Mektubat

The Twenty-Fourth Letter

ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ يَف۟عَلُ اللّٰهُ مَا يَشَٓاءُ ۝ وَ يَح۟كُمُ مَا يُرٖيدُ கேள்வி: இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படும் பாசத்தாலும் ஆதரவாலும் சூழப்பட்ட பரிபாலிப்பு, பயிற்றுவிப்பு என்பவற்றுக்கும் பயன்மிக்க ஏற்பாடுகளுக்கும் காதல்மயமான ஈகைகளுக்கும் காரணமாக உள்ள ரஹீம், ஹகீம், வதூத் போன்ற அல்லாஹ்வின் மிக ஏற்றமான திரு நாமங்கள் மரணம், அழிவு, முடிவு, பிரிவு, துக்கம், துயரம், இன்னல்கள், அனர்த்தங்கள் போன்ற மிகக் கொடிய, மிகக் கவலைக்கிடமான விடயங்களுடன் ஏன், எவ்வாறு சமரசமாக முடியும்? மனிதனின் நித்திய நிம்மதியான ஒரு வாழ்வை நோக்கிய பயணத்தில் மரணத்தின் வாயிலைக் கடந்து செல்ல வேண்டியதாக இருப்பதால் அதை ஒரு நல்ல விடயமாகக் கடந்து செல்வோம். ஆனால் மிக அழகிய, மிக ரம்மியமான உயிர்களாகத் திகழும் மரம், செடி, கொடிகள், பூக்கள், கனிகள் போன்ற தாவர இனங்களும் வாழ்வைக் காதலித்து, நித்தியத்தை மோகம் கொள்கின்ற, இருப்புக்கு மிகவுமே தகுதியான விலங்கினங்களும் வருகின்ற அதே வேகத்தில் கண் மூடித் திறப்பதற்குள் அழிக்கப்படுகின்றன. எந்த ஒன்றும் விட்டுவைக்கப்படுவதில்லை. அந்தக் குறுகிய காலத்துக்குள் அவற்றிடம் ஓய்வின்றி தொடர்ந்தேர்ச்சையாக வேலை வாங்கப்படுகின்றது. எந்த ஒன்றும் சௌகரியமாக இருக்க முடியாத அளவு அவற்றின் மீது முஸீபத்கள் சாட்டப்படுகின்றன. அந்த முஸீபத்கள் மூலம் மாற்றங்களுக்கு உற்படுத்தப்படுகின்றன. இறுதியில் எந்த விதிவிலக்குமின்றி அனைத்தும் மரணித்துச் செல்கின்றன; கொலை செய்யப்படுகின்றன. எந்த ஒன்றும் ஆத்ம திருப்தியின்றி இந்த உலகைவிட்டும் பிரிந்து செல்கின்றன. இவற்றுள் எந்த இடத்தில் அன்பும் கருணையும் இருக்கின்றன? இவற்றிலுள்ள ஞானமும் பயன்களும் என்ன? இவற்றுக்குள் ஈகைக்கும் அருளுக்கும் எங்கே இடமிருக்கின்றன? பதில்: இந்தக் கேள்வியிலுள்ள சிக்கலைத் தீர்க்கின்ற மிக விசாலமான, மிக ஆழமான, மிக உயர்வான, மிக உன்னதமான சத்தியத்தை அதற்கான நீதியையும் நியாயத்தையும் காண்பிக்கின்ற ஐந்து குறிப்புகள் மூலமும் அதன் நோக்கங்கள் பயன்களைக் காட்டும் ஐந்து குறிப்புகள் மூலமும் காண்பிக்க முயற்சிக்கிறோம்:

§2

ஐந்து குறிப்புகளைக் கொண்டது

§3

இருபத்தி ஆறாவது வார்த்தையின் இறுதியில் கூறப்பட்டுள்ளதைப் போன்று ஒரு தேர்ச்சி மிக்க கலைஞன் ஏழையான ஒரு மனிதனை அவனது தகுதிக்கேற்ற ஒரு கூலிக்குப் பகரமாக ஒரு மாடலாகத் தெரிவு செய்கிறார். அற்புத கலையம்சங்கள் பொதியப்பெற்ற அழகிய ஓர் ஆடையை வடிவமைக்கின்ற அவர் தனது கலை ஞானத்தின் உச்சத்தையும் தேர்ச்சியையும் அதில் முழுமையாகப் பிரதிபலிக்கச் செய்வதற்காக அதை அந்த ஏழைக்கு அணிவித்து கூட்டல் குறைத்தல்களையும் வெட்டுக்கள் ஒட்டுக்களையும் செய்கிறார். அவனை அமர்த்தியும் நிமிர்த்தியும் பொருத்தம் பார்க்கிறார். அவனுக்கும் அந்த ஆடைக்கும் பல்வேறு நிலைமைகளை வழங்கி ஒத்திகை பார்கிறார். இப்போது “எனக்கு அழகைத் தருகின்ற இந்த ஆடையை அசிங்கப்படுத்திவிட்டீர், அமர்த்தியும் நிமிர்த்தியும் என்னைத் தொந்தரவு செய்கிறீர்" என்று அந்தக் கலைஞனை முறையிடுவதற்கு அந்த ஏழைக்கு உரிமை இருக்கின்றதா? அவ்வாறே, மாட்சிமைமிக்க படைப்பாளன் தனது அழகிய திருநாமங்களின் அழகிய கலையம்சங்களையும் அவற்றின் சிறப்புகளையும் பூரணத்துவத்தையும் காண்பிப்பதற்காக ஒவ்வொரு இனத்துடைய இயல்புகள், தன்மைகளுக்கும் ஒவ்வொரு மாதிரி அல்லது மாடலுடைய நிலையை வழங்கி, ஒவ்வொரு வஸ்துக்கும், குறிப்பாக ஒவ்வொரு ஜீவனுக்கும் உணர்ச்சிகள் உணர்வுகளால் அலங்கரிக்கப்பட்ட உடல் என்ற ஆடையை அணிவித்து, அந்த ஆடைகள் மீது கழா மற்றும் கத்ருடைய பேனாவால் கூட்டல்கள், குறைத்தல்கள் மூலம் பல்வேறு அலங்காரங்களைச் செய்து தனது திருநாமங்களின் பிரதிபலிப்புகளைக் காண்பிக்கிறான். மாத்திரமன்றி ஒவ்வொரு படைப்புக்கும் அதற்குத் தகுதியான வகையில் தகுதியான ஓர் ஊதியத்தை இன்பமாகவும் அழகிய உணர்வுகளாகவும் ஆத்மீகப் பிரவாகங்களாகவும் வழங்குகின்றான். இப்போது, مَالِكُ الْمُلْكِ يَتَصَرَّفُ فِى مُلْكِهِ كَيْفَ يَشَاءُ என்ற அதிகாரத்தை உடைய மாட்சிமைமிக்க படைப்பாளனைப் பார்த்து “எனக்கு நோவினை தருகின்றாய். எனது நிம்மதியைக் குழைக்கின்றாய்” என்று கூறுவதற்கான உரிமை எந்த ஒன்றுக்காவது இருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆம், எந்த ஒரு வஸ்துக்கும் எந்த ஒரு வகையிலும் வாஜிபுல் வுஜூத் ஆகிய அல்லாஹ்வுக்கெதிராக உரிமை கோர முடியாது. மாறாக ஏதாவது ஓர் உரிமை உள்ளதென்றால் அது என்றும் எப்போதும் நன்றியும் புகழும் செலுத்துவதும் தமக்கு வழங்கப்பட்டுள்ள இருப்பின் படிநிலைக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதுமாகும். ஏனெனில் வழங்கப்பட்டுள்ள இருப்பின் அத்தனை படிநிலைகளும் நிகழ்வுகளாகும். நிகழ்வுகள் ஓர் இல்லத்தை அதாவது மூல காரணியை வேண்டி நிற்கின்றன. வழங்கப்படாத படிநிலைகளைப் பொருத்தவரை அவை அனைத்தும் சாத்தியக்கூறுகளாகும். சாத்தியக்கூறுகள் என்பது இல்லாமையாகவும் முடிவற்றவையாகவுமே இருக்கும். இல்லாமைகள் இல்லத்தை வேண்டி நிற்பதில்லை. முடிவற்ற விடயங்களுக்கு மூல காரணி இருக்கவும் முடியாது. உதாரணமாக கனிப் பொருட்கள் “ஏன் நாம் தவரங்களாக இல்லை?” என்று உரிமை கோரும் விதமாக முறையிட முடியாது. மாறாக அவற்றின் மீதுள்ள உரிமையும் கடமையும் கனிம இருப்பைப் பெற்றமைக்கான நன்றியாகும். தாவரங்கள் தாம் விலங்குககளாக இல்லையே என்று முறையிட முடியாது. மாறாக அவற்றின் மீதுள்ள உரிமையும் கடமையும் இருப்போடு கூடவே வாழ்வையும் பெற்றமைக்கான நன்றியாகும். மிருகங்கள் “நாம் ஏன் மனிதர்களாக இல்லை?” என்று முறையிட முடியாது. மாறாக இருப்பு, வாழ்வு என்பவற்றுடன் ஒரு வகை ரூஹையும் பெற்றிருப்பதால் அதன் மீதுள்ள உரிமையும் கடமையும் கூட நன்றியாகும். இவ்வாறு அனைத்தையும் ஒப்பீடு செய்யுங்கள்.. முறைப்படும் மனிதனே! நீ இல்லாமையில் தரிக்கவில்லை, இருப்பு என்ற அருளை அணிந்து வாழ்வைச் சுவைக்கிறாய், சடமாகவோ மிருகமாகவோ கூட ஆக்கப்படவில்லை. இஸ்லாம் என்ற அருளைப் பெற்றுள்ளாய், வழிகேட்டிலும் தங்கவில்லை. சுகமும் நிம்மதியும் பெற்று வாழ்கிறாய்.. இன்னும் எத்தனை எத்தனை? நன்றிகெட்ட மனிதனே! அத்தனை அருட்கொடைகளுக்கும் ஊற்றாக இருக்கத்தக்க வகையில் சத்திய இரட்சகனால் உனக்கருளப்பட்ட இருப்பின் இத்தனை அந்தஸ்துகளுக்கும் பகரமாக, நீ நன்றி செலுத்த வேண்டிய கடமைப்பாட்டில் இருக்கும் போது உனது கைக்கெட்டாத இல்லாமை சார்ந்த சாத்தியக்கூறுகளுக்காகவும் உனது தகுதிக்கு அப்பாற்பட்ட சில உயர்வான அருட்கொடைகள் உனக்குக் கிடைக்கவில்லை என்பதற்காகவும் முறையற்ற ஒரு பேராசையோடு சத்திய இரட்சகனை முறையிடுவதற்கும் ஏலவே வழங்கப்பட்ட அருட்கொடைகளை அவமதிப்பதற்கும் எங்கிருந்து உரிமையைப் பெற்றுக்கொள்கிறாய்? ஒரு மனிதன் ஒரு மினாராவின் அல்லது ஒரு கோபுரத்தின் உச்சத்தை எட்டுவது போன்ற உயர்வான ஓர் அந்தஸ்தையும் பதவியையும் அடைகிறான். அந்த உச்சத்தை நோக்கிய ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு மகத்தான அருட்கொடை அவனுக்கு வழங்கப்படுகின்றது. பின்னர் அவனுக்கு அவ்வாறு அருள்பாலித்தவனுக்கு நன்றி செலுத்தாமல் “இந்தக் கோபுரத்தைவிட ஊயரமாகச் செல்ல முடியாதுள்ளதே, ஏன் இந்தக் கோபுரம் இன்னும் உயரமானதாக இல்லை!” என்றெல்லாம் அழுது புலம்பி முறையிட ஆரம்பிக்கிறான். இது எவ்வளவு பெரிய முறைகேடும் நன்றி கெட்ட தனமும் புத்தி பேதலித்த நிலையும் என்பதைப் புத்தி பேதலித்தவர்களும் கூடப் புரிந்துகொள்வார்கள். பேராசையும் வீண்விரயமும் பொடுபோக்கும் நியாயமற்ற குற்றச்சாட்டுகள், முறைப்பாடுகளையும் உடைய சிக்கனமோ மனத் திருப்தியோ அற்ற மனிதனே! திட்டமாக அறிந்துகொள்! மனத் திருப்தி என்பது இலாபகரமான ஒரு முதலீடும் நன்றியின் செயல் வடிவமுமாகும். பேராசை என்பது நஷ்டகரமானதும் வங்குரோத்தும் நன்றிகெட்ட நிலையுமாகும். மேலும் சிக்கனம் என்பது அருட்கொடைகளுக்குச் செலுத்துகின்ற அழகிய, பயன்மிக்க ஒரு மரியாதையுமாகும். வீண்விரயமோ அருள்களுக்குச் செய்கின்ற அசிங்கமான, அருவருக்கத்தக்க ஓர் அவமரியாதையாகும். நீ புத்தியுள்ளவனாக இருந்தால் மனத் திருப்தியோடு ஏற்றுக்கொள்வதற்குப் பழகிக்கொள். சகித்துக்கொள்வது கடினமாக இருந்தால் “யா ஸபூர்” என்று கூறிப் பொறுமையை வேண்டு. முறைப்படாமல் உனது பங்கைப் பொருந்திக்கொள். யாரிடம் யாராரைப் பற்றி முறைப்பட்டுக்கொள்வது என்பதை முதலில் அறிந்துகொள். அப்படியே முறைப்பட்டுக்கொள்ள வேண்டுமாயின் உனது நஃப்ஸை சத்திய இரட்சகனிடம் முறையிடு. ஏனெனில் குற்றங்களும் குறைகளும் அங்குதான் உள்ளன.

§4

பதினெட்டாவது கடிதத்தின் இறுதிப் பகுதியில் கூறப்பட்டுள்ளதைப் போன்று மாட்சிமைமிக்க படைப்பாளன் தனது அகிலார்ந்த பரிபாலிப்பின் கீழ் மிகுந்த வியப்பையும் மிரட்சியையும் ஏற்படுத்துகின்ற மகத்தான செயற்பாடுகள் மூலம் தொடர்ந்தேர்ச்சையான மாற்றங்களையும் புதுப்பித்தல்களையும் ஏற்படுத்துவதற்குப் பின்னாலுள்ள ஒரு தாத்பரியம் இதுவாகும்: ஆம், வஸ்துகளுக்கு மத்தியிலுள்ள இயக்கங்கள், செயற்பாடுகளில் ஒரு தாகமும் மோகமும் வேட்கையும் இன்பமும் காதலும் இருப்பதைப் பார்க்கிறோம். ஒரு வகையில் சிறியது முதல் பெரியது வரை ஒவ்வோர் இயக்கத்திலும் ஏதோ ஒரு வகையான ஓர் இன்பம் உள்ளது என்று கூற முடியும். அல்லது ஒவ்வொரு இயக்கமும் ஒரு வகையான இன்பமாகும் என்றும் கூற முடியும். மேலும் அந்த இன்பமும் கூட ஏதோ ஒரு பூரணத்துவத்தை நோக்கிய ஒன்றாக அல்லது பூரணத்துவத்தை நோக்கி வழிநடாத்தும் ஒன்றாகவே உள்ளது. அல்லது அதுவே ஒரு வகைப் பூரணத்துவம் என்றும் கூற முடியும். ஆம், இயக்கம் என்பது பூரணத்துவத்தையும் இன்பத்தையும் அழகையும் காண்பிக்கின்ற ஒரு தடயமாகும். மேலும் முத்லக்கான பூரணத்துவத்தை உடைய வாஜிபுல் வுஜூத் அவனது இருப்பு, தாத், பண்புகள், செயற்பாடுகளில் எல்லா வகையான பூரணத்துவங்களையும் உடையவனாவான். எனவே நிச்சயமாக வாஜிபுல் வுஜூத் ஆகிய சத்திய நித்தியனின் வாஜிபான இருப்புக்குக்கும் அவனது புனிதத்துவத்துக்கும் நிறைவான செல்வத்துக்கும் முத்லக்கான தன்னிறைவுக்கும் முத்லக்கான பூரணத்துவத்துக்கும் அவனது தாத்தின் நிர்த்தோஷமான நிலைக்கும் பொருத்தமான ஓர் அமைப்பில் எல்லையற்ற புனிதமான ஒரு பாசமும் தூய்மையான ஒரு மஹப்பத்தும் நிச்சயமாக இருக்கும். அவ்வாறே நிச்சயமாக அந்தப் புனிதமான பாசத்திலிருந்தும் தூய மஹப்பத்திலிருந்தும் உள்ள வரையறையற்ற புனிதமான ஓர் உத்வேகமும் புனிதமான அந்த உத்வேகத்திலிருந்து எல்லையற்ற புனிதமான ஒரு பூரிப்பும் புனிதமான அந்தப் பூரிப்பிலிருந்து -பிரயோகம் பொருத்தமாக இருப்பின்- எல்லையற்ற புனிதமான ஒரு சுவை அல்லது இன்பமும் இருக்கும். மேலும் நிச்சயமாக அந்தப் புனிதமான இன்பத்துடன் கூடவே அவனது எல்லையற்ற ரஹ்மத்தின் அடிப்படையில் நிகழ்கின்ற அவனது வல்லமையின் மகத்தான செயற்பாடுகளுக்கு மத்தியில் எல்லா வகையான திறன்களும் சக்தி நிலையிலிருந்து செயல் நிலையையும் அதனூடாகப் பூரணத்துவ நிலையையும் அடையும் போது அந்த வஸ்துகள் அடைகின்ற மகிழ்ச்சி, திருப்தி, பூரிப்பு, பூரணத்துவம் என்பவற்றிலிருந்து வருகின்ற, அந்த ரஹ்மானுர் ரஹீம் ஆகிய வல்லோனின் தாத்துக்குச் சொந்தமான, -பிரயோகம் பொருத்தமாக இருப்பின்- புனிதமான ஒரு திருப்தியும் புனிதமான ஒரு பெருமிதமும் இருக்கும். ஆக, இந்த முகத்தஸாத்துகளும் புனிதங்களுமே இவ்வாறு முடிவற்ற வடிவங்களில் முடிவற்ற செயற்பாடுகளை வேண்டி நிற்கின்றன. மேலும் அந்த எல்லையற்ற செயற்பாடுகளும் கூட எண்ணற்ற மாற்றங்கள், பேதகங்கள், திரிபுகள், சிதைவுகளையும் அந்த எண்ணற்ற மாற்றங்கள், பேதகங்களும் கூட எண்ணற்ற மரணங்கள், அழிவுகள், பிரிவுகளையும் வேண்டி நிற்கின்றன. ஒரு சமயம், மனித அறிவியலும் விஞ்ஞானமும் வஸ்துகளின் நோக்கங்கள் தொடர்பாகக் காண்பிக்கின்ற பலாபலன்கள் எனது பார்வைக்கு எந்த மதிப்பும் பெறுமதியுமற்றவையாகத் தென்பட்டன. பின்னர் அவை பயனற்று அழிந்து செல்வதே அதற்கான காரணம் என்பதைக் கண்டேன். எனவேதான் மிகவுமே முன்னணியிலுள்ள விஞ்ஞானிகளும் தத்துவ ஞானிகளும் ஒன்றோ இயற்கை என்ற வழிகேட்டில் மூழ்கிச் செல்கின்றனர் அல்லது சோஃபிஸ்டுகளாக மாறுகின்றனர் அல்லது படைப்பாளனின் அறிவையும் நாட்டத்தையும் மறுக்கின்றனர் அல்லது படைப்பாளனுக்கு “அல் மூஜிபு பித்தாத்” (الموجب بالذات) அதாவது “நிர்ப்பந்தமுடையவன்” என்று கூறுவார்கள். இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலேயே அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் உதவியால் ஹகீம் என்ற நாமம் எனது துணைக்கு வந்தது. அந்த நாமம் படைப்பினங்களிளுள்ள மிகப் பெரும் நோக்கங்களையும் தாத்பரியங்களையும் எனக்குக் காண்பித்தது. அதாவது ஒவ்வொரு படைப்பும் பிரக்ஞையுள்ள படைப்புகள் வாசித்துப் பயன் பெறுவதற்கான ஒவ்வொரு மகத்தான ரப்பானியக் கடிதமாகும் என்ற பேருண்மையைக் கண்டேன். வஸ்துகளின் படைப்பிலுள்ள இந்த நோக்கம் ஒரு வருடமளவு எனக்குப் போதியதாகவும் திருப்திகரமாகவும் அமைந்தது. பின்னர் அவற்றின் வடிவமைப்புகளிலும் கலை நுட்பங்களிலுமுள்ள வியக்கத்தக்க, மகத்தான அற்புதங்கள் தென்பட ஆரம்பித்த போது அந்த நோக்கம் என்னைத் திருப்திப்படுதுவதற்குப் போதாமல் போவதை உணர்ந்தேன். அப்போது அதைவிடப் பெரிய இன்னுமொரு நோக்கம் காண்பிக்கப்பட்டது. அதாவது, ஒவ்வொரு வஸ்துக்குமுரிய மிகப் பெரிய நோக்கங்கள் படைப்பாளனை நோக்கியதாகும் என்பதையும், ஒவ்வொரு வஸ்தும் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு கலையம்சமும் ஒவ்வொரு வடிவமைப்பும் அவனது பூர்த்தியான அழகையும் பூரணத்துவத்தையும் ஞானத்தையும் ரஹ்மத்தையும் அவனது பார்வைக்கே காட்சிப்படுத்துகின்ற அவனது அழகுக்கும் பூரணத்துவத்துக்குமான கண்ணாடிகள் என்பதை அறிந்தேன். இந்தத் தாத்பரியம் நீண்ட காலத்துக்கு எனக்குப் போதியதாகவும் திருப்திகரமாகவும் இருந்தது. பின்னர் பொருட்களின் படைப்பிலும் வடிவமைப்பிலுமுள்ள பிரமிக்கத்தக்க செயற்பாடுகளும் அந்த செயற்பாடுகளுக்குள் அசுர வேகத்தில் நிகழ்கின்ற மாற்றங்கள், பேதகங்களும் அவற்றில் பொதிந்துள்ள இறை வல்லமையின் அற்புதங்களும் ருபூபியத்துடைய நிலைமைகளும் எனது கவனத்தை ஈர்க்க ஆரம்பித்த போது மேற்படி தாத்பரியமும் என்னை முற்றாகத் திருப்திப்படுத்த முடியாத நிலையை அடைந்தது. எனவே என்றைக்கும் போதியதாக இருக்கத்தக்க மிகப் பெரிய ஒரு நோக்கமும் நியாயமும் இருக்க வேண்டும் என்பதை அறிந்தேன். அப்போது அல்லாஹ்வின் அருளால் அனைத்துக்கும் மேலாலுள்ள அந்த நியாயங்களும் குறிப்பாக அடுத்து வரும் குறிப்புகளிலுள்ள நோக்கங்களும் எனக்குக் காண்பிக்கப்பட்டன. மேலும் “பிரபஞ்சத்தில் அரங்கேற்றப்படும் இறை வல்லமையின் செயற்பாடுகளும் வஸ்துகளின் இயக்கமும் எந்த அளவு அர்த்தபூர்வமானவையெனில் உண்மையில் அந்த இயக்கங்கள் செயற்பாடுகள் மூலம் சர்வ ஞானமிக்க படைப்பாளன் பிரபஞ்ச வஸ்துகளைப் பேச வைக்கிறான்” என்பதும் யகீனாக எனக்குக் காண்பிக்கப்பட்டது. ஏதோ வானத்திலும் பூமியிலும் உள்ள இயங்கும் வஸ்துகளின் இயக்கங்கள் பேச்சுகளாகவும் அசைவுகள் சொற்களாகவும் தென்பட்டன. எனவே, செயற்பாடுகளின் போதான இயக்கங்களும் அஸ்தமனங்களும் உண்மையில் அவற்றின் இயல்பான இறை துதிகளின் போது வெளிப்படுகின்ற தஸ்பீஹுடைய வார்த்தைகளாகும். பிரபஞ்சத்திலுள்ள அத்தனை செயற்பாடுகளும் பிரபஞ்சத்தினதும் வஸ்துகளினதும் மௌனமான பேச்சுகளாகும்.

§5

வஸ்துகள் முடிவையும் சூன்யத்தையும் நோக்கிச் செல்வதில்லை. மாறாக குத்ரத்துடைய வட்டத்துக்குள் இருந்து இல்முடைய வட்டத்துக்குள் செல்கின்றன; புலனாகும் உலகிலிருந்து மறைவான உலகுக்குச் செல்கின்றன. பேதகங்கள், தற்காலிகங்களின் உலகிலிருந்து ஒளி உலகை, நித்திய உலகை நோக்கிச் செல்கின்றன. சத்தியத்தின் அடிப்படையில் வஸ்துகளிலுள்ள அழகும் பூரணத்துவமும் இறை நாமங்களுக்குச் சொந்தமானவையாகும். அந்த நாமங்களின் ஒப்பனைகளும் அலங்காரங்களும் பிரதிபலிப்புகளுமாகும். மேலும் அந்தத் திருநாமங்களும் அவற்றின் பிரதிபலிப்புகளும் சந்தேகமின்றி நித்தியமானவையாகும். எனவே நிச்சயமாக அந்த நாமங்களின் ஒப்பனைகள் சதாவும் புதுப்பித்தலுக்கும் அழகுபடுத்தலுக்கும் உற்படும். மேலும் அவை இல்லாமைக்கோ சூன்யத்துக்கோ செல்வதில்லை. மாற்றங்கள் அவற்றின் சார்பியல் ரீதியான நிலைமைகளில் மாத்திரமே ஏற்படுகின்றன. அவற்றின் அழகுக்குக் காரணிகளாகவும் பூரணத்துவத்தின் மூலங்களாகவும் திகழும் ஹகீகத்களும் மாஹியத்களும் மாதிரித் தோற்றங்களும் நித்தியமானவையாகும். ஆத்மா இல்லாத படைப்புகளைப் பொருத்தவரை மாற்றங்கள், அழிவுகள் அனைத்தையும் தாண்டி அவற்றின் அழகும் பூரணத்துவமும் இறை நாமங்களுக்குச் சொந்தமானவையாகும். கண்ணியமும் மகிமையும் அவற்றுக்குரியவையாகும். புகழும் சிறப்பும் அவற்றின் கணக்கிலேயே சேரும். அன்பும் முஹப்பத்தும் அவற்றுக்கே செல்லும். அந்தக் கண்ணாடிகளில் ஏற்படும் மாற்றங்கள் அவற்றில் எந்த இழப்புக்கும் காரணமாக அமையாது. ஆத்மா உள்ள படைப்புகளைப் பொருத்தவரை அவை ஆத்மா உள்ள, புத்தி இல்லாத வகையைச் சேர்ந்தவை எனில், அவற்றின் அழிவும் பிரிவும் சூன்யமோ இல்லாமையோ அல்ல. மாறாக இருப்பின் உடலியல் ரீதியான சுமையிலிருந்தும் வாழ்க்கைப் பணிகளின் அல்லல்களிலிருந்தும் விடுதலை பெற்று, தமது பணிகள் மூலம் ஈட்டிக்கொண்ட கனிகளையும் விளைவுகளையும் இலாபங்களையும் தமது நித்தியமான ஆத்மாக்களிடம் ஒப்படைக்கின்ற ஒரு நிகழ்வாகும். அந்த ஆத்மாக்களும்கூட ஒவ்வொரு திருநாமத்தைச் சார்ந்து நிலைபெறும். அல்லது தமது தகுதிக்கேற்ற ஒரு நிம்மதியை அல்லது விமோசனத்தை அடைந்துகொள்ளும். ஆத்மா, புத்தி ஆகிய இரண்டையும் உடைய படைப்புகளைப் பொருத்தவரை, ஏலவே நித்திய நிம்மதியான வாழ்வுக்கும் ஆத்மீக, மற்றும் லௌகீக ரீதியான ஈடேற்றத்துக்கும் பாத்திரமான நித்திய உலகையும், படைப்பாளனுடைய படைப்புகளுள் இந்த உலகைவிட மிகவும் அழகிய, மிகவும் நூரானியத்தான ஆலமுல் பர்ஸஹ், ஆலமுல் மிஸால், ஆலமுல் அர்வாஹ் போன்ற வேறு நித்தியமான உலகங்களையும் நோக்கிய ஒரு பயணமாகும். நித்திய பிரிவோ நித்திய அழிவோ அன்றி பூரணத்துவத்தை எட்டுவதற்கான வாயிலாகும். சுருக்கமாக: ஆம், மாட்சிமைமிக்க படைப்பாளனின் இருப்பு சத்தியமானதும் நித்தியமானதுமாகும். அவ்வாறே அவனது நாமங்களும் பண்புகளும் கூட நித்தியமானவையாகும். எனவே நிச்சயமாக அவற்றின் பிரதிப்பலிப்புகளும் சிற்பங்களும் கூட ஆத்மார்த்தமான ஒரு நித்தியத்தினுள் புதுப்பிக்கபடுகின்றன. மாறாக அழிவையும் முடிவையும் இல்லாமையையும் நோக்கிச் செல்வதில்லை. ஆம், மனிதன் அவனது மனிதம் காரணமாக ஒட்டுமொத்த படைப்புகளுடனும் தொடர்புடையவானாக உள்ளான். அவன் அவற்றின் நிம்மதியைக் கண்டு நிம்மதியும் நிர்க்கதியைக் கண்டு நிர்க்கதியும் அடைகிறான். குறிப்பாக உயிரினங்களுக்கும், அதிலும் குறிப்பாக மனிதர்களுக்கும், அதிலும் குறிப்பாகத் தனது நேசத்துக்கும் பாசத்துக்கும் பாத்திரமான உயர் சிறப்புகளை உடையவர்களுக்கும் வருகின்ற கவலைகள், கேசேதங்கள் காரணமாக அதிகமதிகம் கவலைகளுக்கு ஆற்படுபவனாகவும் மகிழ்ச்சிகள் நிம்மதிகள் காரணமாக அதிகமதிகம் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைபவனாகவும் காணப்படுகின்றான். ஏன் பாசமுள்ள ஒரு தாயைப் போன்று தனது நிம்மதியையும் அமைதியையும் அவர்களுடைய நிம்மதிக்காகவும் அமைதிக்காகவும் தியாகம் செய்வான். ஆம், ஒவ்வொரு முஃமினும் குர்ஆனிய ஒளியின் மூலமும் ஈமானிய இரகசியத்தின் மூலமும் -தனது அந்தஸ்துக்கேற்ப- ஒட்டுமொத்த வஸ்துகளின் நித்தியத்தை வைத்தும் நித்திய நிம்மதியை வைத்தும் அவை ஒவ்வொரு ரப்பானியக் கடிதமாக இருப்பதை வைத்தும் பேரானந்தமடைய முடியும். உலகளவான ஓர் ஒளியால் தனது உலகை ஒளிமயமாக்க முடியும். ஒவ்வொரு முஃமினும் தனது அந்தஸ்துக்கேற்ப இந்த ஒளியால் பயனடைய முடியும். ஆனால், வழிகேடர்களைப் பொருத்தவரை தனது வலிகள், வேதனைகள், கைசேதங்களுடன் கூடவே ஒட்டுமொத்த வஸ்துகளின் அழிவுகள், பிரிவுகள் காரணமாகவும் அவர்களின் பார்வையில் நித்திய அழிவாக இருக்கும் மரணங்கள் காரணமாகவும், ஆத்மா உள்ள படைப்புகளாயின் அவற்றின் கவலைகள், கைசேதங்கள் காரணமாகவும் வலியும் வேதனையும் அனுபவிப்பான். அதாவது அவனது குஃப்ர் அவனது உலகை சூன்யத்தால் நிறைத்து அதை அவனது மண்டைக்குள் கொட்டிக்கொண்டே இருக்கும். நரகத்துக்குச் செல்ல முன்னமே அவனை நரகத்துக்கு அழைத்துச் சென்றுவிடும்.

§6

பல்வேறு இடங்களில் கூறப்பட்டுள்ளதைப் போன்று ஒரு மன்னருக்கு ஸுல்தான், கலீபா, ஹாகிம், காயித் என்று பல்வேறு நாமங்களும் அந்த நாமங்கள், பண்புகளின் வேண்டல்களாக உள்ள பல்வேறு நிர்வாக அலகுகளும் இருக்கும். அவ்வாறே சத்திய இரட்சகனுடைய அழகிய திருநாமங்களின் கணக்கிட முடியாத அளவு வகை வகையான பிரதிபலிப்புகள் காணப்படுகின்றன. வஸ்துகளுக்கு மத்தியில் காணப்படுகின்ற வேறுபாடுகளுக்கும் பாகுபாடுகளுக்குமான காரணம் அந்தப் பிரதிபலிப்புகளின் பல்வகைமையேயாகும். ஆம், அழகும் பூரணத்துவமும் உடைய ஒவ்வொருவரிடமும் அந்த அழகைக் காணவும் காண்பிக்கவும் நாடும் இயல்பும் கூடவே இருக்கும் என்ற தாத்பரியத்துக்கமைய பல்வேறுபட்ட அந்தத் திருநாமங்களும்கூட -நித்தியமானவை என்ற வகையில்- நித்தியமான ஓர் அமைப்பில் முகத்தஸான அந்த தாத்தின் பொருட்டில் வெளிப்படுவதை வேண்டி நிற்கின்றன. அதாவது அந்தத் திருநாமங்கள் அனைத்தும் தமது சிற்பங்களைக் காண்பதை வேண்டி நிற்கின்றன. அதாவது அந்த சிற்பங்கள் கண்ணாடிகளில் தமது அழகினதும் பூரணத்துவத்தினதும் பிரதிபலிப்புகளைக் காண்பதற்கும் காண்பிப்பதற்கும் நாட்டம் கொள்கின்றன. அதாவது இந்தப் பிரமாண்டமான பிரபஞ்சப் புத்தகமும் -ஒரே பக்கத்தில் ஒன்றுக்குள் ஒன்றான ஆயிரக்கணக்கான கடிதங்களை உள்ளடக்கிய- வஸ்துகள் என்ற பலதரப்பட்ட தெய்வீகக் கடிதங்களும் தொடர்ந்தேர்ச்சையாகப் புதுப்பிப்பிக்கப்படுவதையும் மீண்டும் மீண்டும் அர்த்தபூர்வமாக எழுதப்படுவதையும் அந்த அத்தனை கடிதங்களும் தாதுல் முகத்தஸாகவும் முஸம்மாஉல் அக்தஸாகவும் திகழும் அந்த வல்லோனின் புனிதமான தரிசனத்துக்குச் சமர்ப்பிக்கப்படுவதையும் பிரக்ஞையுள்ள படைப்புகள் அவற்றைக் கண்டு, வாசித்துப் படிப்பினை பெறுவதையும் வேண்டி நிற்கின்றன. இந்த சத்தியத்தை எடுத்துக் கூறும் பின்வரும் ஹகீகத்தான கவிதையைப் பாருங்கள். صحائفُ كتاب العالم.. هذه الأنواع غير المعدودة‌ حروفُه وكلماته.. هذه الأفراد غير المحدودة‌ لقد سُطّر في لوح الحقيقة المحفوظ:‌ إن كلَّ موجود في العالم لفظٌ بليغ مجسّم‌ விளக்கம்: இதோ! பிரபஞ்சப் புத்தகத்தைப் பாருங்கள்: எண்ணற்ற வகைப் பக்கங்கள்.. எண்ணற்ற சொற்கள், எண்ணற்ற எழுத்துகள்.. லவ்ஹுல் மஹ்ஃபூழுடைய கருமபீடத்தில் எழுதப்பட்ட புத்தகம் அது.. அகிலத்தில் உள்ள ஒவ்வொன்றும் ஒவ்வோர் உடலுறுப்பெற்ற, அர்த்தபூர்வமான சொல்லாகும்.. تَاَمَّل۟ سُطُورَ ال۟كَائِنَاتِ فَاِنَّهَا مِنَ ال۟مَلَاِ ال۟اَع۟لٰى اِلَي۟كَ رَسَائِلُ பிரபஞ்சத்தின் வரிகளைக் கவனத்தோடு வாசியுங்கள். ஏனெனில் அவை மலஇல் ஆஃலாவிலிருந்த அனுப்பப்பட்ட கடிதங்களாகும்.

§7

(இரண்டு அம்சங்களை உள்ளடக்கியது.)

§8

ஒவ்வொரு வஸ்துக்கும் மூன்று முகங்கள் உள்ளன. முதலாவது முகம் இறை நாமங்களை நோக்கிய முகமாகும். அவற்றுக்குக் கண்ணாடியாகும். அந்த முகத்தை அழிவோ பிரிவோ இல்லாமையோ தீண்ட முடியாது. மாறாக அதில் நிகழும் அத்தனை மாற்றங்களும் புதுப்பித்தலாகும். இரண்டாவது முகம் மறுமையையும் நித்திய உலகையும் நோக்கிய முகமாகும். அவற்றுக்கான விளைச்சல் நிலத்தை ஒத்ததாகும். இந்த முகத்திலேயே நித்தியமான கனிகள் விளைகின்றன; தற்காலிகமானவை நித்தியமானவையாக மாறுகின்றன. இந்த முகத்திலும் கூட மரணமோ அழிவோ அன்றி வாழ்வினதும் நித்தியத்தினதும் பிரதிபலிப்புகளே காணப்படுகின்றன. மூன்றாவது முகம் தற்காலிகமானவற்றை, அதாவது எம்மை நோக்கிய முகமாகும். அது இச்சைப் பிரியர்களின் ஆசையாகவும் பிரக்ஞையுள்ள மனிதர்களின் வியாபரஸ்தளமாகவும் பொறுப்பாளர்களின் சோதனைக் களமாகவும் உள்ளது. ஆம், இந்த மூன்றாவது முகத்தின் மீதுள்ள அழிவு, பிரிவு, முடிவு, மரணம், இல்லாமை போன்ற வலிகளுக்கும் காயங்களுக்குமான நிவாரணமாக அந்த முகத்தின் உள்ரங்கத்திலும் நித்தியத்தினதும் வாழ்வினதும் பிரதிபலிப்புகள் காணப்படுகின்றன. சுருக்கமாக: ஆம், நதி போன்று ஓடும் இந்த வஸ்துகள் வாஜிபுல் வஜூதுடைய இயங்கும் கண்ணாடிகளும் மாறும் பாத்திரங்களுமாகும். இவ்வாறு படைப்பினதும் இருப்பினதும் ஒளிகள் புதுப்பிக்கப்படுகின்றன.

§9

இது ஒரு முன்னுரையையும் இரண்டு அடையாளங்களையும் உள்ளடக்கியதாகும். முன்னுரையிலும் இரண்டு பகுதிகள் உள்ளன.

§10

கீழுள்ள ஐந்து அடையாளங்களிலும் ருபூபியத்துடைய ஷுஊனாத்களை (புனிதமான நிலைமைகளை) ஆராய்வதற்காக மங்கலான, சிறிய தொலைகாட்டிகளை ஒத்த ஒவ்வொரு உதாரணங்கள் எழுதப்படும். உண்மையில் இந்த உதாரணங்களால் ருபூபியத்துடைய புனிதமான நிலைமைகளின் ஹகீகத்தை எட்டிப் பிடிக்கவோ சூழ்ந்துகொள்ளவோ அதற்கான ஓர் அளவையாக அமையவோ முடியாது. ஆனால் தொலைவிலிருந்து காண்பிக்க முடியும். இங்கு கூறப்படப் போகும் உதாரணங்களிலும் கடந்த குறிப்புகளில் கூறப்பட்ட விடயங்களிலும் தாதுல் அக்தஸுடைய புனிதமான நிலைமைகளுக்குப் பொருந்தாத பிரயோகங்கள், உதாரணங்களுடைய குறைகளின்பாற்பட்டவையாகும். உதாரணமாக: இன்பம், சுவை, மகிழ்ச்சி, திருப்தி போன்ற எம்மளவில் புலக்கமான அர்த்தங்களால் அந்தப் புனிதமான நிலைமைகளை விவரிக்க முடியாது. ஆனால் அவை சிந்தனைக்கான ஒவ்வொரு மகுடமாகவும் ஊடகமாகவும் தொழிற்படுகின்றன. அவ்வாறே இங்கு கூறப்படுகின்ற உதாரணங்களும் கூட அனைத்தையும் சூழ்ந்த, அகிலார்ந்த, விசாலமான, உயர்வான ருபூபியத்தின் சட்டங்களுடைய ஒரு முனையை சிறிய ஓர் உதாரணத்தில் காண்பிப்பதன் மூலம் ருபூபியத்துடைய புனிதமான நிலைமைகளில் உள்ள அந்தச் சட்டங்களுடைய ஹகீகத்களை நிரூபிக்கின்றன. உதாரணமாக “ஒரு பூ இருப்பை விட்டுச் செல்கின்றது. ஆனால் செல்லும் போது தனக்குப் பின்னால் பல ஆயிரம் இருப்புகளை விட்டுவிட்டே செல்லும்” என்று கூறப்படுகின்ற போது, அந்த முனை ருபூபியத்துடைய மிகவும் மகத்தான ஒரு சட்டத்தைக் காண்பிக்கின்றது. அந்த சட்டமே ஒட்டுமொத்த வசந்தங்களிலும், ஏன், உலகின் ஒட்டுமொத்த வஸ்துகளிலும் கோலோச்சுகின்றது. ஆம், பேரன்புமிக்க படைப்பாளன் ஒரு பறவையின் ஆடையை எந்தச் சட்டத்தைக் கொண்டு புதுப்பிக்கின்றானோ, அந்த ஞானமிக்க படைப்பாளன் அதே சட்டத்தின் மூலமே ஒவ்வொரு வருடமும் பூமிப் பந்தின் ஆடையையும் புதுப்பிக்கின்றான். அதே சட்டத்தின் பிரகாரமே ஒவ்வொரு யுகத்திலும் உலகின் தோற்றத்தையும் மாற்றுகின்றான். அதே சட்டத்தின் பிரகாரமே கியாமத்துடைய நேரத்தில் பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் மாற்றுவான். மேலும், எந்த சட்டத்தின் மூலம் ஓர் அணுவை மௌலவீகளைப் (மௌலானா ரூமியின் ஷிஷ்யர்கள்) போன்று இயக்குகின்றானோ அதே சட்டத்தின் மூலமே பூமிப் பந்தையும் -காதல்வயப்பட்ட நிலையில் ஸமாஃவிற்காக எழும்பும் மௌலவீகளைப் போன்று- சுற்றிச் சுழல வைக்கின்றான். அதே சட்டங்களின் மூலமே சூரிய மண்டலத்தையும் சர்வ லோகங்களையும் இயக்குகின்றான். மேலும், எந்த சட்டத்தின் மூலம் உன்னுடைய உடலிலுள்ள கலங்களின் சிதைவுகளை அகற்றிப் புதுப்பிக்கின்றானோ அதே சட்டத்தின் மூலமே உன்னுடைய தோட்டத்தையும் ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கின்றான்; ஒவ்வொரு பருவ காலத்திலும் பல முறை சுத்தம் செய்கிறான். அதே சட்டத்தின் மூலமே பூமிப் பரப்பையும் ஒவ்வொரு வசந்த காலத்திலும் புதுப்பித்து அதன் மீது புத்தம் புதிய போர்வைகளைப் போர்த்துகிறான். மேலும், அந்த சர்வ வல்லமைமிக்க படைப்பாளன் எந்த ஞானபூர்வமான சட்டத்தின் மூலம் ஓர் நுளம்புக்கு வாழ்வளிக்கிறானோ அதே சட்டத்தின் மூலமே இதோ எமக்கு முன்னால் வீற்றிருக்கும் இந்தப் பிரமாண்டமான தேவதாறு மரத்துக்கும் ஒவ்வொரு வசந்த காலத்திலும் வாழ்வளிக்கிறான். அதே சட்டத்தின் மூலமே மறுமையில் ஹஷ்ரின் போது எல்லாப் படைப்பினங்களுக்கும் வாழ்வளிப்பான். مَا خَلْقُكُمْ وَلاَ بَعْثُكُمْ اِلاَّ كَنَفْسٍ وَاحِدَةٍ என்ற குர்ஆனிய வசனமும் இந்தத் தாத்பரியத்தைக் குறித்துக் காட்டுகின்றது. இது போன்று ஏனையவற்றை நீங்களே ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆம், இவ்வாறு ருபூபியத்துடைய ஏராளமான சட்டங்கள் அணு முதல் அண்டசராசரங்கள் வரை கோலோச்சுகின்றன. இதோ ருபூபியத்துடைய செயற்பாடுகளுக்கு மத்தியிலுள்ள இந்தச் சட்டங்களின் அகிலார்ந்த தன்மையையும் விசாலத்தையும் பார்த்து அதற்குள் பொதிந்துள்ள வஹ்தத்தின் தாத்பரியத்தைக் கண்டுகொள்ளுங்கள். ருபூபியத்துடைய ஒவ்வொரு சட்டமும் வஹ்தத்துக்கான ஒவ்வோர் அத்தாட்சியாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஆம், மிக அதிகமான, மிக உன்னதமான இந்த சட்டங்கள் அனைத்தும் அறிவு, அதிகாரம் என்பவற்றின் பிரதிபலிப்பாக இருக்கும் அதே வேளை ஒவ்வொரு சட்டமும் எல்லா இடங்களிலும் ஒன்றாகவும் அகிலார்ந்ததாகவும் இருக்கின்றது என்ற வகையில் அவை படைப்பாளனுடைய அறிவு, அதிகாரம் என்பவற்றுடன் வஹ்தானியத்தையும் மிகத் தீர்க்கமாக நிரூபிக்கின்றன. ஆம், ரிஸாலே நூரின் பல்வேறு இடங்களில் கூறப்பட்டுள்ள பல்வேறு உதாரணங்கள் இப்படிப்பட்ட அகிலார்ந்த சட்டங்களின் ஒவ்வொரு முனையை ஒவ்வொரு சிறிய உதாரணத்தின் மூலம் காண்பித்து, மொத்தத்திலும் அதே சட்டத்தின் இருப்பையே குறித்துக் காட்டுகின்றன. ஆம், உண்மையில் உதாரணங்கள் அந்தச் சட்டங்களின் இருப்பையும் வெளிப்பாட்டையுமே காட்டித் தருகின்றன. எனவே அவை தர்க்க ஆதாரங்களைப் போன்று யகீனான ஓர் அமைப்பில் முன்வைக்கப்படுகின்ற வாதத்தை நிரூபிக்கும். எனவே ரிஸாலே நூரில் முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான உதாரணங்கள் யகீனான அத்தாட்சிகளாகவும் தீர்க்கமான ஆதாரங்களாகவுமே உள்ளன.

§11

பத்தாவது வார்த்தையின் பத்தாவது சத்தியத்தில் கூறப்பட்டுள்ளதைப் போன்று ஒரு மரத்துக்கு எத்தனை கனிகளும் பூக்களும் உள்ளனவோ, ஒவ்வொரு கனிக்கும், ஒவ்வொரு பூவுக்கும் அத்தனை நோக்கங்களும் தாத்பரியங்களும் காணப்படும். அந்தத் தாத்பரியங்கள் மூன்று வகையானவையாகும். முதல் வகை, படைப்பாளனுடைய திரு நாமங்களின் வடிவமைப்புகளையும் கலைச் சிற்பங்களையும் காண்பிக்கின்றன என்ற வகையில் படைப்பாளனை நோக்கிய தாத்பரியங்களாகும். இன்னொரு வகை, பிரக்ஞையுள்ள படைப்புகளின் பார்வையில் பெருமதிமிக்க கடிதங்களாகவும் அர்த்தபூர்வமான வார்த்தைகளாகவும் உள்ளன என்ற வகையில் பிரக்ஞையுள்ள படைப்புகளை நோக்கிய தாத்பரியங்களாகும். அடுத்த வகை, தத்தமது நஃப்ஸையும் வாழ்வையும் நோக்கிய தாத்பரியங்களாகும். அவை மனிதனுக்குப் பயன்மிக்கவை எனில் அந்தக் கோணத்திலும் பல்வேறு தாத்பரியங்கள் காணப்படும். ஆம், ஒவ்வொரு வஸ்திலும் இவ்வாறான ஏகப்பட்ட தாத்பரியங்கள் இருப்பதை சிந்தித்துக்கொண்டிருக்கும் போது எனது சிந்தனையில் அரபி வடிவில் பின்வரும் உரைகள் தோன்றின. இந்த உரைகளே கீழுள்ள ஐந்து அடையாளங்களிலும் கூறப்படுகின்ற அகிலார்ந்த நோக்கங்களின் அடிப்படைகளைக் குறித்துக் காட்டுகின்ற சுருக்கமான குறிப்புகளாக அமைந்தன. وَهٰذِهِ ال۟مَو۟جُودَاتُ ال۟جَلِيَّةُ مَظَاهِرُ سَيَّالَةٌ وَمَرَايَا جَوَّالَةٌ لِتَجَدُّدِ تَجَلِّيَاتِ اَن۟وَارِ اٖيجَادِهٖ سُب۟حَانَهُ بِتَبَدُّلِ التَّعَيُّنَاتِ ال۟اِع۟تِبَارِيَّةِ اَوَّلًا : مَعَ اِس۟تِح۟فَاظِ ال۟مَعَانِى ال۟جَمٖيلَةِ وَال۟هُوِيَّاتِ ال۟مِثَالِيَّةِ وَثَانِيًا : مَعَ اِن۟تَاجِ ال۟حَقَائِقِ ال۟غَي۟بِيَّةِ وَالنُّسُوجِ اللَّو۟حِيَّةِ وَثَالِثًا : مَعَ نَش۟رِ الثَّمَرَاتِ ال۟اُخ۟رَوِيَّةِ وَال۟مَنَاظِرِ السَّر۟مَدِيَّةِ وَرَابِعًا : مَعَ اِع۟لَانِ التَّس۟بٖيحَاتِ الرَّبَّانِيَّةِ وَ اِظ۟هَارِ ال۟مُق۟تَضَيَاتِ ال۟اَس۟مَائِيَّةِ وَخَامِسًا : لِظُهُورِ الشُّؤُنَاتِ السُّب۟حَانِيَّةِ وَال۟مَشَاهِدِ ال۟عِل۟مِيَّةِ ஆம், இதிலுள்ள இந்த ஐந்து உரைகளிலும் கீழே விளக்கப்படும் அடையாளங்களின் அடிப்படைகள் பொதியப்பெற்றுள்ளன. ஆம், ஒவ்வொரு வஸ்திலும் (குறிப்பாக உயிரினங்களில்) ஐந்து கட்டங்களாக வெவ்வேறு நோக்கங்களும் தாத்பரியங்களும் காணப்படுகின்றன. ஒரு கனி மரத்தின் ஒன்றுக்கு மேல் ஒன்றாக உள்ள அனைத்துக் கிளைகளும் கனி தருவதைப் போன்று ஒவ்வொரு உயிரினத்திலும் ஐந்து கட்டங்களைக் கொண்ட வெவ்வேறு நோக்கங்களும் தாத்பரியங்களும் காணப்படுகின்றன. அழிந்து போகின்ற மனிதனே! உன்னிடம் சிறிய ஒரு விதையாக உள்ள உன்னுடைய ஹகீகத், கனிமயமான ஒரு நித்திய விருட்சமாக மாறி, அதன் மூலம் கீழுள்ள ஐந்து அடையாளங்களிலும் காட்டப்படுகின்ற பத்து வகையான கனிகளையும் நோக்கங்களையும் அடைந்துகொள்ள விரும்பினால் ஹகீகத்தான ஈமானை அடைந்துகொள். இல்லாவிட்டால் அந்த அத்தனையிலிருந்தும் பாக்கியமற்றவனாக ஆவதோடு அந்த விதைக்குள்ளேயே அடங்கி, அழுகி, அழிந்து போய்விடுவாய்.

§12

فَاَوَّلاً: بِتَبَدُّلِ التَّعَيُّنَاتِ اْلاِعْتِبَارِيَّةِ مَعَ اِسْتِحْفَاظِ الْمَعَانِى الْجَمِيلَةِ وَالْهُوِيَّاتِ الْمِثَالِيَّةِ என்ற உரை பின்வருமாறு கூறுகின்றது: ஒரு பொருள் இருப்பிலிருந்து சென்ற பின்னர் ஏதோ புலனுக்கு அழிவையும் இல்லாமையையும் நோக்கிச் சென்றாலும் அது கூற வந்த செய்திகளும் வெளிப்படுத்திய அர்த்தங்களும் நிலைத்து நிற்கும்; பாதுகாக்கப்படும். அதன் மாதிரித் தோற்றம், வடிவம், தன்மை, இயல்பு என்பனவும் கூட ஆலமுல் மிஸாலிலும் ஆலமுல் மிஸாலின் மாதிரிகளான அல்வாஹுல் மஹ்ஃபூழ் எனப்படும் பாதுகாக்கப்பட்ட ஏடுகளிலும் பாதுகாக்கப்பட்ட ஏடுகளின் மாதிரிகளான மனன சக்திகளிலும் நிலை பெறும். அதாவது ஓர் உடலியல் இருப்பை இழந்து நூற்றுக்கணக்கான ஆன்மீக மற்றும் அறிவியல் ரீதியான இருப்புகளைப் பெற்றுக்கொள்ளும். உதாரணமாக ஒரு பக்கத்தை அச்சிடுவதற்குத் துணையாக உள்ள மாதிரி அச்சில் எழுத்துகளுக்கு ஓர் ஒழுங்கும் அமைப்பும் கொடுக்கப்படும். இவ்வாறு அந்த மாதிரிப் பக்கம் உருவாக்கப்பட்டு, அந்தப் பக்கம் தனது தோற்றத்தையும் தன்மைகளையும் அச்சிடப்படும் ஏராளமான பக்கங்களுக்கு வழங்கி அர்த்தங்களை ஏராளமான உள்ளங்களுக்குப் பிரஸ்தாபித்த பின்னர் குறித்த பக்கம் ஓரமாக்கப்பட்டு அல்லது மாற்றப்பட்டு குறித்த அச்சுக்கு வேறோர் ஒழுங்கும் அமைப்பும் கொடுக்கப்படும். ஏனெனில் மேற்கொண்டு முன்னையதன் தேவை நீங்கிவிடுவதோடு புதிய பக்கங்கள் அச்சிடப்பட வேண்டிய அவசியமும் ஏற்படுகின்றது. பூமியின் மீதுள்ள இந்த வஸ்துகளின் நிலையும் குறிப்பாகத் தாவரங்களின் நிலையும் அவ்வாறுதான். இறை விதி அவற்றுக்கு ஓர் ஒழுங்கையும் அமைப்பையும் வழங்கும். இறை வல்லமையானது வசந்தம் என்ற பக்கத்தில் அவற்றை சிருஷ்டிக்கும். பின்னர் அவை தமது அழகிய அர்த்தங்களைப் பிரஸ்தாபித்தவண்ணம் தமது தோற்றங்களையும் இயல்புகள், தன்மைகளையும் ஆலமுல் மிஸாலின் அல்லது அது போன்ற மறைவான உலகின் ஏடுகளில் பதிவுசெய்துவிடுவதால், இறை ஞானமானது அந்த நிலைமையின் மாற்றத்தையும் புதிய ஒரு வசந்தப் பக்கம் எழுதப்படுவதையும் அவற்றுக்கும் தமது அர்த்தங்களைப் பிரஸ்தாபிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதையும் வேண்டி நிற்கும்.

§13

وَثَانِيًا : مَعَ اِن۟تَاجِ ال۟حَقَائِقِ ال۟غَي۟بِيَّةِ وَالنُّسُوجِ اللَّو۟حِيَّةِ என்ற உரை பின்வருமாறு கூறுகின்றது: -சிறிதாக இருக்கட்டும், பெரிதாக இருக்கட்டும்- ஒவ்வொரு பொருளும், குறிப்பாக ஒவ்வோர் உயிரினமும் இருப்பைவிட்டுச் சென்ற பின்னர் ஏகப்பட்ட மறைவான சத்தியங்களை விளைவாகத் தருவதைப் போன்றே ஆலமுல் மிஸாலின் ஏடுகளுள் ஒன்றான லவ்ஹுல் மிஸாலின் மீது தத்தமது வாழ்க்கை நிலைமைகளின் எண்ணிக்கையளவு ரூபங்களை விட்டுச் செல்லும். அந்த ரூபங்களிலிருந்து முகத்தராதுல் ஹயாத் எனப்படும் அர்த்தங்கள் நிறைந்த வாழ்க்கைப் பொழுதுகள் எழுதப்படும். அவை ரூஹானிகள் ஆய்ந்தறிவதற்கான சாதனங்களாகவும் அமையும். உதாரணமாக, ஒரு பூ இருப்பிபிருந்து செல்கின்றது. ஆனால் அது நூற்றுக்கணக்கான தனது மகரந்தங்களுக்குள் தனது தன்மையை அவ்வாறே இருப்பில் வைத்துவிட்டுச் செல்கின்றன. அவ்வாறே அடுத்த கட்டமாக அல்வாஹுல் மஹ்ஃபூழ் எனப்படும் சிறிய பாதுகாக்கப்பட்ட ஏடுகளிலும் அவற்றின் சிறிய மாதிரிகளான மனன சக்திகளிலும் தனது ஆயிரக்கணக்கான பிரதிகளையும் வடிவங்களையும் விட்டுச் செல்லும் போது பிரக்ஞையுள்ள படைப்புகளுக்குத் தனது வாழ்க்கை நிலைமைகள், பொழுதுகளின் மூலம் பிரஸ்தாபித்த ரப்பானியத் துதிகளையும் அவனது திரு நாமங்களின் கலையம்சங்களையும் சதாவும் வாசிக்க வைக்கின்றது. அவ்வாறே பூமிப் பந்து என்ற பூச்சாடியின் மீது மிக அழகிய சிருஷ்டிகளால் அலங்கரிக்கப்படுகின்ற வசந்த காலமும் ஒரு மலராகும். அது வெளிப்படையில் அழிந்து இல்லாமைக்குச் சென்றாலும், செல்லும் போது தான் பிரஸ்தாபித்த தனது மகரந்தங்களின் எண்ணிக்கையளவு மறைவான சத்தியங்களையும் தான் காண்பித்த தனது பூக்களின் எண்ணிக்கையளவு மாதிரித் தோற்றங்களையும் தான் வெளிப்படுத்திய தனது வஸ்துகளின் எண்ணிக்கையளவு ரப்பானிய ஞானங்களையும் தனக்குப் பதிலாக இருப்பில் வைத்துவிட்டே எம்மைவிட்டும் மறைகின்றது. அத்தோடு தனது உறவுகளான ஏனைய வசந்தங்களுக்காக, அதாவது அவை வந்து தமது பணிகளைச் செய்வதற்காகத் தனது இடத்தைக் காலி செய்துவிட்டுச் செல்கின்றது. அதாவது அந்த வசந்தம் வெளிப்படையான ஓர் இருப்பிலிருந்து துகிலுரிந்து சென்றாலும் ஆத்மார்த்தமான ஆயிரம் இருப்புகளை அணிந்துகொள்கின்றது.

§14

وَثَالِثًا : مَعَ نَشْرِ الثَّمَرَاتِ اْلاُخْرَوِيَّةِ وَالْمَنَاظِرِ السَّرْمَدِيَّةِ என்ற உரை பின்வருமாறு கூறுகின்றது: உலகம் ஒரு கருமபீடம் அல்லது விளைநிலமாகும். இங்கு மறுமைச் சந்தைக்குப் பொருத்தமான பண்டங்களும் விளைச்சல்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. பல்வேறு இடங்களில் நாம் நிறுவியுள்ளதைப் போன்று மனித, ஜின் வர்க்கத்தினரின் அமல்கள் மறுமைச் சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுவதைப் போன்று உலகின் ஏனைய படைப்புகளும் கூட மறுமைக்கான பல்வேறு பணிகளில் ஈடுபடுவதோடு, ஏராளமான விளைச்சல்களையும் வழங்குகின்றன. ஒரு வகையில் இந்தப் பூமிப் பந்து அந்த விளைச்சல்களுக்காக இயங்குகின்றது என்று கூற முடியும். ஏன் “அதற்காகத்தான் இயங்குகின்றது” என்றும் கூற முடியும். ஆம், பூமி என்ற இந்த ரப்பானியக் கப்பல் ஒரே வருடத்தில் இருபத்தி நான்காயிரம் வருட தூரத்தை கடப்பதன் மூலம் மஹ்ஷர் மைதானத்தின் எல்லைகளைச் சுற்றுகின்றது. உதாரணமாக, சுவனவாசிகள் தமது உலக நிகழ்வுகளை நினைவுகூர்வதற்கும் பரஸ்பரம் அவற்றைப் பகிர்ந்துகொள்வதற்கும் நிச்சயமாக விரும்புவார்கள். ஏன் அந்த நிகழ்வுகளின் பதிவுகளையும் மாதிரிகளையும் கூட காண ஆசைப்படுவார்கள். அப்போது அவர்களுக்கு சினிமாத் திரைகளில் போன்று அந்த நிகழ்வுகள் காண்பிக்கப்பட்டால் நிச்சயமாக மிக்க மகிழ்ச்சியடைவார்கள். ஆம், அவ்வாறெனில் எல்லா வகையான மகிழ்ச்சிகளையும் நிம்மதிகளையும் கொண்ட தங்குமிடமாகிய சுவன வீட்டில் عَلَى سُرُرٍ مُتَقَابِلِينَ என்ற மறை வாக்கின் சாடைக்கமைவாக சுவனத்தின் நித்தியமான காட்சிகளுக்கு மத்தியில் உலக நிகழ்வுகளை சம்பாஷனை செய்வார்கள். உலகின் காட்சிகளையும் பார்த்து ரசிப்பார்கள். இதோ இந்த அழகிய வஸ்துகள் ஒரு கனப் பொழுதளவு புலன் நிலையை அடைந்துவிட்டு மறைவதும், ஒன்றன் பின் ஒன்றாக வந்து செல்வதும் அப்படிப்பட்ட நித்தியமான காட்சிகளைத் தயாரிப்பதற்காக, கரும பீடத்தில் நிகழ்கின்ற நிகழ்வுகளை ஒத்தவையாகவே தென்படுகின்றன. ஆம், நாகரிகமடைந்த மனிதன் தம்முடைய தற்காலிகமான நிலைமைகளுக்கு ஒரு வகை நிலைத்த தன்மையை வழங்குவதற்காகவும் எதிர்கால சந்ததிகளுக்கு நினைவுகளை விட்டுச் செல்வதற்காகவும் தமது அழகிய, விசித்திரமான நிலைமைகள் மற்றும் அனுபவங்களின் ரூபங்களையும் ஒளிப் பதிவுகளையும் எடுத்து எதிர்காலத்துக்கு அன்பளிப்புச் செய்கிறார்கள். கடந்த கால நிகழ்வுகளை நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும் காட்சிப்படுத்தி அவற்றுக்கு நிகழ் மற்றும் எதிர்காலங்களில் ஓர் இடத்தைப் பெற்றுக் கொடுக்கிறார்கள். அவ்வாறே, இந்த வசந்த கால வஸ்துகளும் உலகின் படைப்புகளும் குறுகிய ஒரு வாழ்வைக் கடத்திவிட்டுச் செல்லும் போது சர்வ ஞானமிக்க படைப்பாளன் அவற்றின் மூலம் நாடிய நித்திய உலகுடன் தொடர்பான நோக்கங்களை நிறைவு செய்கின்ற அதே சமயம், தமது வாழ்வில் நிறைவு செய்த வாழ்க்கைப் பணிகள் மற்றும் பொறுப்புகளையும் தமது கண்ணாடிகளில் பிரதிபலித்த தெய்வீக அற்புதங்களையும் நித்திய உலகின் நித்திய காட்சிகளுக்காகப் பதிவுசெய்து வைத்துவிட்டே செல்கின்றன. உண்மையில் இது ஹகீம், ரஹீம், வதூத் போன்ற இறை நாமங்களின் வேண்டலாகும்.

§15

وَرَابِعًا : مَعَ اِعْلاَنِ التَّسْبِيحَاتِ الرَّبَّانِيَّةِ وَ اِظْهَارِ الْمُقْتَضَيَاتِ اْلاَسْمَا ئِيَّةِ என்ற உரை பின்வருமாறு கூறுகின்றது: எல்லா வஸ்துகளும் தத்தமது பலதரப்பட்ட வாழ்க்கைக் கட்டங்களின் ஊடாகப் பல்வேறுபட்ட இறை துதிகளிலும் இறை தியானங்களிலும் ஈடுபடுகின்றன. மேலும், அவை தமது பலதரப்பட்ட நிலைகள் மூலம் இறை நாமாங்களின் வேண்டல்களைக் காட்டித் தருகின்றன. உதாரணமாக, ரஹீம் என்ற திருநாமம் அன்பும் பாசமும் கொள்வதை வேண்டி நிற்கின்றது, ரஸ்ஸாக் என்ற திருநாமம் ஆகாரமளிப்பதை வேண்டி நிற்கின்றது, லதீஃப் என்ற திருநாமம் ஈகையளிப்பதை வேண்டி நிற்கின்றது. இவ்வாறு அனைத்துத் திருநாமங்களுக்கும் வெவ்வேறு வேண்டல்கள் உள்ளன. ஆம், ஒவ்வொரு உயிரும் தத்தமது வாழ்வின் மூலமும் இருப்பின் மூலமும் வாழ்க்கை நிலைகள், கட்டங்கள் மூலமும் அந்தத் திருநாமங்களின் வேண்டல்களைக் காண்பித்துத் தருவதோடு கூடவே ஒவ்வொரு நொடியும் தமது அங்க அவயவங்களின் எண்ணிக்கையளவு சர்வ ஞானமிக்க படைப்பாளன் மீது துதிகள் செய்கின்றன. உதாரணமாக, ஒரு மனிதன் அழகிய, சுவையான கனிகளை உண்கிறான். வெளிப்படையாகப் பார்த்தால் அந்தக் கனிகள் அவனது இரைப்பைக்குள் கரைந்து, அழிந்து போகின்றன. ஆனால், அவை அவனது வாய் முதல், இறைப்பை முதல் எல்லா உடற் கூறுகளுக்கும் செயலூக்கம் வழங்கத்தக்க ஒரு சுவையையும் இன்பத்தையும் கொடுக்கின்ற அதே சமயம், அந்த உடலின் பல்வேறு கூறுகளின் இருப்புக்கும், அவற்றின் வாழ்வைப் போஷிப்பதற்கும் என்று பல்வேறுபட்ட அழகிய, உன்னதமான விளைவுகளின் இருப்புக்குக் காரணியாக அமைகின்றன. அந்த ஆகாரம் தன்னளவிலும் கூட இருப்பியல் ரீதியாக தாவர வாழ்வு என்ற நிலையிலிருந்து மனித வாழ்வு என்ற அந்தஸ்துக்கு உயர்கின்றது. அவ்வாறே, இந்த வஸ்துகள் அழிவு என்ற திரைக்குப் பின்னால் மறைகின்ற போது அவற்றின் இடத்தில் ஒவ்வொன்றுக்கும் சொந்தமான ஏராளமான துதிகளும் தியானங்களும் நிலையாக, நித்தியமாக விடப்படுகின்றன. அவ்வாறே, ஏராளமான திருநாமங்களின் வேண்டல்களுக்கும் கலைச் சிற்பங்களுக்கும் பாத்திரமாக இருந்தன என்ற வகையில் அவற்றின் புகழ்களை அந்தத் திருநாமங்களின் கரங்களிலேயே கொடுத்துவிட்டுச் செல்கின்றன. அதாவது ஒரு நித்தியமான இருப்பை பாதுகாப்பாக உத்தரவாதப்படுத்தி வைத்துவிட்டே செல்கின்றன. ஆம், அழிந்து போகக்கூடிய, தற்காலிகமான ஓர் இருப்பைத் துறப்பதன் மூலம், அதற்குப் பகரமாக, ஒரு வகை நித்தியத்துக்குப் பாத்திரமான பல ஆயிரம் இருப்புகள் வழங்கப்படுகின்ற போது பாவப்படுவதற்கும் பரிதாபப்படுவதற்கும் ஏதேனும் நியாயம் இருக்க முடியுமா? அல்லது அதைப் பார்த்து வீணாகிச் சென்றுவிட்டது, அர்த்தமற்றுப் போய்விட்டது என்றெல்லாம் கூற முடியுமா? அல்லது இந்த அழகிய, கண்குளிர்ச்சியான, நேசத்துக்குரிய படைப்பு ஏன் இவ்வாறு போக வேண்டும் என்று ஒப்பாரி வைத்து முறையிட முடியுமா? இல்லை, மாறாக அதன் விடயத்தில் அன்பும் அருளும் ஞானமும் அவ்வாறே வேண்டி நிற்கின்றன. அவ்வாறு நிகழ்வதே அவசியமானதாகும். இல்லாவிட்டால் ஒரு சிறு நஷ்டம் வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பல ஆயிரம் இலாபங்களையும் நலவுகளையும் அசட்டை செய்வது பல ஆயிரம் நஷ்டங்களுக்கே வழிவகுக்கும். எனவே ரஹீம், ஹகீம், வதூத் ஆகிய திருநாமங்கள் இத்தகைய அழிவுகளுக்கும் பிரிவுகளுக்கும் விரோதமானவையல்ல. மாறாக அவற்றை வேண்டி நிற்கின்றன.

§16

وَخَامِسًا : لِظُهُورِ الشُّوءُنَاتِ السُّبْحَانِيَّةِ وَالْمَشَاهِدِ الْعِلْمِيَّةِ என்ற உரை பின்வருமாறு கூறுகின்றது: வஸ்துகள், குறிப்பாக உயிருள்ள வஸ்துகள் புலனியல் ரீதியான இருப்பிலிருந்து செல்லும் போது நித்தியமான பல்வேறு விடயங்களைப் பின்னால் வைத்துவிட்டே செல்கின்றன. மேலே இரண்டாவது குறிப்பில் தெளிவுபடுத்தப்பட்டதைப் போன்று வாஜிபுல் வுஜூத் அவனது குத்ஸியத்துக்கும் பூர்த்தியான தன்னிறைவுக்கும் தகுதிக்கும் கீர்த்திக்கும் ஏற்ற அமைப்பில் எல்லையற்ற ஒரு முஹப்பத்தும் பாசமும் முடிவற்ற ஒரு பெருமிதமும் -பிரயோகங்கள் பிழைக்காதிருக்க வேண்டும்- எல்லையற்ற முகத்தஸான ஒரு திருப்தியும் பூரிப்பும் எல்லையற்ற முகத்தஸான ஓர் இன்பமும் பேரமைதியும் உடையவனாக இருக்கின்றான். அவனது பரிபாலிப்பில் இந்தப் புனிதமான ரப்பானிய நிலைமைகளின் தடயங்களைத் தெளிவாகக் காண முடியுமாக உள்ளது. ஆம், அந்த ஷுஊனாத்கள் வேண்டி நிற்கின்ற வியக்கத்தக்க, மகத்தான செயற்பாடுகளுக்குள் வஸ்துகள் மாற்றங்கள், பேதகங்கள் மூலம் அழிவையும் முடிவையும் பிரிவையும் நோக்கி உருண்டோடுகின்றன. சதாவும் ஆலமுஷ் ஷஹாதத் ஆகிய புலனாகும் உலகிலிருந்து ஆலமுல் ஃகைப் ஆகிய மறைவான உலகை நோக்கி அனுப்பப்படுகின்றன. மேலும் அந்தப் புனிதமான நிலைமைகளுடைய பிரதிபலிப்புகளின் கீழ் தொடர்ந்தேர்ச்சையான ஒரு பயணத்துக்குள்ளும் இயக்கத்துக்குள்ளும் சுற்றிச் சுழல்கின்ற அந்த வஸ்துகள் பொடுபோக்குக்காரர்களின் செவிகளுக்கு பிரிவு, அழிவு என்பவற்றின் அவல ஓலங்களையும் நேர்வழி பெற்றவர்களின் செவிகளுக்கு இறை துதிகள், தஸ்பீஹ்களின் ஓசைகளையும் பரிமாறுகின்றன. ஆம், இந்த இரகசியத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வஸ்தும் வாஜிபுல் வுஜூதுடைய நித்தியமான புனித நிலைமைகளை வெளிப்படுத்தும் நித்தியமான காரணிகளாக இருக்கத்தக்க அர்த்தங்களையும் தன்மைகள், திறன்கள், நிலைமைகளையும் இருப்பில் வைத்துவிட்டே செல்கின்றது. மேலும் அந்த வஸ்து தன்னுடைய அத்தனை வாழ்க்கைப் பருவங்களிலும் கடந்த வந்த அத்தனை நிலைமைகள், நிலவரங்களையும் முன் நித்தியமான அறிவின் மகுடங்களாகத் திகழும் இமாமில் முபீன், கிதாபில் முபீன், லவ்ஹுல் மஹ்ஃபூழ் போன்ற அறிவியல் ரீதியான இருப்பின் மண்டலங்களுக்குள் தமது புறவயமான இருப்பைப் பிரதிநிதித்துவம் செய்யத்தக்க விலாவாரியான விபரங்களையும் வைத்துவிட்டே செல்கின்றது. எனவே தற்காலிகமான ஒவ்வொரு வஸ்தும் ஓர் இருப்பைத் துறப்பதன் மூலம் பல்லாயிரம் நித்தியமான இருப்புகளை அடைந்துகொள்கின்றது, அடைந்துகொள்ளக் காரணியாகவும் அமைகின்றது. உதாரணமாக, மிக உயர் தொழிநுட்பத்தைக் கொண்ட ஒரு தொழிற்சாலையின் ஓர் இயந்திரத்தினுள் சில பதார்த்தங்கள் இடப்படுகின்றன. அவை வெளிப் பார்வைக்கு அதற்குள் எரிந்து போகின்றன. ஆனால், அவை அந்தத் தொழிற்சாலையின் பல்வேறு வடிகட்டிகளைக் கடந்து செல்லும் போது மிகவும் பெறுமதி வாய்ந்த பல்வேறு இரசாயனப் பதார்த்தங்களையும் தைலங்களையும் தந்தன. அத்தோடு அந்த செயற்பாட்டின் போது வெளிப்பட்ட சக்தியைக் கொண்டும் ஆவியைக் கொண்டும் அந்தத் தொழிற்சாலையின் ஏனைய சக்கரங்கள் சுழன்றன. ஒரு பிரிவில் பட்டுப்புடவைகள் நெய்யப்படுவதற்கும் இன்னொடு பிரிவில் புத்தகங்கள் அச்சிடப்படும் இயந்திரங்களை இயக்குவதற்கும் இன்னொரு பகுதியில் சக்கரை போன்ற பெறுமதியான பொருட்களின் உற்பத்தியிலும் என்று அதிலிருந்த வெளிப்பட்ட அந்த சக்தி பல்வேறு பணிகளில் பயன்படுத்தப்பட்டன. அதாவது அந்த சாதாரண பதார்த்தங்கள் எரிக்கப்பட்டு, வெளிப் பார்வைக்கு ஏதோ அழிந்து சென்றாலும் அதன் மூலம் பல்லாயிரம் வஸ்துகள் இருப்பை அடைகின்றன. அதாவது, சாமான்யமான ஓர் இருப்பு செல்லும் போது சங்கையான பல்வேறு இருப்புகளை மரபுச் சொத்துகளாக விட்டுவிட்டே செல்கின்றன. இதோ இவ்வாறான ஒரு நிலையில் அந்தச் சாமான்யமான பதார்த்தங்களைப் பார்த்து அவை வீணாகிவிட்டன என்று கூற முடியுமா? தொழிற்சாலையின் உரிமையாளரை, இதோ அந்தப் பாவப்பட்ட பதார்த்தங்கள் மீது பரிதாபப்படாமல் எரித்து, அழித்துப் போடுகிறாரே என்று முறையிட முடியுமா? அவ்வாறே - وَلِلَّهِ الْمَثَلُ اْلاَعْلَى- ஹகீமாகவும் ரஹீமாகவும் வதூதாகவும் திகழும் சர்வ ஞானமும் பேரன்பும்மிக்க, பேரன்புக்குரிய படைப்பாளன் தனது ரஹ்மத்தினதும் ஹிக்மத்தினதும் வதூதியத்தினதும் வேண்டலுக்கமைய இந்தப் பிரமாண்டமான பிரபஞ்சத் தொழிற்சாலைக்கு இயக்கத்தை வழங்கியுள்ளான். அதில் ஒவ்வொரு தற்காலிகமான இருப்பையும் ஏகப்பட்ட நிலைத்த, நித்தியமான இருப்புகளுக்கான விதையாகவும் மகத்தான ரப்பானிய நோக்கங்களுக்கான மூலமாகவும் அமைத்து வைத்துள்ளான். அவனது பரிசுத்தமான நிலைமைகளுக்குப் பாத்திரமானவையாகவும் அவற்றை ஆக்கியுள்ளான். மேலும் விதியின் எழுதுகோளுக்குரிய மையாகவும், குத்ரத்துடைய நெய்தலில் தறி நாடாவாகவும் அவற்றைப் பயன்படுத்துகிறான். இவ்வாறு இன்னும் எம்மால் அறிய முடியாத உன்னதமான நோக்கங்களுக்காகவும் சங்கையான தாத்பரியங்களுக்காகவும் தன்னுடைய வல்லமையின் மூலம் பிரபஞ்சத்தை இயங்க வைக்கிறான். இவ்வாறு அணுக்களுக்கு சுழற்சியையும் பொருட்களுக்கு இயக்கத்தையும் விலங்குகளுக்கு நடமாட்டத்தையும் கோள்களுக்குப் பயணத்தையும் வழங்கி பிரபஞ்சத்தைப் பேச வைக்கிறான். தனது ஆயாத்துகள், அத்தாட்சிகளை அவற்றுக்கு மௌனமாகக் கூறவும் எழுதவும் வைக்கிறான். மேலும் ருபூபியத்தின் அடிப்படையில் வளியை கட்டளைகளுக்கும் நாட்டத்துக்குமான ஒரு வகை அர்ஷாகவும் ஒளியை அறிவுக்கும் ஞானத்துக்குமான ஒரு வகை அர்ஷாகவும் நீரை ஈகைக்கும் ரஹ்மத்துக்குமான ஒரு வகை அர்ஷாகவும் மண்ணைப் பாதுகாப்பு, உயிர்ப்பித்தல் என்பவற்றுக்கான ஒரு வகை அர்ஷாகவும் ஆக்கியுள்ளான். மேலும் அந்த அர்ஷ்களுள் மூன்றின் மீது உலகின் படைப்புகளை நடமாட வைக்கிறான். திட்டமாக அறிந்துகொள்ளுங்கள்: மேலுள்ள ஐந்து குறிப்புகள் மற்றும் ஐந்து அடையாளங்களில் காண்பிக்கப்படுகின்ற மிகப் பிரகாசமான, மிக உன்னத சத்தியங்களைக் காண்பதாக இருந்தால் குர்ஆனிய ஒளியின் மூலமே காண முடியும். அடைந்துகொள்வதாக இருந்தால் ஈமானியப் பலத்தின் மூலமே அடைந்துகொள்ள முடியும். இல்லாவிட்டால் அந்த நித்தியமான சத்தியங்களின் இடத்தை மிகவும் பயங்கரமான ஓர் இருளே சூழ்ந்துகொள்ளும். வழிகேடர்களைப் பொருத்தவரை உலகம் அவர்களுக்கு அழிவுகள், பிரிவுகள், இல்லாமைகளால் நிரம்பி வழிகின்ற ஓர் இடமாகும். பிரபஞ்சம் ஆத்மார்த்தமான ஒரு நரகத்தை ஒத்ததாகும். அனைத்தும் மின்னி மறையும் இருப்புகளாக அவனை முடிவற்ற ஓர் இல்லாமையால் சூழ்ந்துகொள்ளும். அவனைப் பொருத்தவரை ஒட்டுமொத்த இறந்த மற்றும் எதிர்காலங்களும் இல்லாமையின் இருள் நிறைந்ததாகும். வெறுமனே குறுகிய ஒரு நிகழ்காலத்தில் மாத்திரம் மிகவுமே துக்ககரமான ஓர் இருப்பின் ஒளியை அவனால் காண முடியும். ஆனால் குர்ஆனிய ஒளியின் மூலமும் ஈமானிய ஒளியின் மூலமும் ஆதி, அந்தமில்லாமல் நீள்கின்ற ஓர் இருப்பின் ஒளி அவனுக்குப் புலனாகும். அவன அதனோடு ஈடுபாடு கொண்டு அதன் மூலம் ஈருலக நிம்மதியை உத்தரவாதப்படுத்துவான்.

§17

ஓர் எகிப்தியக் கவிஞனைப் போல் கூறுகிறோம்: மூர்ச்சை வானத்தைத் தட்டும் வரை.. சிறை வைக்கப்பட்டுள்ள கூடு சிதைந்து போகும் வரை.. இந்த சத்தம் ஓயும் வரை.. யா ஹக்! யா மவ்ஜூத்! யா ஹய்! யா மாபூத்! யா ஹகீம்! யா மக்ஸூத்! யா ரஹீம்! யா வதூத்! என்றே அழைக்கிறேன். لَٓا اِلٰهَ اِلَّا اللّٰهُ ال۟مَلِكُ ال۟حَقُّ ال۟مُبٖينُ مُحَمَّدٌ رَسُولُ اللّٰهِ صَادِقُ ال۟وَع۟دِ ال۟اَمٖينُ என்று உரக்கக் கூறுகிறேன். اِنَّ ال۟بَع۟ثَ بَع۟دَ ال۟مَو۟تِ حَقٌّ وَ ال۟جَنَّةَ حَقٌّ وَ النَّارَ حَقٌّ وَ اِنَّ السَّعَادَةَ ال۟اَبَدِيَّةَ حَقٌّ وَ اِنَّ اللّٰهَ رَحٖيمٌ حَكٖيمٌ وَدُودٌ وَ اِنَّ الرَّح۟مَةَ وَ ال۟حِك۟مَةَ وَ ال۟مَحَبَّةَ مُحٖيطَةٌ بِجَمٖيعِ ال۟اَش۟يَاءِ وَ شُؤُنَاتِهَا என்பதை உறுதியாக ஈமான் கொண்டு நிறுவிக்கொண்டிருப்பேன். اَل۟حَم۟دُ لِلّٰهِ الَّذٖى هَدٰينَا لِهٰذَا وَمَا كُنَّا لِنَه۟تَدِىَ لَو۟لَٓا اَن۟ هَدٰينَا اللّٰهُ لَقَد۟ جَٓاءَت۟ رُسُلُ رَبِّنَا بِال۟حَقِّ سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ رَبَّنَا لَا تُؤَاخِذ۟نَٓا اِن۟ نَسٖينَٓا اَو۟ اَخ۟طَا۟نَا اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَاةً تَكُونُ لَكَ رِضَاءً وَ لِحَقِّهٖ اَدَاءً وَ عَلٰى اٰلِهٖ وَ صَح۟بِهٖ وَ سَلِّم۟ اٰمٖينَ. وَ ال۟حَم۟دُ لِلّٰهِ رَبِّ ال۟عَالَمٖينَ. سُب۟حَانَ مَن۟ جَعَلَ حَدٖيقَةَ اَر۟ضِهٖ، مَش۟هَرَ صَن۟عَتِهٖ، مَح۟شَرَ خِل۟قَتِهٖ، مَظ۟هَرَ قُد۟رَتِهٖ، مَدَارَ حِك۟مَتِهٖ، مَز۟هَرَ رَح۟مَتِهٖ، مَز۟رَعَ جَنَّتِهٖ، مَمَرَّ ال۟مَخ۟لُوقَاتِ، مَسٖيلَ ال۟مَو۟جُودَاتِ، مَكٖيلَ ال۟مَص۟نُوعَاتِ، فَمُزَيَّنُ ال۟حَي۟وَانَاتِ، مُنَقَّشُ الطُّيُورَاتِ، مُثَمَّرُ الشَّجَرَاتِ، مُزَهَّرُ النَّبَاتَاتِ، مُع۟جِزَاتُ عِل۟مِهٖ خَوَارِقُ صُن۟عِهٖ، هَدَايَاءُ جُودِهٖ، بَرَاهٖينُ لُط۟فِهٖ، دَلَائِلُ ال۟وَح۟دَةِ، لَطَائِفُ ال۟حِك۟مَةِ، شَوَاهِدُ الرَّح۟مَةِ، تَبَسُّمُ ال۟اَز۟هَارِ مِن۟ زٖينَةِ ال۟اَث۟مَارِ، تَسَجُّعُ ال۟اَط۟يَارِ فٖى نَس۟مَةِ ال۟اَس۟حَارِ، تَهَزُّجُ ال۟اَم۟طَارِ عَلٰى خُدُودِ ال۟اَز۟هَارِ، تَزَيُّنُ ال۟اَز۟هَارِ، تَبَرُّجُ ال۟اَث۟مَارِ فٖى هٰذِهِ ال۟جِنَانِ، تَرَحُّمُ ال۟وَالِدَاتِ عَلَى ال۟اَط۟فَالِ الصِّغَارِ فٖى كُلِّ ال۟حَي۟وَانَاتِ وَ ال۟اِن۟سَانِ ، تَعَرُّفُ وَدُودٍ، تَوَدُّدُ رَح۟مَانٍ، تَرَحُّمُ حَنَّانٍ، تَحَنُّنُ مَنَّانٍ لِل۟جِنِّ وَ ال۟اِن۟سَانِ وَ الرُّوحِ وَ ال۟حَي۟وَانِ وَ ال۟مَلَكِ وَ ال۟جَانِّ.

§18

بِاس۟مِهٖ وَ اِن۟ مِن۟ شَى۟ءٍ اِلَّا يُسَبِّحُ بِحَم۟دِهٖ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ قُل۟ مَا يَع۟بَؤُا بِكُم۟ رَبّٖى لَو۟لَا دُعَٓاؤُكُم۟ அதாவது “மனிதர்களே! துஆ இல்லாவிட்டால் உங்கள் பெறுமதிதான் என்ன” என்ற அர்த்தத்தில் வரும் வசனத்தின் ஐந்து குறிப்புகளைச் செவிமடுங்கள்.

§19

துஆ என்பது உபூதியத்துடைய மகத்தான ஒரு தாத்பரியமாகும். ஒரு வகையில் உபூதியத்தின் ரூஹ் என்ற அந்தஸ்துக்குரியதாகும். பல்வேறு இடங்களில் கூறியது போன்று துஆ மூன்று வகைப்பட்டதாகும். முதல் வகை: இது தத்தமது திறன் மொழியால் கேட்கப்படுகின்ற பிரார்த்தனையாகும். எல்லா விதைகளும் தானிய மணிகளும் மகரந்தங்களும் தத்தமது திறன் மொழியால் சர்வ ஞானமிக்க படைப்பாளனிடம் “உன்னுடைய திருநாமங்களின் கலைச் சிற்பங்களை பரந்து விரிந்த அமைப்பில் காட்ச்சிப்படுத்துவதற்காக எம்மை ஓங்கி வளரச் செய்வாயாக. எம்மில் உள்ள சிறிய சத்தியங்களை தளிர்விட்டு வளரச் செய்து விருட்சங்களின் அளவு பெரும் சத்தியங்களாக மாற்றுவாயாக” என்று பிரார்த்திக்கின்றன. மேலும் இந்த வகைக்குற்பட்ட துஆக்களுக்கான ஓர் உதாரணம் காரண காரியங்களின் கூட்டாகும். ஆம், காரண காரியங்களின் கூட்டானது விளைவின் படைப்புக்கான ஒரு பிரார்த்தனையாகும். அதாவது காரண காரியங்கள் கூட்டாக ஒரு நிலையைப் பெறுகின்ற போது அந்த நிலை ஒரு மெய்ம்மொழியாக மாறி விளைவை மாட்சிமைமிக்க வல்லோனிடமிருந்து ஆசிக்கும். உதாரணமாக நீர், வெப்பம், மண், ஒளி என்பன ஒரு விதையைச் சூழ கூட்டுச் சேர்கின்ற போது அந்த நிலை துஆவுடைய வார்த்தைகளாகிவிடுகின்றது. அவை “யா ஹாலிக் இந்த விதையை விருட்சமாக்கிவிடு” என்று அந்த நிலையின் மெய்ம்மொழியால் பிரார்த்திக்கின்றன. ஆம், இறை வல்லமையின் அற்புதமான ஒரு வெளிப்பாடாக உள்ள ஒரு விருட்சம் பிரக்ஞையற்ற, சாமான்யமான அந்தப் பதார்த்தங்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட முடியாது. அது அசாத்தியமானதாகும். அவ்வாறெனில் காரண காரியங்களின் கூட்டு, ஒரு வகை துஆவாகும். இரண்டாவது வகை துஆ: இயல்பான தேவையின் குரல் மூலம் கேட்கப்படுகின்ற பிரார்த்தனையாகும். ஒட்டுமொத்த உயிரினங்களிடமும் உள்ள, அவற்றின் சக்திக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட தேவைகளனைத்தும் பேரன்பும் அருளும் மிக்க படைப்பாளனிடம் கேட்கப்படுகின்ற பிரார்த்தனைகளாகும். அந்தப் பிரார்த்தனைகள் மூலமே அந்த இயல்பான தேவைகள் நினையாப் புறத்திலிருந்து நிறைவேற்றி வைக்கப்படுகின்றன. ஆம், அவற்றின் சக்திக்கு அப்பாற்பட்ட அந்த அருள்களை அறியாத இடங்களிலிருந்து பொருத்தமான நேரங்களில் பேரன்பும் அருளும் ஞானமுமிக்க அந்த வல்லோனே அனுப்பி வைக்கிறான். அவற்றின் கரங்களால் அந்த அருள்களை எட்ட முடியாது. எனவே அந்த அருள்களும் ஈகைகளும் அந்த துஆக்களின் விளைவாகும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். சுருக்கமாக: ஆம், ஒவ்வொரு நொடிப் பொழுதும் எண்ணற்ற துஆக்கள் முழுப் பிரபஞ்சத்திலிருந்தும் இறை சந்நிதானத்தை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கின்றன. அதாவது, காரணிகள் விளைவுகளை அல்லாஹ்விடமிருந்து ஆசிக்கின்றன. மூன்றாவது வகை துஆ: தேவைகள் என்ற வட்டத்துக்குள் பிரக்ஞையுள்ள படைப்புகளால் கேட்கப்படும் துஆக்களாகும். இதுவும் இரண்டு வகைப்படும். அதாவது ஒரு விடயம் கட்டாய நிலையை அடைந்திருந்தால் அல்லது இயல்பான தேவை என்ற நிலைக்கு முற்றிலும் பொருத்தமான கட்டத்தை அடைந்திருந்தால் அல்லது திறன் மொழியை அன்மித்திருந்தால் அல்லது தூய உள்ளுணர்வின் மொழியால் கேட்கப்பட்டால் இந்த வகை துஆக்கள் பெரும்பாலும் அங்கீகரிக்கப்பட்டவையாகும். மனித சமூகத்தின் அனேகமான முன்னேற்றங்கள் அபிவிருத்திகளும் கஷ்ஃபியாத்துகளும் கண்டுபிடிப்புகளும் இந்த வகை துஆக்களின் விளைவுகளாகும். ஆம், நாகரிகத்தின் வியக்கத்தக்க வளர்ச்சிகள் என்று போற்றப்படும் விடயங்கள் ஆத்மார்த்தமான பிரார்த்தனைகளின் விளைவுகளாகும். வியக்கத்தக்க அந்த வளச்சிகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் காரணியாக அமைந்ததையிட்டு மெச்சப்படும் பணிகள் உண்மையில் ஆத்மார்த்தமான பிரார்த்தனைகளாகும். தூய ஒரு திறன் மொழியால் வேண்டப்படுகின்ற காரணத்தினால் அவை வழங்கப்படுகின்றன. ஆம், திறன் மொழியாலும் இயல்பான தேவையின் குரலாலும் கேட்கப்படுகின்ற துஆக்கள் பிரத்தியேகமான தடைகள் ஏதுமின்றி, நிபந்தனைகளுக்குற்பட்டவையாக இருந்தால் அவை என்றும் அங்கீகரிக்கப்பட்டவையாகவே இருக்கும். இரண்டாவது வகை: எமக்குப் பரீட்சயமான துஆக்களாகும். இதுவும் செயல் ரீதியானது, சொல் ரீதியானது என்று இரண்டு வகைப்பட்டதாகும். உதாரணமாக வயலை உழுவது செயல் ரீதியான ஒரு பிரார்த்தனையாகும். இதன் அர்த்தம் ஆகாரத்தை நிலத்திடம் கேட்பதென்பதல்ல. மாறாக நிலம் ரஹ்மத்துடைய கருவூலங்களின் ஒரு கதவாக இருப்பதால் மனிதன் ரஹ்மத்துடைய அந்தக் கதவைக் கலப்பையைக் கொண்டு தட்டுகிறான். மேற்படி எல்லா வகைகளுக்குமான விலாவாரியான விளக்கங்களைத் தவிர்ந்து சொல் ரீதியான துஆவின் ஒரு சில தாத்பரியங்களை மாத்திரம் எஞ்சியுள்ள இரண்டு மூன்று குறிப்புகளில் தெளிவுபடுத்துகிறோம்.

§20

துஆவின் பயன்களும் விளைவுகளும் மகத்தானவையாகும். குறிப்பாக துஆவின் அகிலார்ந்த தன்மை அதிகரித்தவாறு தொடரும் போது, அது பெரும்பாலும் விளைவைத் தருவதோடு அந்த விளைவின் தொடர்ச்சிக்கும் காரணியாக அமையும். ஏன், “இந்தப் பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கான காரணங்களுள் ஒன்று துஆவாகும்” என்றும் கூற முடியும். அதாவது, இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பின் பின்னர் மனித குலமும், அவர்களுக்கு மகுடமாக இஸ்லாமிய உலகமும் அவர்களுக்கு மகுடமாக முஹம்மதே அரபி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும் கேட்ட மகத்தான பிரார்த்தனை பிரபஞ்சத்தின் படைப்புக்கான ஒரு காரணமாகும். அதாவது, பிரபஞ்சத்தின் படைப்பாளன் அந்த உத்தமர் ஒட்டுமொத்த மனித குலத்தின் பெயராலும் ஏன் ஒட்டுமொத்த வஸ்துகளின் பெயராலும் நித்திய நிம்மதியையும் இறை நாமங்களுக்குப் பாத்திரமாக இருக்கின்ற பாக்கியத்தையும் கேட்கப்போவதை அறிந்து, கேட்கப்படப் போகின்ற அந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துள்ளான். ஆம், உண்மையில் துஆ இந்த அளவு மகத்தான முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்த ஒன்றாகும். அவ்வாறெனில் ஆயிரத்தி முன்னூறு வருடங்களாக ஒவ்வொரு காலத்திலும் மனித குலத்தில் முப்பது கோடிப் பேராலும் மனித, ஜின் வர்க்கத்திலுள்ள இலட்சோபலட்சம் நல்லடியார்களாலும் மலக்குகளையும் ரூஹானியாத்களையும் சேர்ந்த எண்ணற்ற சங்கையான ஆத்மாக்களாலும் ஏகோபித்த அமைப்பில் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்காகக் கேட்கப்படும் பிரார்த்தனைகள், அதாவது அண்ணவர்கள் மிகப் பெரிய இறை பொருத்தத்தையும் நித்திய நிம்மதியையும் மிக உயர் அந்தஸ்துகளையும் அடைய வேண்டும் என்பதற்காகவும் அண்ணவர்களுடைய அத்தனை நோக்கங்களும் நிறைவேற வேண்டும் என்பதற்காகவும் கேட்கப்படுகின்ற பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்குமா? அந்தப் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படுவது எந்த வகையிலேனும் சாத்தியமானதா? ஆம், இந்தப் பிராத்தனைகளின் அகிலார்ந்த தன்மையும் தொடர்ச்சியும் வலிமையும் எத்தகையவையெனில் அவை அந்தப் பிரார்த்தனைகளை திறன் மொழிக்கும் இயல்பான தேவையின் குரலுக்கும் நிகரான அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டன. எனவே இந்தப் பிரார்த்தனைகளின் விளைவாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அடைந்துகொண்ட அந்தஸ்தும் பதவியும் எத்தகையதெனில் ஒட்டுமொத்த புத்திகளும் கூட்டுச் சேர்ந்து ஒரே புத்தியாக மாறினாலும் நிச்சயமாக அந்தப் பதவிக்குரிய சத்தியத்தை முழுமையாகக் கிரகித்துக்கொள்ள முடியாது. இதோ முஸ்லிமான மனிதனே! உனக்காக மஹ்ஷர் வெளியில் இப்படிப்பட்ட ஒரு பரிந்துரையாளர் உள்ளார். சங்கைமிக்க அந்தப் பரிந்துரையாளரின் பரிந்துரையைப் பெற்றுக்கொள்வதற்காக அண்ணவர்களின் சுன்னத்களுக்கு வழிப்படு! “ஆம், உண்மையில் அண்ணவர்கள் ஹபீபுல்லாஹ் ஆவார்கள். எனவே இந்த அளவு ஸலவாத்களுக்கும் துஆக்களுக்கும் என்ன தேவை இருக்கின்றது?” என்று கூறுவாயானால்.! பதில்: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒட்டுமொத்த உம்மத்தினதும், உம்மத்தின் ஒவ்வொரு உருப்பினரினதும் எல்லா வகையான நன்மைகள், மகிழ்ச்சிகள், நிம்மதிகளிலும் பங்குதாரராக இருப்பதைப் போன்றே உம்மத்தினதும் உம்மத்தின் உருப்பினர்களினதும் எல்லா வகையான நிர்க்கதிகளையிட்டும் கவலைப்படுபவராகவும் உள்ளார்கள். ஆம், தன்னளவில் நிம்மதி, பூரணத்துவம் என்பவற்றின் எல்லையில்லாத அந்தஸ்துகளை உடையவராக இருக்கும் அதே சமயம், வரையரையற்ற ஒரு காலப்பகுதியில் தனது உம்மத்தின் கணக்கிட முடியாத உருப்பினர்களின் எண்ணற்ற வகை மகிழ்ச்சிகளையும் நிம்மதிகளையும் ஆசிப்பவராகவும் அவர்களுடைய எண்ணற்ற வகை நிர்க்கதிகளால் கவலைப்படுபவராகவும் உள்ள அந்த உத்தமர் நிச்சயமாக எண்ணற்ற ஸலவாத்களுக்கும் துஆக்களுக்கும் அருள்களுக்கும் மிகவுமே அருகதையுடையவர்களாவார்கள். “சில போது திட்டமாக நிகழ இருக்கும் விடயங்களுக்காக துஆச் செய்கிறோம். கிரகணத் தொழுகைகளில் உள்ள துஆக்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். இன்னும் சில போது என்றுமே நிகழாத விடயங்களுக்காக துஆக் கேட்கிறோம்” என்று கூறுவாயானால்.! பதில்: வேறு இடங்களிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதைப் போன்று, துஆ என்பது ஒரு வணக்கமாகும். அடியான் தனது இயலாமையையும் வறுமையையும் துஆவின் மூலம் பிரகடனம் செய்கிறான். வெளிப்படையான நோக்கங்கள் அந்த துஆ அல்லது இபாதத்துக்கான நேரங்களேயன்றி ஹகீகத்தான பயன்களல்ல. இபாதத்துடைய பயன்கள் மறுமை சார்ந்ததாகும். உலகியல் நோக்கங்கள் நிறைவேறவில்லை என்பதற்காக “துஆ ஏற்றுக்கொள்ளப்படவில்லை” என்று கூற முடியாது. மாறாக “இன்னும் துஆவுக்கான நேரம் முடியவில்லை” என்றே கூற முடியும். ஆம், ஈமான் கொண்ட எல்லோரும் எல்லாக் காலங்களிலும் முழுமையான உளச் சுத்தியோடும் தாகத்தோடும் துஆவோடும் சதாவும் ஆசிக்கின்ற நித்திய நிம்மதியான ஒரு வாழ்க்கை அவர்களுக்கு வழங்கப்படாதிருப்பது, அதாவது ஒட்டுமொத்த பிரபஞ்சமுமே அவனது அன்புக்கும் அருளுக்கும் சான்றுபகர்கின்ற போது முத்லக்கான அன்பும் அருளும் ஈகையும் கொண்ட அந்த தயாளன் அந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் நித்திய நிம்மதியான அந்த வாழ்வைப் படைக்காதிருப்பதும் சாத்தியமானதா?

§21

நாட்டத்தின் மூலம் கேட்கப்படும் சொல் ரீதியான துஆ இரண்டு வகைகளில் அங்கீகரிக்கப்படும். ஒன்று, கேட்டது வழங்கப்படும். அல்லது அதைவிடச் சிறந்த ஒன்று வழங்கப்படும். உதாரணமாக, ஒருவர் தனக்கு ஓர் ஆண் குழந்தையைக் கேட்பார். அல்லாஹ், மர்யம் அலைஹிஸ்ஸலாம் போன்ற ஒரு பெண் குழந்தையை வழங்குகிறான். இந்நிலையில் “துஆ அங்கீகரிக்கப்படவில்லை” என்று கூறப்பட முடியாது. மாறாக “அதைவிடச் சிறந்த ஓர் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்டது” என்றே கூறப்படும். அவ்வாறே சில போது தனது இம்மை வாழ்வின் நிம்மதிக்காகப் பிரார்த்திப்பார். அந்த துஆ அவரது மறுமைக்காக ஏற்றுக்கொள்ளப்படும். “துஆ மறுக்கப்பட்டது” என்று கூறப்பட முடியாது. மாறாக “அதைவிட உயர்ந்த ஓர் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது” என்றே கூறப்படும். எல்லா விடயங்களிலும் இவ்வாறுதான். ஆம், சத்திய இரட்சகன் சர்வ ஞானமிக்கவனாவான். நாம் அவனிடம் கேட்கிறோம். அவனும் எமக்குப் பதிலளிக்கிறான். ஆனால் அவன் தனது ஞானத்தைக் கொண்டே எம்முடைய விடயங்களைக் கையாள்கிறான். நோயாளி, வைத்தியருடைய ஞானத்தை நிந்தனை செய்யக் கூடாது. நோயாளி தேனைக் கேட்பான். தேர்ச்சி பெற்ற வைத்தியர் மலேரியாவுக்காக சல்பேட்டை வழங்குவார். அப்போது நோயாளி “வைத்தியர் நான் சொல்வதைக் கேட்கவில்லை” என்று கூற முடியாது. மாறாக அவனது அழுகையையும் வலியையும் மிகச் சிறந்த முறையில் கேட்டு மிகச் சிறந்த பதிலையும் வழங்கியுள்ளார். தேவைப்படுவதில் மிகச் சிறந்ததை நிறைவேற்றியுள்ளார்.

§22

துஆவின் உடனடியாகத் தயார் நிலையிலுள்ள மிக அழகிய, மிகக் கண்குளிர்ச்சியான, மிக இனிமையான ஒரு கனி உள்ளது: ஆம், துஆக் கேட்கின்ற மனிதன் “எனது குரலைச் செவிமடுக்கின்ற ஒருவன் உள்ளான், அவன் எனது நிர்க்கதிகளுக்கு நிவாரணம் வழங்குவான், என் மீது அன்பையும் ஆதரவையும் அருளுவான், அவனது வல்லமை அனைத்தின் மீதும் ஆற்றல் உடையதாகும், நான் இந்தப் பிரமாண்டமான உலகில் தனிமையாகக் கைவிடப்பட்டு திக்குத் தெரியாமல் அலைந்து திரிபவனல்லன், எப்போதும் என்னைப் பார்க்கின்ற, எல்லா நிலைமைகளிலும் எனக்கு உதவி ஒத்தாசையாக இருக்கின்ற சர்வ தயாளனான ஒருவன் உள்ளான், அவனால் எனது எண்ணற்ற தேவைகளை நிறைவேற்றித்தரவும் என்னுடைய எண்ணற்ற எதிரிகளைத் துவம்சம் செய்யவும் முடியும்” என்பதையெல்லாம் அறிவான். எனவே துஆவின் மூலம் அவனது முன்னிலையில் ஆஜராகக் கிடைத்ததையிட்டு மகத்தான ஒரு திருப்தியையும் நிம்மதியையும் உணர்வான். உலகளவு பாரமான ஒரு சுமையைத் தன் மீதிருந்து இறக்கி வைத்த நிம்மதியில் اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ என்று கூறுவான்.

§23

துஆ உபூதியத்தின் ரூஹ் ஆகும்; தூய ஈமானின் விளைவாகும். ஏனெனில் துஆக் கேட்கின்ற மனிதன் துஆவின் மூலம் “முழுப் பிரபஞ்சத்தின் மீதும் அதிகாரமிக்க ஒருவன் உள்ளான், என்னுடைய மிகச் சிறிய விடயங்களைக்கூட அவன் அறிவான், மிகத் தொலைவான என்னுடைய தேவைகள், நோகங்களையும் அவனால் நிறைவேற்றித்தர முடியும், அவன் எனது எல்லா நிலைமைகளையும் காண்பவனாகவும் எனது நலிவான குரலைச் செவிமடுப்பவனாகவும் உள்ளான். அவனே இந்த அனைத்துக் காரியங்களையும் அரங்கேற்றுகிறான். எனவே என்னுடைய மிகச் சிறிய விடயங்களையும்கூட அவனிடமே ஆசிக்கின்றேன், அவனிடமே ஆதரவு வைக்கிறேன்” போன்ற விடயங்களையெல்லாம் காண்பிக்கின்றான். இதோ துஆ வழங்குகின்ற இந்தத் தூய தவ்ஹீதின் விசாலத்தையும் துஆ காண்பித்துத் தருகின்ற ஈமானிய ஒளியின் அப்பழுக்கற்ற இனிமையையும் பார்த்து قُلْ مَا يَعْبَوءُا بِكُمْ رَبِّى لَوْلاَ دُعَاوءُكُمْ என்ற மறை வாக்கிலுள்ள இரகசியத்தைப் புரிந்துகொள். அத்தோடு وَ قَالَ رَبُّكُمُ ادْعُونِى اَسْتَجِبْ لَكُمْ என்ற மறை வாக்கையும் செவிமடு. ஆம், اَگَرْ نَه خَواهِى دَادْ نَه دَادِى خَواهْ என்ற கூற்று கூறுவதைப் போன்று “கொடுக்க விரும்பாதவன் விருப்பத்தைக் கொடுத்திருக்க மாட்டான்” سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ مِنَ ال۟اَزَلِ اِلَى ال۟اَبَدِ عَدَدَ مَا فٖى عِل۟مِ اللّٰهِ وَ عَلٰى اٰلِهٖ وَ صَح۟بِهٖ وَ سَلِّم۟ سَلِّم۟نَا وَ سَلِّم۟ دٖينَنَا اٰمٖينَ ۝ وَ ال۟حَم۟دُ لِلّٰهِ رَبِّ ال۟عَالَمٖينَ

§24

(மிஃராஜுன் நபவி தொடர்பானதாகும்) بِاس۟مِهٖ وَ اِن۟ مِن۟ شَى۟ءٍ اِلَّا يُسَبِّحُ بِحَم۟دِهٖ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ وَلَقَد۟ رَاٰهُ نَز۟لَةً اُخ۟رٰى ۝ عِن۟دَ سِد۟رَةِ ال۟مُن۟تَهٰى ۝ عِن۟دَهَا جَنَّةُ ال۟مَا۟وٰى ۝ اِذ۟ يَغ۟شَى السِّد۟رَةَ مَا يَغ۟شٰى ۝ مَا زَاغَ ال۟بَصَرُ وَمَا طَغٰى ۝ لَقَد۟ رَاٰى مِن۟ اٰيَاتِ رَبِّهِ ال۟كُب۟رٰى (மௌலூதுன் நபி என்ற கஸீதாவின் மிஃராஜுடைய பகுதி தொடர்பான ஐந்து குறிப்புகளைத் தெளிவுபடுத்துகிறோம்.)

§25

மௌலூதை எழுதிய ஸுலைமான் எஃபந்தி, சுவனத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புராக் தொடர்பாக மிகவும் துக்ககரமான ஒரு காதல் சரிதையைக் கூறுகிறார். அவர் அஹ்லுல் விலாயத் என்பதாலும் ஓர் அறிவிப்பை அடிப்படையாக வைத்தே அதைக் கூறுவதாலும் நிச்சயமாக ஒரு சத்தியத்தையே அந்த வடிவில் கூறுகிறார். அந்த சத்தியம் பின்வருமாறு அமைவது அவசியப்படுகின்றது: ஆம், நித்திய உலகின் படைப்புகள் அனைத்தும் ரஸூலே அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஒளியால் ஆகர்ஷிக்கப்பட்டவையாகும். ஏனெனில் அண்ணவர்கள் கொண்டுவந்த ஒளியின் மூலமே சுவனமும் மறுமை இல்லங்களும் மனிதர்களாலும் ஜின்களாலும் கலைகட்டப் போகின்றன. அண்ணவர்கள் இல்லாதிருந்தால் அந்த நித்திய நிம்மதியான வாழ்வும் இருந்திருக்காது. சுவனத்தின் எல்லா வகையான படைப்புகளூடாகவும் உச்ச பயனைக் காண்பதற்கு ஏற்ற திறன்களைக் கொண்ட மனித, ஜின் வர்க்கத்தினரும் சுவனத்தைக் கலைகட்டச் செய்திருக்க மாட்டார்கள். எனவே ஒரு வகையில் சுவனம் ஆளரவமற்ற, பாலடைந்த ஓரிடமாக மாறியிருக்கும். இருபத்தி நான்காவது வார்த்தையின் நான்காவது கிளையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதைப் போன்று ரோஜா மீதான வானம்பாடியின் காதல் கதையில் வானம்பாடியானது விலங்கினத்தின் தாவர இனம் மீதான -காதல் அந்தஸ்தை எட்டியுள்ள- கடுமையான தேவையையும் ஈடுபாட்டையும் காதலையும் பிரகடனம் செய்யும் ஒரு ரப்பானியப் பிரசங்கி என்ற பாத்திரத்தை வகிக்கின்றது. ஆம், விலங்குகளின் ஆகாரங்களை ரஹ்மத் கருவூலங்களிலிருந்து சுமந்து வரும் தாவர இனங்கள் மீது தமது ஈடுபாட்டையும் காதலையும் பிரகடனம் செய்கின்ற வானம்பாடிகளைப் போன்று எல்லா இனங்களுக்கு மத்தியிலும் ஒரு ரோஜாவும் ஒரு வானம்பாடியும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் அந்த இனிமையான ஓசைகளும் கூட வானம்பாடியால் தாவர இனங்களின் மிக அழகியவற்றின் மீது வீற்றிருந்து பாடப்படும் தஸ்பீஹுடைய மனம் கமழும் வரவேற்புக் கீதங்கள் போன்றவையாகும். புராக்கின் காதல் சரிதமும் அவ்வாறானதே. ஆம், வானங்கள் பூமியின் படைப்புக்குக் காரணியாகவும் ஈருலக வெற்றிக்கான வஸீலாவாகவும் ரப்புல் ஆலமீனுடைய ஹபீபாகவும் திகழும் முஹம்மதே அரபி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு வானவர்களுடைய இனத்திலிருந்து ஹழரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எவ்வாறு பூர்த்தியான ஒரு முஹப்பத்தோடு சேவகம் செய்து, அதன் மூலம் மலக்குமார்கள் ஹழரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சிரம் தாழ்த்தி ஸுஜூத் செய்தமைக்குப் பின்னாலுள்ள உன்னத இரகசியத்தை பிரதிபலிக்கின்றாரோ, அவ்வாறே அண்ணவர்கள் மீதான சுவனவாசிகளினதும் ஏன் சுவனத்தின் விலங்கினங்களினதும் ஆழமான தொடர்பும் ஈடுபாடும் அண்ணவர்கள் ஏறிப் பயணித்த புராக்கின் காதல்வயமான அந்த உணர்வின் மூலம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

§26

மிஃராஜுன் நபவியில் இடம்பெற்றுள்ள இன்னொரு சம்பவம்: சத்திய இரட்சகனின் ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீதான எல்லா வகையான குறைகளிலிருந்தும் பரிசுத்தமான, முனஸ்ஸஹான முஹப்பத் قد عشقتُك “நான் உம் மீது காதல் கொண்டேன்” என்ற வார்த்தை மூலம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரயோகமானது அதன் சம்பிரதாயபூர்வமான அர்த்தத்தின் பிரகாரம் வாஜிபுல் வுஜூதுடைய குத்ஸியத்துக்கும் அவனது தாத்துடைய தன்னிறைவான தன்மைக்கும் பொருந்தவில்லை. உண்மையில் ஸுலைமான் எஃபந்தியுடைய மௌலித் உம்மத்தின் பொதுவான ஏற்புக்குப் பாத்திரமானது என்ற வகையிலும் அவர் அஹ்லுல் விலாயத்தையும் அஹ்லுல் ஹகீகத்தையும் சேர்ந்த ஒருவர் என்ற வகையிலும் நிச்சயமாக அந்தப் பிரயோகத்தின் மூலம் அவர் காண்பிக்க நாடிய அர்த்தம் ஸஹீஹானதாகும். அந்த அர்த்தம் பின்வருமாறு: வாஜிபுல் வுஜூத் ஆகிய அல்லாஹ் எல்லையற்ற அழகும் பூரணத்துவமும் உடையவனாவான். பிரபஞ்சம் முழுவதும், அதன் அத்தனை பாகங்களிலும் விரவிக் காணப்படுகின்ற எல்லா வகையான அழகுகளும் பூரணத்துவங்களும் அவனது அழகு, பூரணத்துவம் என்பவற்றின் தடயங்களும் அடையாளக் குறிகளும் அத்தாட்சிகளுமாகும். ஆம், அழகுக்கும் பூரணத்துவத்துக்கும் சொந்தக்காரன் தனது அழகையும் பூரணத்துவத்தையும் நேசிப்பது தெட்டத் தெளிவானதாகும். அவ்வாறே மாட்சிமைமிக்க அந்த வல்லோன் தனது அழகையும் பூரணத்துவத்தையும் மிக அதிகமாக நேசிக்கிறான். சாதாரண நேசங்களைப் போலன்றி தனது தகுதிக்குத் தகுந்த ஒரு முஹப்பத்தோடு நேசிக்கிறான். தனது அழகை நேசிப்பவன் நிச்சயமாக அந்த அழகின் ஒளிக் கீற்றுகளாக உள்ள தனது நாமங்களையும் நேசிப்பான். நாமங்களை நேசிப்பவன் நிச்சயமாக அந்த நாமங்களின் அழகைக் காண்பிக்கும் அவற்றின் கலையம்சங்களையும் நேசிப்பான். அவ்வாறெனில் நிச்சயமாக தனது அழகுக்கும் பூரணத்துவத்துக்கும் கண்ணாடிகளாக இருக்கும் -அந்தக் கலையம்சங்களால் வடிக்கப்பட்ட- கலைப் படைப்புகளையும் நேசிப்பான். மேலும் தனது அழகையும் பூரணத்துவத்தையும் காண்பிக்கும் அந்தக் கலைப் படைப்புகளை நேசிப்பவன் நிச்சயமாகத் தனது நாமங்களின் அழகையும் பூரணத்துவத்தையும் காண்பிக்கின்ற அந்தப் படைப்புகளின் அழகிய தன்மைகள், இயல்புகளையும் நேசிப்பான். ஆம், இந்த ஐந்து வகையான முஹப்பத்களையும் சர்வ ஞானமிக்க குர்ஆன் தனது வசனங்கள் மூலம் குறித்துக் காட்டுகின்றன. ஆம்! ரஸூலே அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சந்தேகமின்றி படைப்புகளுக்கு மத்தியில் மிகப் பூர்த்தியான படைப்பாகவும் இருப்புகளுக்கு மத்தியில் மிக உயர்ந்த ஆளுமையாகவும் உள்ளார்கள். மேலும் அண்ணவர்கள் மிக உயர்ந்த திக்ருகள், தஸ்பீஹ்கள் மூலம் தெய்வீகக் கலையம்சங்களை மிகவுமே விரும்பி, நேசிப்பவராகவும் அது பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்தி அவற்றின்பால் பார்வைகளை ஈர்ப்பவராகவும் உள்ளார்கள். மேலும் இறை நாமங்களில் பொதிந்துள்ள அவனது அழகினதும் பூரணத்துவத்தினதும் கருவூலங்களை குர்ஆனிய மொழியால் திறந்து கொடுக்கிறார்கள். மேலும் பிரபஞ்ச அத்தாட்சிகளையும் அவை பிரபஞ்சத்துடைய படைப்பாளனின் பூரணத்துவத்துக்குச் சான்றுபகர்வதையும் மிகப் பிரகாசமான, மிகத் திட்டமான ஓர் அமைப்பில் குர்ஆனிய மொழியின் மூலம் தெளிவுபடுத்துகின்றார்கள். மேலும், தனது அகிலார்ந்த உபூதியத்தின் மூலம் தெய்வீகப் பரிபாலிப்புக்குக் கண்ணாடியாகத் திகழ்கிறார்கள். மேலும் தன்னுடைய அகிலார்ந்த தன்மையின் மூலம் ஒட்டுமொத்த இறை நாமங்களுக்கும் முழுமையான ஒரு பாத்திரமாக உள்ளார்கள். எனவே நிச்சயமாக, தனது அழகை நேசிக்கின்ற பேரழகும் மாட்சிமையுமிக்க வல்லோன் தனது அழகின் மிகப் பூர்த்தியான பிரக்ஞையுள்ள கண்ணாடியாகிய முகம்மதே அரபி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களையும் நேசிப்பான். மேலும் தன்னுடைய திருநாமங்களையும் நேசிக்கின்ற அந்த வல்லோன், அந்தத் திருநாமங்களின் மிகப் பிரகாசமான கண்ணாடியாகிய முஹம்மதே அரபி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களையும் நேசிப்பான். அண்ணவர்களுக்கு ஒப்பாக முயற்சிப்பவர்களையும் அவரவர் அந்தஸ்துக்கேற்ப நேசிப்பான். மேலும் தனது கலை ஞானங்களை நேசிக்கின்ற அந்த அழகிய படைப்பாளன், நிச்சயமாக அவனது கலை ஞானங்களை மிக உயர்ந்த, மிக கம்பீரமான, மிக அழகிய குரலில் -தரையிலும் கடலிலும் உள்ளவற்றை வசியப்படுத்தி, வானங்களின் முகடுகள் அதிருமளவு பிரபஞ்சமெங்கும் எதிரொலிக்கின்ற- மகத்தான திக்ர்கள் மூலமும் தஸ்பீஹ்கள் மூலமும் பிரகடனம் செய்கின்ற முஹம்மதே அரபி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களையும் நிச்சயமாக நேசிப்பான். மேலும், தனது படைப்புகளை நேசிக்கின்ற அந்த அழகிய படைப்பாளன், தனது படைப்புகளுக்கு மத்தியில் மிகப் பரிபூரணமான உயிரினங்களையும் உயிரினங்கள் மத்தியில் மிகப் பரிபூரணமான பிரக்ஞையுள்ள உயிரினங்களையும் பிரக்ஞையுள்ள உயிரினங்களுக்கு மத்தியில் மிக உயர்வான மனிதர்களையும் மனிதர்களுக்கு மத்தியில் -ஏகமனதாக- மிக மிகப் பூரணத்துவமான முகம்மதே அரபி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களையும் நிச்சயமாக மிக அதிகமாக நேசிப்பான். மேலும், தனது படைப்புகளின் அழகிய பண்புகளையும் சிறப்புகளையும் நேசிக்கின்ற அந்தப் படைப்பாளன், அழகிய பண்புகளில் மிக உயர் அந்தஸ்த்தை உடைய முஹம்மதே அரபி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களையும் நிச்சயமாக நேசிப்பான். அந்தப் பண்புகளில் அவர்களுக்கு ஒப்பாக முயற்சிப்பவர்களையும்கூட அவரவர் அந்தஸ்துக்கேற்ப நேசிப்பான். ஆம், சத்திய இரட்சகனின் ரஹ்மத்தைப் போன்றே முஹப்பத்தும்கூட பிரபஞ்சத்தைச் சூழ்ந்ததாகும். இதோ, மேற்படி ஐந்து பரிமாணங்களுள் ஒவ்வொன்றிலும், இந்த எண்ணற்ற நேசத்துக்குரிய படைப்புகளுக்கு மத்தியில் மிக உயர் பதவி முஹம்மதே அரபி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்குரியது என்பதால்தான் ‘ஹபீபுல்லாஹ்’ என்ற பட்டம் அண்ணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆம், இந்த மிக உயர்ந்த மஹ்பூபியத்துடைய பதவியையே ஸுலைமான் எஃபந்தி “நான் உம் மீது காதல் கொண்டேன்” என்ற வார்த்தை மூலம் பிரஸ்தாபிக்கின்றார். உண்மையில் இந்தப் பிரயோகம் சிந்தனைக்கான ஒரு பூடகமாகும்; மிகத் தொலைவிலிருந்து மேற்படி சத்தியத்தை நோக்கிய ஒரு குறிகாட்டியாகும். கூடவே, உண்மையில் இந்தப் பிரயோகம் அல்லாஹ்வின் ருபூபியத்துடைய அந்தஸ்துக்குப் பொருந்தாத ஓர் அர்த்தத்தை மனக்கண் முன்னால் கொண்டுவருவதால் இதற்குப் பகரமாக “நான் உம்மைப் பொருந்திக்கொண்டேன்” என்று கூறுவதே பொருத்தமானதாகும்.

§27

மிஃராஜுன் நபவியில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள், அறியப்பட்ட மேலோட்டமான அர்த்தங்கள் மூலம், அந்தப் பரிசுத்தமான புனித சத்தியங்களைப் பிரஸ்தாபிக்கப் போதுமானவையல்ல. மாறாக அந்த உரையாடல்கள் சிந்தனையைத் தூண்டும் ஒவ்வொரு மகுடமாக அல்லது பூடகமாகவும் ஆழமான உயர் சத்தியங்களுக்கான ஒவ்வொரு அடையாளக் குறியாகவும் ஒரு தொகுதி ஈமானிய உண்மைகளுக்கான ஒவ்வொரு நினைவூட்டியாகவும் விபரிக்க முடியாத சில அர்த்தங்களுக்கான ஒவ்வொரு சிலேடையாகவுமே உள்ளன. இல்லாவிட்டால் அவை மேலோட்டமாக அறியப்படும் அர்த்தங்களைத் தருகின்ற இதிகாசங்களல்ல. நாம் அந்த உரையாடல்களூடாக எமது சிந்தனா சக்தியையும் கற்பனா சக்தியையும் பயன்படுத்தி அவை நாட வரும் உன்னதமான சத்தியங்களை விளங்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இன்னும் முயன்றால் உள்ளத்தால் மிகவும் பரவசமான ஓர் ஈமானிய அனுபவத்தையும் ரூஹானிய இன்பத்தையும் கூடப் பெற்றுக்கொள்ள முடியும். ஆம், சத்திய இரட்சகனின் தாத்துக்கு மாத்திரமன்றி பண்புகளுக்கும் ஈடிணையோ, ஒப்புவமையோ கிடையாது. அவ்வாறே அவனது ருபூபியத்துடைய புனிதமான நிலைமைகளும் கூட ஈடிணையற்றவையாகும். அவனது பண்புகள் எவ்வாறு படைப்புகளுடைய பண்புகளுக்கு ஒப்பாவதில்லையோ அவனது முஹப்பத்தும் நேசமும் கூட ஒப்பாவதில்லை. அவ்வாறெனில் பின்வரும் பிரயோகங்களை சிலேடை என்ற வகைக்குள் வைத்துக் கூறுகிறோம்: “ஆம், வாஜிபுல் வுஜூத் ஆகிய வல்லோன், தனது வாஜிபான இருப்புக்கும் குத்ஸியத்துக்கும் பொருத்தமான வகையில் அவனது தாத்துடைய தன்னிறைவான நிலைக்கும் முத்லக்கான பூரணத்துவத்துக்கும் உகந்த அமைப்பில் முஹப்பத், நேசம் போன்ற புனிதமான சில நிலைமைகளைக் கொண்டிருக்கிறான். மிஃராஜுன் நபவியில் வரும் சம்பவங்களும் உடையாடல்களும் அதையே நினைவூட்டுகின்றன. மிஃராஜுன் நபவி தொடர்பான முப்பதியோராவது வார்த்தை மிஃராஜுடைய ஹகீகத்களை ஈமானிய உஸூல்களின் வட்டத்துக்குள் இருந்து போதிய அளவு தெளிவுபடுத்துவதால் இந்த இடத்தில் இத்தோடு சுருக்கிக்கொள்கிறோம்.

§28

“எழுபதாயிரம் திரைகளைத் தாண்டி அல்லாஹ்வைக் கண்டார்கள்” என்ற வார்த்தை இடப் பரிமாணத்தையும் இடைவெளியையும் பிரஸ்தாபிக்கின்றது. ஆனால் வாஜிபுல் வுஜூத் இடத்தைவிட்டும் பரிசுத்தமானவனாகவும் அனைத்துக்கும் அனைத்தைவிடவும் நெருக்கமானவனாகவும் உள்ளான். அவ்வாறெனில் இந்த வார்த்தையின் அர்த்தமென்ன? பதில்: முப்பத்தியோராவது வார்த்தையில் இந்த சத்தியம் விவரமாகவும் தெளிவான அத்தாட்சிகளைக்கொண்டும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே இங்கு கீழுள்ள சில விடயங்களை மாத்திரம் கூறுகிறோம்: சத்திய இரட்சகன் எமக்கு மிக மிக மெருக்கமாக உள்ளான். நாமோ அவனைவிட்டும் எல்லையில்லாத தொலைவில் உள்ளோம். நாம் கையில் வைத்துள்ள கண்ணாடியின் மூலம் எவ்வாறு சூரியன் எமக்கு மிக நெருக்கமாக உள்ளதோ, அவ்வாறே பூமியின் மீதுள்ள ஒவ்வொரு ஊடுகான் பொருளும் சூரியனுக்கு ஒரு வகை அர்ஷாகவும் இல்லமாகவும் இருக்கும். சூரியன் பிரக்ஞையுடையதாக இருந்திருப்பின் எமது கையில் உள்ள கண்ணாடியினூடாக எம்முடன் உரையாடியிருக்கும். ஆனால் எமக்கோ அது நான்காயிரம் வருடங்கள் தொலை தூரத்தில் இருக்கின்றது. ஒப்பிடுவதாகவோ இணை கற்பிப்பதாகவோ அமையாதிருக்கட்டும். நித்திய ஒளியாகிய அந்த வல்லோன் அனைத்துக்கும் அனைத்தைவிடவும் மிக நெருக்கமானவனாவான். ஏனெனில் அவன் வாஜிபுல் வுஜூத் ஆகவும் இடத்தைவிட்டும் பரிசுத்தமானவனாகவும் உள்ளான். எந்த ஒன்றும் அவனுக்குத் திரையாக அமைய முடியாது. அனைத்துக்கும் அவன் எல்லையில்லாத தொலைவில் இருக்கின்றான். இதோ, மிஃராஜ் நீண்ட தூரத்தை உடையதாக இருக்க وَ نَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ என்ற மறைவசனம் பிரஸ்தாபிக்கும் இடைவெளியற்ற நிலைக்கும், ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடைய பயணம் நீண்ட தூரங்களைக் கடந்து செல்லும் ஒரு பயணமாக இருக்க ஒரு கனப் பொழுதுக்குள் மீள வருவதிலும் உள்ள இரகசியம் இதுவாகும். ரஸூலே அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய மிஃராஜ் அண்ணவர்களுடைய ஸைருல் ஸுலூக் எனப்படும் ஆத்மீகப் பயணமாகவும் அண்ணவர்களுடைய விலாயத்தின் மகுடமுமாகவும் திகழ்ஸ்கின்றது. அஹ்லுல் விலாயத் ஸைருல் ஸுலூக் மூலம் நாற்பது நாட்கள் முதல் நாட்பது வருடங்கள் வரையிலான ஓர் ஆன்மீக உயர்ச்சியின் மூலம் ஈமானில் ஹக்கல் யகீன் அந்தஸ்தை எட்டுகின்றனர். அவ்வாறே ஒட்டுமொத்த அவ்லியாக்களுக்கும் ஸுல்தானாகிய ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வெறுமேனே உள்ளத்தாலும் ஆத்மாவாலும் மாத்திரமன்றி உடலோடும் உணர்வுகளோடும் ஆன்மீக மற்றும் லௌகீக ரீதியான அத்தனை புலன்களோடும் நாற்பது வருடங்களுக்குப் பதிலாக நாற்பதே நிமிடங்களில் விலாயத்துடைய கராமதுல் குப்ராவாகிய மிஃராஜின் மூலம் தரீகுல் குப்ரா எனப்படும், விலாயத்துக்கான மிக விசாலமான ஒரு பாதையைத் திறந்து, அதனூடாக ஈமானிய சத்தியங்களின் அதி உச்ச அந்தஸ்துகளையும் மர்தபாக்களையும் எட்டினார்கள். மிஃராஜ் என்ற ஏணியின் மூலம் அர்ஷ் வரை சென்று “காbப கவ்ஸைன்” என்ற பிரத்தியேக மகாமிலிருந்து “ஈமான் பில்லாஹ்”, “ஈமான் பில் ஆகிரத்” போன்ற மிக உயர்ந்த ஈமானிய சத்தியங்களை ஐனல் யகீனாகத் தனது கண்களால் தரிசித்தார்கள்; சுவனத்துக்குள் நுழைந்தார்கள்; நித்திய நிம்மதியான வாழ்வையும் கண்டார்கள். மேலும், மிஃராஜின் கதவால் திறந்த அந்த விசாலமான பாதையைத் திறந்தே வைத்தார்கள். அண்ணவர்களின் உம்மத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த அவ்லியாக்களும் ஸைருல் ஸுலூக் மூலம் உள்ளத்தாலும் ஆத்மாவாலும் தத்தமது அந்தஸ்துக்கேற்ப மிஃராஜின் நிழலில் அந்தப் பாதையில் பயணிக்கிறார்கள்.

§29

மௌலூதுன் நபவி, மிஃராஜிய்யா என்பவற்றை ஓதுவது மிகவும் பயன்மிக்க, மிகவும் விரும்பத்தக்க ஒரு இஸ்லாமிய வழக்காறாகும். அத்தோடு அது இஸ்லாமிய சமூக வாழ்வின் மிக அழகிய, மிகப் பிரகாசமான, மிக இனிமையான ஊடாட்டத்துக்கும் கலைகட்டலுக்குமான காரணியாகும். மேலும் ஈமானிய சத்தியங்களை நினைவூட்டும் மிகச் சுகந்தமான, மிகச் சுந்தரமான ஒரு பாடமுமாகும். அத்தோடு ஈமானிய ஒளிகளையும் முஹப்பதுல்லாஹ்வையும் நபி மீதான காதலையும் காட்டித் தந்து, தூண்டிவிடுகின்ற மிகுந்த பரவசமும் செயலூக்கமும் மிக்க ஒரு வஸீலாவாகும். அல்லாஹ் ரப்புல் ஆலமீன், இந்த அழகிய வழக்காறை என்றென்றும் தொடரச் செய்வானாக. ஸுலைமான் எஃபந்தி போன்று மௌலூத் எழுதுபவர்களை அருள்பாலிப்பானாக. அவர்களுக்கு ஜன்னதுல் ஃபிர்தௌஸ் என்ற மேலான சுவன பாக்கியத்தை வழங்குவானாக. ஆமீன்..

§30

ஆம், இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளன் ஒவ்வொரு படைப்பினத்திலும் மிக உயர்ந்த, மிகப் பூர்த்தியான, அந்த இனத்தின் அத்தனை சிறப்புகளையும் அதி உச்ச அளவில் ஒருங்கே பொதியப்பெற்ற ஒவ்வொரு ஆத்மாவைப் படைத்து அதனை அந்த இனத்துக்குப் பெருமையாக ஆக்குகிறான். அப்படிப்பட்ட அந்தப் படைப்பாளன் தனது திருநாமங்களிலுள்ள இஸ்முல் ஆஃஸமுடைய பிரதிபலிப்பின் மூலம் ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலும் ஒட்டுமொத்த வஸ்துகளுக்கும் மத்தியிலிருந்து மிக உயர்ந்த, மிகப் பரிபூரணமான ஓர் ஆத்மாவையும் நிச்சயமாகப் படைப்பான். ஆம், தனது திருநாமங்களுள் ஓர் இஸ்முல் ஆஃஸம் இருப்பதைப் போன்று தனது படைப்புகளுக்கு மத்தியிலும் மிகப் பரிபூரணமான ஓர் ஆத்மாவைப் படைத்து, பிரபஞ்சம் முழுவதும் விரவிக் கிடக்கின்ற அத்தனை பரிபூரணத்துவங்களையும் அந்த ஆத்மாவில் ஒன்றுசேர்த்து அந்த ஆத்மாவின் மூலம் தன்பால் கவனத்தைத் திருப்புவது அவனது ஞானத்திலிருந்துமுள்ளதாகும். அப்படிப்பட்ட ஓர் ஆத்மா நிச்சயமாக உயிரினங்களிலிருந்தே இருக்க வேண்டும். ஏனெனில் படைப்பினங்களுக்கு மத்தியில் மிகவும் பூரணத்துவம் வாய்ந்தவை உயிரினங்களாகும். பின்னர் உயிரினங்களுக்கு மத்தியில் அந்த ஆத்மா நிச்சயமாகப் பிரக்ஞையுள்ள உயிரினங்களிலிருந்தே இருக்க வேண்டும். ஏனெனில் உயிரினங்களுக்கு மத்தியில் மிகப் பூரணத்துவம் வாய்ந்தவை பிரக்ஞையுள்ள உயிரினங்களாகும். பின்னர் ஒப்பாரும் மிக்காருமில்லாத அந்த ஆத்மா மனித இனத்திலிருந்தே இருக்க வேண்டும். ஏனெனில் பிரக்ஞையுள்ள உயிரினங்களுக்கு மத்தியில் எல்லையில்லாத ஈடேற்றத்துக்கான திறன்களைப் பொதியப்பெற்றவனாக மனிதனே இருக்கின்றான். மனிதர்களுக்கு மத்தியில் அந்த ஆத்மா நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகவே இருக்க வேண்டும். ஏனெனில் ஆதமுடைய காலத்திலிருந்து இன்று வரை எந்த ஒரு வரலாறும் அண்ணவர்கள் போன்ற ஓர் ஆளுமையைக் காட்டித்தரவில்லை. காட்டவும் முடியாது. ஆம், அந்த உத்தமர் பூமியின் அரைவாசிப் பகுதியையும் மனித குலத்தின் ஐந்தில் ஒன்றையும் தனது ஆத்மீக அதிகாரத்துக்குக் கீழ் கொண்டு வந்து, இன்று வரை ஆயிரத்தி முன்னூற்றைம்பது வருடங்களாக அந்த ஆத்மீக அதிகாரத்தைப் பூரண மாட்சிமையுடன் எந்த வகையான தளர்வுகளுமின்றித் தொடர்கிறார்கள். அவ்வாறே எல்லா சத்தியவான்களுக்கும், எல்லா வகையான சத்தியங்களுக்கும் ஓர் அகிலார்ந்த ஆசான் என்ற அதி உயர் அந்தஸ்தை உடையவராகத் திகழ்கிறார்கள். மேலும் அழகிய பண்பாடுகள் அனைத்தும் அதி உச்ச அளவில் அண்ணவர்களில் குடிகொண்டிருந்தன என்பதற்கு எதிரிகளும் கூட ஏகமனதாகச் சான்றுபகர்கின்றனர். தனது பணியின் ஆரம்ப நாட்களில் தன்னந்தனியாக முழு உலகத்துக்கும் சவால்விடுத்தார்கள். ஒவ்வொரு நிமிடத்திலும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுடைய நாவுகளில் தவழும் துதியாகத் திகழும் சங்கை மிக்க தெளிவுரையாகிய குர்ஆனைத் தனது கையால் அன்பளிப்புச் செய்தார்கள். ஆம், இப்படிப்பட்ட ஓர் உத்தமர் நிச்சயமாகத் தெரிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த ஒருவராகவே அன்றி இருக்க முடியாது. இப்படிப்பட்ட ஒருவரைத் தவிர வேறு யாரும் அந்த அந்தஸ்துக்குத் தகிதியானவராகவும் இருக்க முடியாது. இந்தப் பிரபஞ்ச விருட்சத்தின் விதையும் அவர்களே, கனியும் அவர்களே. عَلَي۟هِ وَعَلٰى اٰلِهٖ وَصَح۟بِهِ الصَّلَاةُ وَالسَّلَامُ بِعَدَدِ اَن۟وَاعِ ال۟كَائِنَاتِ وَ مَو۟جُودَاتِهَا இதோ இப்படிப்பட்ட ஓர் உத்தமரின் மௌலூது, மிஃராஜிய்யா என்பவற்றைச் செவிமடுப்பதும் அவர்களுடைய ஈடேற்றத்தின் துவக்கத்தையும் உச்சத்தையும் கேட்பதும் அவர்களின் ஆத்மீக சரிதையை அறிந்துகொள்வதும் அந்தச் செம்மல் நபி நாதரைத் தமது தலைவராகவும் செய்யிதாகவும் இமாமாகவும் தமக்குப் பரிந்துரை செய்கின்ற காருண்யக் கடலாகவும் பெற்றுள்ள முஃமின்களுக்கு எந்த அளவு இன்பமும் கண்குளிர்ச்சியும் பயன்களும் பெருமையும் உள்ளொளியும் தருகின்ற ஓர் ஆத்மீகக் களிப்பு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. யா ரப்! ஹபீபே அக்ரம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பொருட்டாலும் உன்னுடைய இஸ்முல் ஆஃஸமின் பொருட்டாலும் இந்த ரஸாயிலை எழுதுபவர்களையும் எடுத்துச் சென்று விநியோகித்து மக்கள் மத்தியில் பரவுவதற்குக் காரணியாக இருப்பவர்களையும் அவர்களின் உற்றார் உறவினர்களையும் அவர்கள் அனைவரின் உள்ளங்களையும் ஈமானிய ஒளிகளுக்குப் பாத்திரமான உள்ளங்களாகவும் அவர்களுடைய பேனாக்களை குர்ஆனிய இரகசியங்களைப் பரப்பும் பேனாக்களாகவும் ஆக்கி வைப்பாயாக. அவர்களுக்கு ஸிராதுல் முஸ்தகீமில் இஸ்திகாமத்தை வழங்குவாயாக. ஆமீன்.. سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ اَل۟بَاقٖى هُوَ ال۟بَاقٖى ஸஈத் நூர்ஸி

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters