இது முப்பத்தி ஒராவது கடிதத்தின் முப்பதாவது மின்னலாகவும் “எஸ்கிஷெஹிர்” சிறைச்சாலையின் ஒரு கனியாகவும் இருக்கின்றது. இதில் ஆறு குறிப்புக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. “டெனிஸ்லி” யூஸுஃபிய்ய மத்ரஸாவில் எழுதப்பட்ட ஒரு மகத்தான பாடமாக “ஈமானியக் கனிகள்” என்ற நூலும், “ஆஃபியோன்” யூஸுஃபிய்ய மத்ரஸாவில் எழுதப்பட்ட பெறுமதிவாய்ந்த சிறப்புக்குறிய ஒரு பாடமாக “அல் ஹுஜ்ஜதுஸ் ஸஹ்ரா - தெளிவான அத்தாட்சிகள்” என்ற நூலும் இருப்பதைப் போன்றே, “எஸ்கிஷெஹிர்” யூஸுஃபிய்ய மத்ரஸாவிலிருந்து வெளிப்பட்ட மகத்தான சங்கைமிக்க ஒரு பாடம், “இஸ்முல் அஃஸம்” எனப்படும் அல்லாஹ்வுடைய மிக மகத்தான நாமமாக இருக்க முடியுமான ஆறு நாமங்களைப் பற்றித் தெளிவுபடுத்துகின்ற இந்த மின்னலாகும். (இதில் இஸ்முல் அஃஸமிற்குள் “ஹய்யுல் கய்யூம்” என்ற நாமம் சம்பந்தமாக வருகின்ற பகுதியில் இருக்கின்ற மிகவும் ஆழமானதும் விசாலமானதுமான விடயங்களை எல்லோராலும் உடனடியாகப் புரிந்துகொள்ளவோ அதிலிருக்கும் சுவையை அனுபவிக்கவோ முடியாது. ஆனால், எதையும் பெற்றுக்கொள்ளாமல் வெறும் கையுடனும் செல்லவும்மாட்டார்கள்.)
மூல உரை பாதுகாக்கப்படுகிறது. மாதிரி கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு காட்டப்படும்.
Lem'alar
The Thirtieth Gleam
குத்தூஸ் நாமத்தில் பொதிந்துள்ள ஒரு விடயத்தோடு சம்பந்தப்பட்டதாகும். (இந்தக் குறிப்பு முப்பதாவது வார்த்தையிலுள்ள இணைப்பின் இணைப்பாகச் சேர்த்துக்கொள்ளப்படுவது பொருத்தமானதாகும்.) بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَاْلاَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ என்ற வசனத்தின் ஒரு தாத்பரியம், இஸ்முல் அஃஸம் ஆக அல்லது இஸ்முல் அஃஸமுடைய ஆறு ஒளிகளுள் ஓர் ஒளியாக இருக்கின்ற “குத்தூஸ்” நாமத்துடைய ஒரு பிரதிபலிப்பாக புனித ஷஃபான் மாதத்தில் “எஸ்கிஷெஹிர்” சிறைச்சாலையில் இருக்கும் போது எனக்குத் தென்பட்டது. அது இலாஹ் ஆக இருக்கின்ற அல்லாஹ்வுடைய இருப்பையும், ஏக இரட்சகனாக இருக்கின்ற அவனுடைய வஹ்தத்தையும் மிகப் பிரகாசமான ஓர் அமைப்பில் தெட்டத்தெளிவாகக் கண்பித்தது. எவ்வாறெனில்: இந்தப் பிரபஞ்ச வெளியும் பூமிப்பந்தும் தொடர்ந்தேர்ச்சையாக இயங்கிக்கொண்டிருக்கின்ற ஒரு பெரும் தொழிற்சாலை அல்லது சதாவும் விருந்தினர்களால் நிரம்பி வழிகின்ற ஒரு மடம் அல்லது சத்திரமாகும். ஆனால், இவ்வாறு சதாவும் இயங்குகின்ற தொழிற்சாலைகளும் சத்திரங்களும் அங்கு சேர்கின்ற அழுக்குகள், கழிவுகள், குப்பைகூழங்கள் காரணமாக சதாவும் அதிகமாக அழுக்கடைபவையாகவும் துர்வாடை வீசக்கூடியவையாகவும் அருவறுக்கத்தக்கவையாகவுமே காணப்படும். இவை மிகக் கவனமாகத் திட்டமிட்டுப் பராமரிக்கப்பட்டு, அவ்வப்போது ஒழுங்கு நேர்த்தியோடு சுத்தம் செய்யப்படாவிட்டால் அதற்குள் செல்ல முடியாமல் மனிதன் மூச்சுத் திணறுவான். ஆனால் இந்தப் பிரபஞ்சத் தொழிற்சாலையும் பூமிச் சத்திரமும் எந்த அளவு தூய்மையானவையாகவும் பரிசுத்தமானவையாகவும் ஒழுங்கு, நேர்த்திமிக்கவையாகவும் இடிபாடுகள், அழுக்குகள், குபைகள் அற்றவையாகவும் காணப்படுகின்றன எனில், இவற்றில் எந்தவிதமான அவசியமற்ற பொருட்களோ, பிரயோசனமற்ற பதார்த்தங்களோ, தற்செயலான அழுக்குகளோ காணப்படுவதில்லை. சிலவேளை வெளிப் பார்வைக்கு அவ்வாறு தோன்றினாலும், அவையும் கூட உடனடியாக அங்கு காணப்படுகின்ற மீளுற்பத்திப் பொறிமுறைக்குள்ளாகி தூய்மையடைந்துவிடும். இதன் அர்த்தம், இந்தத் தொழுற்சாலையைப் பரிபாலிக்கின்ற அதன் இரட்சகன் மிகச் சிறப்பாகப் பரிபாலித்துக்கொண்டிருக்கின்றான் என்பதாகும். மேலும் இந்தத் தொழிற்சாலையை ஒழுங்கமைத்த அந்த ஒழுங்கையும் நேர்த்தியையும் சதாவும் பேணிப் பாதுகாக்கின்ற அதன் எஜமானன் எத்தகையவனெனில், அவன் அந்தப் பிரமாண்டமான தொழிற்சாலையை அல்லது அந்தப் பெரும் மாளிகையை சிறியதோர் அறையைச் சுத்தம் செய்வதைப் போன்று சுத்தம் செய்து அதன் தூய்மையையும் ஒழுங்கு நேர்த்தியையும் பேணுகின்றான். மேலும் இந்தப் பிரமாண்டமான தொழிற்சாலையில் ஏற்படுகின்ற இடிபாடுகள், கழிவுகளும் கூடப் பிரமாண்டமானவையாகவே இருக்கும். ஆனால் அவ்வாறான எதுவுமே காணப்படாதிருப்பது மாத்திரமன்றி, அதன் பிரமாண்டத் தன்மைக்கேற்ப பிரமாண்டமானதொரு கழிவகற்றல் பொறிமுறையொன்று தொழிற்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஒரு மனிதன் கூட ஒரு மாதம் சுத்தம் செய்துகொள்ளாமலிருந்தால், தனது அறையைத் துப்புறவு செய்யாவிட்டால், நெருங்க முடியாத அளவு அழுக்கடைந்துவிடும். இதன் அர்த்தம் இந்தப் பிரபஞ்ச மாளிகையில் காணப்படுகின்ற தூய்மைக்கும் பரிசுத்தத்திற்கும் பிரகாசத்திற்கும் தெளிவிற்கும் காரணம் அந்த மாளிகையில் சதாவும் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஞானபூர்வமான ஓர் ஒழுங்குபடுத்தல் செயற்பாடும் தொடர்ந்தேர்ச்சையாக இயங்கிக்கொண்டிருக்கின்ற சுத்தப்படுத்தல் பொறிமுறையுமே ஆகும். அந்தத் தொடர்ந்தேர்ச்சையான ஒழுங்குபடுத்தல் செயற்பாடும் சுத்தப்படுத்தல் பொறிமுறையும் நுணுக்கமான கண்காணிப்பும் இல்லாதிருந்தால், ஓரே வருடத்துக்குள் அத்தனை ஜீவ இனங்களும் பூமிப்பரப்புக்கு மேல் மூச்சுத் திணறி இறந்துபோயிருக்கும். மட்டுமல்ல, வானவெளியில் அழிவுக்கும் மரணத்துக்கும் உட்படுகின்ற கோலங்களினதும், உடுக்களினதும், இன்னும் பிற வான்பொருட்களினதும் இடிபாடுகள் எமது தலைகளையும், பூரா ஜீவராசிகளின் தலைகளையும் ஏன் இந்தப் பூமிப் பந்தின் தலையையும் கூட உடைத்து சின்னாபின்னப்படுத்தியிருக்கும். மலை போன்று பிரமாண்டமான கற்களை எமக்கு மேல் மழை போன்று பொழியச்செய்து எம்மை இந்தப் பூகோல மாளிகையிலிருந்து துடைத்தெறிந்திருக்கும். ஆனால் ஆரம்ப காலம்தொட்டே வானலோகத்தில் ஏற்படுகின்ற அழிவுகளின் பின்னர் அவ்வப்போது படிப்பிணைக்காக ஒரு சில எறிகற்கள் வீழ்ந்தாலும் கூட அவை யாருடைய தலையையும் பதம்பார்க்கவில்லை. மேலும் ஒவ்வொரு வருடமும் மாறிமாறி வருகின்ற வாழ்வும் மரணமும் காரணமாக இலட்சக்கணகான ஜீவ இனங்களின் பிணங்களும் இரண்டு இலட்சம் தாவர வர்க்கங்களின் இடிபாடுகளும் தரையையும் கடலையும் அழுக்கு மேடாக மாற்றியிருக்கும். பிரக்ஞையுள்ள மனிதர்கள் அந்தக் காட்சிகளைக் காதலிப்பதும் ரசிப்பதும் ஒரு புறமிருக்க, அந்த அழுக்குகள் அசிங்கங்கள் காரணமாக ஏற்படுகின்ற அருவருப்புக் காரணமாக அவற்றைவிட்டும் மரணத்தின் கைகளுக்கு விரண்டோடியிருப்பார்கள். ஒரு பறவை சர்வசாதாரணமாக தனது இறக்கைகளைச் சுத்தம் செய்வதைப்போன்று, ஓர் ஓவியன் இலகுவாகத் தனது காகிதத்தைச் சுத்தம் செய்வதைப்போன்று, உலகம் என்ற இந்த வானூர்த்தியின் இறக்கைகளும், வான்பொருட்கள் என்ற ஆகாயப் பறவைகளின் சிறகுகளும் கூட மிகச் சுலபமாக சுத்தம்செய்யப்பட்டுக் கொண்டும் அழகு படுத்தப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. இது எந்த அளவு மகத்தானதாக இருக்கின்றது எனில், மறுமையிலுள்ள எல்லையில்லாத அழகையும் தூய்மையையும் காணாதவர்களும், ஈமானின் மூலம் அதைப்பற்றிச் சிந்திக்காதவர்களும், உலகில் இருக்கின்ற இந்த அழகுக்கு முன்னால் மயங்கிப் போய் அதில் மோகம் கொண்டுவிடுவார்கள். இவை அனைத்தினதும் அர்த்தம், இந்தப் பிரபஞ்ச மாளிகையானது, குத்தூஸ் நாமத்தின் உன்னதமான பிரதிபலிப்புக்குப் பாத்திரமாக உள்ளது என்பதாகும். அந்தப் புனிதமான பரிசுத்தவானிடமிருந்து வரும் கட்டளைகளுக்கு, கடல்களில் வாழ்கின்ற இறை உன்னிகளும் தரையில் முகாமிட்டுள்ள கழுகுகளும் மாத்திரமன்றி புழுக்கள், எறும்புகள் போன்ற பிணங்களை அகற்றுகின்ற சுகாதார உத்தியோகத்தர்களும் கூடச் செவிமடுக்கின்றன. மாத்திரமல்ல, உடம்பில் ஓடுகின்ற இரத்தத்தில் காணப்படுகின்ற வெண்குருதி மற்றும் செங்குருதித் துணிக்கைகளும் கூட, சுத்தப்படுத்தலோடு சம்பந்தப்பட்ட அந்தப் புனிதமான கட்டளைகளுக்கு செவிமடுத்து, உடலிலுள்ள இழையங்களில் கழிவகற்றும் பணியைச் செய்கின்றன. வளியும் கூட அந்தக் குருதியிலுள்ள கழிவை அகற்றி சுத்தம் செய்கின்றது. மேலும், கண் இமைகள் கண்களைச் சுத்தம் செய்வதற்காகவும், பூச்சிகள் தமது இறக்கைகளைச் சுத்தம் செய்வதற்காகவும் அந்தப் புனிதமான கட்டளைகளுக்குச் செவிசாய்ப்பதைப் போன்றே, வளிமண்டலமும் மேகங்களும் கூட அந்தக் கட்டளைகளுக்கு செவிசாய்க்கின்றன. வளியானது, பூமிப்பரப்புக்கு மேல் படிந்திருக்கும் தூசி துணிக்கைககளை ஊதிச் சுத்தம் செய்கின்றது. மேகங்களும் கூட பூகோலத் தோப்பிற்கு நீர் தெளித்து தூசு துணிக்கைகளை அப்புறப்படுத்தி விடுகின்றன. தனது பணியை முடித்த பின்னர், ஆகாய வெளியை அசிங்கப்படுத்தாதிருப்பதற்காக வேகமாகக் களைந்து சென்று மறைந்துவிடுகின்றன. ஆகாயத்தின் அழகிய முகத்தை பளபளப்பாகவும் பிரகாசமாகவும் காட்சிப்படுத்துவதற்காக திரை நீக்கம் செய்கின்றன. மேலும் அந்தப் புனிதமான கட்டளைகளுக்கு நட்சத்திரங்கள் கோள்கள் கணியங்கள் தாவரங்கள் என்று அனைத்துமே செவிசாய்ப்பதைப் போன்று ஒட்டுமொத்த அணுக்களும் கூட அவற்றிட்குச் செவிசாய்க்கின்றன. பிரமிக்கத்தக்க பயங்கரமான கொந்தளிப்புக்களுக்கும் சூறாவளிகளுக்கும் மத்தியிலும் கூட அந்த அணுக்கள் தமது பரிசுத்தத் தன்மையைப் பாதுகாத்துக்கொளின்றன. ஆங்காங்கே அவசியமில்லாமல் அவை ஒன்றுசேர்வதில்லை. குழப்பங்கள் ஏற்பட்டால் உடனடியாக சமநிலைப்படுத்திக்கொள்கின்றன. அவை, மிக அழகிய மிகக் கண்குளிர்ச்சியான மிகவும் இரம்மியமான தோற்றங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, மிகத் தூய்மையான, மிகப் பரிசுத்தமான, மிகப் பிரகாசமான நிலைமைகளோடு சர்வஞானமிக்க ஒரு வழிகாட்டலுக்கமைவாக நகர்த்தப்படுகின்றன. ஆம், அகண்டு விரிந்த பிரமாண்டமான பிரபஞ்ச எல்லைக்குள், குத்தூஸ் நாமம் போன்ற ஓர் உன்னதமான நாமத்தின் (இஸ்முல் அஃஸம்) உன்னதமான ஒரு பிரதிபலிப்பாக இருக்கின்ற இந்த ஒரு காரியம் மாத்திரம் அதாவது, பிரபஞ்ச வெளியெங்கும் வியாபித்துள்ள ஒரு சத்தியமாக இருக்கின்ற பரிசுத்தப்படுத்தல் செயற்பாடு மாத்திரமே, நேரடியாக “ரப்புல் ஆலமீன்” ஆகிய இரட்சகனுடைய இருப்பையும் “இலாஹ்” ஆகிய அல்லாஹ்வுடைய வஹ்தானிய்யத்தையும் அவனது ஏனைய அஸ்மாஉல் ஹுஸ்னாக்களையும் கண்டுகொள்வதற்குப் போதுமானதாகும். விசாலமானதும் கூர்மையானதுமான பார்வையை உடையவர்கள் இதை நிச்சயமாகக் கண்டுகொள்வார்கள். ஆம், ரிஸாலே நூரின் பல பாகங்களில் பின்வரும் விடயம் மிக வலுவான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அகண்டு விரிந்த பிரமாண்டமான பிரபஞ்ச எல்லைக்குள், ஹகம் மற்றும் ஹகீம் ஆகிய நாமங்களின் ஒரு பிரதிபலிப்பாக இருக்கின்ற ஒழுங்கு மற்றும் நேர்த்தி போன்ற செயற்பாடுகளும், அத்ல் மற்றும் ஆதில் ஆகிய நாமங்களின் ஒரு பிரதிபலிப்பாக இருக்கின்ற அளவைகள், நிறுவைகள், வரையறைகள் போன்ற செயற்பாடுகளும், ஜெமீல் மற்றும் கரீம் ஆகிய நாமங்களின் ஒரு பிரதிபலிப்பாக இருக்கின்ற அழகு, கவர்ச்சி, அலங்காரம் போன்ற செயற்பாடுகளும், ரப் மற்றும் ரஹீம் ஆகிய நாமங்களின் பிரதிபலிப்பாக இருக்கின்ற பராமரிப்பு மற்றும் அருட்கொடையளித்தல் போன்ற செயற்பாடுகளும் என்று ஒவ்வொன்றுமே ஒவ்வொரு சத்தியமாகவும் ஒவ்வொரு தனித்துவமான செயற்பாடாகவும் இருப்பதால், அவை ஒவ்வொன்றும் ஏக இறைவன் ஒருவனுடைய வாஜிபான இருப்பையும் அவனது வஹ்தத்தையும் காட்டி நிற்கின்றன. அவ்வாறே, குத்தூஸ் நாமத்துடைய ஒரு பிரதிபலிப்பாக இருக்கின்ற தூய்மை பரிசுத்தம் ஆகிய செயற்பாடுகளும் கூட, வாஜிபுல் வுஜூத் ஆக இருக்கின்ற அந்த ஏகனுடைய இருப்பையும் வஹ்தானிய்யத்தையும் சூரியன் போன்று பிரகாசமாகவும் பகல் போன்று வெளிச்சமாகவும் காட்டிக்கொண்டிருக்கின்றன. மேலும் மேற்கூறப்பட்ட ஒழுங்கு, நேர்த்தி, நுணுக்கமான அளவை, அலங்காரம், பரிசுத்தம் ஆகிய செயற்பாடுகளைப் போன்று சர்வ ஞானம் பொதியப்பெற்ற இந்தச் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் இந்தப் பிரமாண்டமான பிரபஞ்ச எல்லைக்குள் ஒரே வகையானதாக இருப்பதால் தனி ஒரு வடிவமைப்பாளனைக் காட்டி நிற்கின்றன. அவ்வாறே, அதிகமான நாமங்களுக்கு அல்லது ஆயிரத்தி ஒரு நாமங்களுல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் உன்னதமான விசாலமான பிரதிபலிப்பு, இந்தப் பிரமாண்டமான பிரபஞ்ச எல்லைக்குள் காணப்படுகின்றன. அந்தப் பிரதிபலிப்பிலிருந்து தோன்றுகின்ற செயற்பாடானது, எவ்வளவு பரந்ததாக இருக்கின்றதோ அந்த அளவு தெளிவாகும் உறுதியாகவும் வாஹிதுல் அஹத் ஆகிய அல்லாஹ்வைக் காட்டித் தரும். ஆம், அத்தனை வஸ்துக்களையும் தனது நியதிகளுக்கும் வரையறைகளுக்கும் ஒழுங்குக்கும் கட்டுப்பட வைத்த சர்வ ஞானமும், அத்தனை வஸ்துக்களையும் அலங்கரித்து முகம் மலரச் செய்த எங்கும் பரவியிருக்கின்ற ஈகையும், அனைத்தையும் மகிழ்வூட்டி ஆணந்தப்படுத்துகின்ற எங்கும் வியாபித்த ரஹ்மத்தும், ஜீவராசிகள் உற்பட அனைத்திற்கும் ரிஸ்கும் சுவையும் அளிக்கின்ற மகத்தான பராமரிப்பும், அனைத்து வஸ்துக்களையும் பிற வஸ்துக்களோடு தொடர்புபட்டதாகவும் பிறவற்றிலிருந்து பயன்பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் பிறவற்றின் மீது ஓரளவு எஜமானத்துவம் கொண்டாடக்கூடியதாகவும் ஆக்குகின்ற ஹயாத்தும் என்று இந்தப் பிரபஞ்சத்தின் முகத்தை மலரச் செய்கின்ற தெளிவான சத்தியங்களும் தனித்துவமான செயற்பாடுகளும், -வெளிச்சம் சூரியனைக் காட்டி நிற்பதைப் போன்று- ஹகீமாகவும் கரீமாகவும் ரஹீமாகவும், ரஸ்ஸாக்காகவும், ஹய் மற்றும் முஹ்யீ ஆகவும் இருக்கின்ற ஏக இறைவனைக் காட்டி நிற்கின்றன. ஆம், வஹ்தானிய்யத் விடயத்தில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெளிவான அத்தாட்சியாக இருக்கின்ற நூற்றுக்கணக்கான அகிலார்ந்த செயற்பாடுகளுள் ஏதேனும் ஒன்று, வாஹிதுல் அஹத் ஆகிய ஏகனிடம் ஒப்படைக்கப்படாவிட்டால், அது நூற்றுக்கணக்கான கோணங்களில் அசாத்தியப்பாடுகளைத் தோற்றுவிக்கும். உதாரணத்திற்கு, -ஞானம், ஈகை, கருணை, பராமரிப்பு, வாழ்வளித்தல் போன்ற தெட்டத் தெளிவான சத்தியங்களாக இருக்கின்ற வஹ்தானிய்யத்துக்கான ஆதாரங்களை ஒரு புறமாக வைத்துவிட்டு- வெறுமனே பிரமஞ்சத்தில் அரங்கேறுகின்ற பரிசுத்தப்படுத்தல் செயற்பாட்டை எடுத்துக்கொள்வோம். பிரபஞ்சம் முழுவதும் அரங்கேறுகின்ற இந்தச் செயற்பாட்டை பிரபஞ்சத்தின் படைப்பாளனிடம் ஒப்படைக்காத பட்சத்தில், ஒன்றோ அணுவிலிருந்து அண்டம் வரை, ஈயிலிருந்து வின்மீன்கள் வரை ஒவ்வொரு வஸ்த்தும், இந்தப் பிரமாண்டமான பிரபஞ்சத்திலுள்ள அலங்காரங்களையும், அளவை நிறுவைகளையும், ஒழுங்கு நேர்த்திகளையும், சுத்தப் பொறிமுறைகளையும் அறிந்து, அவற்றைப்பற்றிச் சிந்தித்து, அதற்கேற்றவாறு காரியமாற்றுகின்ற வல்லமையைப் பெற்றதாக இருக்க வேண்டும். அல்லது, அவை ஒவ்வொன்றும் பிரபஞ்சத்தின் படைப்பாளனுடைய புனித நாமமாகிய குத்தூஸ் நாமத்தைப் பொதியப்பெற்றதாக இருக்க வேண்டும். இதுவும் இல்லையென்றால், இந்தப் பிரபஞ்சத்தை அலங்காரப்படுத்தி ஒழுங்கு நேர்த்தியோடு வைத்திருப்பதற்குத் தேவையான வரவு செலவுகளையும் முன்னேற்பாடுகளையும் பற்றிக் களந்துரையாடுவதற்காக பிரபஞ்சமளவு பிரமாண்டமான ஒரு மஷூரா மஜ்லிஸ் இருப்பதும் அந்த மஜ்லிஸில் எண்ணற்ற அணுக்களும் நட்சத்திரங்களும் ஈக்களும் அங்கத்தவர்களாக இருப்பதும் அவசியப்படுகின்றது. அதாவது பிரபஞ்சத்தின் படைப்பாளனிடம் ஒப்படைக்காமல் வேறு எந்தத் திசையை நோக்கினாலும், அங்கு இது போன்ற ஹுராஃபாக்களும் பொய்களும் நிரம்பிய அசாத்தியப்பாடுகளை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே பிரபஞ்சமெங்கும் காணப்படுகின்ற அகிலார்ந்த பரிசுத்தப்படுத்தல், தூய்மைப்படுத்தல் ஆகிய இந்த செயற்பாடுகள் சாத்தியப்பாடுடையவையாக மாறும். இங்கு காணப்படுவது வெறுமனே ஓரிரண்டு அசாத்தியப்பாடுகளாக இருப்பின், இப்படிப்பட்ட பொய்களை ஏற்றுக்கொள்வதைப் பற்றி சற்றேனும் சிந்தித்திருக்கலாம். ஆனால் இங்கு காணப்படுகின்ற அசாத்தியப்பாடுகள் இலட்சோப இலட்சங்களைத் தாண்டிவிட்டன. ஆம், வழிகேடர்களுடைய பாதை இப்படிப்பட்ட ஹுராஃபாக்களால் நிரம்பிய ஒரு பாதையாகும். ஆம், பகல் பொழுதின் வெளிச்சமும் பூமியின் மீதிருக்கின்ற அனைத்து விதமான பளபளபக்கும் பொருட்களுக்குள்ளும் தோன்றுகின்ற மாயையான சூரியன்களும், உண்மையான சூரியனிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் அல்லது உண்மையான அந்த சூடியனின் பிரதிபலிப்புக்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், பூமிப்பந்துக்கு மேல் பளபளக்கின்ற அத்தனை கண்ணாடித் துண்டுகளுக்குள்ளும், அத்தனை நீர்த் துளிகளுக்குள்ளும், அத்தனை பணித்துளிகளுக்குள்ளும், ஏன் வளியிலிருக்கின்ற அத்தனை அணுத் துணிக்கைகளுக்குள்ளும் ஒவ்வொரு உண்மையான சூரியன் இருப்பது அவசியபடுகின்றது. அப்பொழுது மாத்திரமே பூமி தழுவிய அந்த ஒளியும் பளபளப்பும் சாத்தியமாக முடியும். ஆம், பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கின்ற ஞானமும் கூட ஓர் ஒளியாகும்.. எங்கும் சூழ்ந்திருக்கின்ற ரஹ்மத்தும் கூட ஓர் ஒளியாகும்.. ஒழுங்கு, நேர்த்தி, அளவைகள், அலங்காரம் என்று அனைத்துமே ஒவ்வோர் அகிலார்ந்த ஒளியாகும். இப்போது சிந்தியுங்கள், வழிகேடும் குஃப்ரும் எப்படிப்பட்ட வெளிவர முடியாத ஒரு சதுப்பு நிலம் என்பதையும், வழிகேட்டிலிருக்கின்ற அறியாமை எந்த அளவு மௌட்டீகத் தன்மை வாய்ந்தது என்பதையும் கண்டுகொள்ளுங்கள். பின்னர், “அல்ஹம்துலில்லாஹி அலா தீனில் இஸ்லாம் வ’கமாலில் ஈமான்.” என்று கூறுங்கள். ஆம் பிரபஞ்ச மாளிகையின் தூய்மையையும் பரிசுத்தத்தையும் பேணுகின்ற இந்த உன்னதமான பிரபஞ்சம் தழுவிய சுத்தப் பொறிமுறை நிச்சயமாக குத்தூஸ் நாமத்துடைய பிரதிபலிப்பும் அந்த நாமம் வேண்டி நிற்கின்ற விடயமுமாகும். ஆம், பூரா சிருஷ்டிக்களினதும் துதிகள் குத்தூஸ் நாமத்தைப் பார்ப்பதைப் போன்றே, அத்தனை வஸ்துக்களினதும் பரிசுத்தத் தன்மையும் கூட குத்தூஸ் நாமத்தில் தங்கியுள்ளது. சுத்தத்திலிருக்கின்ற இந்தப் புனிதமான தொடர்புக் காரணமாகத் தான் اَلنَّظَافَةُ مِنَ اْلاِيمَانِ என்ற ஹதீஸ் சுத்தத்தை ஈமானிய ஒளியிலிருந்துமுள்ளதாகக் குறிப்பிடுகின்றது. اِنَّ اللّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ என்ற மறை வசனமும் கூட சுத்தத்தை அல்லாஹ்வுடனான முஹப்பத்துக்கான ஒரு காரணியாகக் குறிப்பிடுகின்றது.
وَاِنْ مِنْ شَيْءٍ اِلاَّ عِنْدَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ اِلاَّ بِقَدَرٍ مَعْلُومٍ என்ற வசனத்தின் ஒரு குறிப்பாகவும் இஸ்முல் அஃஸம், அல்லது இஸ்முல் அஃஸமுடைய ஆறு ஒளிகளுள் ஓர் ஒளியாக இருக்கின்ற “அdத்ல்- நீதியாளன்” என்ற நாமத்தின் ஒரு பிரதிபளிப்பு, ‘எஸ்கிஷெஹிர்” சிறைச்சாலையில் இருக்கும் போது தொலைவில் தென்பட்டது. அதை அண்மைப்படுத்துவதற்காக மீண்டும் ஓர் உதாரணத்தை நாடுகின்றோம். இந்தப் பிரபஞ்சம் எப்படிப்பட்ட ஒரு மாளிகையென்றால், அந்த மாளிகைக்குள் சதாவும் புனர்நிர்மாணம் – நிர்மூலம் என்ற இரண்டுக்கும் மத்தியில் கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற ஒரு நகரம் இருக்கின்றது.. அந்த நகரத்துக்குள் சதாவும் மோதல்களுக்கும் இடம்பெயர்வுகளுக்கும் மத்தியில் அள்ளுண்டு செல்கின்ற ஒரு தேசம் இருக்கின்றது.. அந்தத் தேசத்துக்குள் சதாவும் ஹயாத்துக்கும் மௌத்துக்கும் மத்தியில் உருண்டோடுகின்ற ஓர் உலகம் இருக்கின்றது. ஆனால், அந்த மாளிகைக்குள்ளும், அந்த நகரத்துக்குள்ளும், அந்த நாட்டுக்குள்ளும், அந்த உலகத்துக்குள்ளும் நிகழ்கின்ற அந்த மகத்தான மாற்றங்களின் போது அவற்றிட்கு மத்தியில் காணப்படுகின்ற அளவைகள், நிறுவைகளில் பிரமிக்கத்தக்க விதமான ஒரு சமநிலை பேணப்படுகின்றது. இந்த சமனிலையானது, இந்த எண்ணற்ற வஸ்துக்களில் காணப்படுகின்ற மாற்றங்கள், அவற்றில் உற்புகுபவை, அவற்றிலிருந்து வெளியேறுபவை என்று அனைத்தும் உள்ளடங்கலாக மொத்தப் பிரபஞ்சத்தையுமே ஒவ்வொரு கனப்பொழுதிலும் பார்த்துக்கொண்டும் கண்காணித்துக்கொண்டும் இருக்கின்ற ஏக வல்லோன் ஒருவனுடைய நுணுக்கமான அளவைகள் நிறுவைகள் மூலமாகவே சாத்தியமாக முடியும் என்பதை தெட்டத் தெளிவாக நிரூபித்துக்கொண்டிருக்கின்றது. இல்லாவிட்டால், ஒரு மீன் ஆயிரம் முட்டைகளுடனும், ஒரு கசகசாப் பூ இருபதாயிரம் விதைகளுடனும், பூமிப்பரப்பு வெள்ளம் போன்று அள்ளுண்டு செல்கின்ற கணியங்கள் மற்றும் மாற்றங்களுடனும் சமநிலையைக் குழப்பி ஆக்கிரமிப்பதற்காகத் தாக்குதல் தொடுத்துக்கொண்டிருக்கும் போது, இவ்வாறான எண்ணற்ற காரணகாரியங்கள் கடிவாளமற்றவையாக இருந்திருந்தால், அல்லது எந்தவித நோக்கங்களையும் வகுக்கக்கூடிய புத்தியற்ற தற்செயல் நிகழ்வுகளிடமும், அளவைகளோ தீர்மானமோ அற்ற குருட்டுச் சக்தியிடமும், எந்தவிதப் பிரக்ஞையுமற்ற இருண்ட இயற்கையிடமும் கையளிக்கப்படுமாக இருந்தால், வஸ்துக்களுக்கு மத்தியில் காணப்படுகின்ற சமநிலையும் பிரபஞ்சத்தில் காணப்படுகின்ற அகிலார்ந்த சமநிலையும் பயங்கரமாகச் சீர்குழைந்து போயிருக்கும். ஒரு வருடத்தில் அல்லது ஒரே நாளில் அது சின்னாபின்னமாகிப் போயிருக்கும். அதாவது கடல் அழுக்குகளால் நிரம்பி உலகம் முழுவதும் துர்நாற்றத்தால் நிரம்பியிருக்கும். வளி மாசடைந்த வாயுக்களால் நஞ்சூட்டப்பட்டிருக்கும். தரை குப்பை மேடாகவும் கொலைக்களமாகவும் சகதி நிலமாகவும் மாறியிருக்கும். முழு உலகமே மூச்சுத் திறறிப் போயிருக்கும். ஆம், ஜீவராசிகளின் உடலில் இருக்கின்ற இழையங்கள் முதல், அவற்றின் இரத்தத்தில் ஓடுகின்ற வெண்குருதி மற்றும் செங்குருதிக் கலங்கள் முதல், அணுக்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் முதல், உடலிலிருக்கின்ற அங்க அவயவங்களின் பரஸ்பர ஒத்துழைப்பு முதல் ஆரம்பித்து, கடல்களின் உள்ளீடுகள் வெளியீடுகள் வரை.. பூமிக்கடியிலிருந்து பீறிடுகின்ற நீரோட்டங்களின் வரவுகள் செலவுகள் வரை.. தாவர விலங்குகளின் பிறப்புக்கள் மரனங்கள் வரை, இலையுதிர் காலத்திலும் வசந்த காலத்திலும் இடம்பெருகின்ற அனர்த்தங்கள் மற்றும் புனர்நிர்மானங்கள் வரை.. கணியங்களினதும் நட்சத்திரங்களினதும் பயணங்கள் மற்றும் பணிகள் வரை.. வாழ்வாலும் மரணத்தாலும், இருளாலும் வெளிச்சத்தாலும், வெப்பத்தாலும் குளிராலும் ஏற்படுகின்ற மாற்றங்கள், இயக்கங்கள், மோதல்கள் வரை அனைத்திலும் அனைத்து இடங்களிலும், மிக நுணுக்கமான அளவைகளையும் நிறுவைகளையும் கொண்டு ஒழுங்குபடுத்தப்படுகின்றது. இந்த அகிலார்ந்த சமநிலை எந்த அளவு பிரமிக்கத்தக்கதாக இருக்கின்றது எனில், மனித அறிவு யதார்த்தபூர்வமாக எந்த ஒன்றிலும் எந்தவிதமான வீண்விரயத்தையும், வெறுமையையும் கண்டுகொள்ளவில்லை. மாத்திரமன்றி விஞ்ஞானமும் கூட அனைத்திலும் பரிபூரணத்துவமான ஓர் ஒழுங்கும் அழகான ஒரு நேர்த்தியும் இருப்பதைக் கண்டுகொண்டுள்ளது; கற்றும் தருகின்றது. உண்மையில், விஞ்ஞானமானது பிரபஞ்சத்தில் காணப்படுகின்ற அந்த அகிலார்ந்த ஒழுங்கு நேர்த்தியின் வெளிப்பாடாகும்; அதன் மொழிபெயர்ப்பாகும். சூரியனுக்கும் பண்ணிரண்டு கோள்களுக்கும் மத்தியிலிருக்கின்ற சமநிலையைப் பாருங்கள். இந்தச் சமநிலை நீதியாளனாகவும் சர்வ வல்லமை மிக்கவனாகவும் இருக்கின்ற ஏக இரட்சகன் அல்லாஹ்வை சூரியனைப் போன்று பிரகாசமாகக் காட்டிக்கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக அந்தக் கோள்களுள் ஒன்றான இந்தப் பூமிப்பந்தானது ஒரே வருடத்தில் இருபத்தி ஐந்தாயிரம் வருட நீளமான தூரத்தப் பயணம் செய்து முடிக்கின்றது. ஆனால் அந்தப் பயங்கர வேகத்தோடு கூடவே, பூமிப்பந்துக்கு மேல் பரத்தி வைக்கப்பட்டுள்ள பொருட்களை சிதறடிப்பதோ, தலைகீழாகப் புரட்டுவதோ, ஆகாயவெளியில் தூக்கி எறிவதோ கிடையாது. ஒரு வேளை வேகமாக இயங்குகின்ற ஒரு பொருள் அதன் மீது மோதினாலோ அல்லது அதிலிருந்து பிரிந்து சென்றாலோ தன்மீதிருக்கின்ற அனைத்தையும் ஆகாயவெளியில் சிதறடித்துவிடும். ஒரு நிமிடம் அல்லது ஒரு கனப்பொழுது தனது சமநிலையில் குழப்பம் ஏற்பட்டாலும், அனைத்தையும் குழப்பியடித்து, தலையைக்கொண்டு போய் பிரிதொன்றோடு மோதி கியாமத்துடைய பிரளயத்தையே உண்டாக்கிவிடும். மேலும் குறிப்பாக பூமிப்பந்துக்கு மேல் நான்கு இலட்சம் தாவர மற்றும் விளங்கினங்களின் பிறப்புக்கள், இறப்புக்கள் அவற்றின் வாழ்வு மற்றும் பராமரிப்பு என்பவற்றுக்கிடையில் பேணப்படுகின்ற அன்பும் கருணையும் பிரவாகிக்கின்ற சமநிலைகள், -வெளிச்சம் சூடியனைக் காட்டித் தருவதைப் போன்று- நீதியாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இரட்சகனை காட்டிக்கொண்டிருக்கின்றன. மேலும் குறிப்பாக, எண்ணற்ற உயிரினங்களும் ஒவ்வொரு இனத்திலும் எண்ணற்ற அங்கத்தவர்களும் காணப்படுகின்ற போதிலும், அவை ஒவ்வொன்றிலும் காணப்படுகின்ற அங்கஅவயவங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையிலுள்ள தொடர்புகளும் சமநிலையும் மிக நுட்மான அளவைகளில் வகுக்கப்பட்டு பேணப்படுகின்றன. அந்த நுட்பமான தொடர்புகளும் சமநிலையும் தெட்டத் தெளிவாக சர்வ ஞானமும் நீதியும் மிக்க ஒருவனைக் காட்டி நிற்கின்றன. மேலும் குறிப்பாக ஒவ்வொரு ஜீவராசியினதும் உடலிலிருக்கின்ற இழையங்கள், இரத்தக் குழாய்கள், இரத்தத்திலிருக்கின்ற துணிக்கைகள், துணிக்கைகளில் இருக்கின்ற அணுக்கள் என்று அனைத்துக்கும் மத்தியில் மிகப் பிரமாதமான, மிக நுட்பமான சமநிலைகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும், அனைத்து வஸ்துக்களின் கடிவாளங்களையும் அனைத்து விடயங்களினதும் திரவுகோள்களையும் தன்வசம் வைத்து, ஒட்டு மொத்த வஸ்துக்களையும் தனி ஒரு வஸ்த்தைப் போன்று இலகுவாகவும் ஒன்றுக்கொன்று தடுப்பாக அமையாதவன்னமும் பரிபாலிக்கின்ற நீதியாளனாகவும் சர்வ ஞானமிக்கவனாகவும் இருக்கின்ற படைப்பாளனுடைய சட்டதிட்டங்களுக்கும் விதிகளுக்கும் அளவைகளுக்கும் அமைவாகவே நிர்வகிக்கப்படுகின்றன என்பதை தெட்டத் தெளிவாக நிரூபிக்கின்றன. மஹ்ஷருடைய மாபெரும் நீதிமன்றத்தில் அல்லாஹ்வுடைய உன்னதமான நீதியின் தராசில் மனிதர்கள் ஜின்களுடைய அமல்கள் நிறுக்கப்படுகின்ற விடயத்தை அசாத்தியமானதாகக் கருதுகின்றவர்கள், இந்த உலகத்தில் காணப்படுகின்ற மகத்தான மாபெரும் சமநிலையை கண்களைத் திறந்து பார்ப்பார்களேயானால், நிச்சயமாக சாத்தியமானது தான் என்பதை அவர்களது அறிவு ஏற்றுக்கொள்ளும்; சந்தேகம் நீங்கிவிடும். ஊதாரியாகவும் சிக்கனமற்றவனாகவும் இருக்கின்ற மனிதனே! அநியாயக்காரனாகவும் நீதி நேர்மை அற்றவனாகவும் இருக்கின்ற மனிதனே! அசுத்தமானவனாகவும் தூய்மை அற்றவனாகவும் இருக்கின்ற மனிதனே! மொத்தப் பிரபஞ்சத்தினதும் அதிலுள்ள மொத்த வஸ்துக்களினதும் இயக்க விதியாக இருக்கின்ற சிக்கனம், தூய்மை, நீதி என்பவற்றைப் புறக்கணித்து முழுப் பிரபஞ்சத்திற்கும் எதிராக நீ செயற்படுகின்ற காரணத்தினால், அவற்றின் உள்ளார்ந்த வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாகின்றாய். எந்த நம்பிக்கையில் தான், உனது அநியாயங்கள் அக்கிரமங்கள் மூலமாகவும் நீதியின்மை மற்றும் வீண்விரயம் மூலமாகவும் அசுத்தங்கள் மூலமாகவும் அனைத்து வஸ்துக்களினதும் கோபக்கனைகளை உன்னை நோக்கித் திருப்பிக்கொள்கின்றாய்? ஆம், அல்லாஹ்வுடைய ஹகீம் என்ற நாமத்தின் பிரபஞ்சத்திலிருக்கின்ற மிக உன்னதமான பிரதிபலிப்பாகிய, அனைத்தையும் வியாபித்த அகிலார்ந்த ஞானமானது, சிக்கனம் மற்றும் வீண்விரயமின்மை என்ற அச்சானியின் மீது நிறுவப்பட்டுள்ளது; சிக்கனத்தையே போதிக்கின்றது. மேலும், அdத்ல் என்ற நாமத்தின் உன்னதமான பிரதிபலிப்புக்களுள் ஒன்றாக இருக்கின்ற பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ள மகத்தான நீதியானது, பூரா வஸ்துக்களினதும் சமநிலையைப் பேணுவதோடு, மனிதர்களுக்கும் கூட நீதியைக் கடைப்பிடிக்குமாறு கட்டளை பிரப்பிக்கின்றது. ஸூரதுர் ரஹ்மானில் ................ என்ற வசனங்களிலுள்ள நான்கு படித்தரங்களும், நான்கு வகையான மீஸான்களைக் குறிக்கும் விதமாக, நான்கு முறை மீஸான் என்ற சொல்லை மீட்டுவதானது பிரபஞ்சத்திலிருக்கின்ற மீஸானுடைய அதாவது சமநிலையுடைய மகத்துவத்தையும் அதன் மட்டற்ற முக்கியத்துவத்தையும் காட்டி நிற்கின்றது. ஆம், எந்த ஒரு வஸ்த்திலும் வீண்விரயம் காணப்படாததைப் போன்றே, எந்த ஒரு வஸ்த்திலும் ஹகீகத்தான அநீதியும் சமநிலையின்மையும் கிடையவே கிடையாது. மேலும், குத்தூஸ் நாமத்தின் மிக உன்னதமான பிரதிபலிப்புக்களுள் ஒன்றான தூய்மையும் பரிசுத்தமும் மொத்தப் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள அத்தனை வஸ்துக்களையும் பரிசுத்தப்படுத்தி அழகேற்றுகின்றது. மனிதனுடைய அசுத்தமான கரங்கள் மூக்கை நுழைக்காமல் இருக்கின்ற நிபந்தனையுடன், எந்த ஒரு பொருளிலுன் ஹகீகத்தான அழுக்குகளும் அசிங்கங்களும் காணப்படுவதில்லை. இதோ, இதிலிருந்து குர்ஆனிய ஹகீகத்துக்களாகவும் இஸ்லாமிய விதிமுறைகளாகவும் இருக்கின்ற “நீதி, சிக்கனம், தூய்மை” என்பன மனித வாழ்க்கைக்கு எந்த அளவு அத்தியாவசியமானதாகவும் அடிப்படையானதாகவும் இருக்கின்ற விதிமுறைகள் என்பதை விளங்கிக்கொள்ளுங்கள். மேலும், குர்ஆனுடைய சட்டதிட்டங்கள், எந்த அளவு அச்சொட்டாக முழுப் பிரபஞ்சத்துடனும் தொடர்புபட்டவையாகவும், பிரபஞ்சத்தின் அடி ஆழம் வரை வேரூண்டியவையாகவும் இருக்கின்றன என்பதையும், அந்த சத்தியங்களை அழிப்பது, பிரபஞ்சத்தை அழிப்பதைப் போன்று அல்லது அதன் சூரத்தை மாற்றியமைப்பதைப் போன்று அசாத்தியமானது என்பதையும் அறிந்துகொள்!. மேலும், இந்த மூன்று உன்னதமான ஒளிகளைப் போன்றே, இறை கருணை, இறை ஈகை, இறை பாதுகாவல் (ஹாஃபிஸிய்யத்) போன்ற நூற்றுக்கணக்கான அகிலார்ந்த சத்தியங்கள் மஹ்ஷரையும் மறுமையையும் நிர்ப்பந்தமாக வேண்டி நிற்கின்றன. நிலைமை இவ்வாறிருக்கும் போது, ஹஷ்ரும் ஆகிரத்தும் இல்லாமலிருந்தால், முழுப் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள அத்தனை வஸ்துக்களையும் சூழ்ந்திருக்கின்ற ரஹ்மத், ஈகை, நீதி, ஞானம், சிக்கனம், தூய்மை போன்ற மிகப் பலமான அகிலார்ந்த சத்தியங்கள், கொடுமையாகவும் அநீதியாகவும் அக்கிரமமாகவும் மடமையாகவும் வீண்விரயமாகவும் அவலட்சனமானதாகவும் பரிணாமமடைந்திருக்கும். இது எந்த வகையிலும் சர்வசாத்தியமற்ற ஒரு விடயமாகும். இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளனுடைய ரஹ்மத்துக்கும் ஈகைக்கும் நீதிக்கும் ஞானத்துக்கும் சிக்கனத்துக்கும் தூய்மைக்கும் முற்றிலும் முரனானதாகும். ஓர் ஈயின் வாழ்வுறிமையை மிகப் பெரும் கருணையோடு பாதுகாக்கின்ற ஒரு ரஹ்மத், ஒரு ஹிக்மத், மறுமையைக் கொண்டுவராதிருப்பதன் மூலம், பிரக்ஞையுள்ள மனிதர்கள் ஜின்களினது எண்ணற்ற வாழ்வுறிமைகளையும் எண்ணற்ற வஸ்துக்களின் எண்ணற்ற உறிமைகளையும் மீறி விடுமா? இன்னுமொரு வகையில் சொல்வதானால், அன்பிலும் கருணையிலும் நீதியிலும் ஞானத்திலும், இந்த அளவு நுட்பமாகவும் நுணுக்கமாகவும் கவனம் செலுத்துகின்ற ஓர் அகிலார்ந்த ருபூபிய்யத்தும், தனது பரிபூரணத் தன்மையை பறைசாட்டுவதற்காகவும் தன்னை அறிமுகப்படுத்துவதற்காகவும் தன்னை நேசிக்கச் செய்வதற்காகவும் இந்தப் பிரபஞ்சத்தை எண்ணற்ற பிரமாதமான கலைப்பாடுகளையும் அருட்கொடைகளையும் கொண்டு அலங்கரித்த ஓர் உலூஹிய்யத்தும், இவ்வாறு தனது ஒட்டுமொத்த பரிபூரணத்தன்மையையும் தனது ஒட்டுமொத்த படைப்புக்களையும் இல்லாமலாக்குகின்ற விதமாக மறுமையைக் கொண்டுவராமல் செய்வானா? நிச்சயமாக இப்பேர்பட்ட முத்லக்கான அழகுக்குச் சொந்தக்காரன் இப்படிப்பட்ட முத்லக்கான அசிங்கத்துக்கு அனுமதியளிக்க மாட்டான். ஆம், மறுமையை நிராகரிக்க முனைகின்ற மனிதன், அதற்கு முதல் முழு உலகத்தையும் அதிலுள்ள மொத்த சத்தியங்களுடனும் சேர்த்து நிராகரிக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த உலகம், தான் சுமந்துள்ள அத்தனை சத்தியங்களுடனும் கூட்டுச் சேர்ந்து, இலட்சக்கணக்கான நாவுகளால் அவனைப் பொய்ப்பிக்கும்; அவனது பொய்யில் பொதிந்துள்ள இலட்சக்கணக்கான மடங்கு பொய்களை நிரூபிக்கும். பத்தாவது வார்த்தை, மறுமையுடைய இருப்பானது இந்த உலகத்துடைய இருப்பின் அளவு சந்தேகத்திற்கிடமற்றதாகும் என்பதை வலுவான உறுதியான அத்தாட்சிகளைக்கொண்டு நிரூபித்துள்ளது. இஸ்முல் அஃஸமுடைய ஆறு ஒளிகளுள் மூன்றாவது ஒளியைப் பற்றிப் பேசுகின்ற
இது, اُدْعُ اِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ என்ற வசனத்துடைய ஒரு குறிப்பாகவும் ஓர் இஸ்முல் அஃஸம் அல்லது இஸ்முல் அஃஸமுடைய ஆறு ஒளிகளுள் ஓர் ஒளியாகவும் இருக்கின்ற “ஹகம் - தீர்ப்பளிப்பவன்” என்ற நாமம் சம்பந்தப்பட்டதாகும். “ஹகம்” நாமத்துடைய ஒரு பிரதிபலிப்பு புனித ரமழான் மாதத்தில் எனக்குத் தென்பட்டது. ஐந்து அம்சங்களின் உள்ளடக்கமான இந்த மூன்றாவது குறிப்பு அந்தப் பிரதிபலிப்பின் வெறுமனே ஓர் அடையாளமாகும். மிகுந்த பதட்டத்தோடும் வேகமாகவும் எழுதப்பட்டதோடு, திருத்தங்கள் ஏதும் செய்யப்படாது ஆரம்பத்தில் எழுதப்பட்டவாறே விடப்பட்டுள்ளது.
பத்தாவது வார்த்தையில் குறிப்பிடப்பட்டதைப் போன்று “ஹகம்” நாமத்துடைய அதி உன்னதமான பிரதிபலிப்பானது இந்தப் பிரபஞ்சத்தை ஒரு மகத்தான புத்தகத்தை ஒத்ததாக ஆக்கியுள்ளது. அந்தப் புத்தகம் எத்தகையதெனில், அதன் ஒவ்வொரு பக்கத்திலும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.. அந்தப் பக்கங்களின் ஒவ்வொரு வரியிலும் நூற்றுக்கணக்கான பக்கங்கள் காணப்படுகின்றன.. அந்த வரியிம் ஒவ்வொரு சொற்களிலும் நூற்றுக்கணக்கான வரிகள் கோர்க்கப்பட்டுள்ளன.. அந்த சொற்களின் ஒவ்வோர் எழுத்திலும் நூற்றுக்கணக்கான சொற்கள் பதிக்கப்பட்டுள்ளன.. சுறுக்கமாகச் சொன்னால் அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு புள்ளியிலும் அந்தப் புத்தகத்துடைய சுறுக்கமான ஓர் உள்ளடக்கம் பொதிக்கப்பட்டுள்ளது. அந்தப் புத்தகத்துடைய பக்கங்களிலிருந்து வரிகளிலிருந்து புள்ளிகள் வரை அனைத்துமே அந்தப் புத்தகத்தின் வடிவமைப்பாளனையும் எழுத்தாளனையும் நூற்றுக்கணக்கான கோணங்களில் மிகத் தெளிவாகக் காட்சிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஆம், அந்தப் பிரபஞ்சப் புத்தகமானது, தன்னைப் பார்ப்பவர்களுக்குத் தனது இருப்பை விட நூறு மடங்கு அதிகமாக தன்னை எழுதியவனுடைய இருப்பையும் அவனது வஹ்தத்தையும் நிரூபித்துக்கொண்டிருக்கின்றது. ஏனெனில் ஓர் எழுத்து தனது இருப்பை ஓர் எழுத்தின் அளவே நிரூபித்துக்கொண்டிருக்கும் போது, தனது எழுத்தாளனைப் பற்றி ஒரு வசனத்தின் அளவு வியாக்கியானம் செய்கின்றது. ஆம், இந்தப் பிரமாண்டமான புத்தகத்தின் ஒரு பக்கம் இந்தப் பூமிப் பரப்பாகும். அந்தப் பக்கத்தில் தாவரவர்க்கங்கள் விலங்கினங்களின் எண்ணிக்கையளவு புத்தகங்கள், ஒவ்வொரு வசந்த காலத்திலும், ஒன்றுக்குள் ஒன்றாக ஒரே சமயத்தில் எந்த விதமான பிழைகளும் நிகழ்ந்துவிடாமல் அம்கசம்பூரணமான ஓர் அமைப்பில் எழுதப்பட்டுக்கொண்டிருப்பது கண்களுக்கு முன்னால் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. இந்தப் பக்கத்தின் ஒரு வரி ஒரு தோப்பாகும். அந்தத் தோப்பில் பூக்கள், மரங்கள், புற்பூண்டுகள் எண்ணிக்கையளவு நேர்த்தியானதும் வசீகரமானதுமான கஸீதாக்கள், ஒரே சமயத்தில், ஒன்றுக்குள் ஒன்றாக, எந்தவிதமான குறைகளுமின்றி எழுதப்படுவதை நாம் கண்களால் காண்கின்றோம். இந்த வரியிலுள்ள ஒரு சொல் பூக்களை விரித்து, கணிகளைத் தருவதற்காக இலைகளை உதிர்த்திருக்கின்ற ஒரு மரமாகும். ஆம், இந்தச் சொல், அழகாகவும் நேர்த்தியாகவும் அலங்காரமாகவும் அச்சொட்டாகவும் பதிக்கப்பட்டுள்ள பூக்கள், கணிகள், இலைகளின் எண்ணிக்கையளவு, ஹகமு துல் ஜலால் ஆகிய அல்லாஹ்வுடைய புகழ் பாடிக்கொண்டிருக்கும் ஒரு செய்யுள் வரியாகும். ஆம், பூத்துக் குழுங்கும் ஒவ்வொரு மரத்தையும் போன்று, அந்த மரமும் கூட அதன் வடிவமைப்பாளனுடைய புகழ்களைப் பாடிக்கொண்டிருக்கின்ற ஒரு கஸீதாவாகும். மேலும் ஹகமு துல் ஜலால் ஆகிய அந்த வல்லோன், உலகக் காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தனது தொல்பொருட்களையும் பிரமிக்கத்தக்க கலைப்பாடுகளையும் ஆயிரக்கணக்கான கண்களால் பார்க்க நாடுகின்றான். மேலும், அந்த ஆதி அந்தமில்லாத அரசன் அந்த மரத்துக்கு அழகிய அன்பளிப்புக்களையும் பெறுமதிமிக்க கிரீடங்கள், சீருடைகளையும் வழங்கியுள்ளான். அவற்றை அவைகளுக்கான பெருநாளாகவும் ஓர் உத்தியோகபூர்வத் திறப்பு விழாவாகவும் இருக்கின்ற வசந்த காலத்தில் தமது அரசனுக்கு முன்னால் காட்சிப்படுத்துவதற்காக அதற்கு அப்படிப்பட்ட அழகானதும் நேர்த்தியானதும் மகத்தானதும் அர்த்தபூர்வமானதுமான ஒரு தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தோற்றம் எத்தகையதெனில், ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு கனியிலும் ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கின்ற பல்வேறு அத்தாட்சிகள் பல்வேறு கோனங்களில் அந்த அழகிய வடிவமைப்பாளனுடைய இருப்புக்கும் அவனது நாமங்களுக்கும் சான்றுபகன்றுகொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு கனியிலும் கனகச்சிதமான ஓர் அளவை காணப்படுகின்றது. அந்த அளவை ஓர் ஒழுங்கு நேர்த்திக்குள்ளும், அந்த ஒழுங்கு நேர்த்தியானது சதாவும் தொழிற்பட்டுக்கொண்டிருக்கின்ற ஓர் ஒழுங்குபடுத்தல் பொறிமுறைக்குள்ளும், அந்த ஒழுங்குபடுத்தல் பொறிமுறையானது அழகிய கலைப்பாடுகள் மற்றும் ரம்மியமான தோற்றங்களுக்குள்ளும், அந்த அழகும் ரம்மியமும் வசீகரமான வாசனைகள் மற்றும் ஞானபூர்வமான சுவைகளுக்குள்ளும் காணப்படுவதால், ஒவ்வொரு பூவும் அந்த மரத்திலிருக்கின்ற பூக்களின் எண்ணிக்கையளவு ஹகமு துல் ஜலால் ஆகிய அல்லாஹ்வுக்கு சாட்சிபகர்ந்துகொண்டிருக்கின்றன. மேலும் ஒரு சொல்லாக உள்ள அந்த மரத்தின் கனி என்ற எழுத்தில் ஒரு புள்ளியாக இருக்கின்ற அந்தக் கனியின் விதையானது, மொத்த மரத்தின் உள்ளடக்கத்தையும் திட்டத்தையும் சுமக்கின்ற சிறியதொரு பெட்டகமாகும். இவ்வாறான உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கமைய பிரபஞ்சப் புத்தகத்தின் அத்தனை பக்கங்களும் அத்தனை வரிகளும் ஏன் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வொரு புள்ளியும் கூட -”ஹகம்” மற்றும் “ஹகீம்” ஆகிய நாமங்களின் பிரதிபலிப்பின் மூலமாக- ஒவ்வொரு மகத்தான அற்புதமாக அமைந்துள்ளன. இதனால் தான் ஒட்டுமொத்த காரணகாரியங்களும் ஒன்று சேர்ந்தாலும் கூட, வெறுமனே அந்தப் புள்ளிகளுள் ஏதேனும் ஒன்றுக்கு நிகரான ஒரு புள்ளியைக்கொண்டுவர முடியாதுள்ளன. ஆம், பிரமாண்டமான குர்ஆன் ஆகிய இந்தப் பிரபஞ்சத்தில் சிருஷ்டிக்கப்பட்டுள்ள ஒவ்வோர் ஆயத்தும், அந்த ஆயத்திலுள்ள எழுத்துக்கள் மற்றும் புள்ளிகளின் எண்ணிக்கையளவு அற்புதங்களைக் காட்சிப்படுத்திக்கொண்டிருப்பதால், நிச்சயமாக திக்குத் தெரியாத தற்செயல் நிகழ்வுகளும், குருட்டுச் சக்தியும், ஒழுங்கு, நேர்த்தி, நோக்கங்கள் என்று எதுவுமற்ற பிரக்ஞையற்ற இயற்கையும் எந்த வகையிலும் அந்த ஞானபூர்வமான, கூர்மையான பார்வையை வேண்டி நிற்கின்ற நுட்பமான சமநிலையிலும் நுணுக்கமான ஒழுங்கிலும் தலையீடு செய்ய முடியாது. ஒரு பேச்சுக்குத் தலையிடுவதாக இருந்தால், எல்லா இடங்களிலும் ஏராளமான குழப்பங்கள் இருப்பது அவசொயப்படுகின்றது. ஆனால், எந்தவிதமான ஒழுங்கீனங்களும் காணப்படுவதில்லை.
(இது இரண்டு விடயங்களை உள்ளடக்கியதாகும்.)
பத்தாவது வார்த்தையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதைப் போன்று, எல்லையில்லாத பரிபூரணத்தன்மை வாய்ந்த ஓர் அழகும், எல்லையில்லாத அழகுக்குச் சொந்தமான ஒரு பரிபூரணத்துவமும், நிச்சயமாக தன்னைத் தானே பார்ப்பதற்கும் பிறருக்கு காட்டிக் காட்சிப்படுத்துவதற்கும் நாட்டம்கொள்வது மிக அடிப்படையான ஒரு விதியாகும். ஆம், இந்த அடிப்படையான அகிலார்ந்த விதியின் அடிப்படையில் தான், பிரபஞ்சம் என்ற இந்தப் பிரமாண்டமான புத்தகத்தின் நித்திய வடிவமைப்பாளன், அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தைக்கொண்டும் ஒவ்வொரு வரியைக்கொண்டும் ஏன் ஒவ்வொர் எழுத்தையும் புள்ளியையும் கொண்டும் தன்னை அறிமுகப்படுத்துவதற்காகவும் தனது பரிபூரணத்துவத்தை அத்தாட்ச்சிப்படுத்துவதற்காகவும் தனது அழகை காட்சிப்படுத்துவதற்காகவும் அனைத்துக்கும் மேலால் தன்னை நேசிக்கச் செய்வதற்காகவும், மிக அற்பமானதிலிருந்து ஆரம்பித்து, மிகப் பிரமாண்டமானது வரை அத்தனை வஸ்துக்களிலும் பல்வேறு கோணங்களில் தனது அழகில் பொதிந்துள்ள பரிபூரணத்துவத்தையும் பரிபூரணத்துவத்தில் பொதிந்துள்ள அழகையும் காட்சிப்படுத்துகின்றான். இதோ, பொடுபோக்குக்காரனான மனிதனே! ஹாகிமுல் ஹகம், ஹகீமு துல்ஜலாலி வல்ஜமால் ஆகிய அல்லாஹ் உனக்கு முன்னால், இப்படிப்பட்ட மகத்தான ஏற்பாடுகளைச் செய்து எண்ணற்ற படைப்புக்களைக்கொண்டு பிரகாசமான ஓர் அமைப்பில் தன்னை அறிமுகப்படுத்தி நேசிக்கச்செய்ய நாடுகின்றான். உண்மை இவ்வாறிருக்க இந்த அளவு ஏற்பாடுகளுடன் ஆதி அந்தமில்லாத அந்த அரசன் தன்னை அறிமுகப்படுத்தும் போது, அதற்குப் பகரமாக ஈமான் மூலமாக அவனை நீ அறிந்துகொள்ளாவிட்டால், அவன் உன்னை மகிழ்ச்சிப்படுத்திக்கொண்டிருக்கும் போது, அதற்குப் பகரமாக உபூதிய்யத்தின் மூலம் நீ அவனை மகிழ்ச்சிப்படுத்தாவிட்டால், நீ எந்த அளவு எல்லையற்ற ஓர் அறியாமையிலும் நஷ்டத்திலும் இருக்கின்றாய் என்பதை அறிந்துகொள்!
சர்வ ஞானமும் வல்லமையும் பொருந்திய இந்தப் பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர்த்தாவுடைய முல்க்கில் எந்தவிதமான பங்கீட்டுக்கும் இடம் கிடையாது. அதாவது அத்தனை வஸ்துக்களிலும் எல்லையற்ற ஓர் ஒழுங்கும் நேர்த்தியும் காணப்படுவதால், ஒழுங்கு நேர்த்தி என்பன ஷிர்க்கை ஏற்றுக்கொள்ளாது. ஏனெனில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பல்வேறுபட்ட கைகள் ஒரே காரியத்தில் தலையிட்டால் அந்தக் காரியம் குழம்பிப்போய்விடும். ஒரு நாட்டில் இரண்டு மன்னர்களும், ஒரு நகரத்தில் இரண்டு மேயர்களும், ஒரு கிராமத்தில் இரண்டு அதிகாரிகளும் காணப்பட்டால், அந்த நாட்டின், அந்த நகரத்தின், அந்தக் கிராமத்தின் அத்தனை காரியங்களிலும் ஓரு குழப்பம் ஆரம்பமாகும். மிகச் சாமான்யமான ஒரு பொறுப்பில் இருக்கின்ற மிகச் சாமான்யமான ஒரு மனிதன், அந்தப் பொறுப்பில் பிறர் தலையீடு செய்வதை ஏற்றுக்கொள்ளாதிருப்பது, ஹாகிமிய்யத்துடைய மிக அடிப்படையான சிறப்பியல்பு சுதந்திரமும் சுயாதீனமுமாகும் என்பதையே காட்டி நிற்கின்றது. அதாவது ஒழுங்கு, நேர்த்தி என்பன வஹ்தத்தையும், ஹாகிமிய்யத் சுயாதீனத்தையும் வேண்டி நிற்கின்றன. உண்மையில் ஹாகிமிய்யத்துடைய தற்காலிகமான ஒரு நிழலானது, உதவி ஒத்தாசையின்பால் தேவையுடைய பலவீனமான மனிதர்களிடமே இந்த அளவு பிறர் தலையீட்டை நிராகரிக்கும் போது, ருபூபிய்யத் அந்தஸ்த்தில் ஹகீகத்தானதும் முத்லக்கானதுமான ஒரு ஹாகிமிய்யத்தைக்கொண்ட சர்வ வல்லோன் நிச்சயமாக தனது முழு வல்லமையையும் கொண்டு பிறர் தலையீட்டை நிராகரிப்பது அவசியப்படுகின்றது. ஆம், அணுவளவேனும் தலையீடு இருந்திருந்தால் கண்களுக்கு முன்னால் காணப்படுகின்ற இந்த ஒழுங்கு சீர்குழைந்திருக்கும். உண்மையில், இந்தப் பிரபஞ்சம் எந்த அளவு பிரமிக்கத்தக்க ஓர் அமைப்பில் படைக்கப்பட்டுள்ளது எனில், ஒரு விதையைப் படைப்பதற்கு, ஒரு மரத்தைப் படைக்க முடியுமான வல்லமை அவசியப்படுகின்றது. ஒரு மரத்தைப் படைப்பதற்கு பிரபஞ்சத்தைப் படைக்க முடியுமான ஒரு குத்ரத் அவசியப்படுகின்றது. எனவே பிரபஞ்சத்துக்குள் தலையீடு செய்கின்ற ஒரு பங்காளி இருந்தால், மிகச் சிறிய ஒரு விதையிலும் கூட பங்காளியாக இருப்பது அவசியப்படுகின்றது. ஏனெனில் இது அதன் சிறியதொரு மாதிரியாக இருக்கின்றது. இந்நிலையில், பிரமாண்டமான பிரபஞ்சத்தில் இருக்க முடியாத இரண்டு ருபூபிய்யத்துக்கள், ஒரு விதையில் அல்லது ஓர் அணுவில் இருப்பது அவசியப்படுகின்றது. இந்த அசாத்தியப்பாடானது அசாத்தியப்பாடுகளுக்குள் அதிக பாத்திலானதும், கற்பனைகளுக்குள் அதிக அர்த்தமற்றதும் ஆகும். பிரமாண்டமான இந்தப் பிரபஞ்சத்திலும் அதில் நிகழ்கின்ற அத்தனை நிகழ்வுகள் நிலைமைகளின் போதும் நீதியான சமநிலையையும் ஞானபூர்வமான ஒழுங்கையும் பேணுகின்ற சர்வ வல்லோன், பலவீனனாக இருக்கின்றான் என்று கூறுவதைப் போன்று, ஒரு விதையைச் சிருஷ்டிப்பதற்கு பங்குதாரர்களின்பால் தேவையுடையவனாக இருக்கின்றான் என்று கூறுவது, அதாவது ஷிர்க்கும் குஃப்ரும் எப்படிப்பட்ட மட்டற்ற ஒரு மடமையாகவும் முரன்பாடாகவும் பொய்யாகவும் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளுங்கள். அவ்வாறே தவ்ஹீத் எந்த அளவு மகத்தான சத்தியமாகவும் உண்மையாகவும் பொருத்தமானதாகவும் இருக்கின்றது என்பதை அறிந்து “அல்ஹம்துலில்லாஹி அலல் ஈமான்” என்று கூறுங்கள்.
சர்வ வல்லமைமிக்க வடிவமைப்பாளன், தனது "ஹகம்" மற்றும் "ஹகீம்" ஆகிய நாமங்களின் ஒரு பிரதிபலிப்பாக இந்த உலகத்துக்குள் ஆயிரக்கணக்கான பிரமிக்கத்தக்க உலகங்களைப் பொதித்து வைத்துள்ளான். அந்த உலகங்களுக்குள், பிரபஞ்சத்தில் இருக்கின்ற அதிகமான ஞானங்களுக்குப் பாத்திரமானவனாகவும் காரணமானவனாகவும் இருக்கின்ற மனிதனை, ஒரு மத்தியஸ்தலமாகப் படைத்துள்ளான். அதாவது, இந்தப் பிரபஞ்ச எல்லைக்குள் இருக்கின்ற மிக மகத்தான ஞானங்களும் பிரதிபலன்களும் மனிதனை நோக்கியவையாக இருக்கின்றன. அவ்வாறே மனித உலகத்துக்குள் வாழ்வாதாரங்களை மத்தியஸ்தலமாக ஆக்கி வைத்துள்ளான். மனித உலகத்துக்குள் இருக்கின்ற பெரும்பாலான ஞானங்களும் நோக்கங்களும் அந்த வாழ்வாதாரங்களை நோக்கியே இருக்கின்றன. வாழ்வாதாரங்களின் மூலமாகவே வெளிப்படுகின்றன. மேலும் மனிதனிடமிருக்கின்ற பிரக்ஞை மற்றும் ரிஸ்க்கில் இருக்கின்ற சுவை என்பன "ஹகீம்" நாமத்துடைய பிரதிபலிப்புக்கள் மிகவும் பிரகாசமாகப் புலப்படுவதற்கான ஊடகங்களாக காணப்படுகின்றன. மேலும், மனிதனிடமிருக்கின்ற அந்தப் பிரக்ஞையின் வாயிலாகக் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அறிவியல் விஞ்ஞானங்களுள் ஒவ்வொரு விஞ்ஞானமும், "ஹகம்" நாமத்துடைய ஒவ்வொரு வகையான பிரதிபலிப்பை விபரிக்கின்றது. உதாரணமாக, மருத்துவ விஞ்ஞானத்திடம், "இந்தப் பிரபஞ்சம் என்ன?" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டால், "மிகவும் நேர்த்தியும் பூரணத்துவமுமிக்க பிரமாண்டமானதொரு மருந்தகமாகும். அதற்குள் அனைத்து வகையான மருந்துகளும் அழகான முறையில் தயாரிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன." என்ற பதிலையே நிச்சயமாகப் பெற்றுக்கொள்வீர்கள். இரசாயனவியலிடம் அதே கேள்வி முன்வைக்கப்பட்டால் "மிகுந்த நேர்த்தியும் பரிபூரணத்துவமுமிக்க ஓர் இரசாயனகூடமாகும்." என்ற பதிலே கிடைக்கும். இயந்திரவியல் தொழிநுற்பமானது "எந்தவிதமான குறைகளுமற்ற மிகப் பரிபூரணத்துவம் வாய்ந்த ஒரு தொழிற்சாலையாகும்." என்ற பதிலையே முன்வைக்கும். விவசாயத்துறையானது, "அத்தனை வகையான விதைகளிலிருந்தும் உறிய நேரத்தில் விளைச்சல் தருகின்ற பூரணத்துவமிக்க ஒரு தோப்பாகும். அல்லது வளமும் நேர்த்தியும் மிக்க ஒரு வயல் நிலமாகும்." என்று கூறும். வியாபாரத்துறையானது, மிகந்த நேர்த்தியும் கவர்ச்சியும்மிக்க ஒரு காட்ச்சிக்கூடமாகவும், மிகுந்த ஒழுங்கும் பரபரப்பும்மிக்க ஒரு சந்தையாகவும், அழகிய கலைப்பாடுகளோடு அத்தனை விதமான பொருட்களையும் விற்பனை செய்கின்ற ஒரு வியாபாரஸ்தலமாகவுமே நோக்கும். உணவு மற்றும் ஊட்டச்சத்தோடு சம்பந்தப்பட்ட அறிவியலானது, “அத்தனை விதமான ஆகாரங்களையும் அவற்றின் பல்வேறு வகைகளையும் உள்ளடக்கிய நேர்த்திமிக்க மிகப் பிரமாண்டமானதொரு கலஞ்சியசாலையாகும்.” என்று கூறும். ஆகாரங்களோடு சம்பந்தப்பட்ட அறிவியலானது, “இலட்சக்கணக்கான சுவைமிக்க ஆகாரங்களை ஒரே சமயத்தில் மிக நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் சமைக்கின்ற பிரமாண்டமான ஒரு ரஹ்மானிய்ய சமையல் கூடம் அல்லது அண்டாவாகும்.” என்று கூறும். இராணுவத்துறையிடம் அதே கேள்வி முன்வைக்கப்பட்டால், “இந்தப் பூமி ஓர் இராணுவத் தளமாகும். அதாவது, ஒவ்வொரு வசந்தகாலத்திலும் பூமிப்பரப்புக்கு மேல் புதிது புதிதாக ஆயுதம் தரித்து முற்றுகையிடுகின்ற நான்கு இலட்சத்துக்கும் அதிகமான வெவ்வேறுபட்ட இனங்கள் அந்த இராணுவத்தில் காணப்படுகின்றன. அவ்வாறிருந்தும் அவற்றுக்குத் தேவையான வெவ்வேறு ஆகாரங்களும், வெவ்வேறான சீருடைகள், ஆயுதங்களும், வெவ்வேறான கட்டளைகள், சலுகைகளும் என்று அனைத்துமே அச்சொட்டாக பூரண நேர்த்தியோடு, எந்த ஒன்றையும் மறந்துவிடாது, சர்வ வல்லமையும் சங்கையும் பொருந்திய ஒரு தளபதியின் கண்காணிப்பின் கீழ், அவனது கட்டளைக்கமைவாக, அவனது வல்லமையைக்கொண்டு, அவனது கருணையின் நிழலில் அவனது கஜானாக்களிலிருந்து வழ்ங்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.” என்ற பதிலையே கூறும். மின்சாரவியலிடம் அதே கேள்வி முன்வைக்கப்பட்டால், “பிரமிக்கத்தக்க இந்தப் பிரபஞ்ச மாளிகையின் முகடு, மிக நேர்த்தியான ஓர் அமைப்பில், எண்ணற்ற மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.” என்ற பதிலையே நிச்சயமாகக் கூறும். அத்துடன், “அங்கு காணப்படுகின்ற ஒழுங்கும் நேர்த்தியும் எத்தகையதெனில், சூரியன் முதல் இந்தப் பூமிப்பந்தைவிட ஆயிரம் மடங்கு பிரமாண்டமான எண்ணற்ற ஆகாய விளக்குகள் தொடர்ந்தேர்ச்சையாக எரிந்துகொண்டிருந்த போதிலும் அவற்றின் சமநிலைகள் குழம்புவதோ, வெடித்துச் சிதறி சுற்றுவட்டாரத்தை தீப்பற்றச் செய்வதோ இல்லை. அவற்றின் செலவுகள் முடிவில்லாததாக இருக்கின்ற போது, அவற்றை எரிப்பதற்குத் தேவையான உள்ளீடுகளும் வாயுக்களும் எரிபொருட்களும் எங்கிருந்து வருகின்றன? ஏன் தீர்ந்து போவதில்லை? எவ்வாறு எரி சுவாலைகள் ஒரே அளவில் பேணப்படுகின்றன?.. சிறியதொரு விளக்கு கூட சிரத்தையோடு ஒழுங்காகப் பராமரிக்கப்படாவிட்டால் அனைந்து போய்விடும். வானவியலின்படி, பூமிப்பந்தை விட பத்து இலட்சம் மடங்கு பிரமாண்டமானதாகவும், பத்து இலட்சம் வருடங்களாகத் தொடர்ந்து எறிந்துகொண்டும் இருக்கின்ற சூரியனை எறிபொருட்களின்றி அனைந்து போகாமல் எறித்துக்கொண்டிருக்கின்ற சர்வ ஞானமிக்க வல்லோனுடைய ஞானத்தையும் வல்லமையையும் பாருங்கள். சூரியனுடைய ஆயுள் காலத்தில் கடக்கின்ற செக்கன்களின் எண்ணிக்கையளவு “மாஷா அல்லாஹ், பாரகல்லாஹ், லா இலாஹ இல்லாஹு” என்று கூறுங்கள்.” என்று அந்த மின்சாரவியல் சொல்லித் தரும். இதன் அர்த்தம், இந்த ஆகாய ஒளிவிளக்குகளில் மிகப் பிரமாதமான ஓர் ஒழுங்கும் சமநிலையும் காணப்படுவதோடு, அவை மிகக் கவனமாகக் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதாகும். ஏதோ, அந்த எண்ணற்ற பிரமாண்டமான நெருப்புப் பிளம்புகளினதும் ஒளி விளக்குகளினதும் ஊற்றுவாய் சதாவும் தீராது வெப்பத்தைக் கக்கிக்கொண்டிருக்கின்ற ஒரு நரகமாக இருக்க வேண்டும். அதனால் தான் போலும் அவற்றுக்கு ஒளியில்லாத வெப்பம் வழங்கப்படுகின்றது. மேலும் அந்த ஒளி விளக்குகள் உற்பதியாகின்ற தொழிற்சாலைகள் நித்தியமான ஒரு சுவனமாக இருக்க வேண்டும். இதன் மூலம் அவை ஒளியையும் வெளிச்சத்தையும் பெற்றுக்கொள்கின்றன. "ஹகீம்" மற்றும் "ஹகம்" ஆகிய நாமங்களின் அகிலார்ந்த பிரதிபலிப்பின் மூலமாக, சதாவும் தனது எல்லைக்குள் ஓர் ஒழுங்கோடு எரிந்துகொண்டிருக்கின்றன. இவற்றோடு கூடவே, இன்னும் நூற்றுக்கணக்கான அறிவியல்கள் ஒவ்வொன்றினதும் உறுதியான அத்தாட்சியின் பிரகாரம், எந்த விதமான குறைகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு பரிபூரணத்துவமிக்க ஒழுங்கு, நேர்த்திக்குள் எண்ணற்ற ஞானங்களையும் பலாபலன்களையும்கொண்டு இந்தப் பிரபஞ்சம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பிரமாதமான அகிலார்ந்த ஞானத்தின் மூலமாக முழுப் பிரபஞ்சத்திலும் கோலோச்சுகின்ற அதே ஒழுங்கும் அதே ஞானங்களும், மிக அற்பமான ஓர் உயிரினத்திலும், ஒரு விதையிலும் கூட சிறிய அளவில் பொதிக்கப்பட்டுள்ளன. மேலும், நோக்கங்களையும் ஞானங்களையும் பலாபலன்களையும் தேடிச்செல்வதற்கு, நாட்டமும், தெறிவும், அறிந்து செய்வதும் அவசியமானதாகும் என்பதும் இவை இல்லாமல் முடியாது என்பதும் தெட்டத் தெளிவானதாகும். எனவே மேற்கூறப்பட்ட எதுவுமே தெறிவில்லாத, நாட்டமில்லாத, அறிந்து செயற்படமுடியாத, பிரக்ஞையற்ற காரணகாரியங்களினதும் இயற்கையினதும் வேலைகளாக இருக்க முடியாது. அவற்றின் தலையீடுகள் கூட சாத்தியமற்றது. ஆகவே இந்தப் பிரபஞ்சத்திலிருக்கும் அத்தனை வஸ்துக்களிலும் காணப்படுகின்ற எல்லையற்ற ஒழுங்கு நேர்த்தியும் எண்ணற்ற ஞானங்களும், தான் நாடியதை நாடிய விதமாகச் செய்கின்ற ஒரு காரணகர்த்தாவையும், சர்வ ஞானம் பொருந்திய ஒரு வடிவமைப்பாளனையும் வேண்டி நிற்கின்றன. நிலைமை இவ்வாறிருக்க அவனைக் கண்டுகொள்ளாமலிருப்பதும், அவனை நிராகரிப்பதும் எப்படிப்பட்ட ஓர் அறியாமையும் மடமையும் ஆகும் என்பதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. ஆம், இந்த உலகில் மனிதனை அதிகமாக வியப்பில் ஆழ்த்துகின்ற ஒரு விடயம் இருக்குமானால், அது இந்த நிராகரிப்பாகும். ஏனெனில், பிரபஞ்சத்திலிருக்கின்ற வஸ்துக்களிலிருக்கும் எல்லையில்லாத ஒழுங்கு நேர்த்தியும், எண்ணற்ற ஞானங்களும் அவனது இருப்புக்கும் அவனுடைய வஹ்தத்திற்குமான எண்ணற்ற அத்தாட்சிகளாக இருக்கும் போது, அவனைக் கண்டுகொள்ளாதிருப்பதும் அறிந்துகொள்ளாதிருப்பதும் எந்த அளவு குருட்டுத்தனமானதும் அறியாமையும் என்பதை மிகப் பெரிய குருடனான மடையனும் கூட அறிந்துகொள்வான். அத்தோடு குறிப்பாக, பிரபஞ்சத்தின் இருப்பை நிராகரிக்கின்றமை காரணமாக மூடர்களாகக் கருதப்படும் அஹ்லுல் குஃப்ரைச் சேர்ந்த ஸோஃபிஸ்டுக்களே அவர்களுக்கு மத்தியிலுள்ள மிகப் பெரும் புத்திசாலிகள் என்று என்னால் கூற முடியும். ஏனெனில், பிரபஞ்சத்தின் இருப்பை ஏற்றுக்கொண்டுவிட்டு, அதன் படைப்பாளனாகிய அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளாதிருப்பது, சாத்தியமற்றதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்பதால், பிரபஞ்சத்தையும் அதிலுள்ள அத்தனை வஸ்துக்களையும் ஏன் தம்மையும் கூட நிராகரித்துவிட்டனர். “எந்த ஒன்றுமே இல்லை” என்ற தீர்ப்பின் மூலம் தமது புத்தியைவிட்டும் இராஜினாமாச் செய்து, புத்திசாலிகள் என்ற பெயருக்குக் கீழ் நிராகரிப்பாளர்களான தமது சகாக்கள் புரிந்துகொண்டிருக்கின்ற எல்லையில்லாத மடமையிலிருந்து பாதுகாப்புப் பெற்றதன் மூலம், ஓரளவு புத்திக்கு நெருக்கமாகிவிட்டனர்.
பத்தாவது வார்த்தையில் குறிப்பிடப்பட்டதைப் போன்று, ஒரு ஞானமும் தேர்ச்சியும் மிக்க ஒரு வடிவமைப்பாளர் அல்லது கலைஞர் ஒரு மாளிகையை நிர்மானிக்கின்றார். அந்த மாளிகையின் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வோர் அங்குலத்தையும் மிக நுட்பமான அமைப்பில் நூற்றுக்கணக்கான தாத்பரியங்களைப் பொதியப்பெற்றவையாகக் கட்டியெழுப்புகின்றார். பின்னர் அந்தக் கலைஞர் அந்த மாளிகையின் கூரையை நிர்மாணிக்காமல் அது வரை கண்ணும்கருத்துமாகக் கட்டியெழுப்பிய பல்வேறு தாத்பரியங்கள் பொதியப்பெற்ற அந்த மாளிகையை அர்த்தமற்ற ஒன்றாக அழிந்து போக அணுமதியளிப்பார் என்பதை பிரக்ஞையுள்ள எந்த ஒருவனும் ஏற்றுக்கொள்ளமாட்டான். உண்மை இப்படியிருக்க, முத்லக்கான அகிலார்ந்த ஞானமிக்க படைப்பாளன், தனது பரிபூரணத்துவமிக்க ஞானத்தின் வெளிப்பாடாக, அற்பமான ஒரு விதையிலிருந்து தொன் கணக்கான பலாபலன்களயும், நோக்கங்களையும், ஞானங்களையும் மிகக் கரிசனையோடு வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்ற போது, மலை போன்று பிரமாண்டமான ஒரு மரத்திலிருந்து அற்பமான ஒரு விதையின் அளவேயான பலாபலனை அல்லது அற்பமான ஒரு நோக்கத்தை அல்லது தனி ஒரு கனியை வெளிப்படுத்துவதன் மூலமும் அந்த அற்பமான நோக்கத்திற்காக இந்தப் பிரமாண்டமான மரத்தின் ஏகப்பட்ட செலவுகளைக் கவனிப்பதும், அந்த சர்வ ஞானமிக்கவனுடைய முத்லக்கான ஞானத்திற்கு முற்றிலும் முரனானதாகும். அந்த மகா ஞானத்திலிருந்து இப்படிப்பட்ட ஒரு வீண்விரயமோ, ஊதாரித்தனமோ வெளிப்படுவது எந்த விதத்திலும் சாத்தியமற்றதாகும். அதே போன்று தான், இந்தப் பிரபஞ்ச மாளிகையிலுள்ள ஒவ்வொரு வஸ்திலும் நூற்றுக்கணக்கான ஞானங்களைப் பொதித்து, நூற்றுக்கணக்கான பணிகளைச் சுமத்தி.. உதாரணமாக, ஒவ்வொரு மரத்திற்கும் அதிலுள்ள கனிகளின் எண்ணிக்கையளவு ஞானங்களையும் விதைகளின் எண்ணிக்கையளவு பணிகளையும் சுமத்திய சர்வ ஞானமிக்க சிருஷ்டிகர்த்தா, கியாமத்தைக் கொண்டுவராதிருப்பதினூடாக, மஹ்ஷரில் ஹஷ்ரை ஏற்படுத்தாதிருப்பதினூடாக, எண்ணற்ற இந்தத் தாத்பரியங்களையும் பணிகளையும் எந்த விதமான பலாபலன்களோ, அர்த்தமோ அற்ற வெற்றுச் சரக்குகளாக ஆக்குவது, அந்த சர்வ வல்லோனுடைய முத்லக்கான குத்ரத்திற்கு முத்லக்கான இயலாமையைச் சேர்க்கின்ற காரியமாகும்; அந்த முத்லக்கான ஞானமிக்கவனுடைய பரிபூரணத்துவமிக்க ஞானத்திற்கு அர்த்தமின்மை, பயன்பாடின்மை, வெறுமை போன்றவற்றைச் சேர்க்கின்ற காரியமாகும்; அந்த நிகரற்ற அன்புடையோனுடைய முத்லக்கான அழகிய அன்புக்கு அளவில்லாத அசிங்கத்தைச் சேர்க்கின்ற காரியமாகும்; அந்த முத்லக்கான நீதவானுடைய பரிபூரணத்துவமிக்க நீதிக்கு அளவில்லாத அநீதியைச் சேர்க்கின்ற காரியமாகும். சுருக்கமாகச் சொன்னால் பிரபஞ்சத்தில் தெளிவாகக் காண முடியுமாக உள்ள ஞானத்தையும், ரஹ்மத்தையும், நீதியையும் நிராகரிக்கின்ற காரியமாகும். இது, எண்ணற்ற பாத்திலான கட்டுக்கதைகளை உள்ளடக்கிய, அப்பட்டமான ஓர் அசாத்தியப்பாடாகும். வழிகேடர்கள் இந்த விடயங்களை அவதானிக்கட்டும். வழிகேடானது, தாம் நுழையப் போகின்ற மண்ணறைகளைப் போன்று எந்த அளவு இருள்மயமானதும், பயங்கரமானதுமான அதலபாதாளம் என்பதை கண்டுகொள்ளட்டும். பின்னர் மறுமை நம்பிக்கையானது, சுவனத்தைப் போன்றே, அழகும் வசீகரமும் பிரகாசமும் மிக்க ஒரு பாதையாகும் என்பதை அறிந்துகொண்டு ஈமானியக் கோட்டைக்குள் நுழைந்துகொள்ளட்டும்.
(இது இரண்டு விடயங்களை உள்ளடக்கியதாகும்.)
மகத்துவமிக்க வடிவமைப்பாளன், அவனுடைய “ஹகீம்” என்ற நாமத்தின் வேண்டுதலுக்கமைவாக, அத்தனை வஸ்துக்களிலும், மிகச் சுலபமான தோற்றத்தையும் மிகக் குறுகிய பாதையையும் மிக இலகுவான முறையையும் மிகப் பயனுள்ள வடிவத்தையும் மிகுந்த சிரத்தையோடு பேணுகின்றான். இது அவனது இயல்பில் வீண்விரயமோ, பிரயோசனமற்ற வெற்றுக் காரியங்களோ இல்லை என்பதைக் காட்டுகின்றது. வீண்விரயமானது, ஹகீம் நாமத்துக்கு நேர் முரனானதாக இருப்பதைப் போன்றே, சிக்கனமும் கூட அந்த நாமத்தின் வேண்டுதலாகவும் அடிப்படை விதியாகவும் இருக்கிறது. சிக்கனமற்ற வீண்விரயக்கார மனிதனே! முழுப் பிரபஞ்சத்திலும் கோலோச்சுகின்ற மிக அடிப்படை விதியாகிய சிக்கனத்தைக் கடைப்பிடிக்காமையின் காரணமாக, எந்த அளவு சத்தியத்திற்கு எதிராகக் காரியமாற்றுகின்றாய் என்பதை அறிந்துகொள்! كُلُوا وَ اشْرَبُوا وَ لاَ تُسْرِفُوا என்ற வசனம் எந்த அளவு அடிப்படையானதும் அகிலார்ந்ததுமான ஒரு விதியைக் கற்றுத் தருகின்றது என்பதை விளங்கிக்கொள்!..
ஹகம் மற்றும் ஹகீம் ஆகிய நாமங்கள், மிகத் தெளிவான ஓர் அமைப்பில் ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடைய ரிஸாலத்திற்கு அத்தாட்சியாக இருப்பதோடு அந்த நாமங்களின் ஒரு வேண்டுதலாகவும் இருக்கின்றது என்று கூற முடியும். ஆம், உண்மையிலேயே மிகவும் தத்ரூபமான அர்த்தங்கள் நிறைந்த ஒரு புத்தகம், அதைக் கற்றுக்கொடுக்கக் கூடிய ஆசானை வேண்டி நிற்கின்றது. மிகக் கவர்ச்சிக்ரமான ஓர் அழகு தன்னைக் காணவும் காண்பிக்கவும் முடியுமான ஒரு கண்ணாடியை வேண்டுகின்றது. மிகப் பரிபூரணத்துவமிக்க ஒரு கலைப் பொருள், விளம்பரம் செய்வதற்கான ஒரு வர்ணனையாளரை வேண்டி நிற்கின்றது. எனவே தனது ஒவ்வோர் எழுத்திலும் நூற்றுக்கணக்கான அர்த்தங்களையும் ஞானங்களையும் பொதியப்பெற்றிருக்கின்ற இந்தப் பிரமாண்டமான பிரபஞ்சப் புத்தகம் விளித்துப் பேசுகின்ற மனித குலத்திற்கும் கூட மொத்தமானதும் பூரணமானதுமான ஒரு வழிகாட்டியும் ஒரு பேராசானும் இருந்தே ஆக வேண்டும். ஆம், அந்தப் புத்தகத்தில் காணப்படுகின்ற புனிதமான, ஹகீகத்தான ஞானங்களை கற்றுக்கொடுப்பதற்கும், தேவைப்பட்டால் உண்மையில் இந்தப் பிரபஞ்சம் இப்படிப்பட்ட தாத்பரியங்களால் நிரம்பப்பெற்றது தான் என்பதை கற்றுக்கொடுப்பதற்கும் அப்படிப்பட்ட ஓர் ஆசானுடைய தேவை இன்றியமையாததாகும். மாத்திரமன்றி இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பிலிருக்கின்ற இறை நோக்கங்கள் வெளிப்படுவதற்கான வஸீலாவாக இருப்பதற்கும், முழுப் பிரபஞ்சத்திலும் அதன் படைப்பாளனால் மிகக் கரிசனையோடு காட்ச்சிப்படுத்தப்பட்டுள்ள உயர்தரமான கலைப்பாடுகளைப்பற்றி அறியத்தருவதற்கும், அந்தக் கலைப்பாடுகளில் பிரதிபலிக்கின்ற அவனது அழகிய திரு நாமங்களுக்கான மிகச் சிரேஷ்டமான ஒரு கண்ணாடியாக இருப்பதற்கும், -பிரபஞ்சத்தின் படைப்பாளன், தனது அத்தனை படைப்புக்களையும் கொண்டு தன் மீதான நேசத்தையும், பிரக்ஞையுள்ள படைப்புக்களிடம் அந்த அருட்கொடைகளுக்கான மறுமொழியையும் எதிர்பார்த்திருப்பதால்- அந்தப் பிரக்ஞையுள்ள அத்தனை படைப்புக்களினதும் பெயரால் ஒருவர் அந்தப் படைப்பாளனுடைய அகிலார்ந்த ருபூபிய்யத்துக்கு முன்னால் விசாலமானதும் அகிலார்ந்ததுமான உபூதிய்யத் மூலமாக மறுமொழி அளிப்பதற்கும், அதன் மூலமாக கடலிலும் தரையிலும் வானத்திலும் உள்ளவர்களின் கவனத்தை ஈர்த்து அவை அனைத்துக்கும் முன்னிலையில் அந்தப் படைப்பாளனைத் தூய்மைப்படுத்துவதற்கும், அதன் மூலம் பிரக்ஞையுள்ள படைப்புக்களின் கவனத்தை அந்த சிருஷ்டிக்களுடைய சிருஷ்டிகர்த்தாவை நோக்கித் திருப்புவதற்கும், புத்தியுள்ள அத்தனை மனிதர்களது காதுகளையும் தன்பால் திருப்பக் கூடிய புனிதமான பாடங்களையும் கட்டளைகளையும்கொண்ட சங்கைமிக்க குர்ஆனின் மூலமாக ஹகம், ஹகீம் ஆகிய படைப்பாளன் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்ததற்கான நோக்கங்களை மிக அழகிய ஓர் அமைப்பில் சொல்லிக்கொடுப்பதற்கும், பிரபஞ்சத்திலுள்ள அத்தனை ஞானங்களுக்கும் அழகுகளுக்கும் அவற்றின் மகத்துவத்துக்கும் முன்னால் மொத்தமாகவும் பரிபூரணமாகவும் பதிலலிப்பதற்கும் அப்படிப்பட்ட ஓர் ஆசான், ஒரு வழிகாட்டி, ஓரு உத்தமர் –பூமிக்கு சூரியன் அவசியமாக இருப்பதைப் போன்று- இந்தப் பிரபஞ்சத்துக்கு அவசியமாகும்; இன்றியமையாத ஒரு தேவையாகும். ஆம், இத்தனை சிறப்புக்களையும் பொதியப்பெற்று, தனது பணியை அங்கசம்பூரணமாக நிறைவேற்றிய அந்த வழிகாட்டி, ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாதுவஸ்ஸலாம் அவர்கள் தான் என்பதற்கு அனைவருமே சாட்சியாளர்களாகும். அவ்வாறெனில், சூரியன் வெளிச்சத்தையும், வெளிச்சம் பகலையும் அவசியப்படுத்துவதைப் போன்று, இந்தப் பிரபஞ்சத்திலிருக்கின்ற ஒட்டுமொத்த ஞானங்களும் ரிஸாலதே அஹமதிய்யாவை (அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம்) அவசியப்படுத்துகின்றன. ஆம், ஹகம் மற்றும் ஹகீம் ஆகிய நாமங்கள், மிகச் சங்கையான தமது பிரதிபலிப்புக்கள் மூலமாக, அதி உச்ச மட்டத்தில் ரிஸாலதே அஹமதியாவை வேண்டி நிற்கின்றன. அவ்வாறே அஸ்மாஉல் ஹுஸ்னாவிலுள்ள அல்லாஹ், ரஹ்மான், ரஹீம், வதூத், முன்இம், கரீம், ஜெமீல், ரப் போன்ற ஏராளமான நாமங்கள் ஒவ்வொன்றும், பிரபஞ்சத்தில் புலப்படுகின்ற தமது உன்னதமான பிரதிபலிப்புக்களின் மூலமாக, உச்ச மட்டத்தில் வலுக்கட்டாயமாக ரிஸாலதே அஹமதிய்யாவை (அலை.வஸ்) வேண்டி நிற்கின்றன. உதாரணமாக, ரஹ்மான் நாமத்தின் ஒரு பிரதிபலிப்பாக இருக்கின்ற அகிலார்ந்த ரஹ்மத், அந்த ரஹ்மதன் லில்ஆலமீன் மூலமாகவே புலப்படுகின்றது, பூரணத்துவத்தையும் அடைகின்றது. மேலும் வதூத் நாமத்தின் ஒரு பிரதிபலிப்பாக இருக்கின்ற இறைவன் மீதான காதலும் அவனைப் பற்றி அறிந்துகொள்கின்ற தாகமும், ஹபீபு ரப்புல் ஆலமீன் ஆகிய அந்த உத்தமத் தூதரின் மூலமாகவே பிரதிபலனையும் விளைவையும் தரும். மேலும், ஜமால் நாமத்துடைய ஒரு பிரதிபலிப்பாக இருக்கின்ற அத்தனை அழகுகளும், அதாவது அந்தப் படைப்பாளன் முதல் அவனது நாமங்களுடைய அழகு அவனுடைய வடிவமைப்புக்கள் மற்றும் சிருஷ்டிக்களிலுள்ள அழகு என்று அத்தனை அழகுகளும் அவற்றின் பிரதிபலிப்பிடமாக அல்லது கண்ணாடியாக இருக்கின்ற முஹம்மத் (அலை. வஸ்) அவர்களில் புலப்படுகின்றது. மேலும் அவனது அகிலார்ந்த ருபூபிய்யத் மற்றும் உலூஹிய்யத்துடைய பிரதிபலிப்புக்களும் கூட அந்த அகிலார்ந்த ருபூபிய்யத்தை வர்ணிப்பவராக இருக்கின்ற முஹம்மத் (ஸல்) அவர்களுடைய ரிஸாலத்தின் மூலமாகவே புலப்படுகின்றது; அறிந்துகொள்ளப்படுகின்றது; உண்மைப்படுத்தப்படுகின்றது. இந்த உதாரணங்களைப் போன்று அஸ்மாஉல் ஹுஸ்னாவிலுள்ள ஒவ்வொரு நாமமும் ரிஸாலதே அஹமதிய்யாவுக்கான மிகப் பிரகாசமான ஒவ்வோர் அத்தாட்சியாகும். சுருக்கமாக இந்தப் பிரபஞ்சம் இருக்கின்றது என்பது சத்தியமானதாகும். இதை யாராலும் நிராகரிக்க முடியாது. மேலும் இந்தப் பிரபஞ்சத்தின் வர்ணங்களாகவும் அலங்காரங்களாகவும் ஒளிகளாகவும் பிரகாசங்களாகவும் ஸிபாத்துக்களாகவும் உயிர்களாகவும் பிணைப்புக்களாகவும் இருக்கின்ற ஹிக்மத், பரிவு, பாசம், ரஹ்மத், அழகு, ஒழுங்கு, நேர்த்தி போன்ற கண்களுக்கு முன்னால் காட்சியளிக்கின்ற சத்தியங்களை எந்தச் சாட்டுப் போக்கை வைத்தும் நிச்சயமாக நிராகரிக்க முடியாது. ஆம், பிரபஞ்சத்தில் பிரதிபலிக்கின்ற இந்த ஸிபாத்துக்களையும் இந்த செயற்பாடுகளையும் நிராகரிப்பது எந்த வகையிலும் சாத்தியமற்றதாகும். எனவே நிச்சயமாக இந்த ஸிபாத்துக்களுக்கு சொந்தக்காரனாகவும் இந்தக் காரியங்களின் கர்த்தாவாகவும் இருக்கின்ற ழாது வாஜிபுல் வுஜூத், கரீம், ரஹீம், ஜெமீல், அத்ல் ஆகிய ஏகனும் கூட எந்த விதத்திலும் நிரகரிக்கப்பட முடியாது. இப்படிப்பட்ட ஒரு நிராகரிப்பு ஏற்றுக்கொள்ளப்படவும் முடியாது. மேலும் நிச்சயமாக, அந்த ஸிபாத்துக்களும் செயற்பாடுகளும் வெளிப்படுவதற்கான காரணியாகவும் சில போது பூரணத்துவத்தை அடைவதற்கான வஸீலாவாகவும் உண்மைப்படுத்தப்படுவதற்கான காரணியாகவும் இருக்கின்ற மாபெரும் வழிகாட்டியும் அங்கசம்பூரணமான ஆசானும் சங்கைமிக்க வர்ணனையாளரும் பிரபஞ்ச இரகசியங்களின் கண்டுபிடிப்பாளரும், ஸமதியத்தின் பிரதிபலிப்பிடமும், ஹபீபுர் ரஹ்மானும் ஆகிய முஹம்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களுடைய ரிஸாலத், எந்த வகையிலும் நிராகரிக்கப்பட முடியாததாகும். சத்தியங்களின் உலகமாகிய இந்தப் பிரபஞ்சத்தினதும் பிரபஞ்சத்திலிருக்கின்ற சத்தியங்களினதும் ஒளிகளைப் போன்று அண்ணாருடைய ரிஸாலத்தும் கூட பிரபஞ்சத்திலிருக்கின்ற மிகப் பிரகாசமான ஓர் ஒளியாகும். عَلَي۟هِ وَعَلٰى اٰلِهٖ وَ صَح۟بِهِ الصَّلَاةُ وَالسَّلَامُ بِعَدَدِ عَاشِرَاتِ ال۟اَيَّامِ وَذَرَّاتِ ال۟اَنَامِ سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ என்ற வசனத்தின் ஒரு தாத்பரியமாகவும், வாஹித் மற்றும் அஹத் ஆகிய நாமங்களை உள்ளடக்குவதாகவும் இருக்கின்ற ஓர் இஸ்முல் அஃஸம் அல்லது இஸ்முல் அஃஸமுடைய ஆறு ஒளிகளுள் ஓர் ஒளியாக இருக்கின்ற “ஃபர்த்” என்ற நாமத்தின் ஒரு பிரதிபலிப்பு ஷவ்வால் மாதம் “எஸ்கிஷெஹிர்” சிறைச் சாலையில் இருக்கும் போது எனக்குத் தென்பட்டது. அந்த உன்னதமான பிரதிபலிப்பின் விரிவான விளக்கங்களை ரிஸாலே நூரின் பிற பகுதிகளிடம் ஒப்படைத்துவிட்டு இந்த இடத்தில் மிகவும் சுருக்கமான ஏழு அடையாளங்களினூடாக ஃபர்த் நாமத்தின் உன்னதமான பிரதிபலிப்பின் மூலமாக எமது கண்களுக்குப் புலனாகின்ற தௌஹீதிய சத்தியத்தைத் தெளிவுபடுத்துகின்றோம்.
இஸ்முல் அஃஸம் ஆகிய “ஃபர்த்” நாமமானது, உன்னதமான பிரதிபலிப்பின் மூலமாக பிரபஞ்சத் தொகுதியிலிருந்து ஆரம்பித்து ஒவ்வோரு தனி இனம் வரைக்கும் இனங்களிலிருக்கின்ற தனித் தனி ஒவ்வோர் உறுப்பினர் வரைக்கும் அனைத்து வஸ்துக்களின் மீதும் ஒவ்வொரு தவ்ஹீதுடைய முத்திரையையும் வஹ்தானியத்துடைய இலாஞ்சனையையும் பதிக்கின்றது. இந்த விடயம் சம்பந்தமாக இருபத்தி இரண்டாவது வார்த்தையிலும் முப்பத்தி மூன்றாவது கடிதத்திலும் விரிவாகப் பிரஸ்தாபிக்கப்படுகின்றது. இந்த இடத்தில் அவ்வாறான மூன்று முத்திரைகளை மாத்திரம் குறிப்பிடுகின்றோம். முதலாவது முத்திரை: ஆம், ஃபர்திய்யத்துடைய பிரதிபலிப்பு பிரபஞ்சத் தொகுதியின் முகப்பில் எப்படிப்பட்ட ஒரு “வஹ்தத் முத்திரை”யைப் பதித்து வைத்திருக்கின்றது எனில், அந்த முத்திரை முழுப் பிரபஞ்சத்தையும் துண்டு போடவோ, பங்கீடு செய்யப்படவோ முடியாத ஒரு மொத்தமாக ஆக்கி வைத்துள்ளது. மொத்தப் பிரபஞ்சத்தின் மீதும் அதிகாரமோ ஆதிக்கமோ செலுத்த முடியாத ஒருவன், அதிலுள்ள எந்தப் பாகத்தின் மீதும் உண்மையான அதிகாரியாகவோ எஜமானனாகவோ ஆக முடியாது. அந்த முத்திரையை இன்னுமொரு வகையில் விவரிப்பதானால், பிரபஞ்சத்திலிருக்கின்ற வஸ்துக்களும் வகைகளும் என்று அனைத்தும் மிக நேர்த்தியான ஒரு தொழிற்சாலையின் சக்கரங்களைப் போன்று ஒன்றுக்கொன்று ஒத்தாசையாக இருக்கின்றன; ஏனையவற்றின் பணிகளை சம்பூரணப் படுத்துவதற்காக உழைக்கின்றன. பார்ப்பவர்களுக்குப் பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய அமைப்பில் அங்கு காணப்படுகின்ற பரஸ்பர உதவி பரஸ்பர ஒத்துழைப்பு பரஸ்பரம் மற்றொன்றின் தேவைக்குப் பதிலலித்தல் பரஸ்பரம் மற்றொன்றின் உதவிக்காக ஓடுதல், மற்றொன்றுக்குள் நுழைதல், மற்றொண்டோடு பிண்ணிப் பினைதல் என்று அனைத்துமே, இந்தப் பிரபஞ்சத்தின் மொத்தத்தையும் மகத்தான ஓர் அமைப்பில் ஓருடலாக அதாவது வஹ்ததுல் வுஜூத் ஆக ஆக்கி வைத்துள்ளன. அந்த உடலின் பாகங்கள் -ஒரு மனிதனுடைய உடலில் காணப்படுகின்ற கூறுகளைப் போன்று- ஒன்றிலிருந்து மற்றொன்று பிரித்துப்பார்க்கப்பட முடியாததாகும். ஏதாவது ஒரு கூறின் கடிவாளத்தைத் தன் கையில் வைத்திருப்பதாகக் கூறுபவன், மொத்தத்தின் கடிவாளத்தையும் தன் கையில் வைத்திருக்க முடியாதவனாக இருப்பின், அந்தத் தனிக் கூறின் மீதும் அதிகாரம் செலுத்த முடியாதவனாவான். இதோ, பிரபஞ்சத் தொகுப்பின் முகப்பில் காணப்படுன்ற இந்தப் பரஸ்பர உதவி ஒத்தாசை, ஒத்துழைப்பு, பிணைப்பு, பரஸ்பரம் பதிலளித்துக்கொள்ளல் என்பன மிகப் பிரகாசமானதும் பிரமாண்டமானதுமான ஒரு வஹ்தத் முத்திரையாகும். இரண்டாவது முத்திரை: ஃபர்த் நாமத்துடைய பிரதிபலிப்பின் மூலமாக பூமிப் பரப்பின் மீதும் வசந்த காலத்தின் மீதும் மிகப் பிரகாசமானதோர் அஹதியத் முத்திரையும் வஹ்தானிய்யத் இலாஞ்சனையும் தென்படுகின்றன. இந்த இரண்டு முத்திரைகளும் எத்தகையவையெனில் பூமிப்பந்துக்கு மேலுள்ள அத்தனை உயிரினங்களையும் அவற்றின் அத்தனை அங்கத்தவர்களுடனும் அத்தனை நிலைமைகளுடனும் அத்தனை சோலிகளுடனும் சேர்த்து நிர்வகிக்க முடியாத ஒருவன், இந்த அத்தனையையும் ஒரே சமயத்தில் பார்க்கவும் படைக்கவும் கண்காணிக்கவும் முடியாத ஒருவன், படைப்பு விடயத்தில் எந்த ஒன்றிலும் எந்தவிதமான தலையீடும் செய்ய முடியாது என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. அந்த முத்திரையை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம். பூமிப் பரப்புக்கு மேலுள்ள கணியங்கள், பதார்த்தங்கள், மூலக்கூறுகள் மற்றும் சடப் பொருட்களில் காணப்படும் மிகவும் நேர்த்தியான, ஆனால் இரகசியமான முத்திரைகளை இப்போதைக்கு ஓர் ஓரமாக வைத்துவிட்டு, இரண்டு இலட்சம் விலங்கினங்களாலும் இரண்டு இலட்சம் தாவர இனங்களாலும் இந்தப் பூமிப்பரப்பின் மீது பதிக்கப்பட்டிருக்கின்ற அந்த அழகிய அஹதியத் மற்றும் வஹ்தானியத் முத்திரைகள் வசந்த காலத்தில் பூகோளப் பரப்பின் மீது எவ்வளவு பிரகாசமாகத் புலப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதைப் பாருங்கள். அவை, ஒன்றுக்குள் ஒன்றாக ஒரே இடத்திலிருந்து ஒரே சமயத்தில் வெளிப்படுபவையாக இருக்கின்ற போது, மறுபக்கம் வெவ்வேறான வடிவங்களையும் வெவ்வேறான பணிகளையும் வெவ்வேறான ஆகாரங்களையும் வெவ்வேறான அங்க அவயவங்களையும் சுமந்தவையாக காணப்படுகின்றன. இவ்வாறிருந்தும், ஒவ்வொன்றுக்கும் தேவைப்படுகின்ற அத்தனையும் உறிய நேரத்தில், உறிய அமைப்பில், நினையா புறத்திலிருந்து, மிகவும் சுலபமான அமைப்பில், எந்தவிதமான குறைபாடுகளோ தவறுகளோ பிழைகளோ ஏற்பட்டுவிடாமல், பிரித்தறிய முடியாத அந்தக் குழப்பத்துக்குள் எந்தவிதமான குழப்பங்களும் ஏற்பட்டுவிடாமல் மிக நுட்பமான அளவைகளைக்கொண்டு பங்கீடு செய்யப்பட்டுப் பகிர்ந்தளிக்கப்படுவதை எமது கண்களுக்கு முன்னால் காண்கின்றோம். பூமிப் பந்துக்கு மேல் காணப்படும் இந்தச் சிறப்பான ஏற்பாடும் நிர்வாகமும் எப்படிப்பட்ட ஓர் அஹதியத் முத்திரையும் எப்படிப்பட்ட ஒரு வஹ்தானியத் இலாஞ்சனையுமாகும் என்றால், அந்த அத்தனை வஸ்துக்களையும் ஒரே சமயத்தில் இல்லாமையிலிருந்து படைத்து ஒன்றாக நிர்வகிக்க முடியாத ஒருவன், அவற்றின் படைப்பு மற்றும் நிர்வாக விடயத்தில் எந்த ஒன்றிலும் எந்த வகையிலும் தலையீடு செய்ய முடியாது என்பதை அவை நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. ஏனெனில், தலையீடுகள் காணப்பட்டால் அந்த விசாலமான அகிலார்ந்த நிர்வாகச் சமநிலை சீர் குலைந்து போயிருக்கும். என்றாலும் ருபூபிய்யத்துடைய சட்டதிட்டங்களின் அந்த அழகிய ஓட்டத்தில், அல்லாஹ்வுடைய அனுமதியுடன் மனிதர்களுக்கும் மேலோட்டமான ஒரு பணி இருக்கின்றது என்பது வேறு விடயமாகும். மூன்றாவது முத்திரை: மனிதனுடைய முகத்தில்.. ஏன் மனிதனுடைய முகமே எப்படிப்பட்டதோர் அஹதியத் முத்திரையாக இருக்கின்றதெனில், ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதல் மறுமை வரைக்கும் வந்தவர்கள் வர இருப்பவர்கள் என்று அனைத்து மனிதர்களையும் ஒன்றாக ஒரே சமயத்தில் பரிசீலனைக்குட்படுத்த முடியாத ஒரு காரணியால், அதாவது அத்தனை முகங்களிலிருந்தும் அந்த ஒரு முகத்தை வேறுபடுத்தக்கூடிய ஒவ்வோர் அடையாளத்தை அந்த முகத்தில் பதிக்க முடியாத ஒரு காரணியால், வேறு விதமாகக் கூறுவதானால் ஒவ்வொரு முகத்தையும் எண்ணற்ற வித்தியாசங்களோடு வடிவமைக்க முடியாத ஒரு காரணியால், தனி ஒரு மனிதனுடைய முகத்தை ஏனைய அனைத்து முகங்களிலிருந்தும் தனித்துவமானதாக படைக்க முடியாது. அதைப் படைக்கின்ற விடயத்தில் தலையீடு செய்யவும் முடியாது. ஆம், மனிதனுடைய முகத்தில் அந்த முத்திரையைப் பதித்தவன், நிச்சயமாக அத்தனை மனிதர்களையும் தனது கண்காணிப்புக்குக் கீழும் தனது அறிவிலும் வைத்திருக்கின்ற அந்த ஏகனேயாவான். ஒவ்வொரு மனிதனின் முகமும் கண், காது, வாய் போன்ற அடிப்படை உறுப்புக்கள் விடயத்தில் ஒத்தவையாக இருந்த போதிலும், ஒவ்வொன்றும் அதற்கே என்றுள்ள தனிச்சிறப்புக் காரணமாக வேறு எந்த முகத்தோடும் முழுமையாக ஒத்ததாக இருப்பதில்லை. அந்த முகத்திலிருக்கின்ற கண், காது போன்ற அத்தனை உறுப்புக்களும் ஏனைய அனைத்து முகங்களிலும் அதே அமைப்பில் அதை ஒத்ததாக இருப்பதானது, மொத்த மனித இனத்தினதும் படைப்பாளனும் வடிவமைப்பாளனும் ஏகனாக இருக்கின்றான் என்பதற்குச் சாட்சியாக இருக்கின்ற ஒரு தவ்ஹீதிய முத்திரையாகும். அவ்வாறே, மனித உரிமைகளின் பாதுகாப்பு விடயத்தில், முகங்கள் ஒன்றோடொன்று குழம்பாதிருப்பதற்காகவும் ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபிரித்தறிவதற்காகவும் ஏராளமான ஞானபூர்வமான வேறுபாடுகள் ஒவ்வொரு முகத்திலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இவை ஏக படைப்பாளனுடைய நாட்டத்தையும் விருப்பத்தையும் அதிகாரத்தையும் காட்டி நிற்பதைப் போன்றே, வேறுபட்ட மிக நுட்பமான ஓர் அஹதியத் முத்திரையாகவும் அமைந்திருக்கின்றன. ஒட்டுமொத்த மனிதர்களையும் மிருகங்களையும் ஏன் முழுப் பிரபஞ்சத்தையுமே படைக்காத ஒருவன் அல்லது ஒரு காரணி அந்த முத்திரையை பதிக்க முடியாது.
பிரபஞ்சத்திலிருக்கின்ற தனித்தனி உலகங்களும் இனங்களும் வகைகளும் கூறுகளும் ஒவ்வொரு தனிப் பிரிவும் எப்படிப்பட்டதோர் அமைப்பில் இரண்டறக்கலந்து ஒன்றோடொன்று சங்கமித்துள்ளன எனில், மொத்தப் பிரபஞ்சத்திற்கும் அரசனாக அதிபதியாக எஜமானனாக இருக்க முடியாத ஒரு காரணி எந்த ஓர் இனத்தின் மீதும் எந்த ஒரு கூறின் மீதும் உண்மையான அதிகாரம் செலுத்த முடியாது. ஃபர்த் நாமத்தில் பொதிந்துள்ள வஹ்தத்தின் பிரதிபலிப்பானது, மொத்தப் பிரபஞ்சத்தையும் அந்த வஹ்தத்திற்குள், ஒன்றியத்திற்குள் உள்ளடக்குகின்றது. அத்தனை வஸ்துக்களும் அந்த வஹ்தத்தை பாராயணம் செய்துகொண்டிருக்கின்றன. உதாரணமாக, இந்தப் பிரபஞ்சத்துடைய விளக்காக இருக்கின்ற சூரியன் ஒன்றாக இருப்பதானது மொத்தப் பிரபஞ்சமும் ஒருவனுடையதாக இருப்பதை உணர்த்துகின்றது. அவ்வாறே, உயிரினங்களுக்கான சுறுசுறுப்பான பணியாளர்களாக இருக்கின்ற வளி ஒன்றாக இருப்பது.. சமையல்காரர்களாக இருக்கின்ற நெருப்பு ஒன்றாக இருப்பது.. பூலோகப் பூங்காவுக்கு நீர் பாய்ச்சும் தொட்டியாக இருக்கின்ற மேகம் ஒன்றாக இருப்பது.. மொத்த உயிரினங்களினதும் உதவிக்காக விரையும் மழை ஒன்றாக இருப்பது.. பெரும்பாலான தாவர விலங்கினங்கள் பூமிப் பரப்பெங்கும் சுதந்திரமாகப் பரவிக் கிடப்பது.. இதன் மூலம் அவை தமது இனத்தின் ஒருமைத்துவத்தை வெளிப்படுத்துவது.. அவற்றின் இருப்பிடங்களும் ஒன்றையொன்று ஒத்தவையாக இருப்பது என்று அனைத்துமே, அந்த அனைத்து வஸ்துக்களும் அவற்றின் இருப்பிடங்களுடன் சேர்த்து தனி ஒருவனின் சொத்துக்களாகும் என்பதற்கான அத்தாட்சிகளும் சான்றுகளுமாகும். இதோ, இதற்கொப்ப, மொத்தப் பிரபஞ்சத்திலும் இரண்டறக் கலந்து ஒன்றோடொன்று சங்கமித்துள்ள இனங்கள் அனைத்தும் சேர்ந்து இந்தப் பிரபஞ்சத்தை எப்படிப்பட்ட ஒரு மொத்தமாக ஆக்கியிருக்கின்றன எனில், சிருஷ்டிக்கின்ற விடயத்தில் எவருக்கும் எந்த ஒரு தனிப் பாகத்தின் மீதும் உறிமை கொண்டாட முடியாது. மொத்தப் பிரபஞ்சத்தின் மீதும் அதிகாரம் செலுத்த முடியாத ஒரு காரணி, ருபூபிய்யத் விடயத்திலும் படைப்பு விடயத்திலும் எந்த ஒன்றின் மீதும் அதிகாரம் செலுத்த முடியாது. தனி ஓர் அணுவிற்கும் தனது ருபூபிய்யத்தைத் திணிக்க முடியாது.
"ஃபர்த்" நாமம், தனது உன்னதமான பிரதிபலிப்பின் மூலமாக பிரபஞ்சத்தை மண்டலங்களைப் போன்று ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கின்ற எண்ணற்ற சமdதியத் கடிதங்களாக ஆக்கி, அந்த ஒவ்வொரு கடிதத்திலும் ஏராளம் ஏராளமான அஹதியத் முத்திரைகளையும் வஹ்தானியத் முத்திரைகளையும் பதித்து வைத்துள்ளன. அந்த ஒவ்வொரு கடிதத்திலும் அதிலுள்ள சொற்களின் எண்ணிக்கையளவு அஹதியத் முத்திரைகள் காணப்படுவதோடு, ஒவ்வொரு கடிதமும் அதிலுள்ள முத்திரைகளின் எண்ணிக்கையளவு அதை எழுதியவனைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. ஆம், ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு கனியும் ஒவ்வொரு மிருகமும் ஒவ்வொரு மரமும் ஒவ்வோர் அஹதியத் முத்திரையாகவும் சம நேரத்தில் ஒவ்வொரு சமதியத் முத்திரையாகவும் இருக்கின்றன. அதேவேளை, அவை முகாமிட்டுள்ள இடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடிதத்துடைய தோற்றத்தைப் பெறுவதால் அவை ஒவ்வொன்றும் ஒவ்வோர் ஒப்பமாக இருந்து அந்த இடத்தின் எழுத்தாளனையும் காட்டி நிற்கின்றன. உதாரணமாக, ஒரு தோட்டத்தில் இருக்கின்ற ஒரு மஞ்சல் பூ அந்தத் தோட்டத்தை அலங்கரித்த சிற்பியுடைய ஒரு முத்திரையாகும். அந்த முத்திரை யாருடையதோ, பூமிப் பரப்பெங்கும் காணப்படுகின்ற அதே வகையைச் சேர்ந்த அத்தனை பூக்களும் தாம் அதே சிற்பியுடைய முத்திரைகள் தான் என்பதற்கும், அந்தப் பூக்கள் காணப்படுகின்ற தோட்டங்கள் அனைத்தும் தாம் அதே சிற்பியுடைய கடிதங்கள் தான் என்பதற்கும் சான்று பகன்றுகொண்டிருக்கின்றன. அதாவது, ஒவ்வொரு வஸ்த்தும் ஏனைய அனைத்து வஸ்துக்களையும் அவற்றின் படைப்பாளனிடம் சமர்ப்பித்து உன்னதமான ஒரு தவ்ஹீதை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன.
ஹாகிமியத்துடைய மிக அடிப்படையான சிவப்புக்கோடு சுதந்திரமும் சுயாதீனத் தன்மையுமாகும் என்பதை பல இடங்களில் நிறுவியுள்ளோம். எந்த அளவுக்கெனில் ஹகீகத்தான ஹாகிமியத்துடைய மிகவும் மங்கலான ஒரு நிழலானது, இயலாமையின் மொத்தமான மனிதர்களிடம் எந்த அளவு தீர்க்கமாஅச் செல்வாக்குச் செலுத்துகின்றது எனில், அவர்கள் கூட சுயாதீனத் தன்மையைப் பாதுகாத்துக்கொள்வதற்காக புறத் தலையீடுகளை கடுமையாக நிராகரிப்பாளர்கள். தனது பணிகளிலும் பொறுப்புக்களிலும் பிறர் மூக்கை நுழைப்பதற்கு அணுமதிக்க மாட்டார்கள். அதிகமான மன்னர்கள், புறத் தலையீட்டை நிராகரிக்கின்ற இந்தத் தன்மை காரணமாக, அப்பாவியான தமது குழந்தைகளையும் மிக நேசத்துக்குறிய தமது சகோதரர்களையும் ஈவிரக்கமின்றிக் கொண்டுள்ளார்கள். அதாவது, ஹகீகத்தான ஹாகிமியத்துடைய மிக அடிப்படையான சிவப்புக்கோடும் வேறு வகையில் சிந்திக்க முடியாத ஓர் அத்தியாவசியமும் காலத்தால் வறையறுக்க முடியாத ஒரு வேண்டலும் சுதந்திரமாகும்; சுயாதினத் தன்மையாகும்; புறத் தலையீட்டை நிராகரிப்பதாகும். ஆம், இந்த அடிப்படையின் காரணமாகத் தான், முத்லக்கான ருபூபியத் அந்தஸ்த்திலுள்ள அல்லாஹ்வுடைய ஹாகிமியத்தானது மிகக் கடுமையாக ஷிர்க்கையும் பங்குதாரர்களையும் புறத் தலையீட்டையும் நிராகரிக்கின்றான். சங்கைமிக்க குர்ஆனும் கூட, மிகச் சூடானதும் கடுமையானதுமான தோரணையில் மீண்டும் மீண்டும் தவ்ஹீதை நோக்கி அழைப்புவிடுத்து, ஷிர்க்கை மிகப் பாரதூரமான அச்சுறுத்தல்களைக்கொண்டு நிராகரிக்கின்றது. ஆம், ருபூபியத்தில் பொதிந்துள்ள அல்லாஹ்வுடைய ஹாகிமியத் தவ்ஹீதையும் வஹ்தத்தையும் வேண்டி நிற்பதைப் போன்றே, பிரபஞ்சத்தில் காணப்படுகின்ற முடிவில்லாத பரிபூரணத்தன்மையும், மொத்தப் பிரபஞ்சத்திலுமிருந்து அரம்பித்து நட்சத்திரங்கள், கோள்கள், தாவரங்கள், விளங்குகள், கனியங்கள் முதல் சிறிய அற்பமான வஸ்துக்கள், அணுக்கள் வரை காணப்படுகின்ற முழுமையான ஒழுங்கு நேர்த்தி மற்றும் குறைகளற்ற அழகு என்பவையும், ஃபர்தியத்திற்கும் வஹ்தத்திற்குமான -அணுவளவு சந்தேகத்திற்கும் இடம் வைக்காத- உண்மையான சாட்சிகளும் தெளிவான அத்தாட்சிகளுமாகும். ஏனெனில், புறத் தலையீடுகள் காணப்பட்டால், இந்த நுணுக்கமான ஒழுங்கு நேர்த்தியும் பிரபஞ்சத்துடைய சமநிலையும் நிச்சயமாகச் சீர்குழைந்து போய், அது குழப்பங்களின் மொத்த உறுவாகக் காட்சியளித்திருக்கும். لَوْ كَانَ فِيهِمَا آلِهَةٌ اِلاَّ اللّٰهُ لَفَسَدَتَا என்ற மறை வசனம் கூறுவதைப் போன்று இந்தப் பிரமாதமானதும் முழுமையானதுமான பிரபஞ்ச ஒழுங்கு குழம்பி பஸாதுகள் நிறைந்ததாக மாறியிருக்கும். ஆனால் உண்மையில், فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَى مِنْ فُطُورٍ என்ற மறை வசனத்திற்கமைய அணுவிலிருந்து அண்டசராசரங்கள் வரை பூலோகத்திலிருந்து வின்னுலகம் வரை எந்த ஓர் இடத்திலும் எந்தவிதமான குறைபாடுகளோ குழப்பங்களோ காணப்படாமையினால், பிரபஞ்சத்தில் காணப்படுகின்ற இந்த ஒழுங்கும் படைப்புக்களில் காணப்படுகின்ற இந்த நேர்த்தியும் அனைத்துக்கும் மத்தியில் காணப்படுகின்ற சமநிலையும், ஃபர்த் நாமத்துடைய உன்னதமான அகிலார்ந்த பிரதிபலிப்பை வெளிக்காட்டி வஹ்தத்துக்கு அத்தாட்சியாக இருக்கின்றன. அத்தோடு, அஹதியத்துடைய பிரதிபலிப்பிலிருக்கின்ற தாத்பரியத்துக்கமைய, மிகச் சிறிய படைப்பான ஏதாவதோர் உயிரினம், பிரபஞ்சத்துடைய சிறிதுபடுத்தப்பட்ட ஓர் உதாரணமாக அல்லது சிறியதோர் உள்ளடக்கமாகவும் இருப்பதால், அந்தத் தனி உயிரினத்துக்கு உறிமைகொண்டாடுபவன் முழுப் பிரபஞ்சத்தையும் தனது கரங்களில் வைத்திருக்கின்ற ஒருவனாக மாத்திரமே இருக்க முடியும். மேலும் ஒரு விதை படைப்பளவில் ஒரு மரத்தைவிட எந்தவிதத்திலும் குறைந்ததாக இல்லாதிருப்பது, ஒரு மரம் சிறியதொரு பிரபஞ்சத்தைப் போன்றிருப்பது, ஒவ்வொரு உயிரினமும் கூட ஒவ்வொரு சிறிய பிரபஞ்சமாக இருப்பது என்று அஹதியத்துடைய பிரதிபலிப்பிலிருக்கின்ற இந்தத் தாத்பரியம், ஷிர்க்கை சர்வசாத்தியமற்ற ஒரு விடயமாக ஆக்குகின்றது. இந்தப் பிரபஞ்சமானது மேற்படி தாத்பரியத்தின் மூலமாக மத்திரமன்றி, அதன் இயல்பான தன்மையிலும் கூட துண்டுபோடப்படுவதோ பிரிக்கப்படுவதோ பங்கீடு செய்யப்படுவதோ சர்வசாத்தியமற்ற, புறத் தலையீடுகளை ஏற்றுக்கொள்ளாத ஒரு மொத்தமாகும். இதனால் பிரபஞ்சத்திலிருக்கின்ற ஒவ்வொரு துண்டும் மொத்தத்தின் ஒவ்வொரு பாகமாகும். அந்த மொத்தமும் கூட மொத்தத்தின் இயல்புகளைப் பொதியப்பெற்ற பாகங்களின் கூட்டாகும். எனவே இப்படிப்பட்ட ஒரு தொகுதிக்குள் பங்கீடு எந்த விதத்திலும் சாத்தியமற்றதாகும். இங்கு ஃபர்த் நாமத்துடைய உன்னதமான பிரதிபலிப்பும் தவ்ஹீதுடைய சத்தியமும், அஹதியத்தில் பொதிந்திருக்கின்ற மேற்படி தாத்பரியத்தின் மூலம் தெட்டத் தெளிவாக நிரூபனமாகின்றது. ஆம், பிரபஞ்சத்தில் காணப்படுகின்ற அனைத்து இனங்களும் இரண்டரக் கலந்து ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதும் ஒவ்வொன்றுடைய பணிகளும் மொத்தத்தோடு தொடர்புபட்டதாக இருப்பதும், படைப்பு மற்றும் பரிபாலிப்பு விடயங்களில் பிரபஞ்சத்தைத் துண்டுபோடப்பட முடியாத ஒரு மொத்தமாக ஆக்கி வைத்துள்ளது. இது போன்றே பிரபஞ்சத்தில் நிகழ்கின்ற அகிலார்ந்த விசாலமான செயற்பாடுகளும் கூட ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவிப் போய் பிரித்துப் பார்க்க முடியாததாக இருப்பது, பிரபஞ்சத்தைத் துண்டுபோடப்பட முடியாத ஒரு மொத்தமாக ஆக்கி வைத்துள்ளது. உதாரணமாக, வாழ்வளித்தல் செயற்பாட்டுக்குள் சம நேரத்தில் ஆகாரமளித்தல் செயற்பாடு ஊடுருவியுள்ளது. வாழ்வளித்தல் ஆகாரமளித்தல் ஆகிய செயற்பாடுகளுக்குள் குறித்த ஜீவராசியின் உடலைக் கட்டமைத்தல், சீரமைத்தல் அவயங்களின் உருவாக்கம் போன்ற செயற்பாடுகள் ஊடுருவியிருப்பது புலனாகின்றது. மேற்படி வாழ்வளித்தல், ஆகாரமளித்தல், கட்டமைத்தல், சீரமைத்தல் போன்ற அனைத்து செயற்பாடுகளுக்குள்ளும் சம நேரத்தில் வடிவமைத்தல், பயிற்சியளித்தல், முன்னேற்படுகளைச் செய்தல் போன்ற செயற்பாடுகள் புலனாகின்றன. இவற்றை இன்னும் நீட்டிக்கொண்டே செல்லலாம். ஆம், இவ்வாறு இந்த அகிலார்ந்த செயற்பாடுகள் அனைத்தும் ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவி இரண்டரக் கலந்திருப்பது, அந்த ஒவ்வொரு செயற்பாடும் இயல்பிலேயே ஒளியில் இருக்கின்ற ஏழு நிறங்களைப் போன்று ஓரமைப்புக்குள் முழுப் பிரபஞ்சத்திலும் வியாபித்திருப்பது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்துவமான செயற்பாடாக இருப்பதால் அவற்றின் கர்த்தாவும் கூடத் தனி ஒருவனாக இருப்பது, ஒவ்வொன்றும் முழுப் பிரபஞ்சத்திலும் வியாபித்திருப்பது, பிற செயற்பாடுகளுடன் எந்த விதக் குளறுபடிகளும் இன்றி சமநிலையோடு ஒன்றிணைவது என்று அனைத்துமே இந்தப் பிரபஞ்சத்தைத் துண்டு போடப்பட முடியாத ஒரு மொத்தமாக ஆக்கியுள்ளதைப் போன்றே, ஜீவராசிகள் ஒவ்வொன்றும் பிரபஞ்சத்துடைய ஒவ்வொரு விதையாக அல்லது உள்ளடக்கமாக அல்லது மாதிரியாக அமைந்திருப்பதும் கூட பிரபஞ்சத்தைத் துண்டுபோடப்படுவதும் பங்கீடு செய்யப்படுவதும் சர்வ சாத்தியமற்ற ஒரு மொத்தமாக ஆக்கி வைத்துள்ளது. அதாவது இந்தப் பிரபஞ்சம் எப்படிப்பட்ட ஒரு மொத்தமாக இருக்கின்றதெனில், அதன் ஏதேனுமொரு பாகத்துக்கு ரப்பாக இருப்பது அதன் மொத்தத்துக்கும் ரப்பாக இருப்பதன் மூலம் மாத்திரமே சாத்தியமாகும். அதன் ஏதாவதொரு கூறு ரப்புடைய அந்தஸ்த்துக்கு உயர்ந்து ஏதேனுமொன்றின் மீது தனது ருபூபியத்தைத் திணிப்பதாயின், முழுப் பிரபஞ்சத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் மூலம் மாத்திரமே சாத்தியமாகும்.
ஏக இரட்சகனுடைய ஃபர்தியத்தும் வஹ்தத்தும் அத்தனை பரிபூரணத்துவங்களினதும் முழுமைகளினதும் அடிப்படைக் காரணியாக இருப்பதோடு பிரபஞ்சத்தின் படைப்பிலிருக்கின்ற ஞானங்கள் மற்றும் நோக்கங்களுடைய ஊற்றுவாயாகவும் இருக்கின்றது. அவ்வாறே பிரக்ஞையும் புத்தியும் கொண்ட படைப்பினங்களின் குறிப்பாக மனிதர்களின் ஆசைகளும் தேவைகளும் நிறைவேற்றப்படுவதற்கான ஊற்றுவாயாகவும் ஏக தீர்வாகவும் இருக்கின்றன. ஃபர்தியத் இல்லாதிருந்தால் மனிதர்களுடைய அனைத்து ஆசைகளும் தேவைகளும் அனைந்து போயிருக்கும்; பிரபஞ்சத்தின் படைப்பிலுள்ள விளைவுகள் பூச்சியமாகியிருக்கும்; நிதர்சனமாக இருக்கின்ற அத்தனை பூரணத்துவங்களும் அழிந்து போவதற்கான காரணியாக அமைந்திருக்கும். உதாரணமாக, மனிதனிடத்தில் மிகப் பலமானதும் அனைந்து போகாததுமான ஒரு நித்திய மோகம் காணப்படுகின்றது. ஆம், முழுப் பிரபஞ்சத்தையும் ஃபர்தியத்திலுள்ள தாத்பரியத்துக்கமைவாகத் தனது பரிபாலிப்புக்குள் வைத்து, ஒரு வீட்டை மூடிவிட்டு அடுத்த வீட்டைத் திறப்பதைப் போன்று மிகச் சுலபமாக இந்த உலகத்தை மூடிவிட்டு மறுமையின் வாசலைத் திறக்க முடியுமான அந்த ஏக இரட்சகனால் மாத்திரமே மனிதனுடைய அந்தத் தேவையைத் தீர்த்து வைக்க முடியும். மாத்திரமன்றி இந்த ஆசையைப் போன்று, நித்தியத்தை நோக்கி நீண்டு பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கின்ற ஆயிரக்கணக்கான மனித ஆசைகளுக்கான விமோசனம் ஃபர்தியத்திலும் தௌஹீதிலும் பொதிந்துள்ள தாத்பரியத்தோடு சம்பந்தப்பட்டதாகும். ஃபர்தியத் இல்லாதிருந்தால் அந்த ஆசைகளுக்கான தீர்வும் இருக்காது; அனைத்தும் விளைவற்றதாகப் போயிருக்கும். மேலும் வஹ்தத்தின் மூலமாக முழுப் பிரபஞ்சத்தின் மீதும் சமநேரத்தில் அதிகாரம் செலுத்துகின்ற ஏக நாயகன் ஒருவன் இல்லாவிட்டால், அந்தத் தேவைகள் நிறைவேற்றப்படாது. ஒரு பேச்சுக்கு நிறைவேற்றப்பட்டாலும் குறைபாடுகளின் மொத்தமாக அது இருந்திருக்கும். இதோ இந்த உன்னதமான தாத்பரியத்தின் காரணமாகத் தான், அற்புத குர்ஆன், தவ்ஹீதையும் ஃபர்தியத்தையும் அதிகமதிகம் மீட்டுவதோடு கடுமையான தோரணையிலும் சமநேரத்தில் உன்னதமான கனிவோடும் அவற்றைக் கற்றுத் தருகின்றது. மாத்திரமன்றி அனைத்து நபிமார்களும் அஸ்ஃபியாக்களும் அவ்லியாக்களும் மிகப் பெரிய இன்பங்களையும் நிம்மதிகளையும் கலிமதுத் தவ்ஹீத் ஆகிய “லா இலாஹ இல்லா ஹு” என்பதிலேயே கண்டுகொண்டுள்ளனர்.
ஆம், இந்த ஹகீகத்தான தவ்ஹீதை அதன் அத்தனை அந்தஸ்துக்களுடனும் அங்கசம்பூரணமாகக் கற்றுத் தந்து, நிரூபித்த ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடைய ரிஸாலத்தானது, தவ்ஹீத் எந்த அளவு ஆணித்தரமானதாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு நிரூபணமாக இருப்பது அவசியப்படுகின்றது. ஏனெனில் அந்த உத்தமரே, வஸ்துக்களுடைய எல்லைக்குள் இருக்கின்ற மிகப் பெரிய சத்தியமாகிய தவ்ஹீதை அதில் பொதிந்துள்ள அத்தனை சத்தியங்களுடனும் கற்றுத் தருகின்றார்கள். எனவே நிச்சயமாக தவ்ஹீதை நிரூபிக்கின்ற அத்தனை அத்தாட்சிகளும் அண்ணாருடைய ரிஸாலத்தையும் அண்ணாரின் பணியுடைய ஹக்கானியத்தையும் அண்ணாரின் பாதையுடைய உண்மைத் தன்மையையும் ஆணித்தரமாக நிரூபித்துக்கொண்டிருக்கின்றன என்று கூற முடியும். ஆம், இவ்வாறு ஆயிரக் கணக்கான உன்னத சத்தியங்களைப் பொதியப்பெற்றிருக்கின்ற ஃபர்தியத்தையும் வஹ்தானியத்தையும் அவற்றுக்கே உறிய உன்னதமான அந்தஸ்துக்களோடு கஷ்ஃபுச் செய்து கற்றுத் தருகின்ற ஒரு ரிஸாலத் எந்தவிதமான சந்தேகங்களுமின்றி அந்தத் தவ்ஹீதுக்கும் ஃபர்தியத்திற்கும் அவசியமானதும் கட்டாயமானதுமாகும். ஆம், அந்தப் பணியை முழுமையாக நிறைவேற்றுகின்ற முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடைய சங்கைமிக்க ஆத்மார்த்த ஆளுமையானது எந்த அளவு மகத்துவமும் முக்கியத்துவமும் மிக்கது என்பதற்கும் அண்ணார் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு சூரியனாக இருக்கின்றார்கள் என்பதற்கும் அத்தாட்சியாக இருக்கின்ற ஏகப்பட்ட ஆதாரங்களுள் இருந்து மூன்றை மாத்திரம் இங்கு உதாரணத்திற்காகக் குறிப்பிடுகின்றோம். முதலாவது: மொத்த உம்மத்தும் மொத்தக் காலங்களிலும் செய்த மொத்த நன்மைகளின் ஒரு பகுதி “அஸ்-ஸபபு கல் ஃபாஇல்” என்ற தாத்பரியத்துக்கமைவாக முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடைய நன்மைகள் பக்கத்தில் சேர்க்கப்படுகின்றது. அவ்வாறே, மொத்த உம்மத்தும் நாளாந்தம் செய்கின்ற ஸலவாத் துஆக்கள், உறுதியாக ஏற்றுக்கொள்ளப்படுபவையாக இருப்பதால், அந்த எண்ணற்ற துஆக்கள் அண்ணாருக்குப் பெற்றுக்கொடுக்கின்ற பதவிகளையும் அந்தஸ்துக்களையும் சிந்திப்பதனூடாக ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடைய ஆத்மார்த்த ஆளுமையானது இந்தப் பிரபஞ்சத்துக்குள் எப்படிப்பட்ட ஒரு சூரியனாக இருக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ள முடியும். இரண்டாவது: முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடைய இயல்பும் அந்த இயல்பில் பொதிந்துள்ள அபரிமிதமான ஆற்றல்கள் திறன்களும் மிகப் பிரமாண்டமான ஒரு விருட்சமாக ஓங்கி வளர்ந்திருக்கும் இஸ்லாமிய உலகின் விதையாகவும் ஊற்றாகவும் உயிராகவும் இருக்கின்றது. அந்த இயல்பின் மூலமாகவும் அதில் பொதிந்துள்ள ஆற்றல்கள் திறன்கள் மூலமாகவும் இஸ்லாமிய உலகின் ஆன்மீகத் தளத்தை நிறுவுகின்ற சங்கைமிக்க புனித கலிமாக்கள், தஸ்பீஹ்கள் மற்றும் இபாதத்துக்களை அவற்றின் அத்தனை அர்த்தங்களுடனும் முதன் முதலாக உணர்ந்துகொண்டு அவற்றை நிறைவேற்றுவதால் கிடைக்கின்ற ஆன்மீக உயர்ச்சியை சிந்தித்துப் பாருங்கள். ஹபீபியத் அந்தஸ்துக்கு உயர்ந்த உபூதியதே முஹம்மதியா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடைய விலாயத் பிற விலாயத்துக்களைவிட எந்த அளவு உன்னதமானது என்பதை விளங்கிக்கொள்ளுங்கள். ஒரு சமயம் தனி ஒரு தொழுகையிலிருக்கும் தனி ஒரு தஸ்பீஹை ஸஹாபாக்கள் விளங்கி ஏற்றுக்கொள்கின்ற விதம் மிக நெருக்கமான ஓர் அமைப்பில் எனக்குப் புலனாகியது. இது எனக்கு ஒரு மாத இபாதத்தின் அளவு முக்கியத்துவம் மிக்கதாகப் பட்டது. ஸஹாபாக்களின் கீர்த்தியையும் பெறுமதியையும் அதன் மூலம் விளங்கிக்கொண்டேன். அதாவது இஸ்லாத்தின் ஆரம்பத்தில் புனிதமான கலிமாக்கள் வழங்கிய உணர்வுகளுக்கும் ஒளிக்கும் அலாதியான ஓர் அந்தஸ்த்து காணப்படுகின்றது. புதிதாக இருக்கின்ற போது கிடைக்கின்ற அந்த அலாதியான இன்பமும் வசீகரமும் பிரகாசமும் பொடுபோக்குக் காரனமாக காலவோட்டத்தில் மங்கி மறைந்து போய் திரையிடப்பட்டு விடுகின்றது. முஹம்மத் (அலை) அவர்களைப் பொறுத்தவரை அண்ணவர்கள் அவற்றை அவற்றின் ஹகீகத்தான ஊற்றிலிருந்து (சங்கைக்குறிய ஏகனிடமிருந்து) ஊற்றெடுக்கும் போதே தனது அபரிமிதமான திறனின் மூலமாக அதைப் பெற்றுக்கொண்டு பருகினார்கள். இந்தத் தாத்பரியத்தின் காரணமாக அந்த உத்தமர் தனி ஒரு தஸ்பீஹைக்கொண்டு பிறர் ஒரு வருட இபாதத்தின் மூலமாகப் பெற்றுக்கொள்கின்ற அளவு உணர்வுகளைப் பெற்றுக்கொண்டார்கள். இதோ இந்தக் கோணத்தில் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் எல்லை காண முடியாத பரிபூரணத்துவத்தின் படித்தரங்களில் எந்த அளவு பயணித்துள்ளார்கள், எந்த அளவு உயர்ச்சியடைந்துள்ளார்கள் என்பதை ஒப்பிட்டுக்கொள். மூன்றாவது: இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படுகின்ற அத்தனை நோக்கங்களுக்கும் மிக அடிப்படையான வஸீலாவாக மனிதகுலம் காணப்படுவதாலும், அத்தனை இறைமொழிகளையும் மிகச் சிறப்பாக விளங்கிக்கொள்ளக்கூடிய சபையோராக மானுட சமூகம் காணப்படுவதாலும் மானுட சமூகத்துக்குள் மிகப் பிரபல்யமானவராகவும் பெயர் பெற்றவராகவும் சிறப்புக்குறியவராகவும் சங்கை மிக்கவராகவும் அங்கசம்பூரணமானவராகவும் இருக்கின்ற முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களை அந்த மனித குலத்தின் சார்பாக மாத்திரமன்றி மொத்தப் பிரபஞ்சத்தின் சர்பாகவும் இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளன் தனது தன்நிகரில்லாத தூதுவராக ஆக்கினான். இவ்வாறு அந்த உத்தமரைத் தனது தூதுவராக ஆக்கிய ஏக இரட்சகன் நிச்சயமாக அண்ணாரை எல்லையில்லாத சிறப்புக்களுக்கும் சங்கைகளுக்கும் பாத்திரமானவராகவே ஆக்கியிருப்பான். ஆம், இந்த மூன்று அம்சங்களையும் போன்ற ஏராளமான அம்சங்கள், முஹம்மத் (அலைஹி, வஸ்) அவர்களுடைய ஆத்மார்த்த ஆளுமையானது பிரபஞ்சத்துடைய ஆத்மார்த்தமான ஒரு சூரியன் என்பதையும், பிரபஞ்சம் எனப்படும் இந்தப் பிரமாண்டமான குர்ஆனுடைய ஆயதுல் குப்ராவும் இஸ்முல் அஃஸமும் ஆகும் என்பதையும், ஃபர்த் நாமத்துடைய மிக உன்னதமான பிரதிபலிப்பை வெளிக்காட்டுகின்ற ஒரு கண்ணாடியாகும் என்பதையும் மிக ஆணித்தரமாக நிரூபிக்கின்றன. பிரபஞ்சத்திலிருக்கின்ற மொத்த அணுக்களையும் பிரபஞ்சத்தில் கடந்த மொத்த நேரங்களிளுமுள்ள மொத்த செக்கன்களாளும் பெருக்கினால் வருகின்ற எண்ணிக்கையளவு ஸலாத்தும் ஸலாமும் அந்த உத்தமர் முஹம்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு ரஹ்மத் கஜானாக்களிலிருந்து கிடைக்கப்பெற வேண்டும் என்று ஃபர்த், அஹத், ஸமத் ஆகிய அந்த ஏகனிடம் ஆசிக்கின்றோம். سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ فَانْظُرْ اِلَى آثَارِ رَحْمَتِ اللّٰهِ كَيْفَ يُحْيِى اْلاَرْضَ بَعْدَ مَوْتِهَا اِنَّ ذلِكَ لَمُحْيِى الْمَوْتَى وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ மற்றும் اَللّٰهُ لاَ اِلهَ اِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ لاَ تَاْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ ஆகிய இரண்டு சங்கைமிக்க வசனங்களும் குறிப்பிடுகின்ற ஒரு தாத்பரியமாகவும் இஸ்முல் அஃஸமாக அல்லது இஸ்முல் அஃஸமுடைய இரண்டு பேரொளிகளுள் ஒன்றாக அல்லது இஸ்முல் அஃஸமுடைய ஆறு ஒளிகளுள் ஒன்றாகவும் இருக்கின்ற “ஹய்” என்ற நாமத்துடைய ஒரு பிரதிபலிப்பு ஷவ்வால் மாதம் எஸ்கிஷெஹிர் சிறைச்சாலையில் இருக்கின்ற போது தொலை தூரத்தில் எனது அறிவுக் கண்களுக்குத் தென்பட்டது. உறிய நேரத்தில் குறித்துக்கொள்ளாமையினால் அந்தப் புனிதமான சத்தியத்தைப் பிடித்துக்கொள்ள முடியவில்லை. தொலை தூரத்துக்குப் பறந்துவிட்டது. குறைந்த பட்சம் சில சாடைகளின் மூலமாக மாபெரும் சத்தியமாகிய அந்தப் பேரொளியின் சில ஒளிக் கீற்றுக்களை சுருக்கமாகக் குறிப்பிடுகின்றோம்.
ஹய் மற்றும் முஹ்யீ நாமங்களுடைய ஓர் உன்னத பிரதிபலிப்பாக இருக்கின்ற “ஹயாத் அதாவது வாழ்வு என்றால் என்ன? அதன் தன்மையும் பணியும் என்ன?” என்ற கேள்விக்கான உள்ளடக்கமான பதிலைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம். ஹயாத், இந்தப் பிரபஞ்சத்துடைய மிக மகத்துவமிக்க நோக்கமும், மிகப் பெரிய விளைவும், மிகப் பிரகாசமான ஒளியும், மிக இதமான களவையும், வடித்தெடுக்கப்பட்ட மிக அடர்த்தியான சாறும், மிகச் சம்பூரணமான கனியும், மிக உன்னதமான சிறப்பும், மிக வசீகரமான அழகும், மிக அழகான தோற்றமும், வஹ்தத்தைப் பொதியப்பெற்றிருக்கின்ற ஒரு தாத்பரியமும், ஒருமைப்பாட்டைப் பேணுகின்ற பிணைப்பும், அத்தனை பரிபூரணத்துவங்களுக்குமான தோற்றுவாயும் ஆகும். மேலும் அதிலுள்ள நுணுக்கங்களினதும் தன்மைகளினதும் அடிப்படையில் அதிசயிக்கத்தக்க ஒரு பிரக்ஞையாகவும், மிகச் சிறிய ஒரு சிருஷ்டிக்கு ஒரு பிரபஞ்சத்தின் அந்தஸ்தைக்கொடுக்கின்ற அற்புதமான ஒரு சத்தியமாகவும், ஏதோ முழுப்பிரபஞ்சத்தையும் சிறியதோர் உயிரினத்தினுள் அடக்குவதற்கு வஸீலாவாக இருப்பதைப் போல், பிரமாண்டமான பிரபஞ்சத்தின் ஒரு வகை உள்ளடக்கத்தை சிறியதோர் உயிரினத்தில் காட்சிப்படுத்தி, அந்த உயிரினத்தை மிகுதி வஸ்துக்கள் அனைத்தோடும் தொடர்புபடுத்துவதன் மூலம் சிறியதொரு பிரபஞ்சத்தின் அந்தஸ்துக்குக் கொண்டுவருகின்ற வியக்கத்தக்க ஒரு குத்ரத் அற்புதமாகவும் இருக்கின்றது. மேலும் மிகச் சிறிய ஒரு கூறைப் மிகப் பெரிய ஒரு மொத்தமாகவும், ஓர் அங்கத்தை அல்லது அங்கத்தவரை மொத்தத்தின் சிறப்புக்களையும் பொதியப்பெற்ற ஓர் உலகம் போன்றும், பிரபஞ்சத்தை துண்டு போடப்படவோ பங்கீடு செய்யப்படவோ முடியாத ஒரு மொத்தமாகவும் ஆக்குகின்ற அபரிமிதமான நுணுக்கங்களைப் பொதியப்பெற்ற ஓர் இறை வடிவமைப்பாகவும் இருக்கின்றது. மேலும் பிரபஞ்சத்தின் சிறப்புக்களுக்கு மத்தியில் ஹய்யுல் கய்யூம் ஆகிய ஏகனுடைய வாஜிபான வுஜூதுக்கும் அவனது வஹ்தத் மற்றும் அஹதியத்திற்கும் சான்று பகர்கின்ற மிகப் பிரகாசமான, மிக ஆணித்தரமான, மிகச் சம்பூரணமான அத்தாட்சியும், அல்லாஹ்வுடைய அழகிய வடிவமைப்புக்களுக்கு மத்தியில் மிக மறைவானதும் மிக வெளிப்படையானதும் மிகப் பெறுமதியானதும் மிக மலிவானதும் மிகப் பரிசுத்தமானதும் மிகப் பிரகாசமானதும் மிக அர்த்தபூர்வமானதும் மிக நுட்பமானதுமான வடிவமைப்புமாகும். மேலும் பிற வஸ்துக்கள் அனைத்தையும் தனக்கான சேவகர்களாக ஆக்குகின்ற நுட்பமானதும் நுணுக்கமானதும் இதமானதுமான ஒரு ரஹ்மத்தின் பிரதிபலிப்பாகும். மேலும் ஷுஊனாது இலாஹிய்யா எனப்படும் இறை நிலைமைகள் அல்லது கருமங்களைப் பிரதிபலிக்கின்ற மிகவும் உள்ளடக்கமான ஒரு கண்ணாடியாகும். மேலும் ரஹ்மான், ரஸ்ஸாக், ரஹீம், கரீம், ஹகீம் போன்ற பல்வேறு அஸ்மாஉல் ஹுஸ்னாக்களின் பிரதிபலிப்புக்களை மொத்தமாக உள்ளடக்கியதும், ரிஸ்க், ஹிக்மத், கருணை, ஈகை போன்ற பல்வேறு சத்தியங்களை தன் மீது சார்ந்ததாக வைத்திருக்கின்றதும், பார்த்தல், கேட்டல், உணர்தல் போன்ற ஒட்டுமொத்த உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளின் தோற்றுவாயாக இருக்கின்றதுமான அற்புதமான ஆச்சரியப்படத்தக்க ஒரு இறை சிருஷ்டியாகும். மேலும் ஹயாத்தானது, இந்தப் பிரபஞ்சம் நிறுவப்பட்டிருக்கின்ற மேடையில் எப்படிப்பட்ட ஒரு நிலை மாற்றும் இயந்திரமாகத் தொழிற்பட்டுக்கொண்டிருக்கின்றதெனில், அது சதாவும் எல்லாப் பக்கங்களிலுமுள்ள அனைத்தையும் பரிசுத்தப்படுத்திக்கொண்டும், சுத்தம் செய்துகொண்டும், பிரகாசப்படுத்திக்கொண்டும், முன்னேற்றிக்கொண்டும் இருக்கின்றது. அத்தோடு ஹயாத்தின் தங்குமிடமாக இருக்கின்ற உடலை, அணுக் கூட்டங்கள் போய்ப் பணி புரிவதற்கும், கட்டளைகளின்படி காரியமாற்றுவதற்கும், ஒளிமயப்படுத்துவதற்கும் வசதியான ஒரு மடமாகவும் ஒரு முகாமாகவும் ஒரு மக்தபாகவும் ஆக்கிவிடுகின்றது. அதாவது ஹய் ஆகவும் முஹ்யீ ஆகவும் இருக்கின்ற அந்த ஏகன் ஹயாத் என்ற இயந்திரத்தின் மூலமாக இந்த இருண்ட, தற்காலிகமான, அற்பமான உலகத்தை ரம்மியமானதாகவும் ஒளிமயமானதாகவும் மாற்றி ஒரு வகை நித்தியத் தன்மையை வழங்குகின்றான்; நித்தியமான ஓர் உலகத்துக்குச் செல்வதற்காகத் தயார்படுத்துகின்றான். மேலும், ஹயாத்துடைய இரண்டு முகங்களுமே, அதாவது முல்க், மலகூத் என்ற இரண்டு கோணங்களுமே பிரகாசமானதும், பரிசுத்தமானதும், குறைகளற்றதும், உன்னதமானதுமாகும். இதனால் தான், எந்த விதமான திரைகளும் காரணிகளும் இன்றி நேரடியாகவே இறைவனுடைய குத்ரத் கரங்களிலிருந்து வெளிப்படுவதை தெட்டத் தெளிவாகக் காட்டுவதற்காக, பிற வஸ்துக்களில் காணப்படுகின்ற வெளிப்படையான காரணகாரணிகள் எதுவும், ஹயாத்திலுள்ள குத்ரத்தின் வெளிப்பாட்டுக்குத் திரையாக ஆக்கப்படவில்லை. இந்த வகையில் ஹயாத் விதிவிலக்கான ஒரு சிருஷ்டியாகும். மேலும் ஹயாத்தில் இருக்கின்ற ஹகீகத், ஈமானுடைய ஆறு அம்சங்களோடும் கொண்டுள்ள தொடர்பு காரணமாக, அர்த்தபூரவமாகவும் சாடையாகவும் அவற்றுக்கான ஓர் அத்தாட்சியாக அமைகின்றது. அதாவது, வாஜிபுல் வுஜூத் ஆகிய அல்லாஹ்வுடைய வாஜிபான வுஜூதையும் அவனது ஆதி அந்தமில்லாத நித்திய வாழ்வையும், மறுமையையும் அங்குள்ள நித்திய வாழ்வையும், மலக்குமார்களுடைய இருப்பையும் என்று ஈமானுடைய ஆறு அம்சங்களுள் அனைத்தையும் அவற்றோடுள்ள பலமான தொடர்புக் காரணமாக வேண்டி நிற்கின்ற ஓர் ஒளிமயமான சத்தியமாகும். மேலும் ஹயாத்தானது, முழுப் பிரபஞ்சத்திலிருந்தும் வடித்தெடுக்கப்பட்ட மிகத் தூய்மையான ஒரு சாறாக இருப்பதைப் போன்றே, இறை நோக்கமாகவும் பிரபஞ்சத்துடைய படைப்பின் மிகச் சங்கைமிக்க ஒரு விளைவாகவும் இருக்கின்ற நன்றி, இபாதத், ஹம்த், முஹப்பத் ஆகியவற்றை விளைக்கின்ற உன்னதமானதொரு தாத்பரியமுமாகும். இதோ, ஹயாத்துடைய மேற்கூறப்பட்ட இருபத்தி ஒன்பது சங்கைமிக்க, பெறுமதிவாய்ந்த சிறப்புக்களையும் உன்னதமான, அகிலார்ந்த பணிகளையும் கவனத்தில்கொண்டு முஹ்யீ நாமத்தின் பின்னாலிருக்கின்ற ஹய் என்ற நாமத்தின் மகத்துவத்தைக் கண்டுகொள்ளுங்கள். ஹயாத்துடைய இந்த மகத்துவத்திலும் சிறப்புக்களிளுமிருந்து ஹய் என்ற நாமம் எப்படிப்பட்ட ஓர் இஸ்முல் அஃஸம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். மாத்திரமன்றி, ஹயாத்தானது உண்மையிலேயே இந்தப் பிரபஞ்சத்தின் மிகப் பெரிய விளைவாகவும் மிகச் சங்கையான நோக்கமாகவும் மிகப் பெறுவதிவாய்ந்த கனியாகவும் இருப்பதால், நிச்சயமாக இந்த ஹயாத்துக்கும் கூட பிரபஞ்சத்தின் அளவு பெரியதொரு நோக்கமும் உன்னதமான ஒரு விளைவும் இருக்க வேண்டும் என்பதை விளங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில், மரத்தின் விளைவு கனியாக இருப்பதைப் போன்றே, கனியின் விளைவும் கூட அதன் விதை மூலமாக வெளிவர இருக்கின்ற இன்னுமொரு மரமாகும். ஆம், ஹயாத்துடைய நோக்கமாகவும் விளைவாகவும் நித்திய வாழ்வு இருப்பதைப் போன்றே, அதன் ஒரு கனியும் கூட வாழ்வை அளித்த ஹய், முஹ்யீ ஆகிய ஏகனுக்கு நன்றியும், வணக்கமும், புகழும், நேசமும் செலுத்துவதாகும். ஆம், நன்றியும் நேசமும் புகழும் வணக்கமும் வாழ்வின் கனியாக இருப்பதைப் போன்றே, பிரபஞ்சத்தின் நோக்கமாகவும் இருக்கின்றது. இதிலிருந்து, “வாழ்வின் நோக்கம் நிம்மதியாக வாழ்வதும், மனம் போன போக்கில் அனுபவிப்பதும், இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதும் தான்.” என்று கூறுபவர்கள் தமது அசிங்கமான அறியாமையின் மூலமாக நிராகரிப்பாளர்களான காபிர்களைப் போன்று மிகவும் பெறுமதி வாய்ந்த வாழ்க்கை என்ற அருளையும் பிரக்ஞை என்ற அன்பளிப்பையும் அறிவு என்ற அருட்கொடையையும் அசட்டை செய்து, சிறுமைப்படுத்தி பயங்கரமானதொரு நன்றிகெட்ட தனத்தில் வீழ்ந்திருக்கின்றனர் என்பதை விளங்கிக்கொள்ளுங்கள்.
ஹய் நாமத்தின் ஓர் உன்னதமான பிரதிபலிப்பாகவும் முஹ்யீ நாமத்தின் ஒரு ரம்மியமான பிரதிபலிப்பாகவும் இருக்கின்ற -முதல் சாடையில் உள்ளடக்கம் போன்று வரிசைப்படுத்தப்பட்ட- இந்த வாழ்வின் அந்தஸ்துக்களையும் இயல்புகளையும் பணிகளையும் விபரிப்பதற்கு அந்த இயல்புகளின் எண்ணிக்கையளவு நூல்களை எழுத வேண்டிய அவசியம் ஏற்படும். எனவே, ரிஸாலே நூரின் பாகங்களில் அந்த அந்தஸ்துக்கள், இயல்புகள், பணிகள் சம்பந்தமாக ஓரளவு விவரிக்கப்பட்டுள்ளமையினால், அவற்றுக்கான விளக்கங்களை அவற்றிடமே ஒப்படைத்துவிட்டு, ஒரு சிலதை மாத்திரம் இந்த இடத்தில் சுருக்கமாக அடையாளப்படுத்துகின்றோம். ஆம், ஹயாத்துடைய இருபத்தி ஒன்பது சிறப்புக்களுள் இருபத்தி மூன்றாவதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ஹயாத்துடைய இரண்டு முகங்களுமே அப்பழுக்கற்றவையாகவும் தூய்மையானதாகவும் ஊடுபுகவிடும் தன்மை உடையதாகவும் இருப்பதால் வெளிப்படையான காரணகாரணிகள் எதுவும் அதில் தொழிற்படுகின்ற இறை வல்லமைக்குத் திரையாக ஆக்கப்படவில்லை. ஹயாத்துடைய இந்தத் தன்மையில் காணப்படுகின்ற தாத்பரியம் என்னவென்றால், உண்மையில் பிரபஞ்சத்திலுள்ள அனைத்திலும் ஓர் அழகும், நலவும், நன்மையும் காணப்படுகின்றது. தீமைகளும் தீங்கும் மிகச் சொற்பமாக இருப்பதோடு, அழகிலும் நன்மைகளிலும் காணப்படுகின்ற ஏராளமான படித்தரங்களையும் அந்தஸ்துக்களையும் ஒப்பிட்டு அளப்பதற்கான ஓர் ஊடகமாக இருக்கின்ற காரணத்தினால் உண்மையில் அந்தத் தீமையும் கூட நன்மையாகவும், அந்த அசிங்கமும் கூட அழகாகவுமே இருக்கின்றது. ஆனால், பிரக்ஞையுள்ள படைப்புக்களின் வெளிப்படையான பார்வைக்குப் புலப்படுகின்ற வெளிப்படையான அசிங்கங்கள், தீங்குகள், அனர்த்தங்கள், முஸீபத்துக்கள் காரணமாக மேலோங்குகின்ற வெறுப்புக்களும் முறைப்பாடுகளும் ஹய்யு கய்யூம் ஆகிய படைப்பாளனை நோக்கித் திரும்பாதிருப்பதற்காகவும், தூய்மையானதும் புனிதமானதுமான இறை வல்லமையானது, வெளிப்படையான பார்வைக்கு அறுவறுக்கத்தக்கவையாகவும் அழுக்குகளாகவும் காட்சியளிப்பவற்றில் திரைகளேதுவுமின்றி நேரடியாகத் தலையீடு செய்வதன் மூலம், அந்தக் குறைபாடான பார்வைகளுக்கு முன்னால் இறை வல்லமையின் கீர்த்திக்குக் கலங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலும் வெளிப்படையான காரணகாரணியங்கள் இறை வல்லமையின் தொழிற்பாடுகளின் போது திரைகளாக ஆக்கப்பட்டுள்ளன. உண்மையில் அந்தக் காரணகாரியங்களால் எதையும் ஆக்க முடியாது; அதற்கான ஆற்றலும் கிடையாது. மாறாக யதார்தத்துக்குப் புறம்பான முறைப்பாடுகளுக்கும் வெறுப்புக்களுக்குமான கேடயமாக இருந்து இறை வல்லமையுடைய கீர்த்தியையும் புனிதத்தையும் குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட தன்மையையும் பாதுகாப்பதற்காகப் படைக்கப்பட்டுள்ளன. இருபத்தி இரண்டாவது வார்த்தையின் இரண்டாவது படித்தரத்தின் முன்னுறையில் தெளிவுபடுத்தப்பட்டதைப் போன்று, இஸ்ராஈல் (அலை) ரூஹைப் பறித்தெடுக்கின்ற பணியைச் செய்கின்ற விடயம் சம்பந்தமாக வல்லோன் அல்லாஹ்விடம் முறையீடு செய்துள்ளார்கள். “யா அல்லாஹ், உனது அடியார்கள் என் மீது வெறுப்பைக் கக்கப் போகின்றார்கள்.” அதற்குப் பதிலளித்த அல்லாஹ் “உனது பணியின் மூலம் மரணிப்பவர்களுக்கும் உனக்கும் இடையில் நோய்நொடிகளையும் முஸீபத்துக்களையும் திரையாக ஆக்குவேன். எனவே முறைப்பாட்டு அம்புகள் அந்தத் திரையை நோக்கிச் செல்லும்.” என்று கூறினான். இந்த முறையீட்டிலுள்ள தாத்பரியத்துக்கமைவாக, ஈமான்கொண்டவர்கள் விடயத்தில் மரணத்தின் உண்மையான அழகிய முகத்தைக் காண முடியாதவர்களும் அதிலுள்ள ரஹ்மத்தை இன்னும் அறிந்துகொள்ளாதவர்களும் கக்குகின்ற வெறுப்புக்களும் கோபக் கனைகளும் ஹய்யு கய்யூம் ஆகிய வல்லோனுக்குச் செல்லாதிருப்பதற்காக இஸ்ராஈல் (அலை) உடைய பணி ஒரு திரையாக ஆக்கப்பட்டுள்ளதைப் போன்றே, ஏனைய காரணகாரியங்களும் கூடத் திரைகளாக இருக்கின்றன. ஆம் கீர்த்தியும் சங்கையும், காரணகாரியங்கள் வெளிப் பார்வைக்கு குத்ரத் கரங்களுக்கான ஒரு திரையாக இருப்பதை நாடுகின்றன. ஆனால் வஹ்தத்தும் ஜலாலியத்தும், ஆற்றலிலும் விளைவிலும் பங்கு கோறுவதைவிட்டும் காரணகாரியங்கள் ஒதுங்கிக்கொள்ளட்டும் என்று கூறுகின்றன. ஆனால், ஹயாத்துடைய உள்ரங்கமும் வெளிரங்கமும், முல்க், மலகூத் என்ற இரண்டு முகங்களும் அப்பழுக்கற்றதாகவும் குறைபாடுகளை விட்டும் தூய்மையானதாகவும் இருப்பதன் காரணமாக, முறைப்பாடுகளுக்கும் வெறுப்புக்களுக்கும் அழைப்புவிடுக்கக்கூடிய எந்தவிதமான கூறுகளும் அதில் இல்லாதிருப்பதாலும், குத்ரத்துடைய புனிதத்தன்மைக்கும் தூய்மைக்கும் களங்கம் ஏற்படுத்தக்கூடிய அழுக்குகளும் அறுவறுப்புக்களும் அதில் இல்லாதிருப்பதாலும், அது நேரடியாகவே எந்தவிதத் திரைகளுமின்றி ஹய்யு கய்யூம் ஆகிய ஏக வல்லோனுடைய “உயிர்பிப்பவன், வாழ்வளிப்பவன்” ஆகிய நாமங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் ஒளியும், வுஜூத் என்ற மெய்யும், சிருஷ்டிப்பும் கூட ஹயாத்தைப் போன்றவை தான். இதன் காரணமாகத் தான் ஆக்கமும் படைப்பும் நேரடியாக எந்தவிதத் திரைகளுமின்றி மாட்சிமைமிக்க ஏகனுடைய வல்லமையுடன் தொடர்புபட்டிருக்கின்றது. இதன் ஒரு வெளிப்பாடாகத் தான், மழையும் கூட ஒரு வகை ஹயாத்தாக இருக்கின்ற காரணத்தினால், மழை பொழிகின்ற நேரம் எந்தவித நிலையான விதிகளோடும் காரணகாரியங்களோடும் பிணைக்கப்படவில்லை. இதன் மூலம் ஒவ்வொரு பொழுதும் ரஹ்மத்தை வேண்டுவதற்காக இறை சந்நிதானத்தை நோக்கிக் கையேந்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றான். மழையும் கூட சூரிய உதயத்தைப் போன்று ஒரு நிலையான விதியோடு பிணைக்கப்பட்டிருப்பின், வாழ்வுக்கான அந்த அருட்கொடைக்காக இறைஞ்சுவதற்கான வாயில் மூடப்பட்டிருக்கும்.
இருபத்தி ஒன்பதாவது சிறப்பில் பிரபஞ்சத்தின் விளைவாக ஹயாத் இருப்பதைப் போன்றே ஹயாத்தின் விளைவாகிய நன்றி, வணக்கம் போன்றவையும் கூட பிரபஞ்சத்தின் படைப்பிற்கான காரணிகளாகவும், பிரபஞ்சத்தின் படைப்பின் மூலம் நாடப்படுகின்ற நோக்களாகவும் விளைவுகளாகவும் இருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம், ஹய்யு கய்யூம் ஆகிய இந்தப் பிரபஞ்சத்துடைய வடிவமைப்பாளன், இந்த அளவு அளவில்லாத அருட்கொடைகளைக்கொண்டு தன்னை அறிமுகப்படுத்தி மகிழ்வித்துக்கொண்டிருக்கின்ற போது, நிச்சயமாக உயிரினங்களிடமிருந்து அந்த அருட்கொடைகளுக்குப் பகரமாக நன்றியையும் மகிழ்ச்சிக்குப் பதிலாக நேசத்தையும் கண்குளிர்ச்சி தருகின்ற பெறுமதிமிக்க வடிவமைப்புக்களுக்குப் பகரமாக புகழையும் அனைத்துக்கும் பகரமாக இறை கட்டளைகளுக்கு முன்னால் வழிபட்டு உபூதியத்தை நிறைவேற்றுவதையும் வேண்டுவான். இதோ, ருபூபிய்யத்திலிருக்கின்ற இந்தத் தாத்பரியத்தின்படி நன்றியும் வணக்கமும் அத்தனை வகையான வாழ்வுகளினதும், -எனவே- வகை வகையான வாழ்வுகளால் சூழப்பட்டிருக்கின்ற மொத்தப் பிரபஞ்சத்தினதும் மிக மகத்துவம் பொருந்திய ஒரு நோக்கமாக இருக்கின்றது. இதனால் தான் அற்புதக் குர்ஆன் மிகக் கடுமையான தோரணையில் மிகவும் ஆக்ரோஷமாக நன்றியையும் இபாதத்தையும் நோக்கி அழைப்பு விடுக்கின்றது. மாத்திரமன்றி இபாதத்தும் நன்றியும் புகழும் செலுத்தப்படுவதற்குத் தகுதியானவனும் அருகதையுள்ளவனும் அவன் மாத்திரமே என்பதை தொடர்ந்தும் மீட்டிக்கொண்டிருக்கின்றது. ஆகவே, நன்றியும் வணக்கமும் நேரடியாகவே உண்மையான எஜமானனுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிடுவதற்காக, ஹயாத்தை அதன் அத்தனை நிலைமைகளையும் உள்ளடக்கியதாக எந்தவிதத் திரைகளுமின்றி நேரடியாகவே தனது அதிகாரத்துக்குக் கீழ் வைத்திருப்பதை وَهُوَ الَّذِى يُحْيِى وَ يُمِيتُ وَلَهُ اخْتِلاَفُ الَّيْلِ وَالنَّهَارِ ٭ هُوَ الَّذِى يُحْيِى وَ يُمِيتُ فَاِذَا قَضَى اَمْرًا فَاِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ ٭ فَيُحْيِى بِهِ اْلاَرْضَ بَعْدَ مَوْتِهَا போன்ற வசனங்களில் எடுத்துக் கூறுகின்றான். இந்த வசனங்கள் மிகத் தெளிவான அமைப்பில் அனைத்து விதமான காரணகாரியங்களையும் துடைத்தெறிந்து, ஹயாத்தை நேரடியாகவே ஹய்யு கய்யூமுடைய குத்ரத் கரங்களிடம் சமர்ப்பிக்கின்றன. ஆம், நன்றிக்கடன், நன்றி ஆகியவற்றுக்கு அழைப்புவிடுத்து நேசத்துக்கும் புகழுக்கும் உரமூட்டுவது வாழ்வுக்கு அடுத்ததாக ரிஸ்க், ஆரோக்கியம், மழை போன்ற விடயங்களாகும். இவற்றைப் போன்று நன்றிக்கு வஸீலாவாக இருக்கின்ற விடயங்கள் அனைத்தும் நேரடியாகவே ரஸ்ஸாக், ஷாஃபீ ஆகிய ஏக இரட்சகனுக்குறியவையாகவே இருக்கின்றன என்பதையும் காரணகாரியங்கள் வெறுமனே திரைகளாகும் என்பதையும் குறிப்பிடுகின்ற هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ ٭ وَ اِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ ٭ وَهُوَ الَّذِى يُنَزِّلُ الْغَيْثَ مِنْ بَعْدِ مَا قَنَطُوا போன்ற வசனங்கள் ரிஸ்க், ஆரோக்கியம், மழை போன்ற விடயங்கள் தனியாக ஹய்யு கய்யூம் ஆகிய ஏகனுடைய குத்ரத்தின் வெளிப்பாடாகும் என்பதைக் குறிப்பிடுகின்றன. திரைகள் ஏதுமின்றி நேரடியாகவே அவனிடமிருந்து வருவதைக் குறிப்பிடுவதற்காக இல்முன் நஹ்வியா எனப்படும் சொல்லமைவுக் கலையின்படி, தனி ஒருவனிடம் சமர்ப்பிப்பதை அல்லது தனி ஒருவனுக்கு மாத்திரமுள்ள உறிமத்தைக் குறிப்பிடும் விதமாக هُوَ الَّذِى ٭ هُوَ الرَّزَّاقُ என்ற பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மருந்துகளுக்கு அவற்றின் தன்மைகளை வழங்கியவனும் அவற்றைக்கொண்டு உண்மையான தக்கத்தை ஏற்படுத்துபவனும் அஷ்-ஷாஃபீ அகிய அந்த வல்லோன் மாத்திரமே.
ஹயாத்துடைய பதினாறாவது சிறப்பில் “ஹயாத் ஏதேனுமொன்றிட்குள் நுழைந்தால் அது ஓர் உடலை ஓர் உலகமாகவும், ஒரு கூறை ஒரு மொத்தமாகவும், ஒரு கூறின் தன்மை உடையதை மொத்தத்தின் தன்மையை உடைய ஒன்றாகவும் மாற்றி அவற்றிட்கு ஓர் அகிலார்ந்த தன்மையை வழங்குகின்றது என்று கூறப்பட்டுள்ளது. ஆம் ஹயாத்தில் பொதிந்துள்ள இந்த அகிலார்ந்த தன்மையானது அதை, முழுப் பிரபஞ்சத்திலும் பிரதிபலிக்கின்ற ஏராளமான இறை நாமங்களை ஒருமிக்கத் தன்னில் பிரதிபலிக்கின்ற ஒரு விசாலமான “அஹதியத் கண்ணாடி"யாக ஆக்கியுள்ளது. ஓர் உடலுக்குள் ஹயாத் நுழைந்தால் அது அந்த உடலை சிறியதொரு பிரபஞ்சமாக மாற்றிவிடுகின்றது. அதாவது பிரபஞ்ச விருட்சத்தின் ஒரு வகையான உள்ளடக்கத்தை அல்லது சாராம்சத்தைப் பொதியப்பெற்ற ஒரு விதையாக மாற்றுகின்றது. ஆகவே, அந்த விதையும் கூட அதற்குறிய விருட்சத்தைப் படைத்த வல்லோனுடைய ஓர் ஆக்கமாக மாத்திரமே இருக்க முடியும். ஆம், மிகச் சிறிய ஓர் உயிரைப் படைத்துப் பரிபாலிப்பவன், முழுப் பிரபஞ்சத்தையும் படைத்துப் பரிபாலித்துக் கொண்டிருக்கின்ற அந்த ஏக படைப்பாளனேயாவான். ஆம், இந்த ஹயாத், அதில் பொதிந்துள்ள அகிலார்ந்த தன்மையின் மூலமாக அஹதியத்துடைய மிக இரகசியமான ஒரு தாத்பரியத்தை வெளிக்காட்டுகின்றது. அதாவது பிரமாண்டமான சூரியனுடைய ஒளியும் ஏழு நிறங்களும் வெப்பமும் பிரகாசமும் என்று அனைத்துமே மொத்தமாக சூரியனுக்கு முன்னாலுள்ள ஒவ்வொரு நீர்த் துளியிலும் ஒவ்வொரு கண்ணாடி மூலக்கூறிலும் பிரதிபலிக்கின்றது. அவ்வாறே, மொத்தப் பிரபஞ்சத்திலும் பிரதிபலிக்கின்ற இறை நாமங்களனைத்தும் தனித்தனி ஒவ்வொரு ஹயாத்திலும் பிரதிபலிக்கின்றன. இந்தக் கோணத்தில் ஹயாத்தனது, பிரபஞ்சத்தை ருபூபிய்யத் மற்றும் படைப்பு விடயத்தில் பங்கீடு செய்யப்பட முடியாத ஒரு மொத்தமாக ஆக்குகின்றது. இப்படிப்பட்ட ஒரு மொத்தத்திற்குள் பங்கீடு செய்யப்படுவதும் துண்டுபோடப்படுவதும் சாத்தியப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகும். ஆம், உன்னைப் படைத்தவன் தான் மொத்த மனித குலத்தையும் படைத்தான் என்பதற்கு உனது முகத்திலிருக்கின்ற முத்திரை அத்தாட்சியாக இருக்கின்றது. ஏனெனில் மனிதனது அடிப்படைத் தன்மை ஒன்றாகும். அதைப் பிரித்துப் பார்ப்பது சாத்தியமற்றதாகும். மாத்திரமன்றி அவனுக்கு வாய்க்கப்பெற்றிருக்கின்ற ஹயாத் மூலமாக அத்தனை வஸ்துக்களுடனும் சேர்த்து அவனும் பிரபஞ்சம் என்ற உடலின் உறுப்பாக மாறிவிடுகின்றான். ஆம், பிரபஞ்சத்துடைய மொத்தத்தில் அஹதியத்துடைய முத்திரை காணப்படுவதைப் போன்றே, அதன் ஒவ்வொரு உறுப்பிலும் கூட அஹதியத் மற்றும் ஸமதியத்துடைய முத்திரைகள் மிகத் தெளிவாகப் புலப்படுகின்றது. இதன் மூலம் ஷிர்கிற்கான வாயில் ஒட்டுமொத்தமாக மூடிவிடப்படுகின்றது. மேலும் இறை வடிவமைப்பின் மிகவும் அபரிமிதமான, ஆச்சரியப்படத்தக்க அற்புதங்கள் ஹயாத்தில் காணப்படுகின்றது. இந்தக் கோணத்தில் முழுப் பிரபஞ்சத்தையும் படைத்துப் பரிபாலிக்க முடியாத ஒரு வல்லமையால் மிகவும் அற்பமான ஓர் உயிரினத்தையும் கூடப் படைக்க முடியாது. ஆம், சிறியதொரு கடுகு மணியில் முழுக் குர்ஆனையும் எழுதுவதைப் போன்று ஆழமரத்தின் மிகவுமே சிறிய விதைக்குள் பிரமாண்டமான ஆழமரத்தின் உள்ளடக்கத்தையும் அதன் நிலைமைகளையும் எழுதிவைத்த எழுதுகோள், நிச்சயமாக ஆகாய வெளியை அதிலுள்ள நட்சத்திரங்களுடன் சேர்த்து எழுதிவைத்த எழுதுகோளாகவே இருக்க முடியும். ஆம், ஒரு தேனீயை எடுத்துக்கொண்டால், பூலோகத் தோப்பில் இருக்கும் ஒட்டுமொத்த பூக்களையும் தரம்பிரித்தறிவதற்கும், பிற வஸ்துக்களோடு தனக்குள்ள தொடர்புகளைப் பேணி நடப்பதற்கும், உலகிற்கு வந்த முதல் நாளே தனது வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை சமாச்சாரங்களையும் அறிந்து அதன்படி காரியமாற்றுவதற்கும் தேவையான ஓர் ஆற்றலையும் திறனையும் அதற்குறிய உறுப்பையும் அந்தத் தேனீயின் சின்னஞ்சிறிய தலைக்குள் பொதித்த வல்லோனே, நிச்சயமாக மொத்தப் பிரபஞ்சத்தினதும் படைப்பாளனாக இருக்க முடியும். சுருக்கமாக: ஹயாத்தானது பிரபஞ்சத்தின் மீதுள்ள மிகப் பிரகாசமானதொரு தவ்ஹீதிய முத்திரையாகும். -ஹயாத்துக்குப் பாத்திரமானதாக இருக்கின்ற காரணத்தினால்- ரூஹைக்கொண்ட ஒவ்வொரு படைப்பும் கூட ஒவ்வொரு அஹதியத் முத்திரையாகும். அவ்வாறே ஹயாத்துள்ள ஒவ்வொன்றிலும் காணப்படுகின்ற அழகிய கலைப்பாடுகள் அனைத்துமே ஸர்மதிய்யத் முத்திரைகளாகும். இவ்வாறு ஹயாத்தானது ஹய்யு கய்யூம், வாஹிது அஹத் ஆகிய ஏக வல்லோனின் பெயரால் இந்தப் பிரபஞ்சம் என்ற கடிதத்தின் மீது உயிரினங்களின் எண்ணிக்கையளவு ஒப்பங்களைப் பதிக்கின்றன. அந்த ஒப்பங்கள் தான் பிரபஞ்சம் என்ற இந்தக் கடிதத்தின் மீது காணப்படுகின்ற தவ்ஹீதிய முத்திரைகளும் அஹதியத் முத்திரைகளும் ஸர்மதியத் முத்திரைகளுமாகும். அவ்வாறே, ஹயாத்தைப் போன்று, ஒவ்வோர் உயிரும் கூட இந்தப் பிரபஞ்சப் புத்தகத்தின் மீது பதிக்கப்பட்ட ஒவ்வொரு வஹ்தானியத் முத்திரையாக இருப்பதைப் போன்றே அந்த ஒவ்வோர் உயிரின் முகத்திலும் ஒவ்வோர் அஹதியத் முத்திரையும் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹயாத்தானது உயிர்களின் எண்ணிக்கையளவும் ஹயாத்துக்குப் பாத்திரமான தனித்தனிக் கூறுகளின் எண்ணிக்கையளவும் ஹய்யு கய்யூம் ஆகிய ஏகனுடைய வஹ்தத்திற்குச் சான்றுபகன்றுகொண்டிருக்கின்ற முத்திரைகளாகும். அவ்வாறே உயிர்ப்பிக்கின்ற செயற்பாடும் கூட ஒட்டுமொத்த உயிர்ப்பித்தல் நிகழ்வுகளின் எண்ணிக்கையளவு தவ்ஹீதை அத்தாட்சிப்படுத்துகின்ற ஒப்பங்களாகும். உதாரணமாக, உயிர்ப்பித்தல் செயற்பாட்டின் தனி ஒரு நிகழ்வாக இருக்கின்ற பூமியின் உயிர்ப்பித்தலானது, தவ்ஹீதுக்கான சூரியனைப் போன்று பிரகாசமானதோர் அத்தாட்சியாகும். ஏனெனில், வசந்த காலத்தில் பூமி உயிர்ப்பிக்கப்பட்டு செழிப்படையும் போது, கூடவே முன்நூறாயிரம் இனங்களும் ஒவ்வோர் இனத்தினதும் எண்ணற்ற உறுப்பினர்களும் ஒன்றுக்குள் ஒன்றாக ஒரே சமயத்தில், எந்தவிதமான குறைபாடுகளுமின்றி, அங்கசம்பூரணமாகவும் மிகுந்த நேர்த்தியோடும் உயிர்ப்பிக்கப்படுகின்றன. ஆம், நிச்சயமாக இவ்வாறு தனி ஒரு செயலின் மூலமாக எண்ணற்ற மகத்தான நேர்த்திமிக்க செயற்பாடுகளை அரங்கேற்றுகின்றவன், ஒட்டுமொத்த வஸ்துகளையும் படைத்துப் பரிபாலிக்கின்ற படைப்பாளனாவான்; அத்தனை உயிரினங்களுக்கும் உயிரளிக்கின்ற ஹய்யு கய்யூம் ஆவான்; ருபூபியத்தனில் பங்குதாரர்களின் தலையீடு சாத்தியமே இல்லாத வாஹிதுல் அஹத் ஆவான். இப்போதைக்கு ஹயாத்துடைய சிறப்புக்களுள் இந்த அளவு சொற்பமான பகுதியே மிகவும் சுருக்கமான அமைப்பில் எழுதப்பட்டது. பிற சிறப்புக்களுடைய விளக்கங்களை ரிஸாலே நூரிடமும் வேறொரு சந்தர்ப்பத்திற்கும் ஒப்படைத்துவிடுகின்றோம்.
இஸ்முல் அஃஸம் அனைவருக்கும் ஒன்றாக இருக்க முடியாது. மாறாக வெவ்வேறானவையாக இருப்பதையே காண்கின்றோம். உதாரணமாக இமாம் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய விடயத்தில், “ஃபர்த், ஹய், கய்யூம், ஹகம், அத்ல், குத்தூஸ்” ஆகிய ஆறு நாமங்களுமாகும். அவ்வாறே இமாமுல் அஃஸம் ஆகிய இமாம் அபூ ஹனீஃபா (ரழி) அவர்களுடைய இஸ்முல் அஃஸம் ஆக இருந்தது, “ஹகம், அத்ல்” ஆகிய இரண்டு நாமங்களுமாகும். கௌதுல் அஃஸம் அவர்களுடைய இஸ்முல் அஃஸம் "யா ஹய்" என்பதாகும். இமாம் ரப்பானி அவர்களுடைய இஸ்முல் அஃஸம் "கய்யூம்" ஆகும். இவ்வாறு பலருக்கும் வேறு பல நாமங்கள் இஸ்முல் அஃஸமாக அமைந்துள்ளன. ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஜெவ்ஷனுல் கபீர் என்ற நாமத்தைக்கொண்ட உன்னதமான தனது முனாஜாத்தில் மாரிஃபதுல்லாஹ் விடயத்தில் தனது உன்னதமானதும் விசாலமானதும் சங்கையானதுமான மாரிஃபத்தை வெளிப்படுத்தும் விதமாக கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள். இந்த ஐந்தாவது குறிப்பு ஹய் நாமத்தோடு சமபந்தப்பட்டதாக இருப்பதால், ஒரு பரக்கத்துக்காகவும், ஒரு சாட்சியாகவும், ஓர் அத்தாட்சியாகவும், புனிதமான ஒரு சான்றாகவும், எமக்கான ஒரு துஆவாகவும், ரஸாஇலின் இந்தப் பகுதிக்கான ஓர் அழகிய முத்தாய்ப்பாகவும் அமையும் நிய்யத்துடன், நாமும் கற்பனையில் அந்தக் காலத்துக்குப் போய் ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறுவதற்கு "ஆமீன்!" என்று கூறி அதே முனாஜாத்தை கூறுவதைப் போன்று முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடைய குரலோடு நாமும் சங்கமித்தவர்களாக பின்வருமாறு முழங்குவோம். يَا حَىُّ قَب۟لَ كُلِّ حَىٍّ يَا حَىُّ بَع۟دَ كُلِّ حَىٍّ يَا حَىُّ الَّذٖى لَي۟سَ كَمِث۟لِهٖ حَىٌّ يَا حَىُّ الَّذٖى لَا يُش۟بِهُهُ شَى۟ءٌ يَا حَىُّ الَّذٖى لَا يَح۟تَاجُ اِلٰى حَىٍّ يَا حَىُّ الَّذٖى لَا يُشَارِكُهُ حَىٌّ يَا حَىُّ الَّذٖى يُمٖيتُ كُلَّ حَىٍّ يَا حَىُّ الَّذٖى يَر۟زُقُ كُلَّ حَىٍّ يَا حَىُّ الَّذٖى يُح۟يِى ال۟مَو۟تٰى يَا حَىُّ الَّذٖى لَا يَمُوتُ سُب۟حَانَكَ يَا لَٓا اِلٰهَ اِلَّا اَن۟تَ ال۟اَمَانُ ال۟اَمَانُ نَجِّنَا مِنَ النَّارِ اٰمٖينَ سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ
கய்யூம் நாமத்துக்குறியதாகும். ஹய் நாமத்துடைய ஒரு சுருக்கம் "ஒளி ஊற்று" ஏன்ற ரஸாஇலின் பின்னால் அதற்கான ஓர் இணைப்பாக சேர்க்கப்பட்டதைப் போன்று, கய்யூம் நாமமும் கூட முப்பதாவது வார்த்தையின் இணைப்பாக சேர்த்துக்கொள்ளப்படுவது பொருத்தமானதாகும். மண்ணிப்பு இந்த மிகவும் மகத்துவம் பொருந்திய விடயங்களும் கய்யூம் நாமத்துகைய மிக ஆழமானதும் விசாலமானதுமான உன்னத பிரதிபலிப்புக்களும் ஓர் ஒழுங்கில் அன்றி வெவ்வேறாக உள்ளத்தில் உதித்ததாலும், ஒழுங்கீனமாகவும் வேகமாகவும் எழுதப்பட்டதோடு எழுதப்பட்ட அதே நிலையில் திருத்தங்களேதும் மேற்கொள்ளப்படாமல் விடப்பட்டதாலும், நிச்சயமாக வசன நடையிலும் சொல்லமைப்பிலும் குறைபாடுகளும் ஒழுங்கீனங்களும் காணப்படலாம். விடயங்களில் காணப்படுகின்ற அழகிற்காக எனது குறைபாடுகளை மண்ணித்துவிடுங்கள். நினைவூட்டல் இஸ்முல் அஃஸம் எனப்படும் உன்னத நாமங்களோடு சம்பந்தப்படுகின்ற விடயங்களும் கூட உன்னதமானவையாகவும் விசாலமானவையகவும் மிகவும் ஆழமானவையாகவும் இருப்பதால், குறிப்பாக கய்யூம் நாமத்தோடு சம்பந்தப்பட்ட விடயங்களும் அதிலும் குறிப்பாக முதலாவது ஒளிக் கீற்றும் (இணைப்பு: இந்தப் பகுதியை வாசிப்பவர் விஞ்ஞானவியல்களைக் கல்லாதவராக இருப்பின் முதலாவது ஒளிக் கீற்றை வாசிக்காதிருக்கட்டும் அல்லது இறுதியில் வாசிக்கட்டும். இறுதியில் வாசிப்பவர்கள் இரண்டாவதிலிருந்து ஆரம்பியுங்கள்.) சடவாதிகளை நோக்கியிருப்பதாலும் மிக ஆழமானதாக இருப்பதாலும் அனைவரும் அனைத்து விடயங்களையும் முழுமையாக விளங்கிக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் அனைவரும் அனைத்து விடயங்களிலிருந்தும் ஓரளவேனும் தமக்குறிய பங்குகளைப் பெற்றுக்கொள்வார்கள். "ஒரு விடயத்தை முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் முழுமையாகவே விட்டுக்கொடுப்பதும் முறையல்ல." என்ற விதியின்படி "இந்த ஆன்மீகத் தோட்டத்தின் அனைத்துக் கனிகளையும் என்னால் பறிக்க முடியாது." என்று கூறி முயற்சியைக் கைவிடுவது புத்திசாதுரியமானதல்ல. பறித்துக்கொள்ள முடியுமான மட்டும் பறித்துக்கொள்ளுங்கள். அனைத்தும் இலாபமே. இஸ்முல் அஃஸம் உடன் சம்பந்தப்பட்ட விடயங்களுக்குள் கிரகித்துக்கொள்ள முடியாத அளவு விசாலமான அம்சங்கள் காணப்படுவதைப் போன்றே, அறிவால் கண்டுகொள்ள முடியாத அளவு நுணுக்கமான விடயங்களும் காணப்படுகின்றன. குறிப்பாக ஹய் மற்றும் கய்யூம் ஆகிய நாமங்களோடு சம்பந்தப்பட்ட விடயங்களும், அதிலும் குறிப்பாக ஈமானுடைய ஆறு அம்சங்களோடு ஹயாத்துகுள்ள தொடர்புகளும், அதிலும் குறிப்பாக விதி மற்றும் வினை ஆகிய அம்சங்களுக்கும் ஹயாத்துக்கும் இடையில் காணப்படுகின்ற தொடர்புகளுடன் கய்யூம் நாமத்துடைய முதலாவது ஒளிக்கீற்றில் வருகின்ற அம்சங்களும் அனைவரது சிந்தனைக்கும் எட்டக்கூடிய விடயங்களல்ல. ஆனாலும் அதில் இழுந்து கிடைக்கின்ற பயன்களை முழுவதுமாக இழந்துவிடவும் மாட்டார்கள். மாறாக அது ஈமானைப் பலப்படுத்தக் கூடியதாக அமையலாம். நித்திய வாழ்வின் திறவுகோளாக இருக்கின்ற ஈமான் பலம்பெறுவதென்பது மிக உன்னதமான ஓர் அம்சமாகும். ஈமானிய பலத்தில் ஏற்படுகின்ற அணு அளவேயான அதிகரிப்பாயினும் அது ஒரு பெரும் கஜானாவுக்கு நிகரானதாகும். இமாம் ரப்பானி அஹமத் ஃபாரூகி அவர்கள் “ஈமானிச் சத்தியம் ஒன்றை அறிந்துகொள்வதை நூற்றுக்கணக்கான கராமத்துக்களைவிட மேலானதாகக் கருதுகின்றேன்.” என்று குறிப்பிடுகின்றார்கள். بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ ٭ لَهُ مَقَالِيدُ السَّمٰوَاتِ وَ اْلاَرْضِ ٭ وَاِنْ مِنْ شَيْءٍ اِلاَّ عِنْدَنَا خَزَائِنُهُ ٭ مَا مِنْ دَابَّةٍ اِلاَّ هُوَ آخِذٌ بِنَاصِيَتِهَا அல்லாஹ்வுடைய கய்யூமியத் சம்பந்தமாகப் பேசுகின்ற மேற்போன்ற வசனங்களில் பொதிந்துள்ள ஓர் அம்சம், இஸ்முல் அஃஸமாக அல்லது இஸ்முல் அஃஸமுடைய இரண்டு இரண்டு வெளிச்சங்களுள் இரண்டாவதாக அல்லது இஸ்முல் அஃஸமுடைய ஆறு ஒளிகளுள் ஆறாவதாக இருக்கின்ற கய்யூம் நாமத்துடைய ஒரு பிரதிபலிப்பாக துல் கஃதா மாதத்தில் எனக்குத் தென்பட்டது. எஸ்கிஷெஹிர் சிறைச்சாலையின் நிலைமைகள் ஒத்துழைக்காமையினால் அந்த உன்னதமான சங்கைமிக்க ஒளியை நுழுமையாகத் தெளிவுபடுத்துவதற்கு என்னால் முடியாதுள்ளது. ஆனால் இமாம் அலி (ரழி) அவர்கள், தனது “அர்ஜூஸி” என்ற கஸீதாவில் “ஸகீனா” என்ற உன்னதமான மகுடத்தைக்கொண்டும் “ஜல்ஜலூதியா” என்ற கஸீதாவில் மிகச் சங்கையான தனித்தனி சிறப்புப் பெயர்களைக்கொண்டும் விவரிக்கின்ற இஸ்முல் அஃஸமையும் இஸ்முல் அஃஸமுக்குள் காணப்படுகின்ற அந்த ஆறு நாமங்களையும் மிகச் சங்கையானவையாகக் குறிப்பிடுகின்ற காரணத்தினாலும் அவற்றைத் தெளிவுபடுத்துவதற்காக இந்தச் சூழலில் இருக்கின்ற எமக்கு கராமத் வடிவில் ஆறுதலளித்தமையினாலும் கய்யூம் நாமத்தோடு சம்பந்தப்பட்ட விடயங்களை, முந்தைய ஐந்து நாமங்களையும் போன்றே குறைந்தபட்சம் ஓர் அடையாளப்படுத்தலுக்காக சுறுக்கமான ஐந்து ஒளிக் கீற்றுக்களாக தெளிவுபடுத்துகின்றோம்.
இந்தப் பிரபஞ்சத்துடைய மாட்சிமைமிக்க படைப்பாளன் கய்யூம் ஆக இருக்கின்றான். அதாவது சுயமாகவே இருப்பு அந்தஸ்துக்குறியவனாகவும், சதாவும் நிலைத்து நிற்பவனாகவும், நித்தியமானவனாகவும் இருக்கின்றான். அனைத்து வஸ்துக்களும் அவன் மூலமாகவே இருப்பு அந்தஸ்த்தைப் பெற்றுக்கொள்கின்றன, அவன் மூலமாகவே நிலைத்து நிற்கின்றன, அவன் மூலமாகவே நித்தியத்தையும் அடைந்துகொள்கின்றன. பிரபஞ்சத்திலிருந்து ஒரு கனப் பொழுதேனும் கய்யூமியத் பிணைப்பு துண்டிக்கப்பட்டால் பிரபஞ்சம் சின்னாபின்னமாகிவிடும். மேலும் அந்த மகத்துவமும் கீர்த்தியும்மிக்க ஏகனுடைய கய்யூமியத்துடன் கூடவே குர்ஆனுடைய கூற்றுப்படி அவன் ……… ஆகவும் இருக்கின்றான். அதாவது ழாத்தைப் போன்றே அவனது ஸிஃபாத்திற்கும் அவனது செயற்பாடுகளுக்கும் ஈடிணையோ ஒப்புவமையோ இணை துணையோ கிடையாது. ஆம் முழுப் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள அத்தனை நிகழ்வுகளுடனும் அத்தனை சிறப்புக்களுடனும் தனது பரிபாலிப்புக்குக் கீழ் வைத்து கைக்கடக்கமான ஒரு வீடு அல்லது ஒரு மாளிகையைப் போன்று முழுமையான ஒழுங்கு நேர்த்தியோடு நிர்வகிக்கின்ற புனிதத்துவம் வாய்ந்த ஒருவனுக்கு ஈடிணையோ இணை துணையோ இருக்க முடியாது. இது அசாத்தியமான ஒன்றாகும். ஆம் அந்த ஏகன் எத்தகையவனென்றால், அவனுக்கு நட்சத்திரங்களுடைய படைப்பு அணுக்களைப் போன்று சுலபமனதாக இருக்கின்றது. மிகப் பெரிய பொருள் மிகச் சிறிய பொருளைப் போன்று அவனது குத்ரத்தால் பிணைக்கப்பட்டதாக இருக்கின்றது. அவனது எந்த ஒரு செயலும் அவனது இன்னுமொரு செயலுக்குத் தடையாக அமைவதில்லை. எண்ணற்ற வஸ்துகள் தனி ஒரு வஸ்த்தைப் போன்று அவனது பார்வைக்குற்பட்டதாகவே இருக்கின்றன. மேலும் அவன் அனைத்து ஓசைகளையும் ஒரே சமயத்தில் செவிமடுக்கக் கூடியவனாக இருக்கின்றான். அனைத்துக்குமான முடிவற்ற தேவைகளை ஒரே சமயத்தில் நிவர்த்திசெய்து கொடுப்பானாக இருக்கின்றான். அவ்வாறே பிரபஞ்சத்திலுள்ள வஸ்துக்களில் காணப்படுகின்ற முழுமையான ஒழுங்கு நேர்த்தியின் அத்தாட்சிக்கமைவாக எந்த ஒரு பொருளும் எந்த ஒரு நிலைமையும் அவனது நாட்டத்துக்கும் நிர்வாகத்துக்கும் அப்பால் செல்வதில்லை. எந்த ஓர் இடத்திலும் காணப்படாமல் இருக்கின்ற போது, அடைய முடியுமான, முடியாத அனைத்து இடங்களிலும் தனது குத்ரத்தின் மூலமாகவும் அறிவின் மூலமாகவும் தயார் நிலையில் காணப்படுகின்றான். மேலும் அனைத்துப் பொருட்களும் அவனிடமிருந்து எல்லையில்லாத தூரத்தில் காணப்படுகின்ற போது அவனோ அனைத்திற்கும் மிக மிக நெறுக்கமானவனாக இருக்கின்றான். இப்படிப்பட்ட மகத்துவமும் கீர்த்தியும் சங்கையும்மிக்க ஏகனாகிய ஹய்யு கய்யூம் அல்லாஹ்வுக்கு ஈடிணையோ, ஒப்புவமையோ, இணை துணையோ, பங்குதாரர்களோ இருக்க முடியாது, இருப்பது அசாத்தியமானதாகும். வெறுமனே உதாரணங்கள் மாதிரிகள் மூலமாக அவனது புனிதமான செயற்பாடுகளையும் ஆற்றல்களையும் பார்க்க முடியும். ரிஸாலே நூரில் காணப்படுகின்ற அத்தனை உதாரணங்களும் மாதிரிகளும் இந்த வகையைச் சேர்ந்ததாகும். ஆம், புனித இரட்சகனாகிய ஏக வல்லோன், ஈடிணையற்றவனாகவும் வாஜிபுல் வுஜூத் ஆகவும் சடப்பொருளுக்கு அப்பாற்பட்டவனாகவும் இடத்தைவிட்டும் உயர்ந்தவவனாகவும் பிரிகை அடைந்து ஒன்றுக்கு மேற்பட்டவனாக ஆகின்ற சாத்தியப்பாட்டுக்கே அப்பாற்பட்டவனாகவும் மாற்றங்கள் பரிணாமங்களைவிட்டும் பரிசுத்தமானவனாகவும் தேவைகள் பலவீனங்கள் ஏற்படுவதற்கான சாத்தியமே இல்லாதவனாகவும் இருக்கின்றான். பிரபஞ்சத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களிலும் வஸ்துக்களிலும் பிரதிபலிக்கின்ற பரிசுத்த இரட்சகனுடைய ஒரு பகுதி பிரதிபலிப்புக்களை உண்மையான இரட்சகனாகக் கற்பணை செய்துகொண்டு வஸ்துக்களுக்கு உலூஹியத் அந்தஸ்த்தை வழங்குகின்ற வழிகேடர்கள் அந்தப் புனித இரட்சகனின் சிருஷ்டிக்களை இயற்கையிடம் கையளித்துள்ளனர். ஆனால் ரிஸாலே நூரின் பல்வேறு இடங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளதைப் போன்று இயற்கையானத அதிக பட்சம் ஓர் ஓவியமாக இருக்க முடியும். மாறாக, அதனால் ஓவியனாக ஆக முடியாது. அது ஒரு வடிவமைப்பாக இருக்கலாம். அதனால் வடிவமைப்பாளனாக மாறமுடியாது. அவை சட்டதிட்டங்களாக இருக்க முடியும். எனினும், அவற்றினால் சட்டம் வகுப்பவனாக மாறிவிட முடியாது. அவை நீதங்களாக இருக்கக்கூடும். ஆனால், அவை ஒன்றிணைந்து ஒரு நீதவானாக மாறிட முடியாது. அவை திட்டங்களாகக்கூட அமைய முடியும். எனினும், அவற்றை உருவாக்கும் திட்டகர்த்தாவாக மாற முடியாது. ஒழுங்காக இருக்க முடியும், ஒரு போதும் ஒழுங்கமைப்பாளனாக ஆகிவிட முடியாது. அவை தாக்கங்களுக்குற்படுபவையாக இருக்கலாம். அதற்கு அப்பால் தாக்கம் செலுத்துபவையாக அவற்றால் மாறிட முடியாது. அது ஒரு சட்டமாக இருக்கக்கூடும். என்ற போதிலும், அதனால் ஓர் அதிகாரமாகவோ ஆற்றலாகவோ பரிணாமம் அடைய முடியாது. அவை வரையறைகளாக அமையலாம். ஆனால், வரையறுப்பாளனாக அவற்றால் மாறிட முடியாது. ஒரு பேச்சுக்கு மிகச் சிறியதொரு ஜீவன் இயற்கையிடம் கையளிக்கப்பட்டு, அதனைப் படைக்குமாறு அதனிடம் வேண்டப்பட்டால், இயற்கையானது அந்தச் சிறிய ஜீவனைப் படைப்பதற்காக அந்தச் சிறிய ஜீவனில் இருக்கின்ற அங்க அவயவங்களின் எண்ணிக்கையளவு அச்சியந்திரங்களைத் தன் கைவசம் வைத்திருப்பது அவசியப்படுகின்றது. அப்போது தான் இயற்கையால் நுணுக்கமான அளவை நிறுவைகளின் மீதுள்ள அந்த ஜீவனைப் படைக்க முடியும். இந்த விடயமும் ரிஸாலே நூரின் பல பாகங்களில் விளக்கப்பட்டுளன. மாத்திரமன்றி சடவாதிகள் என்று கூறப்படும் ஒரு பகுதி வழிகேடர்கள் அணுக்களுக்குள் காணப்படுகின்ற மிகக் கச்சிதமான ஒழுங்கமைப்புக்குள்ளும் நேர்த்தியான மாற்றங்களுக்குள்ளும் காணப்படுகின்ற அல்லாஹ்வுடைய படைப்பாற்றலினதும் குத்ரத்தினதும் பிரதிபலிப்புக்களைக் கண்டுகொண்ட போதிலும் அவை எங்கிருந்து வருகின்றன என்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர். இந்தக் காரணத்தினால் எந்த ஒன்றின்பாலும் எந்தவிதமான தேவைகளுமற்ற இறை வல்லமையின் பிரதிபலிப்பாக இருக்கின்ற அகிலம் தழுவிய சக்தி எங்கிருந்து நிர்வகிக்கப்படுகின்றது என்பதை புரிந்துகொள்ள முடியாதவர்களாக சடத்தையும் சக்தியையும் ஆதியோ ஆரம்பமோ இல்லாத ஒன்றாக கற்பித்துக்கொண்டு அணுக்களிடமும் அவற்றின் இயக்கங்களிடமும் அல்லாஹ்வுடைய சிருஷ்டிப்புக்களைக் கையளிக்க ஆரம்பித்துள்ளனர். ஃபஸுபுஹானல்லாஹ், மனிதர்களை இந்த அளவு மட்டிட முடியாத ஒரு மடமை எங்கிருந்து தொற்றிக்கொண்டதோ. ஆம், இடப் பரிமாணங்களை விட்டும் உயர்ந்த ஓர் ஸ்தானத்திலிருந்து அனைத்து இடங்களிலும், அனைத்து வஸ்த்துக்களின் படைப்பின் போதும் அவற்றிலுள்ள அத்தனை நுணுக்கங்களையும் அறிந்து அவதானித்து நிர்வகிப்பதன் மூலம் மாத்திரமே நிறைவேற்ற முடியுமான காரியங்களை, சாமான்யமான, குருடான, பிரக்ஞையற்ற, நாட்டமோ ஆற்றலோ அற்ற, எழுமாறாகச் சிதறிக்கிடக்கின்ற அணுக்களிடம் ஒப்படைப்பது, எந்த அளவு அறியாமையும் மடமையும் மௌட்டீகமும் பொதிந்த ஒரு சித்தாந்தம் என்பதை அணுவளவேனும் புத்தியுள்ள அனைவரும் அறிந்துகொள்வது கட்டாயமாகும். இந்த வழிகேடர்கள், முத்லக்கான வஹ்தத் என்ற ஏகத்துவத்தை புறந்தள்ளிவிட்டதால், எல்லைகாண முடியாத முத்லக்கான ஒரு பண்மைத்துவத்துக்குள் வீழ்ந்துவிட்டனர். அதாவது தனி ஒரு இலாஹை ஏற்றுக்கொள்ளாமையின் காரணமாக எண்ணற்ற இலாஹுகளை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இன்னுமொரு வகையில் கூறுவதானால், ஏக வல்லோனும் புனிதனும் ஆகிய ஏகன் ஒருவனுக்கே உறிய சிறப்பாகவும் அவனது இருப்பின் அடிப்படையாகவும் இருக்கின்ற “அ(z)ஸலியத்” எனப்படும் முன்நித்தியத்தையும் ஹாலிகியத் எனப்படும் படைப்பாற்றலையும் தமது அழுகிப்போன அறிவுக்குள் உள்வாங்கிக்கொள்ள முடியாமையினால், அந்த எண்ணற்ற சாமான்யமான அணுக்களிடம் அந்த அ(z)ஸலியத்தையும் ஹல்லாகியத்தையும் ஏன் உலூஹியத்தையும் கூட ஒப்படைத்துவிடுகின்றனர். இந்த மடமையைச் செய்வதற்கு அவர்கள் செல்கின்ற பாதை அவர்களை நிர்ப்பந்திக்கின்றது. இதோ இந்த உச்சமட்ட மடையர்களிடம் காணப்படும் எல்லைகாண முடியாத மடமையைப் பாருங்கள்! ஆம், அணுக்களில் பிரதிபலிக்கின்ற பிரதிபலிப்பானது, வாஜிபுல் வுஜூத் ஆகிய அல்லாஹ்வுடைய பலத்தையும் வல்லமையையும் ஆற்றலையும் கட்டளைகளையும்கொண்டு ஒட்டுமொத்த அணுக்களையும் அவனது ஒரு பெரும் படையாக ஆக்கிவைத்துள்ளது. அந்த மாபெரும் சக்கரவர்த்தி ஒரு கனப்பொழுதேனும் தனது வல்லமையையும் கட்டளைகளையும் அவற்றிலிருந்து நீக்கிக்கொண்டால், அந்த மட்டிட முடியாத அணுக்களனைத்தும் நிலைகுழம்பி சிதறிச் சின்னாபின்னாமாகி நிர்மூலமாகிச் சென்றுவிடும். மனிதர்களுள் இன்னும் சிலர், ஏதோ அணுக்குள் இருக்கும் துகள்களுக்கு அப்பால் இருப்பவற்றையும் பார்ப்பதைப் போன்று மடமையின் இன்னுமோர் அத்தியாயத்திற்குள் காலடி எடுத்துவைக்கின்றனர். அதாவது மகத்துவம்பொருந்திய வடிவமைப்பாளனாகிய அல்லாஹ்வுடைய கட்டளைக்குற்பட்ட மிக நுணுக்கமான, நுட்பமான, இதமான ஒரு நிர்வாகப் பிராந்தியமாகவும், அவனது கட்டளைகளைக் கடத்துவதற்கான ஒரு வஸீலாவாகவும், அவனுடைய காரியங்களுக்கான மெல்லியதொரு திரையாகவும், பிரபஞ்சப் புத்தகத்தை எழுதுவதற்கான மிகத் துல்லியமான ஒரு மையாகவும், அனைத்து வஸ்துக்களையும் சூழ்ந்திருக்கின்ற ஒரு மெல்லிய ஆடையாகவும், அனைத்து சிருஷ்டிக்களுக்குமான மிக அடிப்படையான பதார்த்தமாகவும், அணுக்களின் விளைநிலமாகவும் இருக்கின்ற “அஸ்ர்” அல்லது “ஸூனி” எனப்படும் பதார்த்தத்தை, அது ருபூபியத்துடைய மிகப் பிரகாசமான பிரதிபலிப்பை வெளிக்காட்டுகின்ற ஒரு பிரதிபலிப்பிடமாகக் காணப்படுவதால், அதை இந்த மடையர்கள் அடிப்படைக் காரணகர்த்தாவாகக் கற்பித்துக்கொள்கின்றனர். இந்த விசித்திரமான மடைமை எண்ணற்ற அசாத்தியப்பாடுகளைத் தோற்றுவிக்கின்றது. ஏனெனில் “அஸ்ர்” எனப்படும் இந்தப் பதார்த்தம், சடவாதிகளை மூழ்கடிக்கச் செய்த “அணு” என்ற பதார்த்தத்தை விட மிக நுட்பமானதாகவும், புராதனத் தத்துவஞானிகள் புதைந்து போன “ஹையூலா” என்ற பதார்தத்தைவிட மிகச் சாமான்யமானதாகவும், பிரக்ஞையற்றதாகவும், ஆற்றலின்றியும், அடர்த்தியானதாகவும் இருக்கின்ற ஒரு பதார்த்தமாகும். இவ்வாறு கடத்தியாகவும் தாக்கம் செலுத்தியாகவும் பணியமர்த்தப்பட்டு, அணுவைவிட எண்ணற்ற மடங்கு அதிகமாகவும், பரவலாகவும், பல்வேறு பாகங்களாகவும் காணப்படுகின்ற இந்தப் பதார்த்தத்திடமும், -நாம் காண்கின்ற அணுவைவிடப் பல மடங்கு சிறிய- அந்தப் பதார்த்தத்தின் அணுக்களிடமும், அத்தனை வஸ்துக்களிலுமுள்ள அத்தனை விடயங்களையும் பார்த்துக் கண்காணித்து நிர்வகிக்கக் கூடிய ஓர் வல்லமையால் மாத்திரமே செய்ய முடியுமான அற்புதமான இந்தச் செயற்பாடுகளைக் கையளிப்பது, அந்தப் பதார்த்தத்திலுள்ள அணுக்களின் எண்ணிக்கையளவு பிழையான ஒரு காரியமாகும். ஆம், வஸ்துக்களில் காணப்படுகின்ற சிருஷ்டிக்கும் செயற்பாடு மகத்தானதோர் அற்புதத்தன்மை வாய்ந்ததாகும். அந்த அற்புதத் தன்மை எப்படிப்பட்டதெனில், அத்தனை வஸ்துக்களையும் குறிப்பாக ஜீவ இனங்களையும் சிருஷ்டிப்பதற்கு, ஏனைய அனைத்து வஸ்துக்களையும் ஏன் மொத்தப் பிரபஞ்சத்தையும் பார்த்துக், கண்காணித்து, அறிந்து, பிரபஞ்சத்தோடு அந்த ஜீவனுக்குள்ள தொடர்புகள் அனைத்தையும் விளங்கி, அவை துண்டிக்கப்படாமல் பேணிப் பாதுகாக்கக்கூடிய ஒரு வல்லமையிலிருந்தே அந்தச் சிருஷ்டிகள் வெளிப்படுகின்றன என்பதைத் தெட்டத் தெளிவாகக் காட்சிப்படுத்துகின்றது. எனவே இவை சாமான்யமானதும் சடரீதியானதும் அனைத்தையும் வியாபித்த ஆற்றலற்றதுமான காரணகாரியங்களுடைய செயல்களாக எந்தவிதத்திலும் இருக்க முடியாது. ஆம், கய்யூமியத்திலுள்ள தாத்பரியமானது, மிகச் சிறியதொரு சிருஷ்டிப்புச் செயற்பாடும் கூட, நேரடியாகவே பிரபஞ்சத்துடைய படைப்பாளனுடைய ஒரு செயல் தான் என்பதை உறுதிப்படுத்துகின்ற மகத்தானதோர் இரகசியத்தைத் தன்னுள் பொதியப்பெற்றதாக இருக்கின்றது. உதாரணமாக, ஒரு தேனீயின் படைப்பில் காணப்படுகின்ற ஒரு செயற்பாடு இரண்டு கோணங்களில் பிரபஞ்சத்துடைய படைப்பாளனுக்குறிய சிறப்பை வெளிக்காட்டுகின்றது. முதலாவது: பூமிப்பரப்பெங்கும் காணப்படுகின்ற குறித்த அந்தத் தேனீயை ஒத்த அத்தனை தேனீக்களும், குறித்த அந்தக் கட்டத்தில் ஒரேவிதமான செயற்பாட்டுக்குப் பாத்திரமானதாக அமைந்திருப்பதானது, அந்தக் குறிப்பான தனிப்பட்ட செயற்பாடானது முழுப் பூமிப்பரப்பையும் சூழ்ந்துள்ள விசாலமான ஒரு செயற்பாட்டின் ஒரு முனையாகும் என்பதைக் காட்டி நிற்கின்றது. அவ்வாறெனில் பூமி தழுவிய அந்த மாபெரும் செயற்பாட்டை அரங்கேற்றுகின்றவன் எவனோ, அந்தத் தனிப்பட்ட செயற்பாடும் கூட அவனுடையதேயாகும். இரண்டாவது கோணம்: குறித்த தேனீயின் படைப்போடு சம்பந்தப்பட்ட குறித்த அந்தச் செயற்பாட்டை அரங்கேற்றுவதற்கு, அந்தத் தேனீயின் வாழ்க்கைப் பொறிமுறைகளையும் வாழ்க்கைக்குத் தேவையான சாதனங்களையும் வழங்கி, பிரபஞ்சத்தோடு அதற்குள்ள அத்தனை தொடர்புகளையும் அறிந்து, பேணிப்பாதுகாக்கக்கூடிய ஒரு வல்லமையும் நாட்டமும் கட்டாயமானதாகும். அவ்வாறெனில், அந்தச் சிறிய செயற்பாட்டை அரங்கேற்றுபவன், அந்தச் செயற்பாட்டை அணுப்பிசகாமல் அச்சொட்டாக நிறைவேற்றுவதற்கு மொத்தப் பிரபஞ்சத்தின் மீதும் அதிகாரம் செலுத்துபவனாக இருக்க வேண்டியது கட்டாயமானதாகும். முடிவாக பிரபஞ்சத்தில் நிகழ்கின்ற மிகச் சிறிய ஒரு நிகழ்வும் கூட இரண்டு கோணங்களில் பிரபஞ்சத்தின் படைப்பாளனுக்கு மாத்திரமே உறியதாகும் என்பதைக் காட்டி நிற்கின்றது. மனிதனை மிகவுமே வியப்பில் ஆழ்த்துகின்ற விடயம் ஒன்று இருக்குமானால் அது பின்வரும் அம்சமாகும். ஆம், வுஜூத் எனப்படும் மெய்ந்நிலையுடைய மிகப் பலமிக்க அந்தஸ்த்தாகிய “வுஜூப்” எனப்படும் “இயல்பான இருப்பு நிலை”க்கும், வுஜூதுடைய மிக நிலையான ஸ்தானமாகிய “சடப்பொருளுக்கு அப்பாற்பட்ட தன்மை”க்கும், வுஜூதின் அழிவைவிட்டும் மிகத் தொலைவிலுள்ள தன்மையாகிய “காலத்துக்கு அப்பாற்பட்ட தன்மை”க்கும், வுஜூதுடைய மிக உறுதியான, மிக இஸ்திரமான, மாற்றத்திற்குட்படுதல் மற்றும் சூன்யத்தை அடைதல் போன்ற தன்மைகளிலிருந்து மிகப் புனிதத்தன்மை வாய்ந்த பண்பாகிய “வஹ்தத்”திற்கும் சொந்தக்காரனாகிய வாஜிபுல் வுஜூத் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உறிய மிகத் தனித்துவமான சிறப்பாகிய ஆதியோ அந்தமோ, ஆரம்பமோ முடிவோ இல்லாத நித்தியத் தன்மையை.. வுஜூதுடைய மிகப் பலவீனமான அந்தஸ்த்தாகவும், மிக நலினமான ஸ்தானமாகவும், மிக அதிகமான நிலை மாற்றங்களுக்கு உற்படுகின்ற நடத்தைக்குறியவையாகவும், மிக அதிகமாக இடத்தைக் காவுகொள்ளும் தன்மைக்குறியவையாகவும், எண்ணற்றவையாகவும், சடப்பொருட்களாகவும் இருக்கின்ற “அஸ்ர்”, “அணு” போன்ற சாமான்யமான வஸ்துக்களுக்கு வழங்குவது மிகவும் நகைப்புக்கிடமான ஒரு நிலைமையாகும். இவ்வாறு வழங்குகின்ற மனிதன் அந்த வஸ்துக்களை ஆதி அந்தமில்லாத நித்தியத்தன்மை வாய்ந்தவையாகவும், அல்லாஹ்வால் சிருஷ்டிக்கப்பட்ட சில வஸ்துக்களை அவையே தோற்றவிப்பதாகவும் சித்திரித்துக்கொள்கின்றான். இந்த நகைப்புக்கிடமான நிலைமை எந்த அளவு சத்தியத்துக்கு அப்பாற்பட்ட ஒரு சமாச்சாரம் என்பதையும், எந்த அளவு புத்திக்கு அப்பாற்பட்ட ஒரு மௌட்டீக நிலைமை என்பதையும் ரிஸாலே நூர் பல்வேறு இடங்களில் வலுவான அத்தாட்சிகளைக்கொண்டு நிறுவுகின்றது.
(இது இரண்டு அம்சங்களை உள்ளடக்கியதாகும்.) முதலாவது அம்சம்: கய்யூம் நாமத்துடைய ஓர் உன்னதமான பிரதிபலிப்பை அடையாளப்படுத்துகின்ற لاَ تَاْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ ٭ مَا مِنْ دَابَّةٍ اِلاَّ هُوَ آخِذٌ بِنَاصِيَتِهَا ٭ لَهُ مَقَالِيدُ السَّمٰوَاتِ وَ اْلاَرْضِ போன்ற மறைவசனங்களுள் பொதிந்துள்ள உன்னதமான சத்தியத்தின் ஒரு கோணத்தைப் பின்வருமாறு குறிப்பிடலாம். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அத்தனை பிரபஞ்சப் பொருட்களுக்குமுறிய நிலை ஸ்தானமும், இருப்பும், தொடர்ச்சியும் கையூமியத்தின் தாத்பரியத்தால் பிணைக்கப்பட்டவையாகும். ஒரு வேளை கய்யூமியத்துடைய அந்தப் பிரதிபலிப்பு ஒரு நிமிடத்துக்குத் திருப்பிக்கொள்ளப்பட்டால் பூமிப்பந்தைவிட மில்லியன் கணக்கான மடங்கு பிரமாண்டமான மில்லியன் கணக்கான கோளங்கள் அனைத்தும் ஆகாயத்தின் முடிவு காணாத இடைவெளிக்குள் சிதறிச் சின்னாபின்னமாகி சூன்யத்துக்குள் சங்கமமாகிவிடும். உதாரணமாக, வின் ஊர்திகளுக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான பிரமாண்டமான மாளிகைகளை முழுமையான ஒழுங்கு நேர்த்தியோடு நிலைப்படுத்தி பயணிக்கச் செய்கின்ற ஒருவனுடைய கய்யூமியத் ஆற்றலானது, ஆகாயத்தில் பயணிக்கின்ற அந்த மாளிகைகளுடைய நிலைத்த தன்மையையும் ஒழுங்கு நேர்த்தியையும் அவற்றின் தொடர்ச்சியையும் வைத்தே அளவிடப்பட முடியும். அவ்வாறே, என்றும் நிலைத்து நிற்கும் ஏகனாகிய அல் கய்யூமு துல் ஜலால் அல்லாஹ், அஸிர் என்ற பதார்த்தத்திற்குள் நீந்துகின்ற எண்ணற்ற பிரபஞ்சப் பொருட்களுக்கு கையூமியத்தில் பொதிந்துள்ள தாத்பரியத்தின் மூலமாக உச்ச மட்ட ஒழுங்கு நேர்த்தியோடு கூடியதொரு நிலை ஸ்தானத்தையும் இருப்பையும் தொடர்ச்சியையும் வழங்குகின்றான். அதிலும் பூமிப் பந்தைவிட மில்லியன் மடங்கு பிரமாண்டமான மில்லியன் கணக்கான பிரபஞ்சப் பொருட்களும் கோள்களும் தூண்களோ ஆதாரத் தளங்களோ இன்றி வெற்றிடத்தில் நிற்பதோடு கூடவே ஒவ்வொன்றும் ஒவ்வொரு பணியைச் சுமந்தது ஒரு பெரும் படையைப் போன்று முழுமையாக அடிபணிந்து நடக்கின்றன. இவ்வாறு அடிபணியச் செய்வது கய்யூமுடைய உன்னதமான ஒரு பிரதிலிப்பிற்கான ஓர் அளவீடாக இருப்பதைப் போன்றே, ஒவ்வொரு வஸ்திலும் காணப்படுகின்ற அணுக்களும் கூட, நட்சத்திரங்களைப் போன்றே கய்யூமியத் தாத்பரியத்தின் மூலமே அவற்றின் ஸ்தானத்தில் நிலைத்திருக்கின்றன; இருப்பையும் தொடர்ச்சியையும் வெளிப்படுத்துகின்றன. ஆம், ஓரு உயிரின் உடலிலிருக்கும் அணுக்கள் ஒவ்வொன்றும் அது நிலைகொண்டுள்ள உறுப்புக்களுக்கேற்றாற் போன்ற அமைப்பில் சிதைந்து போகாமல் கூட்டுச் சேர்ந்துள்ளதும், வெள்ளம் போன்று அள்ளுண்டு செல்கின்ற பதார்த்தங்களின் சூறாவளிகளுக்குள் தமது நிலைமைகளைப் பாதுகாத்து மிகுந்த ஒழுங்கோடு நிலை குலையாதிருப்பதும், நிச்சயமாக சுயமாக அன்றி கய்யூமியத் தாத்பரியத்தின் மூலமாக நிகழ்ந்தேறுபவையாகும். எனவே ஒவ்வோர் உடலும் மிகுந்த நேர்த்திமிக்க ஓர் இராணுவப் படையாக இருப்பதால், ஜீவராசிகள் உற்பட பூமிபந்துக்கு மேல் நிலைத்துள்ள அத்தனை வஸ்துக்களையும், ஆகாயத்தில் பயணிக்கின்ற நட்சத்திரங்களையும் போன்று, அணுக்களும் கூட எண்ணற்ற நாவுகளின் மூலமாக கய்யூமியத் தாத்பரியத்தை முழங்கிக்கொண்டிருக்கின்றன. இரண்டாவது அமசம்: பொருட்களிலுள்ள கய்யூமியத் தாத்பரியத்துடன் தொடர்புபட்ட பயன்களையும் ஞானங்களையும் இந்தப் பகுதியில் அடையாளப்படுத்துவது பொருத்தமாகும். ஆம் அனைத்து வஸ்துக்களினதும் இருப்பிலுள்ள தாத்பரியமும், இயல்பிலுள்ள நோக்கமும், படைப்பிலுள்ள பயனும் மூம்முன்று வகைக்குற்பட்டதாகும். முதலாவது வகை, தன்னையும் மனிதனையும் மனிதனுக்கான பயன்களையும் நோக்கியிருக்கும். இரண்டாவது வகை, முதலாவதைவிட மகத்தானதாகும். அனைத்து வஸ்துகளும், சங்கையும் கீர்த்தியும்மிக்க படைப்பாளனுடைய அழகிய நாமங்களின் பிரதிபலிப்புக்களைப் பிரதிபலிக்கின்ற ஒவ்வோர் ஆயத்தாகவும் ஒவ்வொரு கடிதமாகவும் ஒவ்வொரு புத்தகமாகவும் ஒவ்வொரு கஸீதாவாகவும் இருந்துகொண்டு பல்வேறுபட்ட அத்தங்களை எண்ணற்ற வாசகர்களுடன் பரிமாறிக்கொண்டிருக்கின்றன. பிரக்ஞையுள்ள அனைவராலும் அவற்றை வாசித்து விளங்கிக்கொள்ள முடியும். மூன்றாவது வகையானது, சங்கைமிக்க படைப்பாளனுக்குறியதாகும். அவனையே நோக்கியிருக்கின்றன. ஒவ்வொரு வஸ்திலும் அதற்கென்றே உள்ள பயனும் விளைவும் ஒன்றாக இருப்பின் சங்கைமிக்க படைப்பாளனுக்குறியவை நூற்றுக்கணக்கானதாகும். ஆம் சங்கைமிக்க படைப்பாளன் தனது அற்புதமான வடிவமைப்புக்களைத் தானே ரசிப்பவனாகவும், தனது நாமங்களின் பிரதிபலிப்புக்களைத் தானே பார்ப்பவனாகவும் இருக்கின்றான். இந்த சங்கைமிக்க மூன்றாம் வகையில் வஸ்துகள் ஒரு கனப் பொழுது வாழ்வதும் கூடப் போதுமானதாகும். அத்தோடு கய்யூமியத்துடைய ஒரு தாத்பரியமானது அத்தனை வஸ்துக்களினதும் வுஜூதை அதாவது மெய்ந்நிலையை வேண்டி நிற்கின்றது. மூன்றாவது ஒளிக் கீற்றில் இந்த அம்சம் தெளிவிபடுத்தப்படும். ஒரு சமயம், பிரபஞ்சத்தின் மறைவான இரகசியங்களினதும் படைப்பின் இரகசிய உண்மைகளினதும் ஒளியில் வஸ்துக்களுடைய தாத்பரியங்களையும் பயன்களையும் பார்த்தேன், அப்போது “இந்த வஸ்துக்கள் ஏன் இவ்வாறு புலனாகிவிட்டு விரைவாக அழிந்து மறைந்து போய்விடுன்றன?” என்று அங்கலாய்த்தேன். அவற்றை உற்று நோக்கிய போது அவை மிகுந்த நேர்த்தியோடு பல்வேறு ஞானங்களை வெளிப்படுத்தும் விதமாக அழகாகவும் கவர்ச்சியாகவும் அணிவிக்கப்பட்டு காட்ச்சிப்படுத்துவதற்காக அனுப்பிவைக்கப்படுவதாக இருக்க, ஓரிரு நாட்களிள், இன்னும் சிலதோ ஓரிரு நிமிடங்களில் மறைந்து பயனற்றுப் போய்விடுவதை அவதானித்தேன். அப்போது “இவ்வாறு சொற்ப நேரத்துக்கு எமக்குக் காட்சியளித்துவிட்டு மறைவதிலுள்ள பயன் என்ன?” என்பதை சிந்தித்தேன். அந்த சமயம், வஸ்துக்களும் குறிப்பாக உயிரினங்களும் உலக நீரோட்டத்திற்கு வருவதிலுள்ள மகத்தானதொரு தாத்பரியத்தை இறை அருளால் கண்டுகொண்டேன். ஒவ்வொரு வஸ்தும் குறிப்பாக ஒவ்வொரு உயிரும், மிகவுமே அர்த்தபூர்வமான ஒவ்வொரு வர்த்தையாகவும், ஒவ்வொரு கடிதமாகவும், ஒவ்வொரு கஸீதாவாகவும், ஒவ்வொரு இறை அறிவிப்பாகவுமே இருக்கின்றன. அவை பிரக்ஞையுள்ள அனைவரது பார்வைக்கும் அறிவுக்கும் ஆன்மாவுக்கும் விருந்தாக அமைந்துவிட்டு, ஏராளமான சிந்தித்தாய்கின்ற மனிதர்களுக்குத் தமது அர்த்தங்களைச் சமர்பித்த பின்னர், வெறும் எழுத்துக்களாக அல்லது சொற்களாக இருக்கின்ற அவற்றின் சட ரீதியான தோற்றங்கள் மறைந்துவிடுகின்றன. இந்தத் தாத்பரியம் ஒரு வருடம் வரை எனக்குப் போதுமானதாக அமைந்தது. ஒரு வருடத்திற்குப் பிறகு சிருஷ்டிக்களில் குறிப்பாக உயிரினங்களில் காணப்படுகின்ற அற்புதமானதும் துல்லியமானதுமான வடிவமைப்புக்களில் பொதிந்துள்ள அற்புதங்கள் எனது மனக்கண்ணில் உதித்தன. அப்போது இந்தத் அற்புதமானதும் துல்லியமானதுமான அழகிய வடிவமைப்புக்கள் வெறுமனே பிரக்ஞையுள்ளவர்களுடைய பார்வைக்கு அர்த்தங்களைப் பிரஸ்தாபிப்பதற்காக மாத்திரம் அல்ல என்பதை உணர்ந்துகொண்டேன். உண்மையில் ஒவ்வொரு வஸ்தையும் எண்ணற்ற பிரக்ஞையுள்ளவர்கள் சிந்தித்தாய்வு செய்ய முடியும். ஆனால் அந்த அனைத்து சிந்தனைகளும் ஆய்வுகளும் வரையறுக்கப்பட்டவையாகும். மாத்திரமல்ல அனைவராலும் அந்த உயிருடைய அத்தனை அழகிய வடிவமைப்புக்களையும் கண்டுகொள்ள முடியாது. ஆகவே உயிரினங்களின் படைப்பிலுள்ள மிக மகத்தான விளைவும் இயல்பான நோக்கமும், என்றும் நிலைத்துள்ள நித்திய ஏகனாகிய ஹய்யுல் கய்யூம் தனது அற்புதமான வடிவமைப்புக்களையும் தான் அள்ளிவழங்குகின்ற அருட்கொடைகளையும் தனது பார்வைக்கே விருந்தாக்குகின்ற அம்சமாகும் என்பது விளங்கவந்தது. இந்த நோக்கமும் தாத்பரியமும், அதிகமான சந்தர்ப்பங்களில் என்னைத் திருப்திப்படுத்தியது. அதிலிருந்து ஒவ்வொரு வஸ்திலும், குறிப்பாக உயிரினங்களில் எண்ணற்ற நுட்பமான கலைப்பாடுகளும் வடிவமைப்புக்களும் காணப்படுவது, நித்திய நிலையான ஏகனாகிய ஹய்யுல் கய்யூமுடைய பார்வைக்கு விருந்தாக அமைவதால், அதாவது ஏக நித்தியனாகிய ஹய்யுல் கய்யூம் தனது வடிவமைப்புக்களைத் தானே ரசிப்பவனாக இருப்பதால் படைப்பிலுள்ள இந்த அளவு நுற்பமான தாத்பரியங்கள், அதற்காக செய்யப்படுகின்ற இந்த அளவு பிரமாண்டமான ஏற்பாடுகளுக்கும் செலவீனங்களுக்கும் ஈடாகின்றன என்பதை அறிந்துகொண்டேன். இன்னும் சில காலத்துக்குப் பின்னர், வஸ்துக்களிலும் அவற்றின் தோற்றங்களிலும் காணப்படுகின்ற அழகிய நுட்பமான வடிவமைப்புக்கள் தொடராதிருப்பதையும் மிக வேகமாக புதுப்பிக்கப்படுவதையும், மாற்றத்துக்குற்படுவதையும், எண்ணற்ற செயற்பாடுகளுக்குள்ளும் சிருஷ்டிப்புக்களுக்குள்ளும் உருண்டோடிக்கொண்டிருப்பதையும் அவதானித்தேன். இந்தகைய செயற்பாடுகளிலும் சிருஷ்டிப்பிலும் பொதிந்துள்ள தாத்பரியமும் கூட குறைந்தபட்சம் அந்த மகத்தான செயற்பாட்டின் அளவேனும் பிரமான்டமானதாக இருக்க வேண்டும் என்றவனாக சிந்தனையில் ஆழ்ந்தேன். இதன் பிறகு மேற்கூறிய இரண்டு தாத்பரியங்களும் போதாமல் போக ஆரம்பித்தன; குறைவானதாக அமைந்தன. எனவே மிகுந்த வேட்கையோடு வேறொரு தாத்பரியத்தைத் தேட ஆடம்பித்தேன். குறித்ததொரு காலத்துக்குப் பிறகு -லில்லாஹில் ஹம்த்- அற்புத குர்ஆனிலிருந்து பெற்றுக்கொண்ட ஒளியிலிருந்து, கய்யூமியத்திலுள்ள தாத்பரியத்தினூடாக எல்லையில்லாத மகத்தானதொரு தாத்பரியம் எனக்குத் தென்பட்டது. அப்போது அதைக்கொண்டு “பிரபஞ்சத்துடைய மறைவான இரகசியங்கள்” என்றும் “படைப்பின் இரகசிய உண்மைகள்” என்றும் கூறப்படுகின்ற ஒரு இறை இரகசியம் விளங்கவந்தது. (இருபத்தி நான்காவது கடிதத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளதால் இங்கு இரண்டு மூன்று அம்சங்களை மாத்திரம் சுருக்கமாக மூன்றாவது ஒளிக்கீற்றில் விளக்க உள்ளோம்.) ஆம், கய்யூமியத் இரகசியத்துடைய பிரதிபலிப்பை ஒரு முறை இந்தக் கோணத்தில் அவதானியுங்கள். ஒட்டுமொத்த வஸ்துக்களையும் இல்லாமையிலிருந்து வெளிப்படுத்தி ஒவ்வொன்றையும் இந்த எல்லைகாணாத ஆகாய வெளியில் اَللّٰهُ الَّذِى رَفَعَ السَّمٰوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا என்ற வசனத்துக்கமைவாக நிலைப்படுத்தி, அதற்குறிய நிலை ஸ்தானத்தையும் தொடர்ச்சியையும் வழங்கி, இவ்வாறூ அனைத்தையுமே கய்யூமியத் இரகசியத்தினுடைய பிரதிபலிப்புக்குப் பாத்திரமானதாக ஆக்குகின்றான். ஒரு வேளை இந்த ஆதாரத் தளம் இல்லாதிருந்திருப்பின் எந்த ஒரு பொருளும் தானாகவே நிற்க முடியாது. மாறாக இந்த முடிவில்லாத இடைவெளிக்குள் சிதருண்டு சூன்யத்துக்குள் மறைந்து போயிருக்கும். மேலும் பூரா வஸ்துக்களும் அவற்றின் உடல்கள், நிலை ஸ்தானங்கள், தொடர்ச்சிகள் என்ற அனைத்துக் கோணங்களிலும் கய்யூமு துல் ஜலால் ஆகிய ஏகனையே சார்ந்திருக்கின்றன. அவற்றின் அனைத்து நிலை ஸ்தானங்களும் அவன் மூலமாகவேயாகும். அவ்வாறே வஸ்துக்களுடைய சிறப்புக்களிலும் நிலைமைகளிலும் காணப்படுகின்ற ஆயிரக்கணக்கான சங்கிலித்தொடரான நிகழ்வுகள் அனைத்தும் அவற்றின் மத்தியஸ்தானமாக இருக்கின்ற கய்யூமியத் இரகசியத்தோடு وَ اِلَيْهِ يُرْجَعُ اْلاَمْرُ كُلُّهُ என்ற வசனத்திலுள்ள தாத்பரியத்திற்கமைவாகப் பிணைக்கப்பட்டுள்ளன. அந்த நூரானியத்தான ஆதாரத் தளத்தோடுள்ள பிணைப்புத் துண்டிக்கப்பட்டால், அறிவுள்ளவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத முடிவில்லாத சங்கிலித் தொடர்களை ஏற்றுக்கொள்வது அவசியப்பட்டிருக்கும். உதாரணமாக, (மனனம் அல்லது ஒளி அல்லது வுஜூத் அல்லது ரிஸ்க் போன்ற ஏதேனுமொன்றிலிருந்து) குறித்த பொருள் இன்ன பொருளோடு இன்ன வகையில் சார்ந்துள்ளது, இதுவும் கூட அதைச் சார்ந்துள்ளது, அது இன்னுமொன்றைச் சார்ந்துள்ளது என்று இந்தத் தொடர் போக முடிவில்லாமல் போக முடியாது என்பதால் ஏதோ ஓரிடத்தில் முடிவடைவது கட்டாயமாகும். ஆம், இவ்வாறான சங்கிலித் தொடர்களின் இறுதிப் புள்ளிகள் நிச்சயமாக கய்யூமியத் தாத்பரியமாகும். இந்தக் கய்யூமிய்யத் தாத்பரியம் விளங்க வந்தால், அதன் பிறகு அந்த மாயையான சங்கிலித் தொடர்களில் காணப்படுகின்ற ஒன்றுக்கொன்று ஆதாரமாக இருக்கின்ற பிணைப்புக்கள் அனைத்தும் அர்த்தமற்றவையாக ஆகி, இடையிலிருந்து ஒதுங்கிக்கொள்ளும். அனைத்து வஸ்துக்களும் நேரடியாகவே கய்யூமியத் தாத்பரியத்தைச் சார்ந்துவிடும்.
كُلَّ يَوْمٍ هُوَ فِى شَاْنٍ ٭ فَعَّالٌ لِمَا يُرِيدُ ٭ يَخْلُقُ مَا يَشَاءُ ٭ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ ٭ فَانْظُرْ اِلَى آثَارِ رَحْمَتِ اللّٰهِ كَيْفَ يُحْيِى اْلاَرْضَ بَعْدَ مَوْتِهَا போன்ற வசனங்கள் குறித்துக் காட்டுகின்ற இறைவனுடைய சிருஷ்டிப்புச் செயற்பாட்டுக்குள்ளும் பரிபாலிப்புச் செயற்பாடுகளுக்குள்ளும் காணப்படுகின்ற கய்யூமியத் தாத்பரியத்தை ஓரளவு தெளிவுபடுத்துவதற்கு ஓரிரண்டு பகுதிகளாக முயற்சி செய்கின்றோம். முதலாவது: இந்தப் பிரபஞ்சத்தை அவதானித்தால், சதாவும் உருண்டோடிக்கொண்டிருக்கின்ற காலக் கடலில் கூட்டம் கூட்டமாக வந்து சங்கமித்துவிட்டு மறைந்து விடுகின்ற வஸ்துக்களைப் பார்க்கின்றோம். அவற்றில் சில வெறுமனே ஒரு நொடிப்பொழுதில் அழிந்து மறைந்து போய்விடுகின்றன. சில கூட்டங்கள் வந்து ஒரு நிமிடத்துக்குள் அழிந்து போய்விடுகின்றன. சில இனங்கள் வெறுமனே ஒரு மனித்தியாளத்துக்கு நிஜ உலகத்திற்கு சமூகமளித்துவிட்டு மறைவான உலகத்தை நோக்கிச் சென்றுவிடுகின்றன. இன்னும் சில வகைகள் ஒரு வருடமும், சில வகைகள் ஒரு தசாப்தமும், சில வகைகள் பல யுகங்களும் இந்த உலகில் தங்கி நின்று தமது பணிகளை முடித்துவிட்டுத் திரும்பப் சென்றுவிடுகின்றன. பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகின்ற வஸ்துக்களுடைய இந்தப் பயனமும் இந்த ஓட்டமும் இந்தச் சுழற்சியும் உண்மையில் உன்னதமானதோர் ஒழுங்கு நேர்த்தியோடும் மகத்தானதோர் அறிவு ஞானத்தோடும் நிர்வகிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக் கூட்டங்களுக்குக் கட்டளை பிறப்பிக்கின்றவன் எந்த அளவு மகத்தான ஞானத்தோடும் கூர்மையான பார்வையோடும் அவற்றை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றான் எனில், அத்தனை அறிவுகளும் ஒரு பேச்சுக்குக் கூட்டுச் சேர்ந்து தனி ஓர் அறிவாக மாறினாலும் கூட அந்த ஞானபூர்வமான நிர்வாகத்திறனை எட்டிப்பிடிக்க முடியாது; அந்த நிர்வாகத்தில் குறைகளைக் கண்டுபிடித்து விமர்சிக்கவும் முடியாது. ஆம், அந்த சிருஷ்டிப்புச் செயற்பாட்டுக்குள், தானும் நேசிக்கின்ற நேசத்துக்குப் பாத்திரமான படைப்புக்களை, குறிப்பாக உயிரினங்களை எந்த விதமான விதிவிலக்குமின்றி கண்மூடித் திறப்பதற்குள் அல்லது மூச்சிழுத்து விடுவதற்குள், அவற்றின் உலக வாழ்வுக்கு விடைகொடுத்துவிட்டு மறைவான உலகத்திற்கு அனுப்பிவிடுகின்றான். இவ்வாறூ சதாவும் இந்த விருந்துக் கூடத்தை நிறப்பிவிட்டு விருந்தாளுகளுடைய விருப்பமின்றியே வழியனுப்பிவிடுகின்றான். விதியையும் வினையையும் எழுதுகின்ற எழுதுகோள், பூமிப்பந்தை -விதியால் விதிக்கப்பட்டவை- எழுதி அழிக்கப்படுகின்ற ஒரு பலகையைப் போன்று ஆக்கி, يُحْيِى وَ يُمِيتُ என்பதன் பிரதிபலிப்பிற்கினங்க, சதாவும் பூமிப்பந்தின் மீது எழுதிக்கொண்டும் எழுதப்பட்டவ்ற்றைப் புதுப்பித்துக்கொண்டும் மாற்றிக்கொண்டும் இருக்கின்றது. ஆம் இந்த மகத்தான இறை செயற்பாடுகளிலும் சிருஷ்டிப்புச் செயற்பாட்டிலும் இருக்கின்ற உன்னதமான ஒரு தாத்பரியமும் அடிப்படையான ஒரு வேண்டுதலும் அந்த செயற்பாடுகளுக்கு உந்துதல் அளிக்கின்ற ஒரு காரணியும், மூன்று முக்கியமான கிளைகளை உள்ளடக்கிய எல்லை காண முடியாத விசாலமான ஒரு ஹிக்மத்தாகும். அந்த ஹிக்மத்துடைய முதலாவது கிளை: செயற்பாட்டின் அத்தனை வகைகளும், அது அற்பமானதாக இருந்தாலும் சரி அகிலார்ந்ததாக இருந்தாலும் சரி அனைத்துமே இன்பமளிக்கும். ஒவ்வொரு செயற்பாட்டிலும் ஒவ்வொரு சுவை காணப்படுகின்றது. எந்த அளவுக்கெனில் செயற்பாடு தான் இன்பம் என்று கூடச் சொல்ல முடியும். இன்னும் கூறினால் செயற்பாடானது, இன்பத்தின் ஊற்றாக அல்லது இன்பமாகவே இருக்கின்ற வுஜூதுடைய வெளிப்பாடாகும்; வேதனையின் ஊற்றாக அல்லது வேதனையாகவே இருக்கின்ற சூன்யத்தைவிட்டும் தூரமாகுவதும் அதனை உதறித் தள்ளுவதுமாகும். ஆம் திறனைக்கொண்ட ஒவ்வொருவனும் செயற்பாட்டின் மூலமாக அந்தத் திறன் வெளிப்படுவதை இன்பத்தோடும் களிப்போடும் ரசிப்பான். ஒவ்வொரு திறனும் ஒரு செயற்பாட்டின் மூலமாக வெளிப்படுவது ஓர் இன்பத்திலிருந்து தோற்றம்பெற்று ஓர் இன்பத்தை விளைவாகத் தரும். பரிபூரணத்துவத்துக்குச் சொந்தக்காரனான ஒவ்வொருவனும் அந்தப் பரிபூரணத்துவம் செயற்பாட்டின் மூலமாக வெளிப்படுவதை இன்பத்தோடு ரசிப்பான். உண்மையில் ஒவ்வொரு செயற்பாட்டிலும் இவ்வாறு நேசத்துக்குப் பாத்திரமான ஒரு பரிபூரணத்துவமும் ஓர் இன்பமும் காணப்படுகின்றது. மாத்திரமன்றி செயற்பாடும் கூட தன்னளவில் ஒரு பரிபூரணத்துவமாகும். மேலும் உண்மையிலேயே உயிரின உலகங்களுக்கு மத்தியில் சதாவும் நித்தியமான ஒரு ஹயாத்திலிருந்து மாத்திரமே வெளிப்பட முடியுமான தீராத ஒரு முஹப்பத்தினதும் முடிவில்லாத ஒரு கருணையினதும் பிரதிபலிப்புக்கள் புலப்படுகின்றன. உண்மையில் அந்தப் பிரதிபலிப்புக்களானது தன்னை இவ்வாறு நேசிக்கச் செய்வதற்காக தனது படைப்புக்களை நேசித்து ஆதரவுசெலுத்தி அருட்கொடைகள் வழங்குகின்ற ஹயாதுல் அக்தஸ் ஆகிய நேசத்துக்குறிய புனிதனிடம், தனது புனிதமான பரிசுத்தத் தன்மைக்கு ஏற்ற அமைப்பிலும் தனது வாஜிபான இருப்புக்கு உசிதமான அமைப்பிலும் ஆதி அந்தமில்லாத அந்த வாழ்வின் ஓர் அடிப்படை வேண்டுதலாக (வார்த்தைகள் பிழைக்காதிருக்கட்டும்) முடிவில்லாத ஒரு காதலும், புனிதத்தன்மை வாய்ந்த ஒரு முஹப்பத்தும், பரிசுத்தத்தன்மை வாய்ந்த ஓர் இன்பமும், இன்னும் இது போன்ற புனிதமான தன்மைகளும் காணப்படுகின்றது என்பதைக்காட்டி நிற்கின்றன. ஆம், அந்தப் புனிதத் தன்மைகள், இவ்வாறான முடிவுகாணாத செயற்பாடுகள் மூலமாகவும் எண்ணற்ற சிருஷ்டிப்புக்கள் மூலமாகவும் பிரபஞ்சத்தை சதாவும் புதுப்பித்துக்கொண்டும் மாற்றிக்கொண்டும் இருக்கின்றன. கய்யூமியத் தாத்பரியத்தை நோக்கியிருக்கின்ற முடிவில்லாத இறை செயற்பாடுகளில் பொதிந்துள்ள ஞானத்தின் இரண்டாவது கிளை: இது இறை நாமங்களை நோக்கியிருக்கின்ற கிளையாகும். ஆம், அழகுக்கு சொந்தக்காரனான ஒவ்வொருவனும் தனது அழகைக் கண்டுகளிக்கவும் பிறருக்குக் காண்பிக்கவும் நாடுவான் என்பது நாமறிந்த விடயமாகும். அவ்வாறே தேர்ச்சியும் நிபுனத்துவமும் வாய்ந்த ஒவ்வொருவனும் தனது தேர்ச்சியையும் நிபுனத்துவத்தையும் காட்சிப்படுத்துவதனூடாக பார்வைகளை தன்பால் ஈர்க்க முனைவான். மேலும் தேர்ச்சியும் நிபுனத்துவமும் மறைந்திருக்கின்ற அழகிதொரு சத்தியம் அல்லது அழகியதோர் அர்த்தம், அழகிய முறையில் வெளிப்பட்டுத் தனது ரசிகர்களைப் பெற்றுக்கொள்வதற்கான நாட்டத்தைக் கொண்டதாகும். உண்மையிலேயே இந்த அடிப்படையான விதிகள் அனைத்துப் பொருட்களிலும் அதனதன் தரத்துக்கேற்பப் பரிணமிக்கின்றன. எனவே நிச்சயமாக முத்லக்கான அழகுக்கும் மகத்துவத்துக்கும் சொந்தக்காரனாகிய அல்ஹய்யுல் கய்யூமுடைய ஆயிரத்தி ஓர் அழகிய திருநாமங்களுள் ஒவ்வொரு நாமத்திலும், அந்த நாமங்களுடைய ஒவ்வொரு படித்தரத்திலும் ஹகீகத்தான ஓர் அழகும் உண்மையான ஒரு கவர்ச்சியும் நிஜமான ஒரு வசீகரமும் அப்பழுக்கற்றதொரு முழுமையும், அழகியதொரு ஹகீகத்தும் காணப்படுகின்றன. சில போது அந்த நாமங்களுடைய ஒவ்வொரு படித்தரத்திலும் வகை வகையான எண்ணற்ற அழகுகளும் முடிவில்லாத அழகிய ஹகீகத்துகளும் காணப்படுகின்றன. இதற்கு பிரபஞ்சமும் பிரபஞ்சத்தில் பிரதிபலிக்கின்ற அழகிய திருநாமங்களும் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கின்ற கண்கவர் வடிவமைப்புக்களும் அத்தாட்சியாக இருக்கின்றன. ஆம், உண்மையில் அந்தத் திரு நாமங்களுடைய புனிதமான அழகைப் பிரதிபலிக்கின்ற கண்ணாடிகளாகவும், அழகிய வடிவமைப்புக்களைக் காட்சிப்படுத்துகின்ற திரைகளாகவும் ஆழமான அழகிய ஹகீகத்துக்களைப் பிரஸ்தாபிக்கின்ற பக்கங்களாகவும் இருப்பது இந்தப் பிரபஞ்சமும் அதிலுள்ள வஸ்துக்களுமாகும். ஆம் நிச்சயமாக அந்த நித்தியமான திரு நாமங்கள், அவற்றின் எண்ணற்ற பிரதிபலிப்புக்களையும் முடிவில்லாத அழகிய வடிவமைப்புக்களையும் அர்த்தபூர்வமான ஆக்கங்களையும், அந்த நாமங்களின் சொந்தக்காரனாகிய சர்வ மாட்சிமை பொருந்திய ஹய்யுல் கய்யூம் உடைய பார்வைக்குச் சமர்பித்துக்கொண்டிருக்கின்றன. சம நேரத்தில் இவற்றைப் பார்த்து ரசிப்பதன் மூலமும் ஆய்வு செய்வதன் மூலமும் கணக்கிட முடியாத அவனது பிரக்ஞையுள்ள படைப்புக்கள் நல்லுணர்வு பெறுகின்றனர். ஆம், இவ்வாறு வரையறுக்கப்பட்ட ஒரு பொருளிலிருந்து வரையறுக்க முடியாத ஞானங்களைப் பொதியப்பெற்ற எண்ணற்ற காட்சிகளைப் படைப்பதும் தனி ஒரு நபரிலிருந்து ஏராளமான நபர்களைப் படைப்பதும் தனி ஒரு சத்தியத்திலிருந்து எண்ணற்ற சத்தியங்களை வெளிப்படுத்துவதும் இறைவனுடைய புனிதத் தன்மை வாய்ந்த ரசனையையும் காதலையும் சார்ந்துள்ள விடயங்களாகும்; அவனது கய்யூமியத் தாத்பரியத்தின் வெளிப்பாடுகளாகும். ஆம் இந்த இரண்டினதும் அடிப்படையில் இந்தப் பிரபஞ்சம் சதாவும் முழுமொத்தமாகவே அந்த இறை நாமங்களின் பிரதிபலிப்புக்கள் மூலமாக புதுப்பிக்கப்பட்டுக்கொண்டும் மாற்றத்துக்குற்படுத்தப்பட்டுக்கொண்டும் இருக்கின்றது.
பிரபஞ்சமெங்கும் வியாபித்துக் காணப்படுகின்ற வியக்க வைக்கும் இறை செயற்பாடுகளில் பொதிந்துள்ள தாத்பரியத்தின் மூன்றாவது கிளை: கருணையுள்ள எந்த ஒருவனும் பிறரை இன்பமடையச் செய்வதன் மூலம் மகிழ்ச்சி அடைவான். இரக்கமுள்ள எந்த ஒருவனும் பிறரை மகிழ்ச்சியடையச் செய்வதன் மூலம் இன்பமடைவான். அன்பும் நேசமும்கொண்ட எந்த ஒருவனும் நேசம்கொள்வதற்குத் தகுதியுள்ள படைப்பினங்களை அன்பையும் நேசத்தையும் கொண்டு பிணைப்பதன் மூலம் ஆணந்தமடைவான். கொடையாளனாகவும் வள்ளலாகவும் இருக்கின்ற எந்த ஒருவனும் பிறருக்கு நிம்மதியையும் சந்தோசத்தையும் அளிப்பதன் மூலம் சந்தோசமடைவான். எந்த ஒரு நீதியாளனும் நீதியை நிலைநாட்டுவதன் மூலமும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளை வழங்குவதன் மூலம் உறிமை மீறப்பட்டவர்கள் அகமகிழ்வதைப் பார்த்தும் ஆனந்தமடைவான். ஆற்றலும் திறனும் மிக்க எந்த ஒரு வடிவமைப்பாளனும், தனது வடிவமைப்புக்களைக் காட்சிப்படுத்துவதன் மூலமும், அந்த வடிவமைப்புக்கள் தான் நினைத்த அமைப்பில் இயங்குவதைப் பார்த்தும், அதன் அழகிய விளைவுகளைப் பார்த்தும் பெறுமைப்படுவான். ஆம், மேற்கூறப்பட்ட இந்த விதிகள் ஒவ்வொன்றும் பிரபஞ்சத்திலும் மனித வர்க்கத்திலும் காணப்படுகின்ற அடிப்படையான சட்டதிட்டங்களாகும். இந்தச் சட்டதிட்டங்கள் இறை நாமங்களிலும் காணப்படுவதை எடுத்துக்காட்டுகின்ற மூன்று உதாரணங்கள், முப்பத்தி இரண்டாவது வார்த்தையின் இரண்டாவது தரிப்பில் விளக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு சுருக்கத்தை இங்கு எழுதுவது பொருத்தமானதாகும். உதாரணமாக, மாபெரும் அன்பும் கருணையும் இரக்கமும் கொண்ட ஒரு பெரும் வள்ளல், தனது இயல்பில் பொதிந்திருக்கின்ற உன்னதமான அந்தப் பண்புகளின் வெளிப்பாடாக, ஒரு பெரும் கப்பலில் கஷ்டத்தில் வீழ்ந்த வறிய மக்களை ஏற்றி உலகத்தை சுற்றி சுற்றுலா அனுப்பி வைக்கின்றார். அந்தக் கப்பலில் அனைத்து விதமான ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பான முறையில் செய்து, விருந்தோம்பல்கள் என்றும் அன்பளிப்புக்கள் என்றும் அந்த ஏழைகளை மகிழ்விக்கின்றார். பின்னர் அந்தக் காட்சிகளையும், அந்தப் பயணிகளின் நன்றியுணர்வையும் பார்த்து இன்பமடைகின்றார். அவர்கள் இன்பம் அனுபவிப்பதைப் பார்த்து சந்தோசமடைகின்றார். அவர்களது நல்ல நிலைமையைப் பார்த்து ஆனந்தமும் பெறுமையும் அடைகின்றார். உண்மையில் அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை விநியோகிக்கின்ற உத்தியோகஸ்தர் என்ற அந்தஸ்தில் இருக்கின்ற ஒரு மனிதனே, இவ்வாறான சிறியதொரு விருந்தோம்பல் செய்வதன் மூலமாக இந்த அளவு மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைகின்றான். அவ்வாறிருக்க ஹய்யுல் கய்யூம் ஆகிய ஏக இரட்சகன், தன்நிகரில்லாத ஓர் அமைப்பில், அனைத்து ஜீவராசிகளையும் மனிதர்களையும் எண்ணற்ற மலக்குமார்களையும் ஜின்களையும் ரூஹானிய ஆத்மாக்களையும் இந்தப் பூகோளக் கப்பலில் ஏற்றி, அந்தக் கப்பலை தனது கருணையாலும், விதவிதமான அருசுவை உணவுகளாலும், -அனைத்து விதமான புலனுணர்வுகளைக் கொண்டும்- அனுபவித்து மகிழ்வதற்குத் தேவையான அருட்கொடைகளாலும் நிரப்பி, பின்னர் அவர்களுக்காக நித்தியமான ஓர் உலகில் நித்தியமான இன்பங்களால் நிறைந்த நித்தியமான ஒரு விருந்தோம்பலுக்காக சுவனங்களைத் தயார்படுத்தி, அந்த ஒவ்வொரு சுவனத்தையும் ஒவ்வோர் அருள் விரிப்பாக ஆக்கி, அவர்களை மகிழ்ச்சியிலும் களிப்பிலும் ஆனந்தத்திலும் திளைக்கச்செய்திருக்கின்றான். ஆம், இந்த அளவு அன்பும் கருணையும்கொண்ட வள்ளலாக இருக்கும் ஹய்யுல் கய்யூம் ஆகிய ஏக நாயன், தனது இந்தப் படைப்புக்களுடைய மகிழ்ச்சியாலும் ஆனந்தத்தாலும் நன்றியுணர்வுகளாலும் -எம்மால் கிரகித்துக்கொள்ளவோ விவரிக்கவோ முடியாத- உன்னதமான புனிதத்தன்மை வாய்ந்த ஒரு மகிழ்ச்சியும் இன்பமும் பெருமிதமும் அடைகின்றான். அவனுடைய ருபூபியத்துக்குள் பொதிந்திருக்கின்ற அர்த்தங்களாகிய இந்த கிரகிப்புக்கு அப்பாற்பட்ட புனிதத் தன்மையும் பரிசுத்தத் தன்மையும் வாய்ந்த மகிழ்ச்சியும் இன்பமும் பெருமிதமுமே இந்தப் பிரபஞ்சமெங்கும் காணப்படுகின்ற தொடர்ந்தேர்ச்சையான செயற்பாடுகளையும் முடிவில்லாத சிருஷ்டிப்பையும் வேண்டி நிற்கின்றன. இன்னுமோர் உதாரணத்தைக் கூறுவதாயின், கைதேர்ந்த ஒரு பொறியியலாளர் பதிப்புத் தட்டு இல்லாத ஓர் இசைப் பெட்டியை வடிவமைத்து, அந்த இசைப் பெட்டியும் சுயமாக நினைத்ததைப் பேசுகின்றது எனில், அந்தப் பொறியியலாளர் எந்த அளவு மகிழ்ச்சியும் பெருமிதமும்கொள்வார், தனக்குத் தானே “மாஷா அல்லாஹ்” என்று கூறிக்கொள்வார். உண்மையில் எந்தவிதமான ஆக்க சக்தியுமற்ற, சாமான்யமான சிறிய ஒரு வடிவமைப்பே, அதன் வடிவமைப்பாளனுடைய உள்ளத்தில் இப்படிப்பட்ட ஒரு பெருந்தன்மையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றது. இப்படியிருக்க இந்தப் பிரபஞ்ச வஸ்துக்களுடைய சர்வ ஞானமிக்க வடிவமைப்பாளன், இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் அவனைத் துதி செய்து பேசுகின்ற வியக்கத்தக்க இயந்திரங்களாலும் இசைக் கருவிகளாலும் நிரப்பி வைத்துள்ளான். அந்த ஒவ்வொரு வஸ்தும் மொத்தப் பிரபஞ்சத்தையும் எண்ணற்ற வித விதமான இன்னிசைகளாலும் ஓசைகளாலும் நிரப்பி, அந்த ஓசைகளைக்கொண்டு அவனை துதி செய்துகொண்டிருக்கின்றன. மாத்திரமன்றி ஒவ்வெரு வஸ்த்தையும் ஒவ்வொரு உலகத்தையும் அலாதியான வெவ்வேறான அற்புத வடிவமைப்புக்களைக்கொண்டு வடிவமைத்து, அவற்றைக் காட்சிப்படுத்துவதற்காக உயிரினங்களின் தலைகளில் பார்த்துப் படம் பிடிக்கவும், கேட்டுப் பதித்துக்கொள்ளவும், நினைத்ததைப் பேசவும், தகவல் பரிமாறவும் தேவையான ஏகப்பட்ட இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் அனைத்தும் மிகச் சிறிய ஓர் உயிரினத்தின் மிகச் சிறிய தலையிலும் கூட அற்ப்புதமான ஓர் அமைப்பில் பொறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு தலையும் வெறுமனே, பதிப்புத்தட்டு அற்ற ஓர் இசைப் பெட்டியாக மாத்திரமன்றி, சம நேரத்தில் வில்லைகளோ படச் சுருளோ இல்லாத புகைப்படக் கருவியாகவும், இணைப்புக் கம்பிகள் ஏதுமற்ற மின் தந்தியாகவும் –உண்மையான இந்தக் கருவிகளை விட- பல மடங்கு வினைத்திறன் மிக்கதாகத் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆம் ஒவ்வொரு மனிதனுடைய தலையிலும் இப்படிப்பட்ட அற்புதமான ஓர் இயந்திரத்தை அமைத்து, அது அவனது விருப்பத்திற்கேற்றாற் போல் இயங்கி விளைவுகளையும் கனிகளையும் தரும் போது ஏற்படுகின்ற புனிதத் தன்மை வாய்ந்த பெறுமையும் பரிசுத்தத் தன்மை வாய்ந்த மகிழ்ச்சியும் இன்னும் இது போன்று ருபூபியத்தில் பொதிந்துள்ள உயர்தரமான அர்த்தங்களும் நிச்சயமாக இவ்வாறான தொடர்ந்தேர்ச்சையான செயற்பாடுகலை வேண்டி நிற்கின்றன. இன்னுமோர் உதாரணத்தைக் கூறுவதாயின், நீதி தவறாத ஓர் ஆட்சியாளர் மக்களுடைய உறிமைகளைப் பாதுகாத்து நீதியை நிலைநாட்டுவதற்காக, அப்பாவிகளின் உறிமைகளுக்காக அவர்கள் மீது அத்துமீறிய அக்கிரமக்காரர்களையும் பலவீனர்களின் உறிமைகளுக்காக அவர்கள் மீது அநீதியிழைத்த பலவான்களையும் தண்டித்து அதன் மூலம் மகிழ்ச்சியடைவார்; பெறுமைப்படுவார்; திருப்தியடைவார். இந்த விடயம் ஆட்சியினதும், செங்கோலினதும், நீதியினதும் ஓர் அடிப்படையான விதியாக இருக்கின்றது. ஆம், சர்வ ஞானமிக்க ஆட்சியாளனாகவும் முத்லக்கான நீதிக்குச் சொந்தமான சக்கரவர்த்தியாகவும் இருக்கின்ற ஹய்யுல் கய்யூம் ஆகிய ஏக இரட்சகன், அனைத்து வஸ்துகளுக்கும் குறிப்பாக உயிரினங்களுக்கும், வாழ்வுக்குத் தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வாழ்வுறிமையை வழங்கியுள்ளான். பின்னர் அந்த வாழ்வைத் தக்க வைத்துக்கொள்வதற்காக அவற்றிட்கு தேவையான அனைத்து அங்க அவயவங்களையும் வழங்கியுள்ளான். பின்னர் பலவீனமானவற்றை பலவான்களுடைய தீங்குகளிலிருந்து மகா கருணையோடு பாதுகாக்கின்றான். உயிரினங்களுடைய விடயத்தைப் பொறுத்தவரை உரியதை, உரியவற்றிட்கு, உரிய நேரத்தில், உரிய முறையில் வழங்குதன் மூலம், இந்த வகை நீதியை முழுமையாகவும், நீதி தவறுகின்ற அக்கிரமக்காரர்களுக்கு அவ்வப்போது இந்த உலகிலேயே தண்டணை வழங்குவதன் மூலம், இந்த வகை நீதியைப் பகுதியளவும் தனது மகா ஞானத்திற்கேற்ற அமைப்பில் நிலைநாட்டுகின்றான். பின்னர் விஷேடமாக மறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் நிறுவப்படவுள்ள மாபெரும் நீதிமன்றத்தில் தனது அணுப்பிசகாத மாபெரும் நீதியை நிலைநாட்டுகின்றான். ஆம், ஆரம்பத்தில் கூறப்பட்டதைப் போன்று ஒரு சாதாரன ஆட்சியாளனே நீதியை நிலைநாட்டுவதன் மூலம் இந்த அளவு ஆணந்தமடைகின்ற போது, இந்தப் பிரபஞ்சத்தையே அணுப் பிசகாத நீதியைக்கொண்டு ஆட்சி செய்கின்ற நாயன் அதன் மூலம் அடைந்துகொள்கின்ற -எமது கிரகிப்புக்கோ விவரிப்புக்கோ அப்பாற்பட்ட- அந்தப் பரிசுத்தத் தன்மைவாய்ந்த புனிதமான அர்த்தங்களும், இறை நிலைமைகளும் பிரபஞ்சம் முழுவதிலும் அரங்கேறுகின்ற இந்தத் தொடர்ந்தேர்ச்சையான இயக்கங்களையும் செயற்பாடுகளை வேண்டி நிற்கின்றன. இதோ, இந்த மூன்று உதாரணங்களையும் போன்று, இந்தத் தொடர்ந்தேர்ச்சையான அகிலார்ந்த செயற்பாடுகளின் மூலம், அஸ்மாஉல் ஹுஸ்னாவுக்குள் இருக்கின்ற ஒவொரு நாமமும், மேற்போன்ற புனிதத்துவமும் பரிசுத்தத் தன்மையும் வாய்ந்த முகத்தஸான ஒவ்வோர் இறை நிலைமைக்குக் காரணியாக அமைவதால், அந்த முகத்தஸான இறை நிலைமைகள் இவ்வாறான தொடர்ந்தேர்ச்சையான செயற்பாடுகளையும் சிருஷ்டிப்புச் செயற்பாட்டையும் வேண்டி நிற்கின்றன. மாத்திரமன்றி, ஒவ்வொரு திறனும் ஒவ்வோர் ஆற்றலும் வெளிப்பட்டு அதன் விளைவுகளைத் தரும் போது ஒரு திருப்தியையும் ஓர் இன்பத்தையும் அளிக்கின்றது. ஒவ்வொரு பொறுப்புதாரியும் தனது பொறுப்பை நிறைவேற்றி முடித்து அந்தப் பொறுப்பிலிருந்து விடுபடுவதன் மூலம் பெரியதொரு நிம்மதியையும் சங்ந்தோசத்தையும் திருப்தியையும் உணர்ந்துகொள்வார். மேலும் ஒரு விதையிலிருந்து ஏகப்பட்ட கனிகளைப் பெற்றுக்கொள்வதும் ஒரு திர்ஹத்திலிருந்து நூறு திர்ஹம் இலாபமீட்டுவதும் அவற்றின் உறிமையாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு நிலைமையாகும். எனவே நிச்சயமாக பூரா படைப்பினங்களிலும் காணப்படுகின்ற எண்ணற்ற ஆற்றல்களையும் திறன்களையும் வெளிப்படுத்தி, அந்தப் படைப்பினங்களை மிகவும் சங்கையான பணிகளில் ஈடுபடுத்தி, பின்னர் அவற்றை கட்டம் கட்டமாக ஓர் உயர்ந்த அந்தஸ்த்தை நோக்கி நகர்த்துகின்றான். அதாவது மூலக் கூறுகளை கனிப்பொருட்கள் அந்தஸ்துக்கும் கனிப்பொருட்களை தாவர வாழ்வு என்ற அந்தஸ்துக்கும், தாவரங்களை ரிஸ்க் என்ற ஊடகத்தினூடாக ஜீவராசிகளுடைய வாழ்க்கை அந்தஸ்துக்கும், அந்த ஜீவராசிகளையும் கூட மனிதர்களுக்கென்றே உள்ள பிரக்ஞைபூர்வமான உயர்தரமானதொரு வாழ்க்கை அந்தஸ்துக்கும் உயர்த்துகின்றான். இவ்வாறு ஒவ்வோர் உயிரினத்தினதும் வெளிப்படையான ஓர் உடலின் அழிவோடு –இருபத்தி நான்காவது கடிதத்தில் நிறுவப்பட்டுள்ளதைப் போன்று- அதற்குப் பின்னால் அதன் ஆத்மா, அதன் திறன்கள், ஆற்றல்கள், ஆளுமைகள், தோற்றம் என்று ஏராளமான உடல்களை அவற்றுக்குறிய பணிகளுக்காகத் தயார்படுத்தி, தொடர்ந்தேர்ச்சையான செயற்பாடுகளையும் சிருஷ்டிப்புக்களையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றான். இதிலிருந்து, இந்த மகத்தான செயற்பாடுகளிலிருந்து தோற்றம் பெறுகின்ற புனிதத் தன்மை வாய்ந்த அர்த்தங்களும் இறை நிலைமைகளும் ருபூபியத்தும் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும் என்பதை விளங்கிக்கொள்ள முடியும். முக்கியமான ஒரு கேள்விக்கான ஆணித்தரமான ஒரு பதில்: ஒரு பகுதி வழிகேடர்கள், “பிரபஞ்சத்தை இப்படிப்பட்ட தொடர்ந்தேர்ச்சையான ஓர் செயற்பாட்டின் மூலம் மாற்றத்துக்கும் சீரமைப்புக்கும் உற்படுத்துகின்ற ஒருவன், நிச்சயமாகத் தன்னளவிலும் கூட மாற்றத்துக்குற்படுபவனாகவும் நிலை மாறக்கூடியவனாகவும் இருப்பது அவசியப்படுகின்றது.” என்று கூறுகின்றனரே? பதில்: நிச்சயமாக ஒரு போதும் அவ்வாறல்ல! நிலத்தில் இருக்கின்ற கண்ணாடியில் ஏற்படுகின்ற மாற்றங்கள், வானத்திலிருக்கின்ற சூரியனும் மாறுகின்றது என்பதைக் காட்டுவதில்லை. மாறாக அதன் பிரதிபலிப்புக்கள் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதையே காட்டுகின்றது. ஆதி அந்தமில்லாதவனாகவும், ஏக நித்தியனாகவும், முத்லக்கான பரிபூரணத்துவத்தையும் முழுமையையும் உடையவனாகவும், எந்தவிதத் தேவைகளின்பாலும் தேவையற்றவனாகவும், சடத்தைவிட்டும் இடத்தைவிட்டும் தூய்மையானவனாகவும், வரையறைகளுக்கும் சாத்தியப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டவனாகவும் இருக்கின்ற புனிதனாகிய அல்லாஹ் மாற்றங்களுக்கும் நிலை மாறல்களுக்கும் அப்பாற்பட்டவனாவான். பிரபஞ்சத்தின் மாற்றங்கள் அவனுடைய மாற்றத்துக்கு அன்றி அவனது நிலைத்த தன்மைக்கும் மாற்றத்துக்கு அப்பாற்பட்ட தன்மைக்குமான அத்தாட்சியாகும். ஏனெனில் “ஒன்றை அல்லது ஒரு தொகுதியை ஒழுங்கு, நேர்த்தி சீர்குழையாது இயக்குகின்றவன் அந்த இயக்கத்துக்கு உற்படாதவனாக இருக்க வேண்டும்; தொடர்ந்து மாற்றங்களுக்கு உற்படுத்துகின்றவன் அந்த மாற்றங்களுக்கு உற்படாதவனாக இருக்க வேண்டும். இதற்கு மாற்றமாக நிகழும் எனில் ஒழுங்கும் நேர்த்தியும் சீர்குழைந்துவிடும்” என்பது யதார்த்தமான ஒரு விடயமாகும். இரண்டாவதாக: இயக்கமும் மாற்றமும், புதிதாகத் தோற்றம் பெறுவதையும், பூரணத்துவத்தை அடைவதற்காக முன்னேறுவதையும், தேவைகளையும், வாய்ப்புக்களையும் வேண்டி நிற்கின்ற சடத்தோடு சம்பந்தப்பட்ட சடத்தன்மை கொண்ட விடயங்களாகும். புனித நாயனோ, ஆதியோ ஆரம்பமோ இல்லாதவனாகவும், எல்லாக் கோனங்களிலும் முத்லக்கான பரிபூரணத்துவத்தை உடையவனாகவும், முத்லக்கான அமைப்பில் எந்த ஒன்றின் மீதும் எந்தவிதமான தேவையும் அற்றவனாகவும், வாஜிபுல் வுஜூத் ஆகவும் இருக்கின்ற காரணத்தினால், அவனுடைய விடயத்தில் மாற்றங்களும் நிலை மாறல்களும் அசாத்தியமானதாகும்; சர்வ சாத்தியமற்றதாகும்.
(இது இரண்டு அம்சங்களை உள்ளடக்கியதாகும்) முதலாவது அம்சம்: கய்யூம் நாமத்துடைய உன்னதமான பிரதிபலிப்பைப் பார்க்க விரும்பினால், எமது கற்பனா சக்தியை முழுப் பிரபஞ்சத்தையும் தரிசிக்கக் கூடிய இரண்டு கருவிகளாக, -அதாவது ஒன்று மிகத் தொலைவிலுள்ள பொருட்களைக் காட்டக்கூடிய தொலைகாட்டியாகவும் மற்றது மிகச் சிறிய அணுக்களையும் காட்சிப்படுத்தக் கூடிய நுணுக்குக்காட்டியாகவும்- ஆக்கிக்கொள்ள வேண்டும். அப்போது ஒன்றின் மூலமாக கய்யூம் நாமத்துடைய உன்னதமான பிரதிபலிப்பின் மூலமாக பூமிப்பந்தை விட ஆயிரம் மடங்கு பிரமாண்டமான கோள்களும் நட்சத்திரங்களும் எந்த விதமான தூண்களும் இன்றி காற்றைவிட மிகவும் சாதுவான “சூனி” என்ற பதார்தத்திற்குள் ஒரு வகையில் நிறுத்தப்பட்டிருக்க, இன்னுமொரு வகையில் அதன் பணி நிமித்தமாக இயக்குவிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் காணலாம். பின்னர் இரண்டாவதான நுணுக்குக்காட்டியின் மூலமாக, மிகச் சிறிய அணுக்களை நோக்கிப் பார்வையைச் செலுத்துகின்ற போது, அங்கும் கய்யூம் நாமத்துடைய உன்னதமான பிரதிபலிப்புக்கமைவாக, பூமியுலுள்ள அனைத்து வஸ்துக்களினதும் உடல்களிலும் பணிபுரிகின்ற அணுக்கள் அனைத்தும், நட்சத்திரங்களைப் போன்றே மிகுந்த ஒழுங்கு நேர்த்தியோடு தமது நிலைகளைப் பேணி தமது பணிகளைக் கணகச்சிதமாக நிறைவேற்றிக்கொண்டிருப்பதைக் காணலாம். குறிப்பாக உயிரினங்களின் இரத்தத்தில் காணப்படுகின்ற “செங்குருதி மற்றும் வெண்குருதிச் சிறு துணிக்கைகள்” என்றழைக்கப்படும் அணுக்களால் ஆன சிறிய தொகுப்புக்கள் மௌலானாக்களின் பாணியில் உடுத் தொகுதிகளைப் போன்று சம நேரத்தில் இரண்டு சீரான இயக்கங்களில் நிலை குழையாது இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஒரு சுருக்கத்தின் சுருக்கம் இஸ்முல் அஃஸமுடைய ஆறு நாமங்களும் -ஒளியிலிருக்கின்ற ஏழு நிறங்களையும் போன்று- ஒன்று சேர்ந்து தோற்றுவிக்கின்ற புனிதமான ஒளியைப் பார்ப்பதற்காக இவ்வாறான ஒரு சுருக்கம் பொருத்தமானதாகும். பிரபஞ்சத்திலுள்ள அத்தனை வஸ்துக்களையும் இவ்வாறு நிலைப்படுத்தி, அவற்றின் நிலைகளையும் அந்த நிலைகளின் தொடர்ச்சியையும் பேணிக்கொண்டிருக்கின்ற, கய்யூம் நாமத்துடைய இந்த உன்னதமான பிரதிபலிப்பைப் பின்னணியாக வைத்து உங்களது பார்வையைச் செலுத்துங்கள். அங்கு “ஹய்” நாமத்துடைய உன்னதமான பிரதிபலிப்பானது, வாழ்வைக்கொண்ட அத்தனை உயிரினங்களையும் உயிர்ப்புமிக்கதாக ஜொலிக்கச் செய்து கொண்டிருக்கின்றது. ஹய் நாமத்துடைய இந்த உன்னதமான பிரதிபலிப்பின் பின்னணியில் “ஃபர்த்” நாமத்துடைய உன்னதமான பிரதிபலிப்பானது மொத்தப் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள அத்தனை வஸ்துக்களுடனும் சேர்த்து ஓர் ஒருமைத்துவத்துக்குள் வைத்திருக்கின்றது. ஒவ்வொரு வஸ்த்தின் மீதும் ஓர் ஒருமைத்துவ முத்திரையையும் ஒரு தனித்துவ இலாஞ்சனையையும் பதிக்கின்றது. இவ்வாறு எண்ணற்ற அத்தாட்சிகளைக்கொண்டு “ஃபர்தியத்”துடைய பிரதிபலிப்புக்கள் புலப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இப்போது “ஃபர்த்” நாமத்தைப் பின்னணியாக வைத்து “ஹகம்” நாமத்துடைய உன்னதமான பிரதிபலிப்பைப் பாருங்கள். அந்தப் பிரதிபலிப்பே நட்சத்திரங்களிலிருந்து அணுக்கள் வரை -சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும்- நாம் காண்கின்ற ஒவ்வொரு வஸ்த்தையும், அதற்கு லாயக்கான, மிகப் பொருத்தமான, பயன் தரக்கூடிய ஓர் ஒழுங்குக்குள்ளும் பல்வேறு தாத்பரியங்களைப் பொதியப்பெற்ற ஒரு நிலைக்குள்ளும் வைத்திருக்கின்றது. மிகச் சிறிய எல்லைக்குள் இருந்து மிகப் பெரிய எல்லை வரை இந்த ஒழுங்கையும் நேர்த்தியையும் காண முடியுமாக உள்ளது. பின்னர் “ஹகம்” நாமத்துடைய உன்னதமான பிரதிபலிப்புக்குப் பின்னணியில் வைத்து “அத்ல்” நாமத்தை நோக்கி உங்கள் பார்வையைச் செலுத்துங்கள். அங்கு “அத்ல்” நாமத்துடைய உன்னதமான பிரதிபலிப்பின் மூலமாக (இரண்டாவது குறிப்பில் நிறுவப்பட்டுள்ளதைப் போன்று) மொத்தப் பிரபஞ்சமும் அதிலுள்ள அத்தனை வஸ்துக்களும், ஒரு தொடர்ந்தேர்ச்சையான பயங்கர இயக்கத்துக்கு மத்தியில் வியக்கத்தக்க அளவைகள் நிறுவைகளைக்கொண்டு மிகவும் நுணுக்கமான ஓர் அமைப்பில் நிர்வகிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம். இந்த நிர்வாகம் எந்த அளவு நுணுக்கமான அளவை நிறுவைகளுடன் கூடிய ஒரு திட்டத்துக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது எனில், ஏதேனுமொரு வான் பொருள் ஒரு கனப்பொழுது தனது சமநிலையிலிருந்து விலகினால், அதாவது “அத்ல்” நாமத்துடைய பிரதிபலிப்புக்குள்ளிருந்து வெளியேறினால், அது நட்சத்திரத் தொகுதிகளுக்குள் பெரும் களேபரத்துக்கு வழிவகுத்து ஒரு கியாமத்தையே ஏற்படுத்திவிடும். ஆம், அனைத்து வஸ்துக்களினதும் அவற்றிட்கென்றே உள்ள துள்ளியமான எல்லைகள், அதாவது, பால் வீதியுடைய பிரமாண்டமான இயக்க எல்லையிலிருந்து ஆரம்பித்து இரத்தத்துக்குள் காணப்படும் செங்குருதி மற்றும் வெண்குருதிச் சிறு துணிக்கைகளுக்குள் இருக்கின்ற இயக்க எல்லை வரையுள்ள ஒவ்வோர் இயக்க எல்லையும் மிகத் துல்லியமான அளவைகளைக்கொண்டு நிர்ணயம் செய்யப்பட்ட ஓர் அமைப்பைப் பேணுவதானது, அனைத்துக்கு முதலில், நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து அணுப் பரிவாரங்கள் வரை உள்ள அத்தனை வஸ்துக்களும் “அம்ரி குன் ஃபயகூன்” இற்கமைய, தமக்கு வருகின்ற கட்டளைகளுக்கு முற்றுமுழுதாகக் கட்டுப்பட்டுவிட்டன என்பதைக் காட்டுகின்றன. இப்போது, “அத்ல்” நாமத்துடைய உன்னதமான பிரதிபலிப்பைப் பின்னணியில் வைத்து (முதலாவது குறிப்பில் நிறுவபட்டதைப் போன்று) “குத்தூஸ்” நாமத்துடைய உன்னதமான பிரதிபலிப்பைப் பாருங்கள். அந்தப் பிரதிபலிப்பே பிரபஞ்சத்திலுள்ள அத்தனை வஸ்துக்களையும் தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் அழகாகவும் அலங்காரமாகவும் தெளிவானவையாகவும் வைத்திருக்கின்றது. குத்தூஸ் நாமத்துடைய இந்தப் பிரதிபலிப்பே, இந்தப் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள அத்தனை வஸ்துக்களையும், முத்லக்கான அழகுக்கு சொந்தக்காரனான அல்லாஹ்வின், அளவிட முடியாத அழகும் கவர்ச்சியும்மிக்க அஸ்மாஉல் ஹுஸ்னாக்களைப் பிரதிபலிக்கின்ற, அந்த அழகிய திருநாமங்களுக்கு லாயக்கான கண்ணாடிகளாக வைத்திருக்கின்றது. சுருக்கமாக: இஸ்முல் அஃஸமுடைய ஆறு ஒளிகளாகிய இந்த ஆறு நாமங்களும் அவற்றின் பிரதிபலிப்புக்களும், ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் அதிலுள்ள வஸ்துக்களையும் விதவிதமான அழகிய நிறங்களாலும் கலைப்பாடுகளாலும் ஆன, வெவ்வேறான தோற்றங்களை உடைய பிரகாசமான திரைகளால் ஆக்கிரமித்துள்ளன. ஐந்தாவது ஒளிக்கீற்றின் இரண்டாவது அம்சம்: பிரபஞ்சத்தில் பிரதிபலிக்கின்ற கய்யூமியத்துடைய பிரதிபலிப்பானது, அல்லாஹ்வுடைய வாஹிதியத்துடனும் அவனது மகத்துவத்துடனும் சம்பந்தப்பட்டதாகும். அவ்வாறே, பிரபஞ்சத்தின் மத்தியமாகவும், பிரக்ஞையுள்ள கனியாகவும் பிரபஞ்சத்துடைய படைப்புக்கான காரணியாகவும் இருக்கின்ற மனிதனிலும் கூட கய்யூமியத்துடைய பிரதிபலிப்பானது அல்லாஹ்வுடைய அஹதியத்துடனும் அழகுடனும் சம்பந்தப்பட்டதாக வெளிப்படுகின்றது. அதாவது இந்தப் பிரபஞ்சமானது கய்யூமியத்தில் பொதிந்துள்ள தாத்பரியத்தின் மூலமாகவே நிலையானதாக இருக்கின்றது. அவ்வாறே கய்யூம் நாமத்துடைய மிகப் பெரிய பிரதிபலிப்புக்குப் பாத்திரமாக இருக்கின்ற மனிதனின் காரணமாகவே இந்தப் பிரபஞ்சமும் கூட ஒரு வகையில் நிலையானதாக இருக்கின்றது. அதாவது பிரபஞ்சத்தில் காணப்படுகின்ற பெரும்பாலான ஞானங்களும் பலன்களும் நோக்கங்களும் மனிதனை நோக்கியதாகவும் அவனோடு சம்பந்தப்பட்டதாகவும் இருப்பதால், ஒரு வகையில் மனிதனில் காணப்படுகின்ற கய்யூமியத்துடைய பிரதிபலிப்பானது, ஒரு வகையில் பிரபஞ்சத்தைத் தாங்குகின்ற தூனாகும். ஆம், ஹய்யுல் கய்யூம் ஆகிய அல்லாஹ், இந்தப் பிரபஞ்சத்தில் மனிதனைத் தெரிவு செய்து அவனுக்காகவே முழுப் பிரபஞ்சத்தையும் படைத்துள்ளான் என்று கூற முடியும். ஏனெனில் மனிதன், தன்னிடமுள்ள அகிலார்ந்த திறன்கள் மூலமாக அத்தனை இறை நாமங்களையும் அறிந்து, அதன் மூலமாக இன்பம் அனுபவிக்க முடியுமானவனாக இருக்கின்றான். குறிப்பாக ரிஸ்கில் காணப்படுகின்ற இன்பம் திருப்தி என்பவற்றின் மூலமாக ஏராளமான இறை நாமங்களை அறிந்துகொள்ள முடியுமானவனாக இருக்கின்றான். ஆனால் மலக்குமார்களோ, அந்த நாமங்களை அவ்வாறு அறிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். ஆம், மனிதனுக்கு மகத்துவம் சேர்ப்பது இந்த அகிலார்ந்த தன்மையாகும். ஹய்யுல் கய்யூம் ஆகிய அல்லாஹ், மனிதனுக்குத் தனது அத்தனை நாமங்களையும் உணர்ந்துகொள்வதற்கும் அத்தனை வகையான அருட்கொடைகளையும் சுவைத்து எடை போடுவதற்கும் ஏதுவாக கடுமையான தாகம்கொண்ட பலமான ஓர் இறைப்பையை வழங்கி, அந்த இறைப்பைக்காக விரிக்கப்பட்ட விசாலமான உணவு விரிப்பை எண்ணற்ற அருசுவை ஆகாரங்களைக்கொண்டு பெரும் தயாளத்தன்மையோடு நிரப்பி வைத்திருக்கின்றான். மாத்திரமன்றி சட ரீதியான இந்த இறைப்பையுடன் கூடவே வாழ்வையும் கூட ஓர் இறைப்பையாக ஆக்கி வைத்துள்ளான். உணர்வுகளை வாழ்வு என்ற அந்த இறைப்பைக்குச் சேவகம் செய்யும் கைகளாக ஆக்கி வைத்து, அந்த இறைப்பைக்காக மிகவுமே விசாலமான ஓர் அருள் விரிப்பை விரித்து வைத்திருக்கின்றான். வாழ்வானது, அந்த உணர்வுகளின் ஊடாக அந்த அருள் விரிப்பிலிருந்து அனைத்துவிதமான அருட்கொடைகளையும் பெற்று அனுபவிக்கும். பின்னர் அனைத்து வகையான நன்றிகளையும் கொண்டு தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தும். அத்தோடு வாழ்வு என்ற இந்த இறைப்பைக்கும் மேலாக மனிதம் என்ற ஓர் இறைப்பையை வழங்கியிருக்கின்றான். அந்த இறைப்பையோ வாழ்வை விட மிகவும் விசாலமான எல்லையைக்கொண்ட ஓர் அருள் விரிப்பை வேண்டி நிற்கின்றது. அறிவும் புத்தியும் சிந்தனையும் கற்பனையும் அந்த இறைப்பைக்குச் சேவகம் செய்கின்ற கைகளாகும். அந்த இறைப்பையானது வானம் பூமியளவு விசாலமான அந்த அருள் அருள் விரிப்பிலிருந்து அருட்கொடைகளைப் பெற்றுக்கொண்டு தனது நன்றிகளை வெளிப்படுத்தும். பின்னர் மனிதம் என்ற இறைப்பைக்கும் மேலால் எல்லையில்லாத இன்னுமோர் அருள் விரிப்பை விரிப்பதற்காக, இஸ்லாத்தையும் ஈமானையும், எல்லையில்லாத ஆகாரங்களை வேண்டி நிற்கின்ற ஓர் ஆத்மார்த்தமான இறைப்பையாக ஆக்கி, அதற்கான அருள் விரிப்பை வஸ்துக்களுடைய எல்லைக்கப்பாலும் விஸ்தரித்து, இறை நாமங்களையும் உள்ளடக்கியதாக ஆக்கி வைத்திருக்கின்றான். ஆம், ஈமான், இஸ்லாம் என்ற அந்த இறைப்பையின் மூலமாக ரஹ்மான் நாமத்தையும் ஹகீம் நாமத்தையும் பேரின்பத்தோடு அனுபவிக்க முடியும். “அல்ஹம்துலில்லாஹி அலா ரஹ்மானிய்யதிஹி வஅலா ஹகீமிய்யதிஹீ” என்று இன்னும் ஏராளாமான நாமங்களை வைத்து நன்றி செலுத்துவான். இந்த ஆத்மார்த்தமான மிகப் பெரும் இறைப்பையின் மூலமாக எண்ணற்ற இறை அருட்கொடைகளிலிருந்து பயன்பெற்றுக்கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக அந்த இறைப்பையிலிருக்கும் இறை காதல் என்ற இன்பத்திற்கு இன்னுமொரு விசாலமான எல்லை இருக்கின்றது. இதோ, ஹய்யுல் கய்யூம் ஆகிய அல்லாஹ், மனிதனை முழுப் பிரபஞ்சத்திற்குமான ஒரு மத்தியமாகவும் அதற்கான ஒரு காரணியாகவும் ஆக்கி, பிரபஞ்சத்தின் அளவு பிரமாண்டமான ஓர் அருள் விரிப்பை அவனுக்காகத் தயார்படுத்தி, பிரபஞ்சத்தை அவனது சேவகனாகவும் ஆக்கி வைத்துள்ளான். அனைத்துக்கும் மேலால் ஒரு வகையில் இந்தப் பிரபஞ்சமே கய்யூமியத் தாத்பரியத்தால் நிலைத்து நிற்பதற்கு ஒரு வகையில் மனிதனைக் காரணியாக ஆக்கி வைத்துள்ளான். மனிதனுடைய இந்த அந்தஸ்துக்குப் பின்னாலுள்ள ஞானமானது மனிதனுடைய மூன்று முக்கிய பணிகளாகும். முதலாவது: பிரபஞ்சமெங்கும் பரவியுள்ள அத்தனை வகையான அருட்கொடைகளும் மனிதனை அடிப்படையாக வைத்து ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. மனிதனுக்குப் பயனளிக்கும் விதமாக ஒவ்வொரு வகையான அருட்கொடைகளும் தஸ்பீஹ் மணிகளைப் போன்று கோர்க்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டு அதன் முனைகள் மனிதனோடு பிணைக்கப்பட்டுள்ளன. ரஹ்மத் கருவூலங்களில் காணப்படுகின்ற அத்தனை வகைகளுக்குமான ஒரு தரவுப் புத்தகமாக மனிதனை ஆக்கி வைத்துள்ளான். இரண்டாவது பணி: மனிதன் தன்னிடமுள்ள அகிலார்ந்த ஆற்றல் மூலமாக, ஹய்யுல் கய்யூம் ஆகிய அல்லாஹ் பிரஸ்தாபிக்கின்ற விடயங்களை கிரகித்துக்கொள்பவர்களுள் மிகச் சங்கையானவனாக இருப்பதால் அந்தப் பணியை அங்க சம்பூரணமாகச் செய்வதும், அவனது ஆச்சரியப்பட்டத்தக்க வடிவமைப்புக்களின் பெறுமதியை உணர்ந்து வாழ்த்துவதன் மூலம் அவற்றுக்கான மிகச் சிறந்த அத்தாட்சியாளர்களாக இருப்பதும், பிரக்ஞைபூர்வமான நன்றியுணர்வை வெளிப்படுத்துவதன் மூலமாக நன்றியின் அத்தனை வகைகளையும்கொண்டு, அத்தனை வகையான அருட்கொடைகளுக்காகவும் நன்றியும் புகழும் செலுத்துவதுமாகும். மூன்றாவது பணி: இந்தப் பணியானது, தனது வாழ்க்கையின் மூலமாக மூன்று கோனங்களில் ஹய்யுல் கய்யூம் ஆகிய அல்லாஹ்வுக்கும், அவனுடைய நிலைமைகளுக்கும், அவனது அகிலார்ந்த ஸிபாத்துகளுக்குமான பிரதிபலிப்பிடமாகக் கடமையாற்றுவதாகும். முதலாவது கோனம்: மனிதன் தன்னிடமுள்ள முத்லக்கான இயலாமையை வைத்து, தனது படைப்பாளனுடைய முத்லக்கான குத்ரத்தையும் ஆற்றலையும் அதன் அந்தஸ்த்து எத்தகையது என்பதையும் உணர்ந்துகொள்வதாகும். அதாவது இயலாமையின் படித்தரங்களை வைத்து குத்ரத்துடைய அந்தஸ்துக்களை விளங்கிக்கொள்வதாகும். அத்தோடு தன்னிடமுள்ள முத்லக்கான வறுமையை வைத்து அவனது ரஹ்மத்தையும் ரஹ்மத்துடைய அந்தஸ்துக்களையும், தனது முத்லக்கான பலவீனத்தை வைத்து அவனது பலத்தையும் புரிந்துகொள்வதாகும். அதாவது தன்னிடமுள்ள குறைபாடான ஸிபாத்துக்களைக்கொண்டு ஒரு வகையான ஒப்பீட்டின் மூலமாக தனது படைப்பாளனுடைய பரிபூரணத்துவம் வாய்ந்த ஸிபாத்துக்களுக்கான கண்ணாடியாக இருப்பதாகும். இரவில் ஒளிர்கின்ர ஒளி மிகப் பிரகாசமானதாக இருப்பதை வைத்துப் பார்க்கும் போது, இரவின் கும்மிருட்டு ஒளி விளக்குகளைக் காட்டுவதற்கான மிகவும் அங்கசம்பூரணமான ஒரு கண்ணாடியாக இருப்பதைப் போன்றே, மனிதனும் கூட இவ்வாறான குறைபாடான ஸிபாத்துக்கள் மூலமாக அல்லாஹ்வுடைய பரிபூரணத்துவத்தைக் காட்டுகின்ற கண்ணாடிகளாக இருக்கும். இரண்டாவது கோணம்: மனிதன், தனது அற்பமான தெரிவுச் சுதந்திரத்தின் மூலமாகவும், சொட்பமான அறிவின் மூலமாகவும், சொட்பமான பலத்தின் மூலமாகவும், வெறுமனே புலப்பாட்டு ரீதியான ஓர் எஜமானத்துவத்திலிருந்தும், தனது வீட்டைத் தானே நிர்மாணித்துக்கொள்வதன் மூலமாகவும், இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளனுடைய எஜமானத்துவத்தையும், அவனது வடிவமைப்புக்களின் அந்தஸ்த்தையும், அவனது நாட்டத்தையும் வல்லமையையும் அறிவு ஞானத்தையும் இந்தப் பிரமாண்டமான பிரபஞ்சத்தை வைத்து விளங்கிக்கொள்வான். இந்த வகையிலும் மனிதன் ஒரு கண்ணாடியாக இருக்கின்றான். மூன்றாவது கோணம்: இதிலும் இரண்டு முகங்கள் காணப்படுகின்றன. முதலாவது, அல்லாஹ்வின் திரு நாமங்களுடைய வெவ்வேறான வெளிப்பாடுகளைத் தன்னில் வெளிப்படுத்திக் காட்சிப்படுத்துவதாகும். உண்மையில் மனிதன் தன்னில் பொதிந்துள்ள அகிலார்ந்த தன்மையின் காரணமாக, பிரபஞ்சத்துடைய சுருக்கமான ஓர் உள்ளடக்கம் அல்லது சிறிய ஒரு மாதிரி என்ற அந்தஸ்த்தில் இருப்பதால் பிரபஞ்சத்தில் பிரதிபலிக்கின்ற ஒட்டுமொத்த நாமங்களின் பிரதிபலிப்புக்களையும் தொழிற்பாடுகளையும் அவனில் பார்க்கலாம். இரண்டாவது முகமானது, மனிதன் “இறை நிலைமைகளுக்கான” பிரதிபலிப்பிடமாக இருக்கின்ற விடயமாகும். அதாவது மனிதன் தனது வாழ்வின் மூலமாக ஹய்யுல் கய்யூம் ஆகிய இரட்சகனுடைய வாழ்வுக்குச் சான்றுபகன்றுகொண்டிருப்பதைப் போன்றே, தனது வாழ்வின் போது புலப்பட்டு படிப்படியாக வளர்ச்சியடைகின்ற கேட்டல், பார்த்தல் போன்ற உணர்வுகளின் மூலமாக ஹய்யுல் கய்யூம் ஆகிய ஏக இரட்சகனுடைய “ஸமீஃ” (அனைத்தையும் கேட்பவன்), “பஸீர்” (அனைத்தையும் பார்ப்பவன்) போன்ற நாமங்களுக்கான பிரதிபலிப்பிடமாக இருக்கின்றான். இவ்வாறு பிறதிபலிப்பதன் மூலம் இரட்சகனின் பன்புகளை அறிமுகப்படுத்துகின்றான். மாத்திரமன்றி மனிதனுடைய வாழ்வில், புலனாகி வளர்ச்சியடையாமல் வெறுமனே உணர்ச்சிகளாக மட்டும் இருந்துகொண்டு, சதாவும் அதிகமதிகம் வெளிப்படுகின்ற மிகவும் துல்லியமான வாழ்வோடு சம்பந்தப்பட்ட உணர்வுகளும் உணர்ச்சிகளும் அர்த்தங்களும் காணப்படுகின்றன. இவற்றின் மூலமாகவும் மனிதன், ஹய்யுல் கய்யூமுடைய புனிதமான, பரிசுத்தத் தன்மைவாய்ந்த நிலைமைகளைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றான். உதாரணமாக இவ்வறான மனித உணர்வுகளுக்குள் காணப்படுகின்ற, நேசித்தல், பெருமிதம்கொள்ளுதல், பொருந்திக்கொள்ளுதல், மகிழ்ச்சியும் ஆணந்தமுமடைதல், திருப்தியும் சுகமும் காணுதல் போன்ற வாழ்வோடு பிணைந்துள்ள அர்த்தங்கள் மூலமாக –இரட்சகனுடைய புனிதத் தன்மைக்கும் பரிசுத்தத் தன்மைக்கும் அவனுடைய முத்லக்கான செல்வத்துக்கும் ஏற்றமான, சங்கையான அமைப்பிலுள்ள- இந்த வகையைச் சேர்ந்த இறை நிலைமைகளுக்கான பிரதிபலிப்பிடமாகவும் மனிதன் இருக்கின்றான். ஆம், மனிதனிடமுள்ள அகிலார்ந்த தன்மைகொண்ட வாழ்வானது, மகத்துவமிக்க இரட்சகனுடைய பன்புகளையும் இறை நிலைமைகளையும் அறிந்துகொள்வதற்கான ஒரு கருவியாகவும், அவனுடைய திருநாமங்களின் பிரதிபலிப்புக்களுக்கான மிகவும் சுருக்கமான உள்ளடக்கமாகவும் பிரக்ஞையுள்ள ஒரு பிரதிபலிப்பிடமாகவும் இருக்கின்றது. இவற்றுக்கு அப்பாலும் இன்னும் பல கோனங்களில் ஹய்யுல் கய்யூம் ஆகிய ஏக இரட்சகனுக்குச் சான்றுபகன்று கொண்டிருக்கின்றான். அவ்வாறே மனிதன், இந்தப் பிரபஞ்சத்தில் பொதிந்திருக்கின்ற சத்தியங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான ஓர் அளவையாகவும், நிறுவையாகவும், பிரபஞ்ச சத்தியங்களுக்கான சுருக்கமான ஒரு மாதிரியாகவும் இருக்கின்றான். உதாரணமாக பிரபஞ்சத்தில் அல்லாஹ்வால் ஏற்படுத்தி வைக்கப்பட்ட லவ்ஹுல் மஹ்ஃபூழுக்கான மிகவும் உறுதியான அத்தாட்சியும் மாதிரியும், மனிதனிடம் காணப்படுகின்ற மனன சக்தியாகும். அவ்வாறே ஆலமுல் மிஸாலுக்கான மிகவும் உறுதியான அத்தாட்சியும் மாதிரியும் மனிதனிடம் காணப்படுகின்ற கற்பனா சக்தியாகும். அவ்வாறே பிரபஞ்சத்திலிருக்கின்ற ரூஹானிய படைப்புக்களின் இருப்புக்கான ஓர் ஆதாரம், மனிதனிடம் காணப்படுகின்ற ஆற்றல்களும் உணர்ச்சிகளுமாகும். இதை இவ்வாறு நீட்டிக்கொண்டே செல்லலாம். இவ்வாறு மனிதன் சிறியதோர் அளவையாக அல்லது மாதிரியாக இருந்துகொண்டு பிரபஞ்சத்திலிருக்கின்ற ஈமானிய சத்தியங்களை கண்களுக்குக் காண்பதைப் போன்று பறைசாற்ற முடியும். இதோ மேற்கூறப்பட்ட மனிதனுடைய பணிகளைப் போன்றே இன்னும் ஏராளமான முக்கியத்துவம் வாய்ந்த பணிகளும் அவன் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. அவன் நித்திய அழகனுடைய நித்தியமான அழகிற்கான ஒரு கண்ணாடியாக இருக்கின்றான். அவனது என்றும் நிலையான பரிபூரணத்துவத்தைப் பறைசாற்றி அரைகூவல் விடுப்பவனாகவும் மனிதன் இருக்கின்றான். மேலும் அவனது நித்தியமான ரஹ்மத்தின்பால் தேவையுடையவனாகவும் அதற்காக நன்றி செலுத்துபவனாகவும் அந்த மனிதன் இருக்கின்றான். உண்மையிலேயே அவனது அழகும் பரிபூரணத்துவமும் ரஹ்மத்தும் நிலையானதும் நித்தியமானதுமாகும். எனவே நிச்சயமாக அந்த நித்திய அழகின் மீது தீராத விருப்பம் கொண்ட கண்ணாடியாகவும், அந்த நிலையான பரிபூரணத்துவத்தின் மீது அளவில்லாக் காதல்கொண்ட அறிவிப்பாளனாகவும், அந்த நித்தியமான ரஹ்மத்தின்பால் எல்லையில்லாத தேவைகொண்ட நன்றியாளனாகவும் இருக்கின்ற மனிதனும் கூட நிரந்தரமாக வாழ்வதற்காக, ஒரு நித்தியமான உலகத்துக்குள் நுழைந்து அந்த நித்தியங்களோடு சங்கமமாகிவிடுவான். ஆம், மனிதன், அந்த நித்தியமான அழகோடும் நிலையான பரிபூரணத்துவத்தோடும் நிரந்தரமான ரஹ்மத்தோடும் முடிவில்லாத நித்திய உலகில் சங்கமிப்பது அவசியப்படுகின்றது. ஏனெனில், நித்தியமான ஒரு பேரழகு, தற்காலிகமான ஒரு விருப்பத்தையோ அல்லது அழிந்து போகக் கூடிய ஒரு தோழமையையோ பொருந்திக்கொள்ளாது. ஏனெனில் அழகு எப்போதும் நேசத்துக்குறியதாக இருப்பதால், அந்த அழகுக்குப் பகரமான ஒரு முஹப்பத்தை எப்போதுமே எதிர்பார்க்கும். அழிவையும் பிரிவையும் பொறுத்தவரையில், அவை அந்த இயல்பான முகப்பத்தைக் குரோதமாக மாற்றிவிடும். மனிதனுக்கு நித்திய உலகில் நிரந்தரமான ஒரு வாழ்க்கை இல்லையென்றிருப்பின் அவனது இயல்பில் நிலையான, நித்தியமான பேரழகின் மீதிருக்கின்ற அடிப்படையான முஹப்பத்துக்குப் பதிலாக குரோதமே காணப்பட்டிருக்கும். பத்தாவது வார்த்தையில் வருகின்ற ஓர் அடிக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதைப் போன்று, ஒரு சமயம் ஒரு பேரழகி, தன் மீது காதல்வயப்பட்ட ஒருவனை தனது முன்னிலையிலிருந்து விரட்டியடித்துவிடுகிறாள். அப்போது அந்த மனிதனிடமிருந்த காதல் உடனடியாக வெறுப்பாக மாறிவிடுகின்றது. “எவ்வளவு அசிங்கமானவளாக, அருவருக்கத்தக்கவளாக இருக்கின்றாள்!” என்று கூறி அந்த அழகை நிராகரித்து வெறுத்தொதுக்குகின்றான். இதன் மூலம் அவன் ஆறுதலடைகின்றான். ஆம், மனிதன் அறியாத ஒரு விடயத்துக்கு எதிரியாக இருப்பதைப் போன்றே, ஒன்றை அடைந்துகொள்ள முடியாத போது குரோத மனப்பான்மையுடன் அதிலுள்ள குறைகளைத் தேடி விரோதத்தை வளர்ப்பான். உண்மை நேசத்துக்குறியவனும் முத்லக்கான அழகுக்குறியவனுமாகிய அல்லாஹ், தனது அத்தனை அழகிய திருநாமங்களையும் கொண்டு மனிதர்களுக்குத் தன்னை நேசிக்கச் செய்கின்றான். மனிதர்கள் தன்னை நேசிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றான். உண்மையில் முழுப் பிரபஞ்சமுமே இந்த உண்மைக்கான அத்தாட்சியாக இருக்கின்றது. இவ்வாறிருக்கும் போது அந்த வல்லோன், தனது நேசனாகவும் தனக்கு நேசத்துக்குறியவனாகவும் இருக்கின்ற மனிதனின் உள்ளத்தினுள் இயல்பான ஒரு குரோதத்தை ஏற்படுத்தி ஆழ் மனதால் தன்னை வெறுப்பதற்கு வழி சமைக்க மாட்டான். அதாவது இயல்பிலேயே அதிக நேசத்துக்கும் காதலுக்கும் பற்றுக்குமாகப் படைக்கப்பட்ட மிகவும் தனித்துவமான படைப்பாகிய மனிதனுக்கு, அவனது இயல்புக்கு முற்றிலும் முரணான அமைப்பில் ஆத்மார்த்தமான ஒரு வெறுப்பையும் குரோதத்தையும் அவனது உள்ளத்தில் ஏற்படுத்தியிருக்க மாட்டான். ஏனெனில் மனிதன், தான் ஆழமாக நேசித்துப் பாராட்டுகின்ற ஒரு முத்லக்கான அழகைவிட்டும் பிரிவதால் ஏற்படுகின்ற ஆழமான காயத்தை, அந்த அழகை வெறுத்தொதுக்குவதன் மூலமும் அதன் மீது குரோதத்தை வளர்ப்பதன் மூலமும் அதை நிராகரிப்பதன் மூலமும் மாத்திரமே ஆற்றுப்படுத்த முடியும். இதோ காபிர்கள் அல்லாஹ்வின் மீது குரோதத்தைக் கக்குவது இந்த இடத்திலிருந்தே ஆரம்பமாகின்றது. அவ்வாறெனில், நித்தியமான அழகுக்குறியவன், தன்னைக் காதலிக்கின்ற கண்ணாடியாகிய மனிதனை முடிவில்லாத நித்தியமான ஒரு பயணத்தில் தன்னோடு வைத்திருப்பதற்காக, நிச்சயமாக அவனுக்கு நிரந்தரமான ஓர் உலகத்தில் நிரந்தரமான ஒரு வாழ்வை அளிப்பான். ஆம், உண்மையிலேயே மனிதன் இயல்பிலேயே ஒரு நித்திய அழகின் மீது தாகமும் மோகமும் காதலும் கொள்ளத்தக்க ஓர் அமைப்பில் படைக்கப்பட்டுள்ளான். மேலும் உண்மையிலேயே நித்தியமான ஓர் அழகு தற்காலிகமான ஒரு காதலைப் பொருந்திக்கொள்ளாது. அவ்வாறே மனிதனும் கூட அறியாத அல்லது அடைந்துகொள்ள முடியாத ஒன்றிலிருந்து பிறக்கின்ற துக்கத்திலும் கைசேதத்திலும் இருந்து, அதன் குறைகளைத் தேடுவதன் மூலமும் அதன் மீது உள்ளார்ந்த வெறுப்பை வளர்ப்பதன் மூலமுமே ஆறுதல் தேடுவான். மேலும் எந்தவித சந்தேகமுமின்றி இந்தப் பிரபஞ்சம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டுள்ள அதே வேளை மனிதனோ மாஃரிஃபதுல்லாஹ் மற்றும் முஹப்பதுல்லாஹ் என்பவற்றுக்காகவே படைக்கப்பட்டுள்ளான். அனைத்துக்கும் மேலால் இந்தப் பிரபஞ்சத்துடைய படைப்பாளன் அவனது அத்தனை நாமங்களுடனும் நிலைத்தவனாகவும் நிலையானவனாகவும் இருக்கின்றான். மாத்திரமன்றி அவனது அந்த நாமங்களின் பிரதிபலிப்புக்களும் கூட நிலையானவையாகவும் நித்தியமானவையாகவுமே இருக்கப் போகின்றன. எனவே நிச்சயமாகவும் சத்தியமாகவும் மனிதன் ஒரு நித்திய உலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு முடிவில்லாத நித்தியமான ஒரு வாழ்வுக்குப் பாத்திரமானவனாக ஆகுவான். மேலும், மனிதனுடைய பெறுமதி என்ன எப்பதையும் அவனது பணிகளையும் அவனது மகத்துவத்தையும் எமக்கு அறிவிக்கின்ற சங்கையான வழிகாட்டியாகாட்டியும் பரிபூரணமான மனிதப் புனிதராகவும் இருக்கின்ற முஹம்மதே அரபி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், நாம் மேலே குறிப்பிட்ட மனிதனுடைய அத்தனை பணிகளையும் பரிபூரணத்துவங்களையும் தன்னிலும் தனது மார்க்கத்திலும் வெளிப்படுத்திக் காட்டினார்கள். இது எதைக் காட்டுகின்றது எனில், எவ்வாறு பிரபஞ்சம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டுள்ளதோ, அதாவது எவ்வாறு பிரபஞ்சம் படைக்கப்பட்டதன் நோக்கமாக மனிதன் இருக்கின்றானோ, அதாவது எவ்வாறு பிரபஞ்சத்தில் தெரிவு செய்யப்பட்டவனாக மனிதன் இருக்கின்றானோ, அவ்வாறே மனித குலத்தின் மிகப் பெரிய நோக்கமாகவும், மனித குலத்தில் தெரிவுசெய்யப்பட்டவர்களுள் மிகச் சங்கைக்குறியவராகவும், அஹதியத்தையும் ஸமதியத்தையும் பிரதிபலிக்கின்ற மிகப் பிரகாசமான கண்ணாடியாகவும் இருப்பவர், எந்த வித சந்தேகமுமின்ற அஹ்மதே முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஆவார்கள். عَلَي۟هِ وَ عَلٰى اٰلِهِ الصَّلَاةُ وَ السَّلَامُ بِعَدَدِ حَسَنَاتِ اُمَّتِهٖ يَا اَللّٰهُ يَا رَح۟مٰنُ يَا رَحٖيمُ يَا فَر۟دُ يَا حَىُّ يَا قَيُّومُ يَا حَكَمُ يَا عَد۟لُ يَا قُدُّوسُ نَس۟ئَلُكَ بِحَقِّ فُر۟قَانِكَ ال۟حَكٖيمِ وَ بِحُر۟مَةِ حَبٖيبِكَ ال۟اَك۟رَمِ وَ بِحَقِّ اَس۟مَائِكَ ال۟حُس۟نٰى وَ بِحُر۟مَةِ اِس۟مِكَ ال۟اَع۟ظَمِ اِح۟فَظ۟نَا مِن۟ شَرِّ النَّف۟سِ وَ الشَّي۟طَانِ وَ مِن۟ شَرِّ ال۟جِنِّ وَ ال۟اِن۟سَانِ اٰمٖينَ سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ

