் மனிதர்களும் கண்களால் பார்க்க முடியாத அளவுக்கு சிறிதாகினார்கள். தனியாக அந்த வீட்டை சங்கைப்படுத்தி அந்நியோன்னியமானதாக மாற்றி ஒளிமயமாக்குகின்ற முஹம்மத் (அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம்) அவர்களுடைய ஆத்மார்த்தமான ஆளுமையை கற்பனையில் தரிசித்தேன். ஒரு மனிதன் புதியதொரு வீட்டுக்குள் நுழைகின்ற போது, அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறுவதைப் போன்று, அந்த உலக வீட்டினுள் நுழையும் போது, “உங்களுக்கு ஆயிரக்கணக்கான சலாம்கள் , யா ரஸூலுல்லாஹ்!” என்று கூறுவதற்கான ஓர் ஆவல் என்னுள் பொங்கியெழுந்தது. மொத்த மனிதர்களினதும் ஜின்களினதும் சார்பாக சலாம் கூறுவதைப் போன்றதோர் உணர்வு என்னுள் ஏற்பட்டது. அதாவது, அந்த ஸலாத்தின் மூலமாக, அந்தத் தூதருடனான பைஅத்தைப் புதுப்பித்துக்கொள்வதையும், அண்ணாருடைய தூதை ஏற்றுக்கொள்வதையும், அண்ணவர்கள் கொண்டுவந்த சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களின் கட்டளைகளுக்கு முன்னால் சரணாகதி அடைவதையும், குழப்பங்களை விட்டும் பாதுகாப்புப் பெற்றுக்கொள்ளப் போவதையும் தெரிவித்துகொண்டேன். மேலும், நீங்கள் கொண்டுவந்த இந்த ஒளியின் மூலமாகவும் அன்பளிப்பின் மூலமாகவும் எனது இந்த உலகத்தை ஒளிமயப்படுத்துகின்றீர்கள். மாத்திரமன்றி, இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் சொந்தமாக இருக்கின்ற தனிப்பட்ட உலகங்களையும் ஒளிமயப்படுத்தி அருள்பாலிக்கப்பட்டதாக மாற்றி விடுகின்றிர்கள். அந்த அருட்கொடைகள் அனைத்துக்கும் நன்றிபூர்வமான ஒரு பிரதியீடாக "உங்கள் மீது ஆயிரக்கணக்கான ஸலவாத்துக்கள் யா ரஸூலுல்லாஹ்!" என்று கூறினேன். அதாவது, இந்தக் கூற்றுக்குள், “நீங்கள் செய்த இந்த மகத்தான புண்ணியத்துக்குப் பிரதியீடாக எதையும் செய்ய முடியாதவர்களாக நாங்கள் இருக்கின்றோம். அதனால் எமது படைப்பாளனுடைய ரஹ்மத் கஜானாக்களிலிருந்து, வானலோகத்தவர்களுடைய எண்ணிக்கையளவு ரஹ்மத்துக்கள் உங்களுக்கு வந்து சேர வேண்டும் என்பதை ஆசித்தவர்களாக எமது நன்றிகளை உங்களுக்குத் தெரிவிக்கின்றோம்.” என்ற அர்த்தத்தை மானசீகமாக உணர்ந்துகொண்டேன். அந்தத் திருத் தூதர் (ஸல்) அவர்கள் உபூதிய்யத்துடைய விடயத்தில் அதாவது மனிதர்களிலிருந்து மறையோனின் புறமாகத் திரும்புகின்ற விடயத்தில் ரஹ்மத்துடைய அர்த்தம் பொதியப்பெற்ற ஸலவாத்தை வேண்டுகின்றார்கள். ரிஸாலத்துடைய கோணத்தில், அதாவது மறையோனிடமிருந்து மனிதர்களுக்காக வந்த தூதுவர் என்ற அந்தஸ்த்தின் அடிப்படையில் ஸலாத்தை வேண்டுகின்றார்கள். ஆம், திருத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், மனிதர்கள் ஜின்களின் எண்ணிக்கையளவு ஸலாத்துக்கு அருகதையுடையவர்களாக இருக்கின்ற அதே வேளை நாமும் அந்த ஸலாத்தைக் கூறுவதனூடாக மனிதர்கள் ஜின்களின் எண்ணிக்கையளவு பைஅத்துக்களைப் புதுப்பித்துக்கொள்கின்றோம். அவ்வாறே, அண்ணவர்கள் அல்லாஹ்வுடைய ரஹ்மத் கஜானாக்களிலிருந்தும், ஒவ்வொரு வானலோகத்தவருடைய பெயராலும் ஒவ்வொரு ஸலவாத்துக்கு அருகதையுடையவராக இருக்கின்றார்கள். ஏனெனில் அண்ணார் கொண்டு வந்த ஒளியின் மூலமாக மாத்திரமே, அனைத்து வஸ்த்துக்களினதும் பரிபூரணத்தன்மை பூரணமாகப் புலப்படுகின்றன; அத்தனை சிருஷ்டிக்களினதும் பெறுமதிகள் வெளிப்படுகின்றன; அனைத்துப் படைப்புக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ரப்பானிய்யப் பணிகள் பார்க்க முடியுமானவையாக மாறுகின்றன; ஒவ்வொரு வஸ்த்திலும் அதற்குறிய இறை நோக்கங்கள் பிரதிபலிகின்றன. இதனால் தான், ஒவ்வொரு வஸ்த்தும், தத்தமது மெய்ம்மொழிகளால் கூறிக்கொண்டிருப்பதைப் போன்றே, முடியுமாக இருந்தால் தமது நாவுகளாலும் நிச்சயமாக "அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலைக யா ரஸூலுல்லாஹ்" என்று கூறியிருக்கும். எனவே நாம் அவை அனைத்தின் பெயராலும் மனிதர்கள், ஜின்களின் எண்ணிக்கையளவும், மலக்குமார்கள், நட்சத்திரங்களின் எண்ணிக்கையளவும் "அல்ஃபு அல்ஃபி ஸலாதின் வஅல்ஃபு அல்ஃபி ஸலாமின் அலைக யாரஸூலுல்லாஹ்." என்று அர்த்தபூர்வமாகக் கூறுகின்றோம். فَيَك۟فٖيكَ اَنَّ اللّٰهَ صَلّٰى بِنَف۟سِهٖ وَ اَم۟لَاكَهُ صَلَّت۟ عَلَي۟هِ وَ سَلَّمَت۟ ஸஈத் நூர்ஸி

§5

வஹ்ததுல் வுஜூத் சம்பந்தமாக ஓரளவு விளக்கம் கேட்கின்றீர்கள். இருபத்தி ஒராவது கடிதத்தில் இந்த விடயத்தோடு சம்பந்தப்பட்டு வருகின்ற மின்னலில், வஹ்ததுல் வுஜூத் விடயத்தில் ஹழரத் முஹிய்யித்தீனுடைய சின்தனைக்கு எதிராக மிகப் பலமானதும், தெளிவானதுமான ஒரு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு சிறிய ஒரு விடயத்தை மாத்திரம் கூறிக்கொள்கின்றேன். இந்த வஹ்ததுல் வுஜூத் விடயத்தை இந்தக் காலத்து மனிதர்களுக்குப் புகட்டுவது, கடுமையான நஷ்டங்களை ஏற்படுத்திவிடும். உதாரணங்களும் உவமான உவமேயங்களும் பண்டிதர்களின் கைகளிலிருந்து பாமரர்களின் கைகளுக்கும், அறிஞர்களின் கைகளிலிருந்து அறிவீனர்களின் கைகளுக்கும் போனால், உவமையை உண்மையாக எடுத்துக்கொள்வார்கள். அவ்வாறே, வஹ்ததுல் வுஜூதைப் போன்ற உன்னதமான சத்தியங்கள், பொடுபோக்கிலும் காரணகாரியங்களிலும் மூழ்கியிருக்கின்ற பாமரர்களிடம் அகப்பட்டால், வஹ்ததுல் வுஜூதை இயற்கை என்று சிலாகித்துக்கொண்டு மூன்று பெரும் பாதகங்களுக்குள் வீழ்ந்து விடுவார்கள். முதலாவது வஹ்ததுல் வுஜூத்துடைய பாதை சத்திய இரட்சகனின் பெயரால் பிரபஞ்சத்துடைய இருப்பை நிராகரிப்பதாகும். ஆனால், பாமரர்களின் கைகளுக்கெட்டினால், குறிப்பாக பொடுபோக்கில் மூழ்கிய பாமரர்களின் கைகளில், இன்னும் குறிப்பாக சடவாதச் சிந்தனைகளால் தாக்கத்துக்குட்பட்ட தலைகளில், பிரபஞ்சம் மற்றும் சடப்பொருட்களின் பெயரால் அல்லாஹ்வுடைய உலூஹிய்யத்தை நிராகரிப்பதற்கு வழிவகுக்கும். இரண்டாவது வஹ்ததுல் வுஜூத் உடைய பாதை, இறைவனைத் தவிற ஏனையவற்றின் ருபூபிய்யத்தை எந்த அளவுக்கு நிராகரிக்கின்றது எனில், ஏனையவற்றை நிராகரித்து, இருமை பண்மை என்ற பேச்சுக்கே இடமில்லாததாக ஆக்கி விடுகின்றது. அதாவது நஃப்ஸுல் அம்மாராவுடையது மாத்திரமன்றி, அத்தனை வஸ்துக்களினதும் -இருக்கின்ற- உடலை அதாவது வுஜூதைக் கண்டுகொள்ளாதிருப்பதாகும். ஆனால் இந்தக் காலத்தில் இயற்கைவாத சிந்தனை ஆக்கிரமித்திருக்கின்ற காரணத்தினாலும் அகம்பாவமும் அனானிய்யத்தும் நஃப்ஸுல் அம்மாராவை ஊதிப் பெருப்பித்திருக்கின்ற காரணத்தினாலும், இவற்றின் காரணமாக மறுமையையும் படைப்பாளனையும் ஓரளவு மறந்திருக்கின்ற காரணத்தினாலும், சிறிய பிர்அவ்னைப் போன்று தம்மை மாபூதாக அதாவது வணக்கத்துக்குறியவனாகப் பார்க்கின்ற தெம்புகொண்ட நஃப்ஸுல் அம்மாராக்களைச் சுமந்த மனிதர்களுக்கு வஹ்ததுல் வுஜூதைப் புகட்டுவது, அவர்களது நஃப்ஸுல் அம்மாராக்களை எந்த அளவுக்கு ஊதிப் பெருப்பிக்குமெனில், -அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்- அதன் பிறகு அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சாத்தியமற்றதாகிவிடும். மூன்றாவது மாற்றங்களுக்குற்படுதல், வேறொன்றாக மாறுதல், பலதாக மாறுதல், இடத் தேவைப்பாடு போன்ற குறைபாடுகளை விட்டும் தூய்மையானவனாகவும், தூரமானவனாகவும், பரிசுத்தமானவனாகவுகும், ஏற்றமானவனாகவும் இருக்கின்ற சங்கைமிக்க ஏக வல்லோனுடைய வாஜிபான வுஜூத் விடயத்தில் அவனது புனிதத்தன்மைக்கும் பரிசுத்தத்தன்மைக்கும் எந்தவிதத்திலும் பொருந்தாத சிலாகிப்புக்களுக்கு வழிவகுக்கும். இது பாத்திலான சிந்தனைகளைத் தோற்றுவிக்கும். ஆம், வஹ்ததுல் வுஜுத் பற்றிப் பேசுவதற்கு, சிந்தனையால் மண்ணை விட்டு விண்ணிற்குச் சென்று, பிரபஞ்சத்தை முதுகுக்குப் பின்னால் தள்ளிவிட்டு, தனது பார்வையை அர்ஷை நோக்கித் திருப்ப வேண்டும். பின்னர் அந்த நிலையில் இருக்கும்போது ஒருவகை ஏகாந்திர போதையில் லயித்துப் போய் பிரபஞ்சத்தை இல்லாததாக எண்ணி, ஈமானிய பலத்தின் மூலம் அனைத்து வஸ்துக்களையும் நேரடியாகவே வாஹிதுல் அஹத் ஆகிய அல்லாஹ்விடமிருந்துமுள்ளதாகக் காண வேண்டும். இதுவல்லாமல், பிரபஞ்சத்துக்குள் இருந்துகொண்டு பிரபஞ்சத்தை அவதானிப்பவனும், பார்ப்பதிலெல்லாம் காரணகாரியங்களைக் காண்பவனும், பார்வை வீச்சானது மண்ணோடு மட்டுப்படுத்தப்பட்டவனும் நிச்சயமாக காரணகாரியங்களுக்குள் மூழ்கி, இயற்கைவாதச் சகதிக்குள் வீழ்கின்ற அபாயம் அதிகமாகவே இருக்கின்றது. சிந்தனா ரீதியாக அர்ஷை நோக்கிப் பயணிப்பவன், ஜலாலுத்தீன் ரூமியைப் போன்று பின்வருமாறு கூற முடியும். "செவியைக் கூர்மையாக்கு! அனைவரிடமுமிருந்து செவிமடுக்கின்ற வார்த்தைகளையும், நேரடியாக சத்திய இரட்சகனிடமிருந்து செவிமடுப்பதைப் போன்று செவிமடுக்க முடியும்." அல்லாவிட்டால், ஜலாலுத்தீனைப் போன்று இந்த அளவு உயர்ந்த இடத்தை அடைய முடியாதவனிடமும், மண்ணிலிருந்து விண் வரையிலுமுள்ள வஸ்துக்களை கண்ணாடியுடைய ஸூரத்தில் பார்க்க முடியாதவனிடமும் போய், "காதைத் தீட்டு! அனைவரதும் வார்த்தைகளிலிருந்தும் கலாமுல்லாஹ்வை செவிமடுப்பாய்" என்று கூறினால், அதன் அர்த்தம் அர்ஷிலிருந்து அடிமண் வரை தாழ்ந்துவிடும். மாத்திரமன்றி சத்தியத்துக்கு முரனான வகையில் பாத்திலான சிந்தனைப் பிறழ்வுகளுக்குள் மாட்டிக்கொள்வார். قُلِ اللّٰهُ ثُمَّ ذَر۟هُم۟ فٖى خَو۟ضِهِم۟ يَل۟عَبُونَ ۝ مَا لِلتُّرَابِ وَ لِرَبِّ ال۟اَر۟بَابِ ۝ سُب۟حَانَ مَن۟ تَقَدَّسَ عَنِ ال۟اَش۟بَاهِ ذَاتُهُ وَتَنَزَّهَت۟ عَن۟ مُشَابَهَةِ ال۟اَم۟ثَالِ صِفَاتُهُ وَشَهِدَ عَلٰى رُبُوبِيَّتِهٖ اٰيَاتُهُ جَلَّ جَلَالُهُ وَلَٓا اِلٰهَ اِلَّا هُوَ ஸஈத் நூர்ஸி

§6

முஸ்தஃபா ஸப்ரி மற்றும் மூஸா பிகியெஃப் ஆகியோரின் கருத்துக்களை அலசுவதற்கு எனது நேரம் போதாமல் இருக்கின்றது. இப்போதைக்கு ஒரு சில வார்த்தைகளோடு சுறுக்கிக்கொள்கின்றேன். "ஒருவர் இஃப்ராத்திலும் மற்றவர் தஃப்ரீத்திலும் இருக்கின்றார்." உண்மையில் மூஸாவுடன் ஒப்பிடும்போது முஸ்தஃபா ஸப்ரியுடைய வாதத்தில் உண்மை இருந்தாலும், முஹிய்யுத்தீன் போன்று இஸ்லாமியக் கலைகளின் அற்புதங்களைப் பொதியப்பெற்ற ஒரு மனிதரை தரம்குறைப்பதாக அவருடைய கருத்துக்கள் அமைந்திருப்பதால் அது உண்மைக்குப் புறம்பானதாகும். ஆம், முஹியுத்தீன் தன்னளவில் நேர்வழியைப் பெற்றவரும், ஏற்றுக்கொள்ளப்பட்டவருமாவார். ஆனால், அவரது புத்தகங்கள் அனைத்திலும் அவரால் ஒரு நேர்வழிகாட்டியாகவோ அல்லது முர்ஷித் ஆகவோ மிளிர முடிவதில்லை. அதிகமான சந்தர்ப்பங்களில் இஸ்திரத்தன்மையோடு சத்தியத்தை நோக்கிச் செல்லாமையால், அஹ்லுஸ்ஸுன்னாவுடைய விதிமுறைகளோடு முரண்படுகின்றார். மேலும் அவரது சில வார்த்தைகள், வெளிப்பார்வைக்கு வழிகேடானவையாக இருந்தாலும், அவர் தன்னளவில் வழிகேட்டை விட்டும் தூரமானவராவார். சிலபோது வார்த்தை குஃப்ராகத் தென்படும், ஆனால் அந்த வார்த்தைக்குச் சொந்தக்காரன் காபிராக மாட்டான். முஸ்தஃபா ஸப்ரி இந்த விடயங்களை கருத்திற்கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது. முஸ்தஃபா, அஹ்லுஸ்ஸுன்னாவுடைய விதிகளின் மீதுள்ள பற்றுறுதி காரணமாக இவ்வாறான சிலவிடயங்களைப் பற்றி அசமந்தப் போக்கோடு நடந்துள்ளார். மூஸாவைப் பொருத்தவரை, அவர் புதுமைப் பித்தனாகவும் நவீனத்தின் மீது மோகம்கொண்டவராகவும் இருக்கின்ற காரணத்தினால் அவரது சின்தனைகள் மிகவும் பிழையான தளத்தில் செல்கின்றன. சில இஸ்லாமிய ஹகீகத்துக்களை பிழையான வியாக்கியானங்களைக்கொண்டு சீர்குழைக்கின்றார். அபுல் அலாஇல் மார்ரி போன்ற நிராகரிக்கப்பட்ட ஒருவருக்கு, முஹக்கிகீன்களைவிட மேலான ஓர் இடத்தை வழங்குவதாலும், தனது சொந்தக் கருத்துக்களுக்கு வலுச்சேர்ப்பதற்காக, முஹியுத்தீனுடைய அஹ்லுஸ்ஸுன்னத்துக்கு முரனானதாகத் தெரிகின்ற விடயங்களை ஆதாரமாகக்கொள்வதாலும், அதிகமாகவே தீவிரப்போக்கைக் கடைப்பிடிக்கின்றார். قَالَ مُحْيِى الدِّين : تَحْرُمُ مُطَالَعَةُ كُتُبِنَا عَلَى مَنْ لَيْسَ مِنّاَ அதாவது, "எம்மைச் சாராதவர்களும், எமது பதவிகளை அறியாதவர்களும் எமது புத்தகங்களை வாசிக்காதிருக்கட்டும். அவ்வாறு வாசித்தால் நஷ்டமடைவீர்கள்." ஆம், இந்தக் காலத்தில், முஹியுத்தீனுடைய புத்தகங்களையும், குறிப்பாக வஹ்ததுல் வுஜூதோடு சம்பந்தப்பட்ட விடயங்களையும் வாசிப்பது, நஷ்டகரமானதாகும். ஸஈத் நூர்ஸி

§7

சிரித்துக் கும்மாலமடித்துக்கொண்டிருக்கின்ற மனித குலத்தின் கண்நீர் சிந்தி அழ வேண்டிய நிலையை, ஓர் இராக்களியாட்டத்தின் போது சிறைச்சாலை யன்னல் வழியாகக் கண்டேன். அந்தச் சந்தர்ப்பத்தில் நான் கற்பனா ரீதியாக மெய்யுலகில் தரிசித்த ஒரு விடயத்தை இந்த இடத்தில் குறிப்பிடுகின்றேன். மண்ணறையில் இருப்பவர்களின் வாழ்க்கைப் பொழுதுகளை சினிமாத் திரையில் பார்க்க முடியுமாக இருப்பதால், சிறிது காலத்துக்குப் பிறகு மண்ணறைவாசிகளாக ஆகப் போகின்ற அந்த மனிதர்களுடைய நடமாடுகின்ற ஜனாஸாக்களை அப்போது பார்த்துக்கொண்டிருப்பதைப் போன்ற ஒரு நிலை எனக்கு ஏற்பட்டது. சிரித்துக் கும்மாலமடித்துக்கொண்டிருக்கின்ற அவர்களுக்காக கண்நீர் சிந்தினேன். என்னை ஒரு வகையான பயமும், அவர்களைப்பற்றிய கவளையும் தொற்றிக்கொண்டது. அப்போது சத்தியத்தின்பால் திரும்பி "கற்பனை உலகில் தரிசித்த அந்த விடயம் எதைக் கூற வருகின்றது?" என்று கேட்டேன். அப்போது சத்தியத்திடமிருந்து பின்வரும் பதில் கிடைத்தது. ஐம்பது வருடங்களுக்குப் பிறகு, இப்போது மகிழ்ச்சி பொங்கக் கும்மாலமடித்துக்கொண்டிருக்கும் இந்த அபாக்கியசாலிகளுக்குள் ஐம்பதில் ஐவர் கூனிக் குறுகி வாடிப்போன வயோதிபர்களாகவும், மீதி நாட்பத்தி ஐந்து பேறும் மண்ணறைக்குள் கைவிடப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். அப்போது, அவர்களுடைய இந்த அழகிய தோற்றங்களும், ஆனந்தமான சிரிப்புக்களும் நேரெதிரானவையாக மாற்றமடைந்திருக்கும். كُلُّ اۤتٍ قَرِيبٌ என்ற விதிக்கமைய, அண்மையில் சந்தேகமற நிகழ இருக்கின்ற நிகழ்வுகளை நிகழ்ந்துவிட்டதாகப் பார்ப்பது, ஒரு வகையில் சத்தியமானதாகும். எனவே நிச்சயமாக நீ கண்டவை கனவல்ல. உண்மையிலேயே, உலகத்தில் பொடுபோக்கு மேலீட்டால் போடுகின்ற கூத்துக்களும் கும்மாலங்களும், இவ்வாறான கண்நீர் சிந்தி அழ வேண்டிய நிலைமைகளை மறைக்கின்ற திரைகளாகும்; குறுகியவையும் அழிந்துபோகக்கூடியவையுமாகும். எனவே நிச்சயமாக வக்கற்றவர்களாக இருக்கின்ற மனிதர்களின் நித்திய மோகத்தில் திலைத்திருக்கின்ற உள்ளத்தையும் ஆன்மாவையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திலைத்திருக்கச்செய்யக்கூடிய அம்சங்கள், அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள், சஞ்சலமின்றியும் நன்றியுணர்வோடும், பொடுபோக்குக் களைந்த விளிப்புணர்வோடும் செய்கின்ற, பாவங்கள் கலக்காத பொழுதுபோக்குகளும் நித்திய நன்மைகளைப் பெற்றுத்தருகின்ற ஆனந்தமான நிலைமைகளுமாகும். இதன் காரணமாகத் தான், பெருநாள் காலங்களில் பொடுபோக்கில் மூழ்கி அனுமதிக்கப்படாத எல்லைக்குள் சென்றுவிடாதிருப்பதற்காக, ஹதீஸ்களில் அந்த நாட்களை அதிகமதிகம் அல்லாஹ்வைத் துதிப்பதிலும் அவனுக்கு நன்றி செலுத்துவதிலும் கழிப்பதற்கு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பெருநாள் காலங்களிலிருக்கின்ற அந்த மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அல்லாஹ்வுக்கான நன்றிகளாக மாற்றி, அந்த அருள்களில் அபிவிருத்தியையும் தொடர்ச்சியையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஏனெனில் நன்றியானது, அருட்கொடைகளில் அதிகரிப்பை ஏற்படுத்தும்; பொடுபோக்குத் தனத்தை களையும். ஸஈத் நூர்ஸி

§8

அர்த்தம்: {இணைப்பு: இந்தப் பகுதியிலிருந்தும் அனைவரும் பயன்பெற்றுக்கொள்ள முடியும்.} "நஃப்ஸ் தொடர்ந்தேர்ச்சையாக மானக்கேடான செயல்களை நோக்கி அழைத்துச் செல்லும்." என்ற வசனத்தோடும், اَعْدَى عَدُوِّكَ نَفْسُكَ الَّتِى بَيْنَ جَنْبَيْكَ அர்த்தம்: "உனது மிக மோசமான எதிரி உனது நஃப்ஸாகும்." என்ற ஹதீஸோடும் சம்பந்தப்பட்ட ஒரு குறிப்பாகும். -பண்படாத நஃப்ஸுல் அம்மாரா இருக்கின்ற போது- தனது நஃப்ஸையே நேசிக்கின்ற மனிதன், பிறர் மீது நேசம் வைக்க மாட்டான். அப்படியே நேசித்தாலும் வெளிப்படையாக நேசிப்பானே ஒழிய, உள்ளத்தால் உண்மையாக நேசிக்கமாட்டான். வெறுமனே, அவர்களிலிருந்து கிடைக்கின்ற பலன்களையும் இன்பங்களையும் மாத்திரமே நேசிப்பான். எப்போதும் சுய புகழ் தேடுவதிலும், தன்னை நேசிக்கச்செய்வதிலும் முனைப்பாக இருப்பான். தன்னில் இருக்கின்ற குறைகளை ஒருபோதும் தனது நஃப்ஸுக்குறியதாக எடுத்துக்கொள்ளமாட்டான். மாறாக ஒரு வழக்கறிஞரைப் போன்று தனக்காக வாதாடித் தன்னை நிரபராதியாக ஆக்கிக்கொள்வான். வர்ணனைகள் மூலமும் பொய்கள் மூலமும் தனது நஃப்ஸை புகழ்பாடித் தூய்மைப்படுத்தி புனிதத்துவப்படுத்துவான். அதன் பின்னர் அதில் அவனது படித்தரத்துக்கேற்ப مَنِ اتَّخَذَ اِلَهَهُ هَوَيهُ என்ற வசனத்தின் சாட்டையடிக்கு ஆலாகுவான். தற்புகழும் தன்னைத் தானே நேசிக்கச் செய்வதும், முரன் விளைவை ஏற்படுத்தி, வெறுப்பையும் இடைவெளியையும் ஏற்படுத்தும். மாத்திரமன்றி மறுமைக்காகச் செய்கின்ற அமல்களில் இஹ்லாஸை இல்லாமலாக்கி, முகஸ்துதியை ஏற்படுத்திவிடும். இறுதி அடைவுகளைக் கண்டுகொள்ளாத, விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காத, உடனடி இன்பங்களில் மோகம்கொண்டலைகின்ற இச்சைகளிடமும் உணர்ச்சிகளிடமும் தோல்வியைத் தழுவி, வழிதவறிய அந்த இச்சைகளின் பத்வாவைக்கொண்டு, ஒரு மணித்தியால இன்பத்திற்காக ஒரு வருடம் சிறைவாசம் அனுபவிப்பான். ஒரு நிமிட வைராக்கியம் மற்றும் பலிவாங்கும் உணர்வு காரணமாக பத்து வருடங்கள் தண்டனை அனுபவிப்பான். தான் கற்றுக்கொண்ட அம்ம ஜூஸை ஓர் இனிப்புப் பண்டத்துக்காக விற்கின்ற ஹவாப் பிடித்த பையனைப் போன்று, வெறுமனே உணர்ச்சிகளையும் இச்சைகளையும் திருப்திப்படுத்திக்கொள்வதற்காக மாணிக்கங்களின் பெறுமதியைக்கொண்ட நன்மைகளை, எவ்விதப் பெறுமதியுமற்ற கண்ணாடித் துண்டுகளைப் போன்ற இன்பங்களுக்கும் அனானியத்துக்கும் அடகுவைத்து, இலாபகரமான வேலைகளில் நஷ்டத்தை அடைந்துகொள்கின்றனர். اَللّٰهُمَّ اح۟فَظ۟نَا مِن۟ شَرِّ النَّف۟سِ وَالشَّي۟طَانِ وَمِن۟ شَرِّ ال۟جِنِّ وَال۟اِن۟سَانِ கேள்வி: குறுகியதொரு காலத்துக்குற்பட்ட குஃப்ருக்குப் பதிலாக, கால இடைவெளியற்ற நித்தியமான ஒரு நரகம் எவ்வாறு நீதியாக இருக்க முடியும்? பதில்: ஒரு வருடம் முன்நூற்றி அறுபத்தி ஐந்து நாட்கள் என்ற கணக்குப்படி, ஒரு நிமிட கொலைக்குற்றத்துக்காக, எழுபத்தி எட்டு இலட்சத்தி எண்பத்தி நாலாயிரம் நிமிட சிறைத் தண்டனை நீதியான சட்டமாக கணிக்கப்படுகின்ற போது, ஒரு நிமிடக் குஃப்ர் ஆயிரம் கொலைகளிற்குச் சமனாக இருக்கின்ற காரணத்தினால், இருபது வருடங்கள் குஃப்ரோடு வாழ்ந்து குஃப்ரோடே மரணிக்கின்ற மனிதன், அதே மனித நீதியின் அடிப்படையில் பார்க்கின்ற போது, ஐந்து இலட்சத்தி எழுநூற்றி இருபதாயிரத்து நூற்றி இருபது கோடி ( 5,720,120,000,0000) வருடங்கள் சிறைவாசம் அனுபவிப்பதற்கு அருகதையடையவனாகின்றான். எனவே நிச்சயமாக …………. என்பது இறை நீதியோடு எவ்வாறு பொருத்தமாக இருக்கின்றது என்பது இதிலிருந்து விளங்குகின்றது. ஒன்றைவிட்டொன்று மிகத் தூரமாக இருக்கின்ற இந்த இரண்டு நீதிகளுக்குமிடையிலுள்ள நுணுக்கமான தொடர்பு என்னவென்றால், கொலை, குஃப்ர் ஆகிய இரண்டுமே அழிப்பாகவும், அத்துமீறலாகவும் இருக்கின்ற காரணத்தினால், இது பிறவற்றின் மீதும் தாக்கம் செலுத்தும். ஒரு நிமிடத்தில் செய்கின்ற கொலை, குறைந்தபட்சம் சம்பிரதாயபூர்வமான வெளிபார்வைக்கு கொள்ளப்பட்டவருடைய பதினைந்து வருட வாழ்க்கையை அழித்துவிடும். எனவே அதற்குப் பகரமாக சிறைக்கு அனுப்பப்படுகின்றான். ஒரு நிமிட குஃப்ரானது, அல்லாஹ்வுடைய ஆயிர்த்தி ஒரு திருநாமங்களை நிராகரிப்பதாகவும், அவற்றின் அழகிய பிரதிபலிப்புக்களை அவலட்சனப்படுவதாகவும், பிரபஞ்சத்துடைய மகிமையை மட்டந்தட்டுவதாகவும், பிரபஞ்சத்தினதும் அதிலுள்ள வஸ்துக்களினதும் பரிபூரணத்துவத்தை பொய்ப்படுத்தி அந்தப் பரிபூரணத்துவத்தின் மூலம் அவை அத்தாட்சிப்படுத்துகின்ற உண்மையை நிராகரிப்பதாகவும் இருக்கின்ற காரணத்தினால், அது காஃபிரை ஆயிரக்கணக்கான வருடங்களை விட அதிகமான அஸ்ஃபல ஸாஃபிலீனிற்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும். அங்கு நிரந்தரமாக சிறைவைக்கப்படுவார்கள். ஸஈத் நூர்ஸி

§9

ரிஸாலே நூர் மாணவர்கள் மீது குற்றம் சுமத்தி அவர்களுக்குத் தண்டணையைப் பெற்றுக்கொடுப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற சட்டம் அரசியல் யாப்பின் 163வது உரையாகும். அதே போன்று, ரிஸாலே நூரின் ஆசிரியரின் மத்ரஸாவுக்காக ஓரிலட்சத்தி ஐம்பதாயிரம் லீரா பண ஒதுக்கீட்டுக்கான பிரேரணை பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட போது 200 உறுப்பினர்களுள் 163 உறுப்பினர்கள் அதை ஆமோதித்து வாக்களித்திருந்தனர். தவாஃபூக் எனப்படும் இந்த இறை ஏற்பாட்டின் உள்ளர்த்தம் கூறவருகின்ற விடயம், "குடியரசின் பாராளுமன்ற உறுப்பினர்களுள் 163 பேரின் ஏகோபித்த ஆதரவானது, யாப்பின் 163வது உரையில் இருக்கின்ற சட்டம் ரிஸாலே நூருடைய விடயத்தில் செல்லுபடியற்றதாக்கிவிட்டது" என்பதாகும். இன்னுமொரு அழகிய அர்த்தபூர்வமான தவாஃபூக்கையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும். ரிஸாலே நூரில் மொத்தமாக உள்ள 128 பகுதிகளும் மொத்தம் 115 புத்தகங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதே போன்று ரிஸாலே நூர் மாணவர்களும் அதன் ஆசிரியரும் முதலாவதாகக் கைதுசெய்யப்பட்ட திகதிக்கும் (27 ஏப்ரல் 1935) தீர்ப்பு வழங்கப்பட்ட திகதிக்கும் (19 ஆகஸ்ட் 1935) இடைப்பட்ட காலம் 115 நாட்களாக இருப்பதோடு, குற்றவாளிகளாகக் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 115 ஆகும். இந்த மூன்று இலக்கங்களும் ஒன்றோடொன்று பொருந்துவது, உண்மையில் ரிஸாலே நூர் ஆசிரியரினதும் மாணவர்களினதும் தலைக்கு வருகின்ற முஸீபத்துக்கள், அல்லாஹ்வுடைய விஷேடமான கருணையைக்கொண்டு நிர்வகிக்கப்படுகின்றது என்பதைக் காட்டி நிற்கின்றது. இந்த மின்னலின் ஆரம்பத்தில் இமாம் அலி (ரழி) அவர்கள் ரிஸாலே நூர் சம்பந்தமாக செய்திருந்த ஒரு சாடை இருக்கின்ற காரணத்தினால், எமது ஒரு சகோதரர் ஆர்வத்தோடும் ஒரு வகையான பதட்டத்தோடும் ரிஸாலே நூருக்கு "ஒளிமயமான வைரப் பொக்கிஷம்" என்ற நாமத்தைச் சூட்டி அதை மீண்டும் மீண்டும் தனது கடிதத்தில் மீட்டியுள்ளார். இந்த மின்னலின் இறுதியில் அதனை இணைத்துக்கொள்வது பொருத்தமாகப் பட்டது. தக்வாவோடு இருக்கின்ற ஒரு மாணவன் புத்தி பேதலித்தவனாகத் தான் இருந்தாலும் ரிஸாலே நூர் என்ற பெறுமதிவாய்ந்த வைரத்திலிருந்து வெளிப்படுகின்ற ஒளியைவிட்டும் தூரமாக முடியுமா? ரிஸாலே நூருடைய மிகவும் வக்கற்ற ஒரு மாணவனாகிய என்னுடைய அளவுக்கு அதன் கராமத்தையும், அதன் பெருமதியையும், அதன் சுவையையும் உணர்ந்து, அதன் சுவைமிக்க கணிகளைப் பறித்தெடுத்த வேறொருவர் மிகவும் அரிதாகவே காணப்படுவார் என்று நினைக்கின்றேன். மாத்திரமன்றி நான் இந்த அளவு இயலாமையுடன் கூடவே, ரிஸாலே நூருக்குத் தொண்டு புரிய முடியாதவனாகவும் இருக்கின்ற நிலையில் நீங்கள் என் மீது காட்டிய ஈடுபாட்டுக்கு நன்றிக்கடன்பட்டவனாக இருக்கின்றேன். இதன் காரணமாக உங்களுக்குப் பணிவிடை செய்பவர்கள் உட்பட எந்த ஒரு மாணவனும் அந்த அருள்பாலிக்கப்பட்ட வைரத்தைவிட்டும் அதன் இனிமையைவிட்டும் பிரிந்து செல்லமாட்டார்கள். நீங்கள் மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த முறை ரிஸாலே நூர் சம்பந்தமான தேடுதல் வேட்டையின் போது நிகழ்ந்த இரண்டு கராமத்துக்களை உள்ளவாறே கூற விரும்புகின்றேன். சிறைச்சாலைக்குள் கண்காணிப்பாளர்களுடன் சேர்ந்து பொலீஸாரும் விஷேட அதிரடிப்படையும் கடுமையான தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு சமயம், ஏழு அல்லது எட்டு வயதிலிருந்த எனது சகோதரியின் மகள், யாருடைய கண்களிலும் படாமல் அங்கு வந்து, தனது பள்ளிக்கூடப் புத்தகப் பையில் அங்கிருந்த ரிஸாலே நூர் பிரதிகளைப் போட்டுக்கொண்டு போய்விட்டால். உங்கள் சேவகனாகிய என்னுடைய அரையில் தேடுதல் நடவடிக்கை நிகழ்ந்துகொண்டிருந்த அந்த சமயத்தில், குறித்த பிள்ளை அந்த இடத்துக்கு வந்தாள். அப்போது அரைக்குள் பதட்டம் நிலவுவதைக்கண்ட அவள், ஒரு பெரும் அர்ப்பணத்தோடு அங்கு ஓர் ஓரமாகக் காணப்பட்ட ரிஸாலே நூர் புத்தகங்களை தனது புத்தகப் பையில் போட்டுக்கொண்டு தனது தாயிடம் சென்றுவிட்டாள். உள்ளே உத்தியோகத்திலிருந்த எவருமே அவளைக்கண்டுகொள்ளவுமில்லை, அவளைத் தடுக்கவுமில்லை. அவற்றைக் கொண்டுபோய் தனது தாயிடம் கையளிக்கும் போது "எனது சிற்றப்பா எப்போதுமே எனக்கு வாசித்துக்காட்டுகின்ற ரிஸாலே நூர் புத்தகங்களைக்கொண்டு வந்திருக்கின்றேன். இவற்றைக் கைப்பற்றிக்கொண்டு செல்லவதற்காக வந்திருந்தார்கள். அவர்கள் வேறு கடிதங்களையும் புத்தகங்களையும் புரட்டிக்கொண்டிருக்கும் போது, அவர்களுக்குத் தெரியாமல் இவற்றை எடுத்து எனது புத்தகப் பைக்குள் போட்டுக்கொண்டேன். இவற்றைப் பத்திரமான ஓர் இடத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். எனது சிற்றப்பா எம்மிடம் இவற்றை வாசிக்கும்போது நான் மிகவும் ஆவலோடு கேட்டுக்கொண்டிருப்பேன். அந்த சந்தர்ப்பங்களில் நான் மெய் மறந்து போய் விடுவேன்." என்று கூறிவிட்டுப் பள்ளிக்கூடம் சென்றுள்ளால். இதன் மூலம் அந்த ஒளிமயமான வைரப் பொக்கிஷங்கள் கைப்பற்றப்படாமல் பாதுகாக்கப்பட்டன. இதற்குக் கராமத் என்று கூறாமல் வேறு எப்படிக் கூறுவது? இது ஒரு குர்ஆனிய அற்புதம் அன்றி வேறு எதுவாகத் தான் இருக்க முடியும்? இந்தக் கீர்த்தியும் இந்தச் சுவையும் இந்த ஒளிமயமான வைரப் பொக்கிஷங்களும் இன்று வரை எழுதப்பட்ட எந்தப் புத்தகத்தில் தான் காணப்படுகின்றன? இப்படிப்பட்ட பெருமதியான வார்த்தைகள் எந்த மனிதரின் நாவிலிருந்து தான் உதிர்ந்திருக்க முடியும்? நான், இந்த ஒளிமயமான பொக்கிஷங்களுக்காக வெறுமனே சிறைச்சாலையை அல்ல, ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு கனப்பொழுதும் எப்படிப்பட்ட அர்ப்பணமாக இருந்தாலும் பரவாயில்லை, அதனை செய்வதற்கு ஆசையாகவே இருக்கின்றேன். எனக்குப் பிறகு எனது மகன் அமீனும் கூட இந்த ஒளிமயமான வைரப் பொக்கிஷங்களுக்காக தனது முழு வாழ்வையும் அர்ப்பணம் செய்யத் தயாராகவே இருக்கின்றான். ஆம், இப்போது இந்த ஒளிமயமான வைரப் பொக்கிஷங்களுடைய இரண்டாவது கராமத்தையும் கூறிவிட்டால், மூன்று முதல் எட்டு வயது வரையுள்ள எனது மகனும் ஏனைய எமது குடும்பத்துப் பிள்ளைகளும், எனக்குப் பிறகு இந்த வைரப் பொக்கிஷங்களுக்காக தமது வாழ்க்கையை சற்றும் சிந்திக்காமல் அர்ப்பணம் செய்வார்கள் என்பது நிரூபனமாகிவிடும். ஏனெனில், ஒருமுறை நான் இந்த ஒளிமயமான வைரப் பொக்கிஷங்களை வாசிக்க ஆரம்பிக்கும் போது அனைவரும் என்னைச் சூழ ஒன்று திரண்டார்கள். நான் அனைவருக்கும் ஒவ்வொரு தேநீர் கொடுத்துவிட்டு அவர்களை என்னோடு சேர்ந்து வாசிப்பதற்காக அழைத்தேன். அனைவரும் ஒரே குரலில் "இது என்ன? இதில் என்ன இருக்கின்றது?" என்று கேட்டனர். நானும் "இது ஒளிமயமான வைரப் பொக்கிஷங்களாகும்." என்று கூறிவிட்டு இவற்றை வாசிக்க ஆரம்பத்தேன். அப்போது சில மணித்தியாலங்கள் கடந்துவிட்டிருந்தன. பத்தாவது வார்த்தையை வாசித்துக்கொண்டிருந்தேன். விளங்காத சந்தர்ப்பங்களில் என்னிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தனர். நானும் இந்த ஒளிமயமான வைரப் பொக்கிஷங்களை அவர்களுக்கு விளங்குகின்ற விதமாக விளக்கப்படுத்திக்கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பிள்ளைகளின் முகங்களைப் பார்த்தபோது அவை பிரகாசமானவையாக மாறியிருந்தன. அவர்கள் மிகவும் அழகிய தோற்றத்தில் காட்சியளித்தனர். அவர்களது முகங்களைப் பார்க்கப் பார்க்க ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு ஸஈதுகளைக் கண்டேன். அவர்கள் கேள்வி கேட்கும் போது "ஒளிமயமானது எது? வைரம் எது? பொக்கிஷம் எது?" என்று கேட்டனர். "ஒளிமயமானது இதை வாசிப்பதாகும். உங்கள் முகங்கள் பிரகாசமானவையாக மாறியிருப்பதைப் பார்த்தால் புரிந்துகொள்வீர்கள்." என்று கூறினேன். அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவருடைய முகத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். பின்னர், "வைரம் என்பது இந்த வார்த்தைகளை எழுதுவதாகும். நீங்கள் இவற்றை எழுதுவீர்களேயானால் உங்களது எழுத்துக்கள் வைரத்தைப் போன்று பெறுமதிமிக்கவையாக மாறிவிடும்." என்று கூறினேன். அவர்களும் எழுதுவதற்காக முந்தியடித்துக்கொண்டார்கள். இறுதியாக, "பொக்கிஷம் என்பது உங்களுக்கு இந்தப் புத்தகத்திலிருந்து கிடைக்கின்ற ஈமான் ஆகும்." என்று கூறினேன். அனைவரும் ஒருமிக்க ஷஹாதத்தை மொழிந்தனர். இந்த உரையாடல்கள் மூன்று நான்கு மணித்தியாளங்களைக் கடந்திருந்த போதிலும் யாருக்கும் நேரம் சென்றது விளங்கவில்லை. இறுதியாக, "இது தான் ஒளிமயமான வைரப் பொக்கிஷமாகும்" என்று கூறினேன். அதைத் தொடர்ந்து மீண்டும் எல்லோருமாக "இதை யார் எழுதினார்?" என்று கேட்டனர்... உங்களது வக்கற்ற மாணவன். ஷஃபீக்

§10

இன்றிரவு கனவில், இஸ்தான்பூலிலுள்ள டொப்ஹானே கடற்கரையைப் போன்று தெளிந்த பளபளப்பான ஒரு கடற்கரையில் இருந்தேன். கோடைகாலத்தைப் போலிருந்த காலநிலை காரணமாக அந்தப் பெரும் நீரப் பரப்பு பளபளவென்று ஜொலித்துக்கொண்டிருந்தது. நானும் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது கடல் நடுவே தென்திசையிலிருந்து நீந்திக்கொண்டு வந்த ஒரு வாலிபன், கரையை அடைந்த பின்னர் தனது தோலிலிருந்து ஒரு கலப்பை யை இறக்கி வைத்தான். அந்த இடத்தில், எமது அத்தனை சகோதரர்களும் (சிறைவாசத்திற்குப் பிறகு) விடுதலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் போது, மேற்குத் திசையிலிருந்து கடற்கரை ஓரமாக அசுர வேகத்தில் இரண்டு குதிரை வீரர்கள் வந்துகொண்டிருன்தனர். உஸ்தாத் வந்துகொண்டிருக்கின்றார் என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த கூட்டம் களைந்து விட்டது. வாட்டசாட்டமாகவும் கம்பீரமாகவும் பொது நிரத்திலுமிருந்த அந்த இரண்டு குதிரை வீரர்களும் சற்றும் நில்லாமல் கிழக்குத் திசை நோக்கிச் சென்று மறைந்துவிட்டனர். நான் அந்தக் கடலில் மூழ்கடிகப்பட இருக்கும்போது விளித்துக்கொண்டேன். ஸகி

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters