Sözler

Leme'at (Gleams)

ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

உம்மத்தைச் சேர்ந்த ஆலிம்களுள் பெரும்பாலானவர்களுக்கும் மக்களில் எல்லோருக்கும் ஆதாரத்தைவிட மூலத்திலுள்ள புனிதத்துவமே வழிப்படுவதற்கான உந்தலையும் அமுல்படுத்துவதற்கான ஊக்கத்தையும் வழங்கும். ஷரீஅத்தில் தொண்ணூறு வீதமானவையாகத் திகழும் தீர்க்கமான பகுதிகளும் மார்க்கக் கடமைகளும் ஒவ்வொரு வைரப் பாலத்தைப் போன்றதாகும். இஜ்திஹாதுக்கும் கருத்து வேறுபாட்டுக்கும் பிரத்தியேக எல்லைக்கும் உற்பட்ட அம்சங்கள் அதிகபட்சம் பத்து வீதமாகும். தொண்ணூறு வைரப் பாலத்தை பத்து தங்கத்தை வைத்திருப்பவர் தனது பையில் போட்டுக்கொண்டு உரிமைகொண்டாட முடியாது. அந்த வைரப் பாலங்களின் மூல ஊற்று நேரடியாகவே குர்ஆனும் ஹதீஸுமாகும். அவை அவற்றின் சொத்தாகும். எப்போதும் நேரடியாக அவற்றை நாடி, அவற்றிலிருந்தே பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். நூல்களும் இஜ்திஹாத்களும் குர்ஆனுக்குக் கண்ணாடியாக அல்லது நுணுக்குக்காட்டியாகவே இருக்க வேண்டும். அற்புத தெளிவுரையாகிய அந்தப் போரொளிக்கு நிழல்களோ பிரதிநிதிகளோ அவசியமில்லை. * * *

§2

இஜ்திஹாதுக்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து, தகுதியுடன் உள்ள ஒவ்வொருவரும் நஸ் இல்லாத போது செய்கின்ற இஜ்திஹாத் சொந்த நஃப்ஸுக்கானதாகும். அது அவருக்கே தேவையானது, பிறர் மீது திணிக்க முடியாது. ஷரீஅத்தை இயற்றுபவர் போன்று உம்மத்தை அழைக்கவும் முடியாது. அவரது புரிதல் ஷரீஅத்திலிருந்துமுள்ளதாக இருக்குமே தவிர ஷரீஅத்தாக முடியாது. முஜ்தஹித் ஆக முடியும். ஆனால் முஷர்ரிஃ ஆக முடியாது. ஜும்ஹூருடைய அதாவது பெரும்பான்மை ஆலிம்களுடைய கருத்தோற்றுமையிலேயே ஷரீஅத்துடைய முத்திரை புலனாகும். ஒரு சிந்தனையை நோக்கிய அழைப்புக்கு ஜும்ஹூருடைய நிலைப்பாடு முதன்மை நிபந்தனையாகும். இல்லாவிட்டால் அதை நோக்கிய அழைப்பு பித்அத் ஆகும், நிராகரிக்கப்படும். * * *

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters