இந்த வார்த்தை பிரபஞ்ச இரகசியங்களையும் சங்கைமிக்க குர்ஆனுடைய மகத்தான இரகசியங்களையும் முடிச்சவிழ்த்து விடுகின்றது.
மூல உரை பாதுகாக்கப்படுகிறது. மாதிரி கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு காட்டப்படும்.
Sözler
The Thirtieth Word
“நான்”, “அணு” என்பவற்றோடு தொடர்பான இரண்டு குறிப்புகள். அந்த வகையில் இது இரண்டு குறிக்கோள்களை உள்ளடக்கியுள்ளது. முதலாவது குறிக்கோள் “நான்” என்பதன் இயல்புகள், தன்மைகள், விளைவுகள் எத்தகையவை என்பதையும் இரண்டாவது குறிக்கோள் “அணு”வின் இயக்கம், நடத்தைகள், பணிகள் எத்தகையவை என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.
اِنَّا عَرَض۟نَا ال۟اَمَانَةَ عَلَى السَّمٰوَاتِ وَال۟اَر۟ضِ وَال۟جِبَالِ فَاَبَي۟نَ اَن۟ يَح۟مِل۟نَهَا وَاَش۟فَق۟نَ مِن۟هَا وَحَمَلَهَا ال۟اِن۟سَانُ اِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا இந்த வசனத்தில் புதைந்துள்ள விசாலமான கருவூலங்களுக்கு மத்தியில் ஒரு முத்தை மாத்திரம் இங்கு அடையாளம் காட்டுகிறோம். அதாவது, வானமும் பூமியும் மலைகளும் சுமப்பதற்கு அஞ்சிய அமானிதம் என்ன என்பது தொடர்பான பல்வேறு சாத்தியப்பாடுகளுள் ஒன்று “நான்” என்பதாகும். ஆம், நான் என்பது ஆதம் அலைஹிஸ்ஸலாமுடைய காலம் முதல் மனித உலகில் ஆழ வேரூண்டியுள்ள, முறையே நன்மைகள், தீமைகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தூபா, ஸக்கூம் எனப்படும் இரு பெரும் விருட்சங்களின் விதையாகும். இந்த மகத்தான சத்தியத்துக்குள் நுழைய முன்னர் அந்த சத்தியத்தை இலகுவாகக் கிரகித்துக்கொள்வதற்காக ஒரு முன்னுரையைத் தெளிவுபடுத்துகின்றோம்: “நான்” என்பது இறை நாமங்களின் இரகசியக் கருவூலங்களுக்கான ஒரு வியக்கத்தக்க திறவுகோலாக இருப்பதைப் போன்றே பிரபஞ்சத்துடைய மறைவான அர்த்தங்களைத் திறந்து தருகின்ற ஒரு விசித்திரமான பூடகமாகவும் உள்ளது. அதன் தன்மை என்ன என்பதை விளங்கிக்கொள்வதன் மூலம் விசித்திரமான ஒரு பூடகமாக அல்லது வியக்கத்தக்க ஒரு திறவுகோலாக உள்ள “நான்” உடைய முடிச்சுகள் அவிழ ஆரம்பமாகும். பின்னர் பிரபஞ்ச இரகசியங்களையும் வாஜிபான உலகின் கருவூலங்களையும் கூடத் திறந்து தர ஆரம்பிக்கும். இந்த விடயத்தோடு தொடர்பாக “ஷம்மா” என்ற பெயரில் நான் எழுதிய ஓர் அரபு ஏட்டில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளேன்: அகிலங்களின் திறவுகோல் மனிதனுடைய கரங்களில் வழங்கப்பட்டு அவனது நஃப்ஸில் தொங்கவிடப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தின் கதவுகள் பார்வைக்கு அகலத் திறந்த நிலையில் காணப்பட்டாலும் யதார்த்தத்தில் மூடியே இருக்கின்றன. சத்திய இரட்சகன் மனிதனுக்கு அகிலங்களின் கதவுகள் அனைத்தையும் திறக்க முடியுமான ஒரு திறவுகோலை நான் என்ற பெயரில் அமானிதமாக வழங்கியுள்ளான். அவ்வாறே நான் அல்லது நானுணர்வு என்ற அந்த பூடகமான திறவுகோலின் மூலம் பிரபஞ்சத்தின் படைப்பாளனுடைய மறைவான கருவூலங்களையெல்லாம் கண்டறிய முடியும். ஆனால் நான் என்பது தன்னளவிலேயே மிகவும் மூடிய, சிக்கலான, அறிந்துகொள்வது சிரமமான ஒரு மர்மமாகும். அதன் உண்மையான தாத்பரியத்தையும் அது படைக்கப்பட்டதிலுள்ள இரகசியத்தையும் அறிந்துகொண்டால் அந்த மர்மம் அவிழ்வதைப் போன்றே பிரபஞ்சத்துடைய மர்மங்களையும் அவிழ்த்துவிடும். அதாவது; சர்வஞானமிக்க படைப்பாளன் தனது ருபூபியத்துக்குரிய பண்புகளையும் புனிதமான நிலைமைகளையும் அறிமுகம் செய்வதற்குத் தேவையான சுவடுகள், மாதிரிகளின் உள்ளடக்கமாகத் திகழும் நானை அல்லது நானுணர்வை மனிதனுடைய கரங்களில் அமானிதமாக வழங்கியுள்ளான். அதாவது அந்த நானுணர்வானது ஓர் ஒப்பீட்டு அளவையாகும். அதன் மூலம் ருபூபியத்துக்குரிய பண்புகளையும் உலூஹியத்துக்குரிய புனிதமான நிலைமைகளையும் அறிந்துகொள்ள முடியும். ஆனால் ஒப்பீட்டு அளவை என்பது ஒரு ஹகீகத்தான இருப்பாக இருக்க வேண்டியது கட்டாயமில்லை. மாறாக கணிதவியலில் இருக்கின்ற கற்பனைக் கோடுகளைப் போன்று அனுமான ரீதியானதாக அல்லது கருத்தளவிலானதாகவும்கூட இருக்க முடியும். மேலும் ஒப்பீட்டு ரீதியான ஓர் அளவைக்கு அறிவியல் ரீதியாக நிரூபனமான ஹகீகத்தான ஓர் இருப்பு கட்டாயமானதல்ல. கேள்வி: சத்திய இரட்சகனின் பண்புகளையும் திருநாமங்களையும் அறிவது ஏன் நானுணர்வோடு பிணைக்கப்பட்டுள்ளது? Elcevap: Çünkü mutlak ve muhit bir şeyin hududu ve nihayeti olmadığı için ona bir şekil verilmez ve üstüne bir suret ve bir taayyün vermek için hükmedilmez, mahiyeti ne olduğu anlaşılmaz. Mesela, zulmetsiz daimî bir ziya, bilinmez ve hissedilmez. Ne vakit hakiki veya vehmî bir karanlık ile bir had çekilse o vakit bilinir. இதோ சத்திய இரட்சகனின் அறிவு, ஞானம், ஆற்றல், வல்லமை, அன்பு போன்ற எல்லாப் பண்புகளும் திருநாமங்களும் அகிலார்ந்தவையாகவும் எல்லையோ முடிவோ தடைகளோ இணை துணையோ பங்காளர்களோ அற்றவையாகவும் இருப்பதால் அவற்றின் விடயத்தில் எத்தகைய முடிவுகளுக்கும் வர முடியாது. அவற்றின் தன்மைகளை அறிவதும் உணர்வதும் கூட சாத்தியமற்றதாகும். எனவே அவை ஹகீகத்தான முடிவுகளோ எல்லைகளோ இல்லாதவையாக இருப்பதால் அறிய வேண்டுமாக இருந்தால் கற்பனையான அல்லது கருத்தளவிலான எல்லைகளை வரைவது அவசியமாகின்றது. இதையே அனானியத் என்ற நானுணர்வு செய்கின்றது. ஆம், அனானியத் என்பது தன்னில் மாயையான ஒரு ருபூபியத்தையும் மாலிகியத்தையும் ஆற்றல், அறிவு என்பவற்றையும் கற்பித்து ஓர் எல்லையை வரையும். அதன் முலம் அகிலார்ந்த பண்புகள் ஒவ்வொன்றுக்கும் கற்பனா ரீதியான ஒவ்வொரு எல்லையை நிர்ணயம் செய்யும். “இது வரை என்னுடையது, இதற்கப்பால் அவனுடையது” என்று ஒரு பங்கீடு செய்யும். இவ்வாறு தன்னிலுள்ள அளவைகள் மூலம் அவற்றின் இயல்புகள், தன்மைகளை மெது மெதுவாக விளங்கிக்கொள்ளும். உதாரணமாக, தனது ஆளுகைக்குற்பட்ட எல்லைக்குள் உள்ள மாயையான ருபூபியத்தின் மூலம் ஒட்டுமொத்த படைப்புகளையும் வியாபித்துள்ள படைப்பாளனுடைய ருபூபியத்தை விளங்கும். அவ்வாறே தனக்குப் புலனாகின்ற மாலிகியத்தின் மூலம் படைப்பாளனுடைய ஹகீகத்தான மாலிகியத் எத்தகையது என்பதைக் கிரகித்துக்கொள்ளும். “நான் இந்த வீட்டின் எஜமானாக இருப்பதைப் போன்றே இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளன் பிரபஞ்ச மாளிகையின் எஜமானாக இருக்கின்றான்” என்று ஏற்றுக்கொள்ளும். அவ்வாறே தனது சொற்பமான அறிவின் மூலம் அவனுடைய அறிவு எத்தகையது என்பதையும், சொந்த உழைப்பில் செய்கின்ற ஒரு சிறு நிர்மானப் பணியின் மூலம் மாட்சிமைமிக்க படைப்பாளனுடைய இல்லாமையிலிருந்து படைக்கின்ற படைப்பாற்றலும் வடிவமைப்பும் எத்தகையவை என்பதையும் கண்டுகொள்ளும். “நான் இந்த வீட்டை நிர்மானித்து ஒழுங்குபடுத்துவதைப் போன்றே, இந்த உலக மாளிகையையும் நிர்மானித்து ஒழுங்குபடுத்திய ஒருவன் இருக்கின்றான்” என்று கூறும். இவ்வாறு அந்த நான் எல்லா விடயங்களிலும் ஓர் ஒப்பீட்டைச் செய்யும். ஆம், தெய்வீகப் பண்புகள் மற்றும் புனிதமான நிலைமைகள் அனைத்தையும் ஓரளவேனும் அறிமுகம் செய்து காண்பிக்கத்தக்க ஆயிரக்கணக்கான மறைவான அர்த்தங்களும் நிலைமைகளும் பண்புகளும் உணர்வுகள், தன்மைகளும் “நான்” இல் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதாவது, நான் என்பது கண்ணாடியைப் போல் அல்லது ஓர் ஒப்பீட்டு ரீதியான அளவையைப் போல் அல்லது புலனாக வைக்கின்ற ஒரு கருவியைப் போல் அல்லது எழுத்தைப் போல் தன்னளவில் அர்த்தம் கொண்டிராத, வேறோர் அர்த்தத்தைப் பிரஸ்தாபிக்கப் பயன்படுகின்ற, மனித உடல் என்ற கனமான கயிற்றில் உள்ள பிரக்ஞைபூர்வமான ஓர் இழை அல்லது மானுடம் என்ற ஆடையில் உள்ள மெல்லிய ஒரு நூல் அல்லது மனித ஆளுமை என்ற புத்தகத்திலுள்ள ஓர் அலிஃப் ஆகும். அந்த அலிஃபின் இரண்டு முகங்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்று நன்மைகளையும் இருப்பையும் நோக்கித் திரும்பியுள்ளது. அந்த முகத்தின் மூலம் ஆத்மீக அனுபவத்துக்கு மாத்திரமே பாத்திரமானதாகும். அளிப்பவனை ஏற்றுக்கொள்ளும், அதனால் எதையும் ஆக்க முடியாது. இந்த முகத்தில் அது கர்த்தா அல்ல. ஆக்க விடயத்தில் அதன் கரம் குட்டையானதாகும். அடுத்த முகம் தீமைகளையும் சூன்யத்தையும் நோக்கியதாகும். இந்தத் திசையில் அதுவே கர்த்தாவாகும். அதன் செயல்களுக்கு அதுவே பொறுப்பாகும். மேலும் அதன் தன்மை எழுத்தைப் போன்றதாகும். எப்போதும் வேறொன்றின் அர்த்தத்தையே காட்டித் தரும். அதன் ருபூபியத்தும் அதிகாரமும் கூட கற்பனா ரீதியானதாகும். அதன் இருப்பு தன்னளவில் எதையும் சுமக்கவோ தாங்கவோ சகிக்கவோ முடியாத அளவு நலிவானதாகும். மாறாக பொருட்களின் வெப்ப நிலை, அமுக்கம் என்பவற்றை அளக்க உதவும் வெப்பமானி, அமுக்கமானி என்பவற்றைப் போன்று அளவை, நிறுவைகள் வரிசைக்குள் எடுக்க முடியுமான ஓர் அளவையாகும். அது சத்திய இரட்சகனின் வரையறைகளோ எல்லைகளோ இல்லாத முத்லக்கான பண்புகளை அறிமுகம் செய்கின்றது. இதோ அதன் தன்மையை இந்த வகையில் அறிந்து, கிரகித்து, அதற்கேற்பக் காரியமாற்றுகின்ற மனிதன் ﻗَﺪْ ﺍَﻓْﻠَﺢَ ﻣَﻦْ ﺯَﻛّٰﻴﻬَﺎ என்ற சுபசோபனத்துக்குப் பாத்திரமானவனாகவும் அமானிதத்தை உரிய விதத்தில் பயன்படுத்திய பாக்கியத்தைப் பெற்றவனாகவும் மாறுவான். மேலும் அந்த நான் என்ற தொலைகாட்டியின் மூலம் பிரபஞ்சம் என்ன சொல்கின்றது அதன் பணி என்ன என்ற விடயங்களையெல்லாம் கண்டுகொள்வான். அப்போது பிரபஞ்சத்துடன் தொடர்பான தகவல்கள் நஃப்ஸை வந்தடைகின்ற போது “நான்” அவற்றை உண்மைப்படுத்தி அங்கீகரிக்கும். அந்த அறிவு ஒளியாகவும் ஞானமாகவும் நிலைகொள்ளும். இருளாகவோ அர்த்தமற்ற பராக்கான ஒரு விடயமாகவோ மாறாது. ஏப்போதெல்லாம் “நான்” தனது பணியை நிறைவு செய்கின்றதோ அப்போது ஒப்பீட்டு அளவையாக உள்ள மாயையான ருபூபியத்தையும் கருத்தளவிலான மாலிகியத்தையும் துறக்கும்; ﻟَﻪُ ﺍﻟْﻤُﻠْﻚُ ﻭَ ﻟَﻪُ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻭَ ﻟَﻪُ ﺍﻟْﺤُﻜْﻢُ ﻭَ ﺍِﻟَﻴْﻪِ ﺗُﺮْﺟَﻌُﻮﻥَ என்று கூறி ஹகீகத்தான உபூதியத்தை எடுத்தொழுகி “அஹ்ஸனி தக்வீம்” என்ற சங்கையான அந்தஸ்துக்கு உயரும். மாறாக, அந்த நான் தான் படைக்கப்பட்ட நோக்கத்தை மறந்து, தனது இயல்பான பணியைப் புறக்கணித்து தன்னை இயம் பொருள் அடிப்படையில் பார்த்தால் அல்லது தன்னையே எஜமானனாக, அதிபதியாகக் கருதி நடந்துகொண்டால் அமானிதத்துக்குத் துரோகமிழைக்கும். மேலும் ﻭَ ﻗَﺪْ ﺧَﺎﺏَ ﻣَﻦْ ﺩَﺳّٰﻴﻬَﺎ என்ற அபாயகரமான எல்லைக்குள் நுழைந்துவிடுவான். ஆம், ஒட்டுமொத்த ஷிர்க்குகளையும் தீமைகளையும் வழிகேடுகளையும் பிரசவிக்கத்தக்க தன்மைகளோடு காணப்படும் நான் உடைய இந்த முகம் காரணமாகவே வானங்களும் பூமியும் மலைகளும் அதைச் சுமப்பதற்கு அஞ்சி நடுங்கின. ஷிர்க்குக்கான சாத்தியப்பாடுள்ள ஒன்றை நெருங்கவும் அவை விரும்பவில்லை. ஆம், நான் என்பது மிக மெல்லிய ஓர் அலிஃபாக, ஓர் இழையாக அல்லது கருத்தளவிலான ஓர் எல்லைக் கோடாக இருந்தாலும் அதன் உண்மையான தன்மை என்ன என்பதை அறிந்து கொள்ளாவிட்டால் பொடுபோக்குத் திரைக்குப் பின்னால் வளர்ந்து, வேரூன்றி, நன்கு பருமனாகி மனித உடலின் எல்லாப் பாககங்களுக்கும் வியாபிக்கும். இராட்சத விலங்கைப் போன்று மனித உடலை விழுங்கிக்கொள்ளும். அப்போது அந்த மனிதன் தனது எல்லா உறுப்புகள், பெறுமானங்களோடும் ஏகமனதாக “நான்” என்பதையே பிரதிநிதித்துவம் செய்வான். அனைத்தும் நான் என்றாகிவிடும். பின்னர் இனம் சார்ந்த அனானியத்தும் கூட இனப் பெருமையாகவும் இன வெறியாகவும் பரிணமித்து தனிப்பட்ட அனானியத்தை ஊட்டி வளர்க்கும். இவ்வாறு இனம் சார்ந்த அனானியத்தில் சார்ந்து நிற்கின்ற தனிப்பட்ட அனானியத்தானது சாத்தானிய உருவில் மாட்சிமைமிக்க படைப்பாளனின் கட்டளைகளுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கும். பின்னர் தனது நஃப்ஸுக்காக அனைத்தையும் தன்னோடு ஒப்பிட்டுப் பார்த்து சத்திய இரட்சகனின் முல்க்கை காரண காரியங்களின் கரங்களில் பகிர்ந்தளிக்கின்ற கைங்கரியத்தை செய்யும். இவ்வாறு மகத்தான ஒரு ஷிர்க்கில் வீழ்கின்ற மனிதன் ﺍِﻥَّ ﺍﻟﺸِّﺮْﻙَ ﻟَﻈُﻠْﻢٌ ﻋَﻈِﻴﻢٌ என்ற வசனத்துக்கான வாழும் உதாரணமாக மாறுவான். ஆம், அரச சொத்திலிருந்து நாற்பது நாணயங்களைத் திருடுகின்ற ஒருவன் சுற்றியுள்ள நண்பர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு நாணயத்தை வழங்குவதன் மூலம் நிலைமையை சமாளித்துக்கொள்வார். அவ்வாறே “நானே எனக்கு அதிபதி” என்று கூறுகின்ற மனிதன் “ஒவ்வொரு பொருளும் தனக்குத் தானே அதிபதியாகும்” என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்படுகின்றான். இதோ, நான் இத்தகைய துரோகத்தில் இருக்கும் போது அதன் நிலையோ சுத்த அறியாமையாகும். ஆயிரக்கணக்கான அறிவியல் துறைகளில் கற்றுத் தேர்ந்திருந்தாலும் ஜஹ்லுல் முரக்கப் எனப்படும் மிக மோசமான அறியாமையிலேயே இருப்பான். ஏனெனில் அவனது உணர்வுகளும் சிந்தனைகளும் பிரபஞ்சத்திலிருந்து ஒளிமயமான தகவல்களைக் கொண்டு வருகின்ற போது, அவனது நஃப்ஸில் அவற்றை உண்மைப்படுத்துவதற்கும் மென்மேலும் பிரகாசிக்கச் செய்வதற்கும் பராமரித்துப் பாதுகாப்பதற்கும் தேவையான பதார்த்தங்கள் இல்லாதிருப்பதால் உடனடியாக அணைந்து போய் விடும். வருகின்ற அனைத்தும் நஃப்ஸிலுள்ள நிறங்களால் நிறம் பூசப்படும். எனவே பரிசுத்த ஞானம் தான் வந்தாலும் அது சுத்த வெறுமையாகவும் பராக்காகவுமே அவனுக்குத் தோற்றமளிக்கும். ஏனெனில் இந்த நிலையில் இருக்கும் நான் உடைய நிறம் ஷிர்க்கும் நிராகரிப்புமாகும். அதாவது அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும் அவனையும் அவனது பண்புகளையும் நிராகரிப்பதுமாகும். முழுப் பிரபஞ்சமும் பிரகாசமான அத்தாட்சிகளால் ஜொலித்தாலும் அந்த நானுணர்வில் இருக்கும் ஒரு கறும் புள்ளி அவற்றை அவனது பார்வையில் அணைத்துவிடும்; காண்பிக்காது. பதினோராம் வார்த்தையில் மனிதனுடைய இயல்பும் அந்த இயல்பில் பொதிந்துள்ள நானுணர்வும் -இயம்பொருள் அடிப்படையில்- எந்த அளவு நுட்பமான ஓர் அளவை என்பதும் எந்த அளவு துல்லியமான ஒரு நிறுவை என்பதும் எந்த அளவு விசாலமான ஓர் உள்ளடக்கம் என்பதும் எந்த அளவு நிறைவான ஒரு வரைபடம் என்பதும் எந்த அளவு அகிலார்ந்த ஒரு கண்ணாடி என்பதும் பிரபஞ்சத்துக்கான எந்த அளவு அழகிய ஒரு சுட்டி என்பதும் மிகவும் திட்டவட்டமாகவும் விலாவாரியாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அங்கு போதுமான விளக்கம் காணப்படுவதால் அதையும் பார்க்குமாறு கேட்டுக்கொண்டு இந்த சுருக்கமான அறிமுகத்தை நிறைவு செய்கிறோம். இந்த அறிமுகத்தை விளங்கிக்கொண்டீர்கள் என்றால் வாருங்கள் இப்போது சத்தியத்துக்குள் நுழைவோம். ஆம், மனித உலகில் ஆதமுடைய காலத்திலிருந்து இன்று வரை இரண்டு மகத்தான மைய நீரோட்டங்களும் இரண்டு சிந்தனைச் சங்கிலிகளும் எல்லாத் திசைகளிலும் மனித குலத்தின் எல்லா வகுப்புகளுக்கு மத்தியிலும் ஊடுறுவி ஆழ வேரூண்டியுள்ள இரு பெரும் விருட்சங்களாக வியாபித்துக் காணப்படுகின்றன. அதில் ஒன்று மறை ஞானம் மற்றும் நுபுவ்வத்துடைய சங்கிலித் தொடராகும். அடுத்தது விஞ்ஞானம் மற்றும் மெய்யியலுடைய சங்கிலித் தொடராகும். இவை அன்றிலிருந்து இன்று வரை மனித வரலாற்றில் இடையறாது தொடர்கின்ற இரண்டு மைய நீரோட்டங்களாகும். எப்போதெல்லாம் இவை இரண்டும் இணைந்து சுமுகமாக நகர்ந்ததோ, அதாவது விஞ்ஞானமும் மெய்யியலும் மறை ஞானத்தின், நுபுவ்வத்தின் நிழலில் புகழிடம் கண்டு, அதற்குக் கட்டுப்பட்டு சேவகம் செய்ததோ அத்தகைய காலங்களிலெல்லாம் மனித குலம் பிரகாசமான ஒரு நிம்மதியையும் மகிழ்ச்சிகரமான ஒரு சமூக வாழ்வையும் அனுபவித்தது. எப்போதெல்லாம் இவை இரண்டும் பிரிந்து வெவ்வேறு பாதைகளில் செல்ல நேரிட்டதோ அப்போதெல்லாம் ஒட்டுமொத்த நன்மைகளும் ஒளியும் நுபுவ்வத்தையும் மறை ஞானத்தையும் சூழ அணி திரள, ஒட்டுமொத்த தீமைகளும் வழிகேடுகளும் விஞ்ஞானம் மற்றும் மெய்யியலை மையமாகக் கொண்டு அவற்றின் பாதங்களை ஸ்திரப்படுத்தின. இப்போது இந்த இரண்டு சங்கிலித் தொடர்களின் மூலங்களும் அடிப்படைகளும் என்ன என்பதை ஆராய வேண்டியுள்ளோம். ஆம், நுபுவ்வத்துடைய பிணைப்பை உதாசீனம் செய்து, அதற்கு வழிப்படாமல் செல்லும் மெய்யியல் பாரம்பரியமானது ஸக்கூம் மரத்துடைய தோற்றத்தில் ஷிர்க் மற்றும் வழிகேடு என்ற இருளை உலகெங்கும் பரப்பி வருகின்றது. அந்த மரம் அதன் பகுத்தறிவு என்ற கிளையில் காலக் கடவுள் கோட்பாடு (dதஹ்ரிய்யூன்), சடவாதம், இயற்கைவாதம் போன்ற கனிகளை மனிதனின் அறிவுக் கரங்களுக்கு வழங்கியது. அவ்வாறே தற்காப்புணர்வு என்ற கிளையிலிருந்து நம்ரூதுகள், பிர்அவ்ன்கள், ஷத்தாதுகள் போன்ற நச்சுக் கனிகளை மனிதனுடைய தலையில் எறிந்தது. அவ்வாறே இச்சை மோகம் என்ற கிளையில் ஏகப்பட்ட கடவுள்களையும் சிலைகளையும் உலூஹியத் கோரும் ஆசாமிகளையும் கனிகளாக வளர்த்தெடுத்துள்ளது. நுபுவ்வத்துடைய பாரம்பரியமானது சுவனத்தின் தூபா மரத்தைப் போன்று வியாபித்துள்ள ஓர் உபூதியத் விருட்சமாகும். அருள்பாலிக்கப்பட்ட அதன் ஒவ்வொரு கிளையும் பூமி என்ற சோலை நிலத்திற்கு ஒவ்வொரு பாக்கியமாகவே காணப்படுகின்றது. பகுத்தறிவு என்ற அதன் கிளை நபிமார்களையும் ரஸூல்மார்களையும் அவ்லியாக்கள் மற்றும் ஸித்தீகீன்களையும் கனிகளாகச் சொரிந்தது. அவ்வாறே தற்காபுணர்வு என்ற கிளை நீதியான ஆட்சியாளர்களையும் நேர்மையான நிர்வாகிகளையும் கவர்ச்சி, ஈர்ப்பு போன்ற கிளைகளில் அன்பும் அழகும் பண்பும் தயாள குணமும் படைத்த வள்ளல்களையும் கனிகளாகச் சொரிந்து மனிதன் எவ்வாறு இந்தப் பிரபஞ்சத்தின் மிகப் பூரணத்துவமான கனி என்பதைக் காண்பித்தது. ஆம், மேற்படி இரு பெரும் விருட்சங்களுக்கும் மூலமாகவும் காரணியாகவும் திகழ்கின்ற அடிப்படையான ஒரு விதையாகிய நான் உடைய அந்த இரண்டு திசைகளைப் பற்றிய தெளிவைப் பார்ப்போம். அதாவது நான் உடைய ஒரு திசை நுபுவ்வத்துடைய கைப் பிடித்துப் பயணிக்கின்றது. அடுத்த திசை மெய்யியலின் கைப்பிடித்துத் தனது பயணத்தைத் தொடர்கின்றது. நுபுவ்வத்துடைய திசையாகிய முதலாவது திசை: இந்தத் திசையில் நான் என்பது தூய உபூதியத்துடைய விதையாகும். அதாவது இங்கு நான் தன்னை அப்தாக அதாவது அடியானாகவே அறியும். எனவே வேறொருவனின் பணியாளாக இருப்பதை அறிந்து தனது கடமையை செவ்வனே நிறைவேற்றும். அதன் தன்மை எழுத்தைப் போன்றதாகும். அதாவது எழுத்து பிறிதொன்றின் அர்த்தத்தையே சுமக்கின்றது. தனது இயல்பும் அவ்வாறானதே என்பதைக் கிரகித்தறியும். அதன் இருப்பும் கூட சார்பியம் உடையதாகும். அதாவது வேறொருவனின் இருப்பின் மூலமே தான் நிலை பெற்றிருப்பதையும் அவனுடைய படைப்பின் மூலமே இருப்பைப் பெற்றிருப்பதையும் நம்பும். அதன் மாலிகியத்தும் கூட மாயையானதாகும். அதாவது தனது எஜமானனுடைய அனுமதியோடு வெறும் தோற்றத்தளவில் தற்காலிகமானதோர் எஜமானத்துவமே தன்னிடம் வழங்கப்பட்டுள்ளது என்பதை அறியும். அதன் சத்தியம் நிழல் ரீதியானதாகும். அதாவது உண்மையான, வாஜிபான ஒரு சத்தியத்தின் பிரதிபலிப்பைச் சுமந்த, தன்னளவில் ஏதுமற்ற ஓர் ஏழை சாத்தியக்கூறாகும். அதன் பணியைப் பொருத்தவரை தனது படைப்பாளனின் பண்புகளையும் புனிதமான நிலைமைகளையும் புரிந்துகொள்வதற்கான அளவையாகவும் நிறுவையாகவும் இருக்கின்ற பிரக்ஞைபூர்வமான ஒரு பணியாகும். ஆம், நபிமார்களும் நபிமார்களை அடியொட்டி அந்த வரிசையில் வந்த அஸ்ஃபியாக்கள், அவ்லியாக்களும் இவ்வாறே நான் என்பதைப் பார்த்தார்கள். எனவே அதனூடாக சத்தியத்தை விளங்கிக்கொண்டார்கள். ஒட்டுமொத்த முல்குகளையும் மாலிகுல் முல்க் ஆகிய படைப்பாளனிடமே சமர்ப்பித்தார்கள். மேலும் மாட்சிமைமிக்க அந்த அரசனின் முல்க்கிலும் ருபூபியத்திலும் உலூஹியத்திலும் எவ்வித இணை துணைகளும் இல்லை என்பதையும் அவன் பங்குதாரர்கள் அல்லது உதவியாளர்கள் மீது எவ்விதத் தேவையும் அற்றவன் என்பதையும் எல்லாவற்றின் திறவுகோல்களும் அவன் கரங்களிலேயே உள்ளன என்பதையும் அவன் எல்லாவற்றின் மீதும் சக்தியுடையவனாக உள்ளான் என்பதையும் காரணகாரியங்கள் என்பது வெறுமனே ஒவ்வொரு திரையாக இருப்பதையும் இயற்கை என்பது பிரபஞ்சத்தின் இயல்பியல் நியதிகளாகவும் அவனது சட்டங்களின் தொகுப்பாகவும் அவனது வல்லமையின் அளவுகோலாகவுமே இருக்கின்றன என்பதையும் முடிவாகக் கண்டுகொண்டு திட்டவட்டமாகத் தீர்ப்புக் கூறினார்கள். இதோ, இந்தப் பிரகாசமான அழகிய முகமானது உயிர்ப்புள்ள அர்த்தபூர்வமான ஒரு விதையை அந்தஸ்தை உடையதாக இருப்பதால் மாட்சிமைமிக்க படைப்பாளன் தூபா மரத்தைப் போன்ற ஓர் உபூதியத் விருட்சத்தை அந்த விதையிலிருந்து படைத்துள்ளான். அதன் கிளைகள் மனித உலகின் எல்லாத் திசைகளையும் பிரகாசமான கனிகளைக்கொண்டு அலங்கரித்துள்ளது. மேலும் கடந்த காலத்தின் எல்லா இருள்களையும் நீக்கி, அந்த நீண்ட நெடிய கடந்தகாலமானது மெய்ஞ்ஞான தத்துவங்கள் கூறுவதைப் போன்ற பிரமாண்டமான ஒரு பிணக்காடோ இருண்டகமோ அல்ல என்பதையும் எதிர்காலத்துக்கு அதாவது நித்திய நிம்மதியான ஓர் உலகுக்குச் செல்வதற்காக உலகைத் துறந்து செல்லும் ஆத்மாக்களுக்கான ஒரு கடவையாக அல்லது பல்வேறு படித்தரங்களைக் கொண்ட ஒரு மிஃராஜாக இருப்பதையும் அகோரமான சுமைகளை இறக்கி வைத்த பின்னர் விடுதலை பெற்று இந்த உலகிலிருந்து புலம் பெயர்ந்து செல்கின்ற ஆத்மாக்களுடைய ஒளிமயமான ஒரு மேடையாகவும் பிரகாசமான ஒரு சமவெளியாகவும் இருப்பதையும் காட்டித் தரும். “நான்” உடைய இரண்டாவது திசையையோ மெய்யியல் ஞானம் கைப்பிடித்துள்ளது. மெய்யியல் ஞானம் நான் என்பதை இயம்பொருள் அடிப்படையிலேயே பார்க்கின்றது. அதாவது தனக்குத் தானே ஆதாரமாகும் என்று கூறுகின்றது. தனது பெயரால் காரியமாற்றுகின்ற ஒன்றாகப் பார்க்கின்றது. அதன் அர்த்தமோ தன்னிலிருந்தே உள்ளதாகவும் சுயம் சார்ந்ததாகவும் தீர்ப்பளிக்கின்றது. மேலும் அதன் இருப்பையும் கூட அசலானதாகவும் பூர்வீகமானதாகவும் சுயமானதாகவுவே கருதுகின்றது. அதாவது தாத்தில் சுயமாகவே அதன் இருப்பும் உள்ளது என்று கூறும். அதற்கும் ஒரு வாழ்வுரிமை உள்ளது, அதுவே தனது செயல்களின் படைப்பாளனாகவும் எஜமானனகவும் உள்ளது என்று கற்பிதம் செய்கின்றது. அதை ஒரு நிலையான சத்தியமாகவே கருதுகின்றது. அதன் பணிகளையும் கூட சுய காதல் ஊடாக ஏற்படும் ஒரு சுய முதிர்ச்சியின் வெளிப்பாடாக அறிந்து வைத்திருக்கின்றது. இப்படிப்பட்ட ஏராளமான வெற்று அடிப்படைகளின் மீதே அவர்கள் தமது கோட்பாடுகளைக் கட்டியெழுப்பியுள்ளனர். அந்த அடிப்படைகள் எந்த அளவு அடிப்படையற்றவையும் வேலைக்காகாதவையும் என்பதை ரிஸாலே நூரின் பல்வேறு இடங்களிலும் குறிப்பாக பன்னிரண்டாவது மற்றும் இருபத்தைந்தாவது வார்த்தைகளிலும் திட்டவட்டமாக நிறுவியுள்ளோம். ஏன் மெய்யியல் ஞானப் பாரம்பரியத்தில் மிகவும் கைதேர்ந்த விற்பன்னர்களாகத் திகழ்ந்த பிளேட்டோ, அரிஸ்டோடில், இப்னு ஸீனா, ஃபராபி போன்ற மாமேதைகள் “மனிதனுடைய மிக உன்னத இலக்கு தஷப்பூஹு பில் வாஜிப்” அதாவது வாஜிபுல் வுஜூத் ஆகிய இறைவனுக்கு ஒப்பாவதாகும் என்று கூறி பிர்அவ்னியத்தான ஒரு தீர்ப்பை முன்வைக்கின்றனர். இதன் மூலம் நானுணர்வைத் தூண்டி ஷிர்க்குடைய பள்ளத்தாக்கில் இலவசமாக அழைத்துச் சென்று காரணகாரிய வாதம், சிலை வணக்கம், இயற்கை வணக்கம், நட்சத்திர வணக்கம் போன்ற ஏராளமான ஷிர்க்குகளுக்கான வாயிலைத் திறந்து கொடுத்தார்கள். மனிதனுடைய அடிப்படையில் ஒட்டியுள்ள இயலாமை, பலவீனம், வறுமை, தேவைகள், குறைபாடுகள் போன்ற கதவுகளை இழுத்து மூடி உபூதியத்துக்கான பாதையை மறைத்துவிட்டார்கள். இயற்கைக்குள் புதைந்து ஷிர்க்கிலிருந்து முழுமையாக வெளியேற முடியாதவர்களாக இருந்த காரணத்தால் அவர்களால் ஹம்துக்கும் ஷுக்ருக்குமாகத் திறந்துள்ள விசாலமான கதவுகளைக் கண்டுகொள்ள முடியாமல் போனது. நுபுவ்வத்துடைய பாரம்பரியமானது மனிதனுடைய இலக்குகளையும் பணிகளையும் தெய்வீக நெறிகளாலும் அழகிய குணங்களாலும் அலங்கரிக்கின்றது. கூடவே அந்தப் பாதை இயலாமையை அறிந்து இறை வல்லமையில் அடைக்கலம் தேடுவதற்கும் பலவீனத்தை அறிந்து இறை ஆற்றலில் தஞ்சம் தேடுவதற்கும் வறுமையை உணர்ந்து இறை கருணையில் ஆதரவு வைப்பதற்கும் தேவைகளை அறிந்து இறைவனின் தயாள குணத்தில் ஆசி வைப்பதற்கும் குற்றங்களை உணர்ந்து இறை மண்ணிப்பில் ஆதரவு வைப்பதற்கும் குறைகளை உணர்ந்து இறைவனின் பூரணத்துவத்தைத் துதிப்பவனாக மாறுவதற்கும் வழிகாட்டும் உபூதியத்துடைய பாதையாகும். இதோ இறை வழிகாட்டலுக்குக் கட்டுப்படாத மெய்யியல் ஞானம் இவ்வாறு பாதை தடுமாறிய காரணத்தினால்தான் நான் தன்னுடைய கடிவாளத்தைத் தானே பிடித்துக்கொண்டு எல்லா வகையான வழிகேடுகளை நோக்கியும் கட்டுப்பாடின்றிப் பயணிக்கின்றது. ஆம், இந்த வகையான நான் உடைய தலை மீது ஸக்கூம் எனப்படும் நரகத்துக்குரிய விருட்சம் ஓங்கி வளர்ந்து மனித உலகின் அரைவாசிக்கும் அதிகமானதை ஆட்கொண்டுள்ளது. அந்த விருட்சத்தின் இச்சை மோகம் என்ற கிளையில் மனிதனுடைய பார்வைகளை ஈர்க்கின்ற கனிகளாக சிலைகளும் கடவுளர்களும் உள்ளன. ஏனெனில் மெய்யியல் ஞானத்துடைய அடிப்படையில் பலம் என்பது கவர்ச்சியானதாகவே பார்க்கப்படுகின்றது. “அல் ஹுக்மு லில் gகாலிப்” என்பது ஒரு முக்கிய விதியாகும். அதாவது “வெற்றியாளனிடம் பலம் இருக்கின்றது. பலத்தில் சத்தியம் இருக்கின்றது” என்பதே இதன் முடிவாகும். இதன் மூலம் மெய்யியல் ஞானமானது அநீதிக்கு ஆத்மார்த்தமாக ஆதரவு வழங்கி அக்கிரமக்காரர்களை ஊக்குவிப்பதோடு அவ்வாறான கொடுங்கோலர்களுக்கு உலூஹியத் (இறைமை) கோருவதற்கான உந்துதலையும் வழங்குகின்றது. அவ்வாறே சிருஷ்டிகளிலும் அவற்றின் வடிவமைப்புகளிலும் காணப்படும் அழகையும் கவர்ச்சியையும் அவற்றுக்கே சொந்தமானவையாகப் பிரஸ்தாபிப்பதால் -படைப்பாளனின் புனிதமான அழகின் பிரதிபலிப்புக்கு ஆதாரப்படுத்தி “எவ்வளவு அழகாக ஆக்கப்பட்டுள்ளது” என்று கூறுவதற்குப் பதிலாக- “எவ்வளவு அழகானது” என்று கூற வைக்கும். அதாவது அந்தப் படைப்பை ஈடுபாட்டுக்கும் காதலுக்கும் தகுதியான ஒரு சிலையுடைய நிலைக்குக் கொண்டுவரும். மேலும், மாயையாகவும் பகட்டாகவும் முகஸ்துதியாகவும் இருந்தாலும் கூட எல்லோருக்கும் விற்க முடியுமான ஒரு சிறப்பை அல்லது அழகை விளம்பரம் செய்வதால் அதற்குக் கரகோஷம் போடுபவர்களுக்கு முன்னால் முகஸ்துதியோடு ஆஜராகின்றனர். இவ்வாறு அவர்களை சிலைகளை ஒத்த நிலைக்குக் கொண்டு வந்த அவர்களின் அடியாட்களுக்கு அவர்களும் அடியானாக ஆகிவிடுகின்றனர். அதாவது சிலையாக வணங்கும் அளவு தன் மீது மோகம் கொண்ட ரசிகசிகாமனிகளின் முன்னிலையில் அவர்களுடைய இச்சைகளுக்கு விருந்தாக அமைவதற்காக முகஸ்துதியோடும் பகட்டோடும் ஆஜராகி அவர்களுக்கு ஒரு வகையான வணக்கம் செலுத்தும் நிலையை அடைகின்றனர். அந்த விருட்சத்தின் தற்காப்புணர்வு என்ற கிளையில் சிறிய மற்றும் பெரிய நம்ரூதுகளையும் பிர்அவ்ன்களையும் ஷத்தாதுகளையும் கனியச் செய்தது. அவ்வாறே பகுத்தறிவு என்ற கிளையில் மனித குலத்தின் சிந்தனையினூடாக காலக் கடவுள் கோட்பாட்டு சடவாதம் மற்றும் இயற்கைவாதம் போன்ற சித்தாந்தங்களைக் கனிகளாகக் கொடுத்து மனித மூளையை ஆயிரம் துண்டுகளாக சிதறடித்துவிட்டது. இப்போது இந்த சத்தியத்தை இன்னும் பிரகாசமாகக் காட்டுவதற்காக மெய்யியல் பாரம்பரியத்தின் வெற்று அடிப்படைகளிலிருந்து தோற்றம் பெறும் விளைவுகளோடு நுபுவ்வத்துடைய பாரம்பரியத்தின் தூய உண்மையான அடிப்படைகளிலிருந்து தோற்றம் பெறுகின்ற சில விளைவுகளை ஒப்பிடுவோம். இந்த இடத்தில் ஆயிரக்கணக்கான உதாரணங்களுள் வெறும் நான்கை மாத்திரம் குறிப்பிடுகின்றோம். உதாரணமாக: நுபுவ்வத்துடைய விதிகளுள் ﺗَﺨَﻠَّﻘُﻮﺍ ﺑِﺎَﺧْﻠﺎَﻕِ ﺍﻟﻠّٰﻪِ என்ற விதியானது அதாவது “தெய்வீக பண்புகளைக் கொண்டு தனது பண்புகளை அலங்கரித்து, தனது இயலாமையையும் வறுமையையும் குறைகளையும் அறிந்த நிலையில் முற்றாக அவனையே சார்ந்து அவனது சந்நிதானத்தில் புகலிடம் தேடுதல்” என்ற விதி தனி நபர் வாழ்வில் ஏற்படுத்துகின்ற விளைவுகள் எங்கே? மெய்யியல் பாரம்பரியம் முன்வைக்கும் விதிகளுள் “தஷப்புஹு பில் வாஜிப்” அதாவது “வாஜிபுல் வுஜூத் ஆகிய இறைவனுக்கு ஒப்பாவதே மனிதன் பூரணத்துவத்தை எட்டுவதற்கான இலக்காகும்” என்ற விதி தனி மனித வாழ்வில் ஏற்படுத்துகின்ற அகம்பாவத்தனமான விளைவுகள் எங்கே? ஆம், எல்லையில்லாத இயலாமை, பலவீனம், வறுமை மற்றும் தேவைகளின் மொத்தமாக இருக்கும் மனிதனுடைய நிலை எங்கே? எல்லையில்லாத ஆற்றலும் வல்லமையும் பலமும் தயாள குணமும் கொண்ட வாஜிபுல் வுஜூத் ஆகிய இறைவனின் அந்தஸ்தும் சிறப்பும் எங்கே? இரண்டாவது உதாரணம்: நுபுவ்வத்துடைய விதிகளுள் சூரியனையும் சந்திரனையும் சமநிலையில் வைத்து, தாவரங்களை விலங்குகளின் உதவிக்காகவும், விலங்குகளை மனிதர்களின் உதவிக்காகவும், அணுக்களை உடற் கலங்களின் உதவிக்காகவும் ஓட்டுவிக்கின்ற பரஸ்பர உதவி, ஒத்துழைப்பு, தியாகம் போன்ற விதிகளும் சமூக வாழ்வில் அவை ஏற்படுத்துகின்ற விளைவுகளும் எங்கே? மெய்யியல் ஞானம் சமூக வாழ்வுக்கு வழங்கிய போராட்ட விதி எங்கே? உண்மையில் இது அக்கிரமக்கார மனிதர்களும் மூர்க்கத்தனமான விலங்குகளும் தமது திறன்களைத் துஷ்பிரயோகம் செய்வதால் தோன்றிய ஒரு மாயையே அன்றி வேறில்லை. இதை மெய்யியல் ஞானம் எந்த அளவு ஆழமாகத் தனது அடிப்படைகளுக்குள் உள்வாங்கிக்கொண்டதெனில் “வாழ்க்கை என்பது போராட்டமாகும்” என்ற முட்டாள்தனமான ஒரு தீர்ப்பை சமூக வாழ்வின் அத்திவாரத்தில் வைத்து சமூக வாழ்வை சிதைத்துவிட்டது. மூன்றாவது உதாரணம்: இறைவனுடைய ஏகத்துவம் தொடர்பாக நுபுவ்வத் முன்வைக்கின்ற சங்கையான விதிகள், விளைவுகளுள் ஒன்று ﺍَﻟْﻮَﺍﺣِﺪُ ﻟﺎَ ﻳَﺼْﺪُﺭُ ﺍِﻟﺎَّ ﻋَﻦِ ﺍﻟْﻮَﺍﺣِﺪِ என்பதாகும். அதாவது “ஒன்றில் ஓர்மை அல்லது ஒருமைப்பாடு காணப்படுமாக இருந்தால் அது நிச்சயமாக ஒன்றில் இருந்தே வெளிப்பட வேண்டும். அந்த வகையில் ஒட்டுமொத்த வஸ்துகளிலும் ஒரு ஓர்மை காணப்படுகின்றது. எனவே அவை அனைத்தும் தனி ஒருவனுடைய படைப்புகளாகும்” என்பதே அந்த விதியும் விளைவுமாகும். இப்படிப்பட்ட சங்கையான தவ்ஹீதிய விதி எங்கே? பண்டைய மெய்யியல் ஞானம் முன்வைத்த ﺍَﻟْﻮَﺍﺣِﺪُ ﻟﺎَ ﻳَﺼْﺪُﺭُ ﻋَﻨْﻪُ ﺍِﻟﺎَّ ﺍﻟْﻮَﺍﺣِﺪُ அதாவது “ஒன்றிலிருந்து ஒன்றே வெளிப்படும். அதாவது ஒருவனிடமிருந்து ஆரம்பமாக ஒன்றே வெளிப்படும். ஏனையவைகள் அதிலிருந்து காரணிகள், சாதனங்கள் மூலமே வெளிப்படும்” என்ற விதி எங்கே? ஆம், சர்வ வல்லமை மிக்கவனாகவும் பெரும் செல்வந்தனாகவும் உள்ள படைப்பாளனை பலவீனமான காரணிகள் மீது தேவையுடையவனாகப் பிரகடனம் செய்து ஒட்டுமொத்த காரண காரியங்களுக்கும் ருபூபியத்தில் ஒரு பங்கை வழங்குவதும், மாட்சிமைமிக்க படைப்பாளனுக்கு “அக்லுல் அவ்வல் - முதல் அறிவு” என்ற நாமத்தில் ஒரு படைப்பை வழங்கி, பின்னர் ஏனைய அனைத்து வஸ்துகளையும் காரண காரியங்களுக்குப் பகிர்ந்தளிப்பதன் மூலம் மகத்தான ஒரு இணைவைப்புக்கான வாயிலைத் திறந்துகொடுப்பதும் நுபுவ்வத்துடைய ஏகத்துவ விதிகளுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் முன்னால் எம்மாத்திரம்? மெய்யியல் மேதைகளுக்கு மத்தியில் மிக உயர் ஸ்தானத்தில் காணப்படுகின்ற இஷ்ராகிய்யூன்களின் நிலையே இவ்வாறு நகைப்புக்கிடமானதாக இருந்தால் சடவாதிகள், இயற்கைவாதிகள் போன்ற கீழ்த்தட்டு சித்தாந்தங்களின் நிலை எவ்வளவு பரிதாபகரமானது என்பதை இலகுவாக ஒப்பிட்டுக்கொள்ள முடியும். நான்காவது உதாரணம்: நுபுவ்வத்துடைய சர்வ ஞானம் பொதியப்பெற்ற ஒரு விதி ﻭَ ﺍِﻥْ ﻣِﻦْ ﺷَﻰْﺀٍ ﺍِﻟﺎَّ ﻳُﺴَﺒِّﺢُ ﺑِﺤَﻤْﺪِﻩِ என்பதாகும். அதாவது ஒவ்வொரு வஸ்திலும் ஒவ்வொரு உயிரிலும் பொதிந்துள்ள விளைவுகளிலும் நோக்கங்களிலும் தாம் சார்ந்த தாத்பரியங்களும் நோக்கங்களும் ஒன்றெனில் படைப்பாளன் சார்ந்தவை ஆயிரக்கணக்கானவையாகும். இந்த வகையில் ஒவ்வொரு வஸ்திலும் உதாரணமாக ஒவ்வொரு விதையிலும் ஒரு மரத்தின் மொத்த கனிகளைவிட அதிகமான தாத்பரியங்கள் பொதிந்துள்ளன. தூய ஞானத்தைப் பொதியப்பெற்ற இப்படிப்பட்ட ஒரு விதியும் அதன் விளைவுகளும் எங்கே? “எல்லா உயிர்களின் விளைவுகளும் தாத்பரியங்களும் அதனதனோடு அல்லது மனித நலனோடு மாத்திரம் சுருங்கியதாகும்” என்று மெய்யியல் ஞானம் முன்வைக்கின்ற விதி எங்கே? இது பிரமாண்டமான ஒரு விருட்சத்துக்கு கடுகுமணியளவேயான ஒரு கனியை அல்லது விளைவைக் கோர்ப்பதைப் போன்ற அர்த்தமற்ற வெற்று வாதமாகும். இந்த யதார்த்தம் பத்தாவது வார்த்தையின் பத்தாவது சத்தியத்தில் சற்றுத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதால் இத்தோடு சுருக்கிக்கொள்கிறோம். இதோ, இந்த நான்கு உதாரணங்களுக்கு இன்னும் ஆயிரக்கணக்கான உதாரணங்களை சேர்க்கலாம். ஆம், மெய்யியல் ஞானத்தின் இந்த வெற்று அடிப்படைகள் மற்றும் மாயையான விளைவுகளின் பகட்டான கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அவற்றில் மயங்கிய இப்னு ஸீனா, ஃபராபி போன்ற இஸ்லாமிய உலகில் தோன்றிய மெய்ஞ்ஞான மேதைகள் அத்தகைய ஒரு பாதையில் நுழைந்த காரணத்தினால் சாதாரண ஒரு முஃமினுடைய அந்தஸ்தையே அவர்களால் அடைந்துகொள்ள முடிந்தது. ஏன் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி போன்ற இமாம்கள் அவர்களுக்கு அந்த அந்தஸ்தையும்கூட வழங்கவில்லை. மேலும் இல்முல் கலாம் துறையில் மிகவும் தேர்ந்த, முதபஹ்ஹிரீன் என்று அழைக்கப்பட்ட முஃதஸிலா இமாம்களும் கூட அவற்றின் மேலோட்டமான கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, அந்த சிந்தனைகளோடு உறவாடி, இறுதியில் பகுத்தறிவை முற்படுத்துகின்ற நிலையை அடைந்ததால் அவர்களால் பாவியான, பித்அத்வாதியான முஃமின் என்ற அந்தஸ்தையே எட்ட முடிந்தது. அவ்வாறே, இஸ்லாமிய உலகில் தோன்றிய இலக்கியவாதிகளுக்கு மத்தியில் அபசகுணத்துக்குரியவராக அறியப்படும் அபுல் ஆலாஉ மஆர்ரி போன்றவர்களும் அநாதரவான அழுகைகளின் சொந்தக்காரனாக வர்ணிக்கப்படும் உமர் ஹய்யாம் போன்றவர்களும்கூட அந்த சிந்தனைப் பாரம்பரியத்தின் நஃப்ஸுல் அம்மாராவைப் போஷிக்கின்ற கூறுகளை உட்கொண்ட காரணத்தினால் சத்தியவான்களின் மிகக் கடுமையான கண்டனங்களுக்கு முகம் கொடுத்தார்கள். “ஒழுக்கக் கேடாக நடந்து கொள்கிறீர்கள், மார்க்கத்திலிருந்து தூரமாகிச் செல்கிறீர்கள், மார்க்கமில்லாதவர்களை உருவாக்கின்றீர்கள்” போன்ற எச்சரிக்கைக் கணைகளால் நெறிப்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருந்தார்கள். மேலும் மெய்யியல் ஞானத்தின் வெற்று அடிப்படைகள் காரணமாகவும் அதன் சகுனம் சரியில்லாத பார்வையானது சொல் பொருள் அடிப்படையில் மாத்திரமே பார்ப்பதாலும் தன்னளவில் காற்றைப் போன்ற இலகுவான ஒரு தன்மையாக இருக்கும் நான் என்பது நீராவியைப் போன்று படிய ஆரம்பமாகும். பின்னர் சடத்தின் மீதான தீவிர ஈடுபாடு, உல்ஃபத் என்பன காரணமாக பணிக்கட்டி போல் திரட்சி நிலையை அடையும். பின்னர் பொடுபோக்கு, நிராகரிப்பு என்பன காரணமாக முற்றிலும் திண்ம நிலையை அடைந்து இறுதியில் நிராகரிப்பு கலகமாக மாறுகின்ற போது அர்த்தம் ஊடறுக்க முடியாத அளவு கலங்களானதாகவும் மாறும். பின்னர் போகப் போகப் பருமனாகிச் சென்று தனது ஆத்மாவையே விழுங்கும். பின்னர் ஏனைய மனிதர்களையும் காரண காரியங்களையும் தன்னோடும் தனது நஃப்ஸோடும் ஒப்பிட்டு தன் முன்னாலுள்ள ஒவ்வொருவரையும் ஒவ்வொன்றையும் -உள்ளத்தளவில் உடன்பாடில்லாவிட்டாலும்- பிர்அவ்னியத்துடைய நிலைக்கு உயர்த்தும். இதோ இந்த இடத்தில் “நான்” என்பது மாட்சிமைமிக்க படைப்பாளனுடைய கட்டளைகளுக்கெதிராகப் போரிடுகின்ற புள்ளிக்கு வந்துவிடும். ﻣَﻦْ ﻳُﺤْﻴِﻰ ﺍﻟْﻌِﻈَﺎﻡَ ﻭَ ﻫِﻰَ ﺭَﻣِﻴﻢٌ என்று சவால் விடுகின்ற தோரணையில் சர்வ வல்லமைமிக்க படைப்பாளனை இயலாமையைக் கொண்டு கேள்விக்குற்படுத்தும். அதற்கும் அப்பால் மாட்சிமைமிக்க படைப்பாளனுடைய பண்புகளில் தனது இஷ்டத்துக்குத் தலையீடு செய்து தனது தேவைக்காகதவற்றையும் தனது நஃப்ஸுல் அம்மாராவுடைய பிர்அவ்னியத்தான விருப்பு வெறுப்புகளுக்குத் தடையாக இருப்பவற்றையும் நிராகரிக்கின்ற அல்லது தனது இஷ்டத்துக்கு மாற்றுகின்ற முஸ்தீபில் இறங்கும். இந்த வகையில், ஒரு கூட்டம் மெய்யியலாளர்கள் சத்திய இரட்சகனை "الموجِب بالذات” அதாவது “செயல் நிர்ப்பந்தமுள்ளவன்” என்று கூறி அவனது தீர்மானத்தையும் நாட்டத்தையும் மறுத்து அவற்றுக்கு சான்றாக ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலும் உள்ள எண்ணற்ற அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்கின்றனர். ஸுபுஹானல்லாஹ்! எவ்வளவு பெரிய ஆச்சரியம்! இந்தப் பிரபஞ்சத்தில் அணுவிலிருந்து அண்டசராசரங்கள் வரை ஒட்டுமொத்த வஸ்துகளும் ஒரு திட்டத்தின் அடிப்படையில் வெளிப்படுவதன் மூலமும் தமது ஒழுங்கு, நேர்த்தியின் மூலமும் தம்மில் பொதிந்துள்ள ஏகப்பட்ட தாத்பரியங்கள், பயன்பாடுகள் மூலமும் துல்லியமான அளவுகள் மூலமும் தமது படைப்பாளனுடைய நாட்டத்தைப் பறைசாற்றுகின்ற போது அதை இந்தப் பகல் குருட்டுத்தனமான மெய்யியல்வாதிகளால் கண்டுகொள்ள முடியவில்லையே! அவ்வாறே இன்னுமொரு பிரிவினர் “சிறிய விடயங்கள் இறை அறிவில் சார்ந்திருப்பதில்லை” என்று கூறுவதன் மூலம் இறை அறிவின் அகிலார்ந்த தன்மையை மறுத்து ஒட்டுமொத்த வஸ்துகளும் பறைசாற்றிக்கொண்டிருக்கும் சத்திய சான்றுகளை நிராகரிக்கின்றனர். மேலும், மெய்யியல் ஞானம் காரண காரியங்களிடம் ஆற்றலை வழங்கி படைப்பியல் செயற்பாட்டை இயற்கையிடம் தாரைவார்க்கின்றது. இருபத்தி இரண்டாவது வார்த்தையில் திட்டவட்டமாக நிறுவப்பட்டதற்கிணங்க ஒவ்வொரு வஸ்திலும் பொறிக்கப்பட்டுள்ள எல்லா வஸ்துகளினதும் படைப்பாளனுடைய தனித்துவமான, பிரகாசமான முத்திரைகளைக் காணாமல் சடமாகவும் சாமான்யமானதாகவும் இயலாமையின் மொத்தமாகவும் பிரக்ஞையற்றதாகவும் எதேச்சையானதாகவும் இருக்கும் குருட்டுச் சக்தியின் கரங்களில் உள்ள இயற்கையை மூலாதாரமாகக் கொள்கின்றது. இவ்வாறு தெய்வீகக் கடிதங்களாகத் திகழும், ஆயிரக்கணக்கான சங்கையான ஞானங்களைப் பாராயணம் செய்கின்ற வஸ்துகளுளை இயற்கையிடம் கையளிக்கின்றது. அவ்வாறே பத்தாவது வார்த்தையில் நிறுவப்பட்டதைப் போன்று சத்திய இரட்சகன் தனது எல்லாத் திருநாமங்களினூடாகவும் நுபுவ்வத்துடைய சங்கிலித் தொடரான சான்றுகள் மூலமாகவும் தெய்வீக வேதங்களின் ஒட்டுமொத்த ஆயாத்துகள், அத்தாட்சிகள் மூலமாகவும் காட்டித் தந்த ஹஷ்ர் எனப்படும் மீளெழுப்பலுக்கான கதவைக் காண முடியாமல் ஹஷ்ரை நிராகரித்து, ஆத்மாக்களுக்கு முன்நித்தியத்தை வழங்குகின்றனர். இதோ இவர்களுடைய இந்த நூதனங்களோடு ஏனைய அம்சங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆம், ஷைத்தான்கள் மார்க்கமில்லாத மெய்யியல் ஞானிகளின் பகுத்தறிவை நான் உடைய கோர நகங்களாலும் பற்களாலும் உயரத்துக்குத் தூக்கிச் சென்று வழிகேட்டுப் பள்ளத்தாக்குகளில் போட்டுத் துவம்சம் செய்திருக்க வேண்டும். மெய்யியல் பாரம்பரியத்தில் சிறிய உலகில் நான் என்பது பெரிய உலகில் இயற்கையைப் போன்ற தாக்கூத்களைச் சேர்ந்ததாகும். فَمَن۟ يَك۟فُر۟ بِالطَّاغُوتِ وَيُؤ۟مِن۟ بِاللّٰهِ فَقَدِ اس۟تَم۟سَكَ بِال۟عُر۟وَةِ ال۟وُث۟قٰى لَا ان۟فِصَامَ لَهَا وَاللّٰهُ سَمٖيعٌ عَلٖيمٌ இந்த சத்தியத்துக்கு ஒளியேற்றும் ஒரு சிலேடையான நிகழ்வை, அதாவது கற்பனா ரீதியான ஒரு சஞ்சாரத்தைப் பற்றி பழைய நூல் ஒன்றில் கவிதை வடிவில் எழுதியுள்ளேன். அதை இந்த இடத்திலும் சுருக்கமாகக் குறிப்பிடுவது பொருத்தமென்று கருதுகிறேன். இந்த ரஸாஇல் எழுதப்படுவதற்கு எட்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு ரமழானில் இஸ்தான்பூல் நகரில் இருந்தேன். அது மெய்ஞ்ஞான சித்தாந்தங்களோடு தொடர்பில் இருந்த பழைய ஸஈத் புதிய ஸஈதாக அவதாரம் எடுப்பதற்கான சிந்தனைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியாகும். அப்போது ஃபாதிஹா ஷரீஃபின் இறுதியில் ﺻِﺮَﺍﻁَ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺍَﻧْﻌَﻤْﺖَ ﻋَﻠَﻴْﻬِﻢْ ﻏَﻴْﺮِ ﺍﻟْﻤَﻐْﻀُﻮﺏِ ﻋَﻠَﻴْﻬِﻢْ ﻭَ ﻟﺎَ ﺍﻟﻀَّٓﺎﻟِّﻴﻦَ என்ற வசனம் குறிப்புடுகின்ற மூன்று பாதைகளைப் பற்றிய சிந்தனையில் இருக்கும் போது கற்பனா ரீதியான ஓர் அனுபவத்தை அல்லது சிலேடையான ஒரு நிகழ்வை அல்லது கனவை ஒத்த ஒரு நிகழ்வைக் கண்டேண்: நான் மிகவும் விசாலமான ஒரு பாலைவனத்தில் இருந்தேன். நிலப் பரப்பு முழுவதையும் இருண்ட, ஒரு வகையான சலிப்பையும் திணறலையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு முகில் மூட்டம் சூழ்ந்திருந்தது. தென்றலோ வெளிச்சமோ தாக சாந்தி பெறுவதற்கான ஜீவ நீரோ அங்கு காணப்படவில்லை. சுற்றுவட்டாரம் விஷ ஜந்துகளாலும் அபூர்வ விலங்குகளாலும் சூழ்ந்திருப்பதைப் போன்ற ஓர் அச்சநிலை காணப்பட்டது. அப்போது “இந்த நிலப்பரப்பின் எதிர்ப்பக்கத்திக் ஒளியும் தென்றலும் நீரும் காணப்படுகின்றது. நீ இப்போது அங்கு புறப்பட்டுச் செல்” என்ற ஒரு செய்தி உள்ளத்துக்கு வந்தது. சற்று சுதாகரித்துக்கொண்டு பார்த்த போது எனது நாட்டமின்றியே அழைத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன். வழியில் சுரங்கப்பாதை போன்ற ஒரு குகைக்குள் இட்டுச் செல்லப்பட்டேன். அது ஆழமாகப் பூமியை ஊடறுத்துச் சென்றது. செல்லும் போது எனக்கு முன்னரே பலர் அந்த சுரங்க வழிப் பாதையில் சென்றிருப்பதை அறிய முடிந்தது. சென்றவர்கள் ஆங்காங்கே சிக்குண்டு அமிழ்ந்து போயிருந்தனர். அவர்களுடைய காலடித் தடங்களையே காண முடியுமாக இருந்தது. இன்னும் சிலருடைய சத்தங்களையும் கேட்க முடியுமாக இருந்தது. என்னோடு கற்பனையால் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்ட சகோதரனே! அந்த நிலப்பரப்பு இயற்கையும் மெய்ஞ்ஞான சித்தாந்தங்களுமாகும். சுரங்கப்பாதை என்பது மெய்ஞ்ஞான மேதைகள் தமது சிந்தனைகள் மூலம் சத்தியத்தை அடைவதற்காகத் திறந்த பாதையாகும். நான் கண்ட கால்த் தடங்கள் பிளேட்டோ அரிஸ்டாட்டில் போன்ற பிரபலங்களுடைய தடயங்களாகும். அந்த சத்தங்கள் இப்னு ஸீனா மற்றும் ஃபராபி போன்ற மாமேதைகளின் சத்தங்களாகும். ஆம், இப்னு ஸீனாவுடைய சில வார்த்தைகளையும் வகுத்த கோட்பாடுகளையும் ஆங்காங்கே காண முடிந்தது. பின்னர் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தடயங்கள் தென்படவில்லை. அதாவது அதற்கு மேலும் முன்னேற முடியாமல் மூழ்கிப் போயுள்ளார். உங்கள் ஆவலைப் போக்குவதற்காக கனவுக்குக் கீழுள்ள சத்தியத்தின் ஒரு முனையத் தெளிவுபடுத்தினேன். இப்போது விட்ட இடத்திலிருந்து பயணத்தைத் தொடர்வோம். அவ்வாறு அந்த சுரங்கத்துக்குள் முன்னேறிக்கொண்டிருக்கும் போது எனது கரங்களில் இரண்டு பொருட்கள் வழங்கப்பட்டிருப்பதைக் கண்டேன். ஒன்று ஒரு வகையான மின்சாரமாகவும் அடுத்தது ஒரு கருவியாகவும் இருந்தது. அந்த மின்சாரம் இயற்கை என்ற படலத்தின் கீழால் செல்கின்ற அந்த சுரங்கத்தை ஒளியேற்றியது. அந்தக் கருவியும்கூட கற்களையும் மலை போன்ற பாறைகளையும் தவிடுபொடியாக்கி எனக்குப் பாதையைத் திறந்து தந்தது. “அப்போது இந்த இரண்டு பொருட்களும் குர்ஆனியப் பொக்கிஷங்களிலிருந்து உங்களுக்காக வழங்கப்பட்டவையாகும்” என்று எனது காதில் சொல்லப்பட்டது. எப்படியோ நீண்ட நேரம் அவ்வாறு பயணித்த பின்னர் அடுத்த பக்கத்தால் வெளியேறினேன். மிகவும் அழகான ஒரு வசந்த காலத்தைப் போன்று மேகங்களற்ற சூரியனும், மனதுக்கு இதமான ஒரு தென்றலும், மதுரமான ஜீவ நீரும் உள்ள குதூகலமான ஓர் உலகமாக அது இருப்பதைக் கண்டு அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினேன். இவை அனைத்தும் நானே எனக்கு எஜமானனல்லன் என்பதையும் என்னை ஒருவன் பயிற்றுவித்து வழிநடாத்துகிறான் என்பதையும் எனக்குத் தெளிவாகக் காட்டித் தந்தது. பின்னர் மீண்டும் அந்தப் பாலைவனத்தில் உள்ள ஆரம்ப நிலையில் நானிருப்பதைக் கண்டேன். அதே சூழ்நிலையால் ஆட்கொள்ளப்பட்டிருந்தேன். அப்போது வேறொரு பாதையால் மீண்டும் நான் அழைத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் இந்தத் தடவை அந்தப் பாதை சுரங்கமாக அன்றி நிலப்பரப்புக்கு மேலால் செல்கின்ற ஒரு பயணமாக இருந்தது. அதாவது மேற்பரப்பால் எதிர்ப்பக்கத்தை அடைவதற்காகப் பயணித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பயணத்தில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ரகத்தைச் சேர்ந்த வியப்புகளும் விசித்திரங்களும் குறுக்கிட்டன. கடல் என்னைப் பார்த்துக் குமுறிக்கொண்டும் காற்று என்னை அச்சுறுத்திக்கொண்டும் இருந்தன. அனைத்தும் எனக்கு சிக்கல்களையும் குறுக்கீடுகளையும் தருபவையாகவே காணப்பட்டன. ஆனால் அங்கும் குர்ஆனிலிருந்து வழங்கப்பட்ட ஒரு பயண ஊர்தியின் மூலம் தடைகளைத் தாண்டி வெற்றிவாகையோடு பயணித்தேன். வழியில் ஏராளமான ஜனாஸாக்கள் காணப்பட்டன. அந்தப் பயணத்தை முடித்தவர்கள் ஆயிரத்தில் ஒருவராகவே காணப்பட்டனர். எப்படியோ அந்தப் பாலைவன மேக மூட்டங்களிலிருந்து தப்பி அந்த நிலப்பரப்பின் எதிர்த் திசையை அடைந்து அங்கு அழகிய சூரியனைக் கண்டேன். மனதுக்கு இதமான தென்றலை சுவாசித்தவனாக அல்ஹம்துலில்லாஹ் என்றேன். பின்னர் சுவனம் போன்ற அந்த உலகத்தை உலாவர ஆரம்பித்தேன். ஆனால், ஏதோ ஒன்று என்னை அங்கு நீடிக்க விடவில்லை. ஏதோ இன்னுமொரு பாதையையும் எனக்குக் காண்பிப்பதற்காக இருக்க வேண்டும், மீண்டும் பாலைவனத்தின் அதே ஆரம்ப ஸ்தானத்திற்குக் கொண்டு வரப்பட்டேன். அப்போது அங்கு மேலிருந்து இறக்கப்பட்ட மின் தூக்கிகளை ஒத்த வாகனங்கள் காணப்பட்டன. அவற்றின் மீது ஏறுகின்ற போது ஏறுபவர்களின் ஆற்றல்கள், திறன்களுக்கேற்ப உயர்ந்து செல்லக்கூடியவையாக அவை காணப்பட்டன. நானும் ஒன்றின் மீது ஏறிக்கொண்டேன். அது ஒரு சில வினாடிகளுக்குள் மேக மூட்டங்களுக்கப்பால் என்னைக் கொண்டு சென்றது. அங்கு பச்சைப் பசேலென்ற அழகிய மலைகளைக் காண முடிந்தது. மேகங்கள் அவற்றின் அரைவாசியளவைக் கூட மூடியிருக்கவில்லை. அங்கு மிகவும் இதமான தென்றலும் மதுரமான ஜீவ நீரும் வெதுவெதுப்பான வெளிச்சமும் எல்லாப் பக்கங்களிலும் காணப்பட்டன. மேலும் அந்த மின் தூக்கிகளைப் போன்ற பிரகாசமான இல்லங்களும் எல்லாப் பக்கங்களிலும் காணப்பட்டன. அதே போன்றவைகளை முன்னைய இரண்டு பிரயாணங்களிலும் கூட நிலப்பரப்பின் எதிர்த் திசையில் கண்டிருந்தேன். ஆனால் அப்போது அவை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்போது தான் அவை சங்கைமிக்க குர்ஆன் வசனங்களுடைய பிரதிபலிப்புகளாகும் என்பதைப் புரிந்துகொண்டேன். இதோ ﻭَﻟﺎَ ﺍﻟﻀَّٓﺎﻟِّﻴﻦَ என்பதன் மூலம் குறிப்பிடப்படும் முதலாவது பாதை இயற்கைக்குள் மூழ்கி இயற்கைவாத சித்தாந்தங்களைச் சுமந்தவர்களின் பாதையாகும். அந்தப் பாதையில் சென்று சத்தியத்தையும் ஒளியையும் காண்பது எந்த அளவு சிக்கலானது என்பதை உணர்ந்திருப்பீர்கள். ﻏَﻴْﺮِ ﺍﻟْﻤَﻐْﻀُﻮﺏِ என்பதன் மூலம் குறிப்பிடப்படும் இரண்டாவது பாதையானது காரணகாரியவாதிகளினதும் காரணிகளைக் கர்த்தாவாகக் கருதி அவற்றுக்குப் படைப்பாற்றல் வழங்குபவர்களினதும் பகுத்தறிவுவாதிகளைப் போன்று பகுத்தறிவையும் சிந்தனையையும் மாத்திரம் பயன்படுத்தி சத்தியத்தையும் வாஜிபுல் வுஜூத் பற்றிய அறிவையும் அடைந்துகொள்வதற்காகப் பயணித்தவர்களினதும் பாதையாகும். ﺍَﻟَّﺬِﻳﻦَ ﺍَﻧْﻌَﻤْﺖَ ﻋَﻠَﻴْﻬِﻢْ என்பதன் மூலம் குறிப்பிடப்படும் மூன்றாவது பாதை ஸிராதுல் முஸ்தகீமை உடைய குர்ஆனிய மாணவர்களின் மிகப் பிரகாசமான பாதையாகும். அதுவே மிகவும் ஸலாமத்தான, மிகவும் பிரகாசமான, மிகவும் சுலபமான, எல்லோருக்கும் பொதுவான, அகிலார்ந்த பாதையாகும்.
இது அணுக்களின் மாறுகைகளோடு தொடர்பானதாகும். பின்வரும் வசனத்தில் புதைந்துள்ள செல்வக் கருவூலங்களுள் ஓர் அணுவளவானதை மாத்திரம் இங்கு தொட்டுக் காட்டுகிறோம். وَقَالَ الَّذٖينَ كَفَرُوا لَا تَا۟تٖينَا السَّاعَةُ قُل۟ بَلٰى وَ رَبّٖى لَتَا۟تِيَنَّكُم۟ عَالِمِ ال۟غَي۟بِ لَا يَع۟زُبُ عَن۟هُ مِث۟قَالُ ذَرَّةٍ فِى السَّمٰوَاتِ وَلَا فِى ال۟اَر۟ضِ وَلَٓا اَص۟غَرُ مِن۟ ذٰلِكَ وَلَٓا اَك۟بَرُ اِلَّا فٖى كِتَابٍ مُبٖينٍ இந்த வசனத்தின் ஏராளமான ஐஸ்வர்யங்களுள் ஓர் அணு அளவானதை, அதாவது அணு என்ற பெட்டகத்தினுள் உள்ள புதையல்களைக் காட்டி, அதன் இயக்கம் மற்றும் நடத்தைகள் தொடர்பாகவும் ஓரளவு தெளிவுபடுத்த உள்ளோம். இது ஒரு முன்னுரையையும் மூன்று குறிப்புகளையும் உள்ளடக்கியதாகும்.
அணுக்களின் மாறுகை என்பது நித்திய இரட்சகன் தனது குத்ரத் கரங்களால் பிரபஞ்சப் புத்தகத்தில் தெய்வீக அத்தாட்சிகளை எழுதும் போது ஏற்படுகின்ற அதிர்வுகளும் நகர்வுகளுமாகும். மாறாக சடவாதிகளும் இயற்கைவாதிகளும் கற்பனை செய்வதைப் போன்று அவை சூதாட்டம் போன்ற எதேச்சை விளையாட்டுகளோ எழுமாறான நகர்வுகளோ குழப்பங்கள் நிறைந்த, அர்த்தமற்ற இயக்கங்களோ அல்ல. ஒட்டுமொத்த படைப்புகளைப் போன்று அணுக்களும், அதாவது ஒவ்வொரு அணுவும் தனது இயக்கத்தை “பிஸ்மில்லாஹ்” என்ற மகுடத்துடனேயே ஆரம்பிக்கின்றது. ஏனெனில் கடுகளவேயான ஒரு விதை பிரமாண்டமான ஒரு விருட்சத்தைத் தனது தோலில் சுமப்பதைப் போன்று ஒவ்வொரு அணுவும் தனது பலத்தைவிட எண்ணற்ற மடங்கு அதிகமான சுமைகளைத் தன்னில் சுமக்கின்றது. அவ்வாறே தனது ஒவ்வொரு பணியின் நிறைவிலும் “அல்ஹம்துலில்லாஹ்” என்று கூறுகின்றது. ஏனெனில் தனது பணியின் நிறைவில் மாட்சிமைமிக்க படைப்பாளனைப் புகழ் பாடுகின்ற கவிகளைப் போன்று எல்லோருடைய அறிவையும் சிந்தனையையும் வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தக்கூடிய ஒரு கலைச் சிற்பத்தைக் காண்பிக்கின்றது. உதாரணமாக மாதுளையையும் சோளத்தையும் அவதானியுங்கள். ஆம், அணுக்களின் மாறுகை என்பது -மறைவான உலகைச் சேர்ந்தவையாகத் திகழும் ஒட்டுமொத்த வஸ்துகளுடைய கடந்தகாலப் பூர்வீகங்களினதும் எதிர்கால சந்ததிகளினதும் ஒழுங்கு நேர்த்தியின் சட்டகமாகவும் இறை அறிவுக்கும் இறை கட்டளைகளுக்குமான ஒரு மகுடமாகவும் திகழும்- “இமாமு முபீன்” உடைய விதிகள் மற்றும் எழுத்துகளின் பிரகாரம் -ஆலமுஷ் ஷஹாதத் ஆகிய புலனுலகில் வஸ்துகளின் வெளிப்பாடு, படைப்பு மற்றும் நிர்வகிப்பு என்பவற்றுக்கான சட்டகமாகவும் இறை வல்லமை, இறை அதிகாரம் என்பவற்றுக்கான மகுடமாகவும் திகழும்- “கிதாபு முபீன்” இலிருந்து காலத்தின் சூசகமாகவும் அதன் மாதிரியாகவும் திகழும் “லவ்ஹு மஹ்வ்-இஸ்பாத்” எனப்படும் எழுதியழிக்கும் பலகையில் குத்ரத்துடைய வார்த்தைகள் எழுதி அழிக்கப்படும் போது ஏற்படுகின்ற அதிர்வுகளும் நகர்வுகளுமாகும்.
(இது இரண்டு பகுதிகளைக் கொண்டதாகும்) முதலாவது பகுதி: ஒவ்வோர் அணுவிலும் -அதன் இயக்கம் மற்றும் ஓய்வு ஆகிய இரு நிலைகளிலும்- இரண்டு சூரியன்களைப் போன்ற இரண்டு தவ்ஹீதிய ஜோதிகள் பிரகாசிக்கின்றன. பத்தாவது வார்த்தையின் முதலாவது அடையாளத்தில் சுருக்கமாகவும் இருபத்திரண்டாம் வார்த்தையில் விலாவாரியாகவும் நிறுவப்பட்டுள்ளதைப் போன்று ஒவ்வொரு அணுவும் கட்டாயமாக சர்வலோக இரட்சகனின் அனுமதியோடு அவனது நிர்வாகத்துக்குக் கீழ் பணி புரிகின்ற ஒவ்வொரு இறை பணியாளாகும். அவனது அறிவு மற்றும் வல்லமையின் மூலமே ஒவ்வொரு அணுவும் இயங்குகின்றன. அவ்வாறில்லாத பட்சத்தில் ஒவ்வொரு அணுவும் முடிவில்லாத அறிவு ஞானமும், எல்லையில்லாத வல்லமையும், அனைத்தையும் பார்க்கக்கூடிய ஒரு கண்ணும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியுமான ஓர் அதிகாரமும் உடையதாக இருப்பது அவசியப்படுகின்றது. ஏனெனில் கனிப்பொருட்களில் காணப்படுகின்ற எந்த ஓர் அணுவை நோக்கினாலும் அது எந்த ஓர் உயிரினத்தின் உடலிலும் நுட்பமான ஒழுங்கு நேர்த்தியோடு கனகச்சிதமாகப் பணியாற்றுகின்றது அல்லது பணியாற்ற முடியுமாக உள்ளது. ஆனால் வெவ்வேறு வஸ்துகளின் ஒழுங்கமைப்புகளும் ஆக்கச் சட்டகங்களும் ஒன்றுக்கொன்று முரணாகின்ற அளவு வெவ்வேறானவையாகவும் சிக்கல் நிறைந்தவையாகவுமே காணப்படுகின்றன. அவற்றின் ஒழுங்குகளை அறியாமல் அங்கு போய்ப் பணியாற்ற முடியாது. பணியாற்றினாலும் குறைகளோ பிழைகளோ இல்லாமல் செய்ய முடியாது . ஆனால் எந்தவிதமான பிழைகளும் இன்றி செய்யப்படுவதையே நாம் காண்கிறோம். அவ்வாறெனில் அங்கு பணி புரிகின்ற அணுக்கள் ஒவ்வொன்றும் ஒன்றோ அகிலார்ந்த அறிவும் சர்வ ஞானமும் மிக்க ஒருவனின் கட்டளைக்கிணங்க அவனது அனுமதியோடு அவனது அதிகாரத்துக்குக் கீழ் இயங்குகின்ற பணியாளாக இருப்பது அவசியப்படுகின்றது. அல்லது ஒவ்வொன்றும் தன்னளவில் அப்படிப்பட்ட ஓர் அறிவையும் வல்லமையையும் கொண்டிருப்பது அவசியமாகின்றது. ஆம், வளியிலுள்ள எந்த ஓர் அணுவும் ஏதேனும் ஓர் உயிரின் உடலினுள் அல்லது ஏதேனும் ஒரு பூவின் ஏதேனும் ஒரு கனியினுள் அல்லது ஏதேனும் ஓர் இலையின் ஏதேனும் ஒரு கட்டிடத்துக்குள் போய் பணியாற்ற முடியும். ஆனால் அவற்றின் பொறிமுறைகளும் திட்டங்களும் முற்று முழுதாக வேறுபட்டவையாகும். ஓர் அத்திப் பழத்துக்கான பொறிமுறை நெசவு இயந்திரத்தை ஒத்ததாக இருக்குமெனில் ஒரு மாதுளம் பழத்துக்கான பொறிமுறை சீனி தயாரிக்கும் இயந்திரத்தை ஒத்ததாக இருக்கும். இவ்வாறு அந்தக் கட்டிடங்கள், உடல்களின் பொறிமுறைகள் முற்றிலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாகும். இப்போது வளியிலுள்ள இந்த அணு அந்த அத்தனை பொறிமுறைகளுக்குள்ளும் நுழைந்து மிகுந்த பிரக்ஞைபூர்வமாகவும் ஞானபூர்வமாகவும் அந்தந்தப் பணிகளில் மிகவும் கை தேர்ந்த விற்பன்னர்களைப் போன்று சேவை செய்யும். தன்னுடைய கடமை முடிந்ததும் அங்கிருந்து எழுந்து சென்று விடும். இதோ இயங்கும் வளியில் இயங்கு நிலையில் உள்ள ஒவ்வொரு அணுவும் ஒன்றோ தாவரங்கள் விலங்குகளுக்கும் ஏன் பூக்கள் கனிகளுக்கும் அணிவிக்கப்படுகின்ற வடிவங்களுக்குரிய அளவைகள், படிமுறைகள் மற்றும் திட்டங்களை அறிந்திருக்க வேண்டியது அல்லது அவை அனைத்தையும் அறிந்த ஒருவனின் அதிகாரத்தின் கீழ் கட்டளைகளுக்கமைவாக இயங்கும் பணியாற்களாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. அவ்வாறே அமைதியான மண்ணில் அமைதியாக இருக்கும் ஒவ்வொரு அணுவும் எல்லா வகையான பூ மற்றும் கனி மரங்களுடைய விதைகளுக்கும் தொட்டிலாகவும் காப்பகமாகவும் மூலமாகவும் இருக்கின்றது. அதாவது ஒப்பீட்டளவில் அந்த ஓர் அணுக்கு ஒப்பான ஒரு பிடி மண்ணில் எந்த விதை தான் வந்து அடைக்கலம் பெற்றாலும் ஒவ்வொன்றும் அங்கு தனக்கென்று பிரத்தியேகமான ஒரு தொழிற்சாலையையும் தனது தேவைகளுக்கும் வளர்சிக்கும் தேவையான சாதனங்களையும் கண்டுகொள்வதானது, ஒன்றோ அந்த ஒவ்வொரு அணுவிலும், அணுவின் கூடாரமாகிய ஒரு பிடி மண்ணிலும் ஒட்டுமொத்த மரங்கள், செடிகள், பூக்கள் மற்றும் கனிகளின் எண்ணிக்கையளவு ஆத்மார்த்தமான இயந்திரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இருப்பதை அல்லது எல்லாவற்றையும் இல்லாமையிலிருந்து படைப்பதற்குத் தேவையான வல்லமையும் எல்லாவற்றின் எல்லாப் பரிமாணங்களையும் தெரிந்திருக்கின்ற அறிவும் உடையதாக இருப்பதை அவசியப்படுத்துகின்றது. இல்லாவிட்டால் சர்வ வல்லமையும் அகிலார்ந்த அறிவுஞானமும் கொண்ட ஒருவன் தனது அறிவு ஞானம், அதிகாரம், வல்லமை மற்றும் அனுமதியைக் கொண்டு அவற்றை அத்தகைய பணிகளில் ஈடுபடுத்துகின்ற உண்மை திண்ணமாகின்றது. ஆம் கிராமப்புறத்தைச் சேர்ந்த, எழுத வாசிக்கத் தெரியாத, மிகவுமே தாழ்ந்த, கண் பார்வையற்ற ஒரு பாமர மனிதன் ஐரோப்பாவுக்குச் சென்று, அங்குள்ள எல்லா வகையான தொழிற்சாலைகள் மற்றும் பட்டறைகளுக்குள் நுழைந்து, மிகுந்த தேர்ச்சியோடும் நேர்த்தியோடும் எல்லா வகையான உத்தியோகங்களிலும் எல்லா வகையான கலை வேலைகளிலும் எல்லா வகையான கட்டுமானங்களிலும் ஈடுபட்டு எல்லோரையும் வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தக்கூடிய வகையில் மகத்தான கலையம்சங்களும் ஆழமான தாத்பரியங்களும் பொதியப்பெற்ற நிர்மானங்களை செய்கிறார். இப்போது அணுவளவேனும் பிரக்ஞையுள்ள ஒருவன் அந்த மனிதன் சுயமாக அதைச் செய்யவில்லை என்பதையும் அனைத்தையும் அறிந்த ஓர் ஆசான் அவனுக்கு அவ்வாறெல்லாம் செய்வதற்குக் கற்றுக் கொடுத்து அந்த வேலைகளை செய்விக்கிறார் என்பதையும் புரிந்துகொள்வான். அல்லது அதே போன்று குருடான, இருக்கின்ற இடத்திலிருந்து அசைய முடியாத, அற்பமான ஒரு கூடாரத்தில் ஒரு மனிதன் வசிக்கின்றான். அந்தக் கூடாரத்துக்குள் ஒரு திர்ஹம் அளவான சிறிய ஒரு முள் அல்லது பருத்தி மணியைப் போன்ற ஒரு பதார்த்தம் வழங்கப்பட்ட போது அதற்குள் இருந்து மூட்டை மூட்டையாக இனிப்புப் பண்டங்களும் அடுக்கடுக்கான போர்வைகளும் ஆயிரக்கணக்கான முத்துகள் பவளங்களும் கண் கவர் கலை வண்ணங்களைக் கொண்ட அலங்காரமான ஆடைகளும் அறுசுவை ஆகாரங்களும் வெளிப்பட்டு வருகின்றன. இதைப் பார்க்கின்ற அணுவளவேனும் பிரக்ஞையுள்ள ஒருவன் “கூடாரத்தினுள் இருக்கின்ற அந்த மனிதன் அற்புதமான ஆற்றல்களை உடைய ஒரு விற்பன்னரின் அற்புதமான தொழிற்சாலையின் ஒரு தாழ்ப்பாளாக அல்லது அதிகபட்சம் ஓர் ஏழைக் காவலாளியாகவே இருக்க வேண்டும்” என்றே கூறுவான். அவ்வாறே வளியிலுள்ள ஒவ்வோர் அணுவும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வீக கடிதமாகவும் ரப்பானிய கலை ஞானங்களால் வடிக்கப்பட்ட சிற்பமாகவும் இறை ஞானத்தினதும் வல்லமையினதும் அற்புதமான வெளிப்பாடாகவும் திகழ்கின்ற தாவரங்களிலும் செடிகளிலும் பூக்களிலும் கனிகளிலும் மேற்கொள்கின்ற பயணங்களும் புரிகின்ற பணிகளும், அந்த ஒவ்வோர் அணுவும் சர்வ ஞானமும் மாட்சிமையும் மிக்க படைப்பாளனின் அதிகாரத்துக்குக் கீழ் அவனது அனுமதியோடு அவனது கட்டளைக்கிணங்க இயங்குகின்றது என்பதையே திட்டவட்டமாகக் கூறுகின்றன. அவ்வாறே, ஒவ்வொன்றும் வெவ்வேறான ஒவ்வொரு இயந்திரமாக அல்லது பட்டறையாக அல்லது பதிப்பகமாக அல்லது பொக்கிஷமாக அல்லது சிற்பமாக அல்லது மாட்சிமைமிக்க படைப்பாளனின் திருநாமங்களைக் காட்சிப்படுத்துகின்ற ஒவ்வொரு மகுடமாக அல்லது அவனது குறைகளற்ற பரிசுத்தமான தன்மையை வாழ்த்துகின்ற ஒவ்வொரு கஸீதாவாக இருக்கின்ற விதைகளுக்கும் அதிலிருந்து வெளிப்படும் தளிர்கள் மற்றும் மரங்களுக்கும் தொட்டிலாகவும் ஆதாரமாகவும் இருக்கின்ற மண்ணிலுள்ள அணுக்களும் கூட, “குன் ஃபயகூன்” என்ற கட்டளையின் அதிபதியாகவும், ஒட்டுமொத்த வஸ்துகளும் தனது கட்டளைககுக்கு முன்னால் தலைசாய்ந்து நிற்கின்ற அதிகாரத்தை உடையவனாகவும் இருக்கின்ற மாட்சிமைமிக்க படைப்பாளனின் கட்டளைக்கும் அனுமதிக்கும் ஆற்றலுக்கும் அதிகாரத்துக்கும் அமைவாகவே அந்த அற்புதமான காரியங்களைச் சாதிக்கின்றன என்பது அணுவளவேனும் சந்தேகத்துக்கிடமற்ற திட்டவட்டமான உண்மையாகும். ஆமன்னா. இரண்டாவது பகுதி: அணுவின் இயக்கத்தின் போதுள்ள பணிகள் மற்றும் தாத்பரியங்கள் தொடர்பான சிறிய ஓர் அறிமுகமாகும். ஆம், பகுத்தறிவு கண்களைத் தாண்டாத சடவாதிகளின் ஞானமில்லாத ஞானங்கள் மற்றும் சூன்யத்தின் மீது சார்ந்துள்ள சித்தாந்தங்களின் பார்வையில் எழுமாறான தற்செயல் நிகழ்வுகளோடு பிண்ணிப் பிணைந்துள்ள அணுக்களின் இயக்கத்தை தம்முடைய கோட்பாடுகளின் மூலத்தில் வைத்து இறைவனுடைய படைப்புகளாகத் திகழும் வஸ்துகளுக்கான மூல காரணியாக அதைக் காட்டுகின்றனர். எண்ணற்ற ஞானங்களாலும் தாத்பரியங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஒரு படைப்பை ஆங்காங்கே குழம்பிய நிலையில் அர்த்தங்களோ ஞானங்களோ இல்லாத ஒன்றிடம் ஒப்படைக்கப்படுவது எந்தளவு புத்திக்கு விரோதமானது என்பதை அணுவளவு பிரக்ஞையுள்ள ஒருவனும் அறிவான். சங்கைமிக்க குர்ஆனிய ஞானத்தின் பார்வையில் அணுக்களின் இயக்கத்தில் ஏராளமான நோக்கங்களும் ஞானங்களும் தாத்பரியங்களும் பணிகளும் காணப்படுகின்றன. ﻭَ ﺍِﻥْ ﻣِﻦْ ﺷَﻰْﺀٍ ﺍِﻟﺎَّ ﻳُﺴَﺒِّﺢُ ﺑِﺤَﻤْﺪِﻩِ போன்ற பல்வேறு வசனங்களின் மூலம் அந்தத் தாத்பரியங்களையும் பணிகளையும் குர்ஆன் அடையாளம் செய்கின்றது. அவற்றின் அடிப்படையில் பெறப்பட்ட சிலதை இங்கு உதாரணத்துக்காகக் குறிப்பிடுகின்றோம். முதலாவது: வாஜிபுல் வுஜூத் ஆகிய மாட்சிமைமிக்க படைப்பாளன் படைப்போடு தொடர்பான பிரதிதிபலிப்புகளை புதுப்பிப்பதற்காக ஒவ்வோர் ஆத்மாவுக்கும் -ஒரு மாதிரி அல்லது மாடலைப் போன்று- ஒவ்வொரு வருடமும் தனது அற்புதமான வல்லமையின் மூலம் புதிதாக ஒவ்வொரு உடலை அணிவிப்பது, ஒவ்வொரு புத்தகத்திலும் இருந்து அதை ஒத்த ஆனால் வெவ்வேறான ஆயிரம் புத்தகங்களைத் தனது வியக்கத்தக்க அறிவு ஞானத்தின் மூலம் பிரதி செய்வது, ஒரே சத்தியத்தை வெவ்வேறு தோற்றங்களில் காண்பிப்பது, பிரபஞ்சங்களும் உலகங்களும் வஸ்துகளும் கூட்டம் கூட்டமாக ஒன்றன்பின் ஒன்றாக வந்து செல்வதற்கான இடத்தைப் பெற்றுக் கொடுப்பது, அதற்காக உலகத்தைத் தயார் செய்வது போன்ற பல்வேறு மகத்தான நிகழ்வுகளை அணுக்களை இயக்குவிப்பதன் மூலமும் அவற்றின் மீது சுமத்திய பணிகள் மூலமும் அரங்கேற்றுகின்றான். இரண்டாவது: மாலிகுல் முல்க் ஆகிய மாட்சிமைமிக்க படைப்பாளன் இந்த உலகத்தையும் குறிப்பாக பூமி என்ற விளைநிலத்தையும் ஒரு முல்க் உடைய தோற்றத்தில் படைத்துள்ளான். அதாவது வளர்ச்சிக்கும், புதிது புதிதாக விளைச்சல் தருவதற்கும் உகந்த அமைப்பில் தயார் செய்துள்ளான். அதன் மூலம் தனது வல்லமையின் எண்ணற்ற அற்புதங்கள் அதில் விதைக்கப்பட்டு அறுவடையும் செய்யப்பட வேண்டும் என்று நாடியுள்ளான். இதோ இப்படிப்பட்ட ஒரு விளைநிலமாக உள்ள பூமியின் மீது அணுக்களை மகத்தான ஒரு ஞானத்தோடும் பூர்த்தியான ஒழுங்கு நேர்த்தியோடும் பல்வேறு பணிகளில் இயங்கச் செய்வதன் மூலம் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வருடத்திலும் ஒவ்வொரு மாதத்திலும் ஏன் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் புதுப் புது உலகங்களையும் வெவ்வேறு அறுவடைகளையும் வழங்குகின்றான். தனது ரஹ்மத்தின் முடிவற்ற அன்பளிப்புகளையும் தனது வல்லமையின் எண்ணற்ற அற்புதங்களையும் அணுக்களின் இயக்கள், அசைவுகள் மூலம் வெளிப்படுத்துகின்றான். மூன்றாவது: இறை நாமங்களின் எண்ணற்ற பிரதிபலிப்புகள் மற்றும் அத்தாட்சிகளை வரையறைகளுக்குற்பட்ட பூமியில் வரையறைகளின்றியும், ஒரே பக்கத்தில் எண்ணற்ற அர்த்தங்களூடாகவும் பிரஸ்தாபிப்பதற்காக நித்திய இரட்சகன் அணுக்களை ஞானபூர்வமான ஓர் இயக்கத்திலும் ஒழுங்குமுறையான பணிகளிலும் ஈடுபடுத்துகின்றான். ஆம் கடந்த வருட அறுவடைகளும் இந்த வருட அறுவடைகளும் இயல்பளவில் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் அர்த்தங்களும் தாத்பரியங்களும் வெவ்வேறானவையாகும். சார்பளவிலான தோற்றங்கள் மற்றும் வெளிப்பாடுகளில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றங்கள் அர்த்தங்களிலும் மாற்றங்களையும் அதிகரிப்பையும் ஏற்படுத்துகின்றது. சார்பியல் ரீதியான வெவ்வேறு தோற்றங்களும் தற்காலிகமாகக் கிடைக்கின்ற அடையாளங்களும் வெளிப்பார்வைக்கு அழிந்து செல்லக் கூடியதாக இருந்தாலும் அவற்றின் அழகிய அர்த்தங்கள் பாதுகாக்கப்பட்டு நித்தியமானவையாக நிலை பெற்று விடுகின்றன. உதாரணமாக ஆத்மாக்கள் இல்லாத காரணத்தினால் இந்த மரத்தில் கடந்த வசந்த காலத்துக்குரிய இலைகளும் பூக்களும் கனிகளும் இந்த வசந்த காலத்துக்குரியவைகளுடன் யதார்த்தத்தில் சமனானவையாகும். வெறுமனே சார்பியல் ரீதியாக வெளிப்படுகின்ற சில அடையாளங்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆனால் சார்பியல் ரீதியான அந்த வேறுபாடுகளும் கூட, சதாவும் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டுள்ள இறை நாமங்களின் பிரதிபலிப்புகளுடைய அர்த்தங்களை வெளிப்படுத்துவதற்கானதாகும். அதாவது கடந்த வசந்த காலத்துக்குரியவைகளே தமது இடங்களை நிரப்புவதற்காக வேறு அடையாளங்களுடன் வருகின்றன நான்காவது: மிகவும் ஒடுக்கமான ஒரு விளைநிலமாக இருக்கும் இந்த உலகத்தை -ஆலமுல் மிஸால் என்ற முடிவு காண முடியாத உலகத்தைப் போன்று- மிகவும் விசாலமான ஆலமுல் மலகூத்துக்கும் எண்ணற்ற மறுமை உலகங்களுக்கும் தேவையான விளைச்சல்கள் மற்றும் தேவைப்பாடுகளை விநியோகம் செய்கின்ற இடமாக ஆக்கி வைத்த சர்வ ஞானமிக்க படைப்பாளன் பிரபஞ்சத்தை சமுத்திரம் போன்றும் வஸ்துகளை நீந்தக்கூடிய வாகனங்களாகவும் ஆக்கி அணுக்களை இயங்கச் செய்வதன் மூலம் ஏகப்பட்ட ஆத்மார்த்தமான விளைச்சல்களை உற்பத்தி செய்கின்றான். தனது வல்லமையின் எல்லையில்லாத செல்வக் கலஞ்சியங்களிலிருந்து ஓடுகின்ற முடிவில்லாத ஒரு நிதியை உலகத்தைக் குறுக்கிடச் செய்து மறைவான மற்றும் மறுமை உலகங்களில் சங்கமிக்கச் செய்கிறான். ஐந்தாவது: இறைவனுடைய பூரணத்துவம், அளவிட முடியாத அழகு மற்றும் மாட்சிமை என்பவற்றின் எண்ணற்ற பிரதிபலிப்புகளையும் அந்த இரட்சகனுக்காகச் செய்யப்படும் முடிவில்லாத துதிகளையும் ஒடுக்கமான வரையறைகளுக்குற்பட்ட பூமியில் வரையறுக்கப்பட்ட குறுகிய காலத்துக்குள் காட்சிப்படுத்துவதற்காக மாட்சிமைமிக்க வல்லோன் தனது ஞானத்தின் வெளிப்பாடாக அணுக்களை இயங்கச் செய்கிறான். அந்த இயக்கத்தின் மூலம் வரையறுக்கப்பட்ட இடத்தில், வரையறுக்கப்பட்ட காலத்துக்குள் தனது பூரணத்துவம், அழகு, மாட்சிமை என்பவற்றுக்கான எண்ணற்ற பிரதிபலிப்புகளைக் காட்சிப்படுத்துகின்ற அதே சமயம் எண்ணற்ற இறை துதிகளையும் வெளிப்படுத்துகிறான். அவ்வாறே அந்த இயக்கத்தின் போது ஏகப்பட்ட மறைவான சத்தியங்களின் திரைகள் நீக்கப்படுகின்றன. மேலும் ஏராளமான மறுமைக் கனிகள் விளைச்சல் செய்யப்படுவதோடு தற்காலிகமானவற்றின் நிரந்தரமான தன்மைகள் மற்றும் தோற்றங்களிலிருந்து ஏராளமான பிரதிகளும் மாதிரிகளும் படைக்கப்படுகின்றன. எனவே அணுக்களை இயக்குகின்றவன் இந்த மகத்தான நோக்கங்களையும் உன்னதமான ஞானங்களையும் நிர்வகிக்கின்ற ஒருவனாகவே அன்றி இருக்க முடியாது. இல்லாவிட்டால் ஒவ்வொரு அணுவும் சூரியனுடைய பருமனைக் கொண்ட ஒவ்வொரு மூளையைக் கொண்டிருப்பது அவசியமாகின்றது. ஆம், மேற்படி ஐந்து அம்சங்களையும் போன்ற ஐயாயிரம் தாத்பரியங்களோடு இயக்கப்படுகின்ற அணுக்களின் நடத்தைகள் மற்றும் நிலை மாற்றங்களை, அந்தப் பகுத்தறிவில்லாத மெய்யியல் ஞானிகள் ஏதோ நோக்கங்களோ ஞானங்களோ இல்லாத எதேச்சையான இயக்கங்களாகக் கருதுகிறார்கள். மேலும் சத்தியத்தின் அடிப்படையில் உள்ளகமான மற்றும் புறவயமான இரு வகை ஏகாந்தரமான இயக்கங்களுடன் மௌலானா ரூமியின் சிஷ்யர்களைப் போன்று இறை துதியில் திளைத்த அந்த அணுக்களின் சுழற்சி இயக்கங்களை சுயமானவையாகவும் எழுமாறானவையாகவும் ஊகிக்கிறார்கள். இதோ, இதுவொன்றே அவர்களிடமுள்ள அறிவு அறியாமை என்பதற்கும், ஞானம் மடமை என்பதற்கும் போதுமான சான்றாகும். (மூன்றாவது குறிப்பில் இதன் தொடராக வருகின்ற ஆறாவது சற்று நீண்ட ஒரு தாத்பரியம் இடம்பெறும்.)
ஒவ்வொரு அணுவிலும் வாஜிபுல் வுஜூத் ஆகிய ஏகனின் இருப்புக்கும் வஹ்தத்துக்குமான இரண்டு உண்மையான சாட்சிகள் காணப்படுகின்றன. ஆம் சாமான்யமான ஒவ்வொரு அணுவும் சுத்த இயலாமை நிலையில் பிரக்ஞைபூர்வமான பெரும் பெரும் காரியங்களைச் சாதிப்பதன் மூலமும் பெரும் பெரும் சுமைகளைச் சுமப்பதன் மூலமும் வாஜிபுல் வுஜூத் ஆகிய இறைவனின் இருப்புக்குத் திட்டவட்டமாக சான்றுபகர்வதைப் போன்றே, தனது இயக்கத்தை மொத்தத்தின் ஒழுங்கையும் அகிலார்ந்த ஒழுங்கையும் பேணும் விதமாக அமைத்துக்கொள்வதன் முலமும் தான் நுழைகின்ற இடங்களிலெல்லாம் ஏதோ தனது தாயகத்துக்குச் சென்றதைப் போன்று அந்த இடத்துக்குரிய தனித்துவமான ஒழுங்கு நேர்த்தியைப் பேணி அதற்குப் பங்களிப்புச் செய்வதன் மூலமும் வாஜிபுல் வுஜூத் ஆகிய ஏகனின் வஹ்தத்துக்கும் அவை அனைத்துக்கும் எஜமானனாக உள்ள அந்த ஒருவனுடைய அஹதியத்துக்கும் சான்றுபகர்கின்றன. அதாவது அணு யாருக்குச் சொந்தமானதோ அது உலாவுகின்ற அத்தனை இடங்களும் அவனுக்கே சொந்தமானதாகும். ஆம், ஓர் அணுவை எடுத்துக் கொண்டால் அது சுத்த இயலாமையோடு இருக்கின்ற அதே வேளை எண்ணி முடிக்க இயலாத அளவு அதிகமான பணிகளையும் கணக்கிட முடியாத அளவு கனதியான சுமைகளையும் சுமந்திருப்பதானது ஒவ்வொரு அணுவுடைய இயக்கமும் நிலை கொண்ட இருப்பும் முத்லக்கான வல்லமையுடைய ஒருவனின் கட்டளையிலும் நாமங்களிலுமே தங்கியுள்ளது என்பதைத் தெளிவாக அறியத்தருகின்றது. இவ்வாறு ஒவ்வொரு அணுவும் இந்த உண்மைக்குச் சான்றுபகர்கின்றது. அவ்வாறே ஒவ்வொரு அணுவும் ஏதோ பிரபஞ்சத்துடைய மொத்த ஒழுங்கையும் அறிந்திருப்பதைப் போன்று அதற்குப் பொருத்தமாகத் தனது நடத்தைகளை அமைத்துக்கொள்வதும் எல்லா இடங்களுக்கும் தங்கு தடையின்றி நுழைவதும் அனைத்தையும் அறிந்து நிர்வகிக்கின்ற ஏக இரட்சகனின் முத்லக்கான அறிவுஞானம் மற்றும் வல்லமையின் மூலமே அவை ஒவ்வொன்றும் இயங்குகின்றன என்பதை நிரூபித்துக் காட்டுகின்றன ஆம், ஒரு சிப்பாயை எடுத்துக்கொண்டால் அவனுக்குத் தனது குழு, அணி, படைப் பிரிவு, சேனை, மொத்த இராணுவம் என்று எல்லா மட்டங்களோடும் ஒவ்வொரு தொடர்பும் அந்தத் தொடர்புக்கேற்றவாறு ஒவ்வொரு பொறுப்பும் இருப்பதோடு அந்தத் தொடர்புகளையும் பொறுப்புகளையும் அறிந்து அவை அனைத்துக்கும் பொருத்தமாகத் தனது நடத்தைகளை அமைத்துக் கொள்வது, அந்த இராணுவப் பாசறையில் வழங்கப்படுகின்ற பயிற்சிகள் மூலமும் அந்த மொத்த இராணுவத்தையும் வழிநடத்துகின்ற ஏக தளபதியின் கட்டளைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு வழிப்படுவதன் மூலமுமே சாத்தியமாகும். அவ்வாறே ஓர் அணுவை எடுத்துக் கொண்டால் அது ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கின்ற கட்டமைப்புகளின் ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு அடுக்கிலும் வெவ்வேறு பொருத்தமான தொடர்புகள் மற்றும் பிணைப்புகளையும் வெவ்வேறு பலாபலன்களைத் தரக்கூடிய பொறுப்புகள் மற்றும் பணிகளையும் வெவ்வேறு தாத்பரியங்களை உள்ளடக்கிய பயன்கள் மற்றும் விளைவுகளையும் உடையதாகக் காணப்படுகின்றது. எனவே நிச்சயமாக அந்த அணுவை அப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பில் அதன் பிணைப்புகள், பொறுப்புகள் மற்றும் விளைவுகளில் எந்தவிதமான குழப்பங்களோ குறைபாடுகளோ ஏற்படாத அமைப்பில் நியமிப்பது முழுப் பிரபஞ்சத்தையும் தனது கரங்களில் வைத்திருக்க முடியுமான ஒருவனுக்கு மாத்திரமே உரிய தனித்துவமாகும். உதாரணமாக, இதோ தவ்ஃபீக் (குறிப்பு: ) உடைய கண்மணியில் போய் அமர்ந்துள்ள ஓர் அணுவைப் பாருங்கள். அது கண்ணின் ஒவ்வொரு படலத்தோடும் ஒவ்வொரு அறையோடும் ஒவ்வொரு நாரோடும் ஒவ்வொரு நரம்பு நாளத்தோடும் பொருத்தமான தொடர்புகளைப் பேணும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ள அதே சமயம் முகம், தலை, முண்டம், மொத்த உடல் என்று ஒவ்வொரு மண்டலத்திலும் ஞானபூர்வமான அடிப்படையில் வெவ்வேறு தொடர்புகளோடும் பொறுப்புகளோடும் விளைவுகளோடும் பூர்த்தியான அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதானது நிச்சயமாக அந்த உடலையும் அதன் அத்தனை உறுப்புகளையும் நிர்மானித்த ஒருவனால் மாத்திரமே அந்த அணுவைக் குறித்த அந்த இடத்தில் கச்சிதமாக நிலைகொள்ளச் செய்ய முடியும் என்பதைக் காட்டித் தருகின்றது. குறிப்பாக வாழ்வாதாரத்துக்காக வருகின்ற அணுக்கள், அதாவது வாழ்வாதாரக் கோத்திரங்களாகிய ஆகாரங்களில் பயணித்து வருகின்ற அணுக்கள் ஞானபூர்வமான ஒழுங்கு நேர்த்தியோடு பல்வேறு நிலைகளையும் வலையங்கள், மண்டலங்களையும் கடந்து வருகின்ற விதமும் அந்த எல்லா நிலைமைகளிலும் அவற்றின் எந்த வித தடுமாற்றங்களும் இல்லாத பிரக்ஞைபூர்வமான நடத்தைகளும் வியக்கத்தக்கதாகும். அவ்வாறு நீண்ட ஒரு பாதையைக் கடந்து வருகின்ற அந்த அணுக்கள் உயிருள்ள உடலை அடைந்ததும் நான்கு வடிகட்டிகளில் வடிக்கப்பட்டு ஆகாரத் தேவையுள்ள உறுப்புகள், தசைகள் மற்றும் இழையங்களின் உதவிக்குச் செல்வதற்காக இரத்தத்திலுள்ள செங் குருதிச் சிறு துணிக்கைகளின் மீது ஏறிக்கொள்கின்றன. அவ்வாறு அவை தேவையான இடத்தை அடையும் வரை செல்கின்ற பயணத்தில் ஈகையுடைய பிரதிபலிப்புகளையும் நியதிகளையும் காணலாம். இதை அவதானிக்கின்ற போது அந்த அணுக்களை பல்வேறுபட்ட ஆயிரக்கணக்கான இடங்களூடாகப் பயணிக்கச் செய்து குறித்த இலக்கை அடையச் செய்தவன் நிச்சயமாக பேரன்போடும் அருளோடும் தயாள குணத்தோடும் அனைத்தையும் போசித்துப் பரிபாலிக்கின்ற படைப்பாளனேயாவான் என்பது பட்டவர்த்தனமாகத் தெளிவாகின்றது. ஆம், அவனுடைய வல்லமைக்கு முன்னால் அணுக்களும் நட்சத்திரங்களும் சமனானவையாகும். மேலும் வியக்கத்தக்க கலையம்சங்களைக் கொண்ட அற்புதமான கலைச் சிற்பங்களில் சென்று தொழிற்படுகின்ற அணுக்களின் தொழிற்பாடுகள் எத்தகையவையெனில் ஒவ்வொரு அணுவும் தான் நுழைகின்ற எல்லாக் கலைச் சிற்பங்களினுள்ளும் அதிலுள்ள ஏனைய அனைத்து அணுக்களோடும் தொடர்பைப் பேணி, ஏதோ ஏனைய அனைத்து அணுக்களின் மீதும் அதிகாரமிக்கதாகவும் சம நேரத்தில் ஏனைய அனைத்து அணுக்களுக்கும் கட்டுப்பட்டதாகவும் இருப்பதைப் போன்ற ஓர் அமைப்பில் தனது நிலையைத் தகவமைத்துக்கொள்கின்றது. இத்தகைய ஒரு நிலை ஒன்றோ, ஒவ்வொரு அணுவும் அந்த சிற்பங்களின் கலையம்சங்களையும் கலை ஞானத்துடன் கூடிய வடிவமைப்புகளையும் அறிந்து வைத்திருப்பதன் மூலம் சாத்தியப்பட முடியும். ஆனால் இது சர்வ சாத்தியமற்ற ஒன்றாகும். அல்லது அந்த ஒவ்வொரு அணுவும் சர்வ ஞானமிக்க படைப்பாளனின் விதியுடைய திட்டத்தின் அடிப்படையில் குத்ரத்துடைய எழுதுகோலிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு புள்ளியாகும். உதாரணமாக, ஹாயா சோஃபியா பள்ளிவாசலின் குவிமாடத்தில் பசைகளின்றி நிற்கின்ற கற்கள் ஒன்றோ ஒரு கை தேர்ந்த கட்டிடக் கலை நிபுணரின் திட்டத்துக்கும் கட்டளைகளுக்கும் கலை ஞானத்துக்கும் கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டும். அல்லது ஒவ்வொரு கல்லும் மீமார் ஸினான் போன்ற கை தேர்ந்த ஒரு கட்டிடக் கலை நிபுணரின் அறிவு ஞானத்தை உடையதாகவும் “வாருங்கள் கீழே வீழ்ந்து விடாதிருப்பதற்காக நாம் தோளோடு தோள் நிற்போம்” என்று கூறக்கூடிய அதிகாரமும் கட்டுப்பாடும் மிக்க தீர்மான சக்தி உடையதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறே ஹாயா சோஃபியாவுடைய குவி மாடத்தைவிட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமான கலைஞானங்களையும் வியக்கத்தக்க தாத்பரியங்களையும் கொண்ட படைப்புகளில் காணப்படும் அணுக்கள் பிரபஞ்சத்தின் படைப்பாளனுடைய திட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கலைஞானத்துக்கும் கட்டுப்பட்டவையன்றி சுயாதீனமானவை என்று எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு அணுவுக்கும் பிரபஞ்சத்தின் படைப்பாளனுக்கு மாத்திரம் இருக்க முடியுமான சிறப்புகள் அனைத்தையும் பரிபூரணமாக வழங்குவது அவசியமாகின்றது. ஃபயா ஸுபுஹானல்லாஹ்! இது எத்தனை அபூர்வமானது ரஹ்மானே! நிராகரிப்பில் இருக்கின்ற சடவாதிகள் வாஜிபுல் வுஜூத் ஆகிய ஏகனை ஏற்றுக்கொள்ள மறுப்பதால் தமது கொள்கைகளின் பிரகாரம் அணுக்களின் எண்ணிக்கையளவு மாயையான கடவுளர்களை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டிய கையறு நிலையில் இருக்கின்றார்கள். இந்த அடிப்படையில்தான் நிராகரிப்பாளனாக இருக்கின்ற ஒருவன் எவ்வளவு பெரிய மெய்ஞ்ஞான மேதையாகத்தான் இருப்பினும் அவன் உச்ச மட்ட அறியாமையில் இருக்கின்ற ஜஹ்லுல் முத்லக் ஆவான்.
இது முதலாவது குறிப்பின் இறுதியில் கூறப்பட்டுள்ள ஆறாவது தாத்பரியத்துக்கான ஓர் அறிமுகமாகும். இருபத்தெட்டாவது வார்த்தையின் இரண்டாவது வினாவுக்கான பதிலிலுள்ள விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதைப் போன்று அணுக்களின் நடத்தை மாற்றங்களிலும் உயிரினங்களின் உடலில் அவற்றின் இயக்கங்களிலும் காணப்படுகின்ற ஆயிரக்கணக்கான தாத்பரியங்களுள் ஒன்று அவை பிரகாசம் மிக்கவையாக மாறுவதும் உயிர்ப்பும் அர்த்தமும் பெற்று மறுமை உலகிலுள்ள நிர்மானங்களில் இடம்பெறுவதற்கு அருகதையானவையாக மாறுவதுமாகும். மனித மற்றும் விலங்குகளின் உடலும் ஏன் தாவரங்களின் உடலும் கூட பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகின்ற அணுக்களுக்கான ஒரு வரவேற்பறை அல்லது பயிற்சிப் பாசறை அல்லது பாடசாலையாகும். சடத் தன்மை உடைய அணுக்கள் அவற்றுள் நுழைந்து பிரகாசம் பெறுகின்றன. அங்கு பல்வேறு பயிற்சிகள் மற்றும் பாடங்களைக் கற்றுக் கொண்டு ஆத்மீகத் தன்மை உடையவையாக மாறுகின்றன. அங்கு வெவ்வேறு பணிகளில் ஈடுபடுவதன் மூலம் அத்தனை வஸ்துகளும் உயிர்ப்பு மிக்கதாக உள்ள நித்திய உலகில் அணுக்களாக இருப்பதற்கான தகுதியைப் பெற்றுக்கொள்கின்றன. கேள்வி: அணுக்களின் இயக்கத்தில் இத்தகைய தாத்பரியங்கள் உள்ளது என்பதை எவ்வாறு அறிந்துகொள்ளலாம்? பதில்: ஒட்டுமொத்த சிருஷ்டிகளிலும் உள்ள ஒட்டுமொத்த ஒழுங்குகள், தாத்பரியங்களின் மூலம் நிரூபணமான படைப்பாளனின் அறிவுஞானத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். ஏனெனில் மிகவுமே அற்பமான வஸ்துகளையும் கூட அகிலார்ந்த தாத்பரியங்கள் பொதிந்ததாக ஆக்கிய ஒரு ஞானம் பிரபஞ்சக் கடலில் மிகப் பெரும் பணிகளில் சேவகர்களாகவும் மிகவுமே அர்த்தபூர்வமான கலைப் படைப்புகளுக்கான காரணிகளாகவும் இருக்கின்ற அணுக்களின் நகர்வுகளை நிச்சயமாக அர்த்தங்களோ தாத்பரியங்களோ அற்ற வெற்றுச் சமாச்சாரங்களாக விட்டு வைக்க மாட்டான். மேலும் மிகச் சிறிய படைப்புகளையும் கூட அவற்றின் பணிகளுக்கான பிரதிபலன்கள் மற்றும் அவற்றினூடான பூரணத்துவங்கள் இன்றி வைக்காத ஒரு ஞானம், ஒரு ஹாகிமியத் நிச்சயமாக மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும் மிக அடிப்படையான சேவகர்களை பூரணத்துவம் என்ற பிரகாசமும் பிரதிபலன்களும் அற்றதாக அழிந்து போக விடமாட்டாது. இரண்டாவது: சர்வ ஞானமிக்க படைப்பாளன் மூலகங்களுக்கு மத்தியில் தோற்றுவிக்கின்ற தாக்கங்கள், இயக்கங்கள் மூலம் அவற்றின் மீது சில பணிகளைச் சுமத்தி -அந்தப் பணிகளுக்கான ஒரு வகைப் பிரதியுபகாரமாக- அவற்றை கனிமங்கள், பதார்த்தங்கள், கூறுகளுடைய அந்தஸ்துக்கு உயர்த்துகிறான். பின்னர் கனிமங்களை அதற்கே உரிய பணிகளோடு இயக்குவித்து தாவரங்களுடைய வாழ்க்கை அந்தஸ்துக்கும், தாவரங்களை ஆகார வடிவில் இன்னோரன்ன பணிகளோடு இயக்குவித்து விலங்குகளுடைய வாழ்க்கை அந்தஸ்துக்கும், பின்னர் விலங்குகளை ஆகார வடிவில் இன்னோரன்ன பணிகளோடு இயக்குவித்து மனிதனுடைய வாழ்க்கை அந்தஸ்துக்கும், பின்னர் மனித உடலிலிருந்து கட்டம் கட்டமாக வடித்தெடுக்கப்பட்ட ஒரு தொகுதி அணுக்கள் மனித உடலின் ஆத்மீகப் பிரதேசங்களாகிய மூளை மற்றும் இதயத்தின் முக்கிய பதவிகளுக்கும் உயர்த்தப்படுகின்றது. இவை அனைத்தும் அணுக்களின் இயக்கமானது இலக்கற்ற ஒரு பயணம் அல்ல என்பதையும் மாறாக அவை தமது தகுதிக்குரிய ஒரு பூரணத்துவத்தையும் தம்மீது விதிக்கப்பட்ட ஓர் இலக்கையும் நோக்கி இயக்கப்படுகின்றன என்பதையும் காட்டி நிற்கின்றன. மூன்றாவது: உயிரினங்களின் உடலிலுள்ள அணுக்களுக்கு மத்தியில் விதைகள் மற்றும் மகரந்த மணிகளில் இருப்பதைப் போன்ற ஒரு தொகுதி அணுக்கள் மகத்தான ஓர் அமைப்பில் ஆத்மீக ஒளிக்கும் தன்மைகளுக்கும் சிறப்புகளுக்கும் பாத்திரமாகி அந்த உடலிலுள்ள ஏனைய அணுக்களுக்கும் பிரமாண்டமான ஒரு விருட்சத்துக்கும் ஓர் ஆத்மாவாக அல்லது அரசனாக ஆகின்றன. ஆம், பிரமாண்டமான ஒரு விருட்சத்தின் ஒட்டுமொத்த அணுக்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட ஒரு தொகுதி அணுக்கள் மாத்திரம் அந்த விருட்சத்தின் பல்வேறு பருவங்களில் பல்வேறுபட்ட பணிகளை நிறைவேற்றி கட்டம் கட்டமாக அந்த அந்தஸ்த்துக்கு உயர்வதானது அவை சர்வ ஞானமிக்க படைப்பாளனின் கட்டளையின் பிரகாரமே இயங்குகின்றன என்பதைக் காட்டி நிற்கின்றது. மேலும் இறை கட்டளையின் பிரகாரம் அவற்றின் இயல்புக்கேற்ற பணிகள் மற்றும் பல்வேறுபட்ட இயக்கங்களின் போது அவற்றின் மீது பிரதிபலிக்கின்ற இறை நாமங்களையும் அந்த நாமங்களுடைய கீர்த்தியின் பொருட்டால் அவை பெற்றுக்கொள்கின்ற ஆத்மார்த்தமான தன்மைகள், நிறங்கள், ஒளிகள் மற்றும் பதவிகளையும் அவை கற்றுக்கொள்கின்ற பூர்த்தியான பாடங்களையும் காட்டித் தருகின்றன. சுருக்கமாக: ஆம், சர்வ ஞானமிக்க படைப்பாளன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குத் தகுதியான ஓர் இருப்பந்தஸ்தையும் அதன் பரிபூரணத்துவத்துக்குப் பொருத்தமான ஒரு புள்ளியையும் நிர்ணயம் செய்து அந்தப் பொருளுக்கு உழைப்பின் மூலம் அந்தப் புள்ளியை அடைவதற்கான திறனையும் வழங்கி அந்த இலக்கை நோக்கி நகர்த்துகிறான். ருபூபியத்துடைய இந்த நியதியானது ஒட்டுமொத்த தாவர மற்றும் விலங்கினங்களிலும் செல்லுபடியானதாக இருப்பதைப் போன்றே சாமான்யமான சடப் பொருட்களிலும் கூட செல்லுபடியானதாகும். இதன் காரணமாகவே அற்பமான மண்ணுக்கு வைரம் என்றும் இரத்தினம் என்றும் உயர்வான ஒரு மதிப்பும் பதவியும் வழங்கப்படுகின்றது. ஆம், இந்த உண்மையினூடாக ருபூபியத்துடைய ஓர் அகிலார்ந்த நியதியின் ஓர் அந்தப் புள்ளி புலனாகின்றது. மேலும், சர்வ தயாளனான படைப்பாளன் இனப்பெருக்கத்துக்கான உத்தியோகம் வழங்கப்பட்டுள்ள விலங்குகளுக்குக் கூலியாக ஒரு இன்பத்தை வழங்குகின்றான். அவ்வாறே தேனீ, பறவைகள் போன்ற வெவ்வேறு பணிகளில் ஈடுபடுகின்ற விலங்குகளுக்கும் பூர்த்தியான கூலிகள் வழங்கப்படுகின்றன. அதாவது அந்தக் கூலி அவற்றுக்கு இன்பமானதாகவும் அந்தப் பணியைச் செய்வதற்கு ஆர்வமூட்டுவதாகவும் இருப்பதைக் காணலாம். ஆம், இந்த உண்மையினூடாகவும் இறை ஈகையுடைய ஓர் அகிலார்ந்த நியதியின் ஓர் அந்தப் புள்ளி தென்படுகின்றது. அவ்வாறே எல்லா வஸ்துகளிலும் வெவ்வேறு சத்தியங்கள் பொதிந்துள்ளன. ஒவ்வொரு சத்தியமும் சத்திய இரட்சகனுடைய ஒவ்வொரு திரு நாமத்தை நோக்கியதாகவும் அதனோடு தொடர்புடையதாகவும் அதற்கான கண்ணாடியாகவுமே திகழ்கின்றது. அந்தப் பொருள் பெற்றுக்கொள்கின்ற அழகிய அமைப்பு உண்மையில் அந்தத் திருநாமத்தின் கண்ணியத்திலிருந்துமுள்ளதாகும். அந்த நாமம் அந்தப் பொருளை அவ்வாறே வேண்டுகிறது. அந்தப் பொருள் அறிந்தாலும் அறியாவிட்டாலும் அதுவே சத்தியத்தின் பார்வையில் வேண்டப்படுகின்ற நிலையாகும். இந்த உண்மையூடாக தெய்வீக அழகின் ஓர் அகிலார்ந்த நியதியுடைய ஓர் அந்தப் புள்ளியைக் காண முடியும். மேலும் சர்வ தயாளனான படைப்பாளன் தனது தயாளத் தன்மையின் வேண்டலுக்கமைவாக ஒரு வஸ்துக்கு வழங்கிய பதவியையும் பூரணத்துவத்தையும் அதன் ஆயுளும் அவகாசமும் முடிவடைவதோடு மீளப் பெறுவதில்லை. மாறாக அதன் கனிகளையும் விளைவுகளையும் ஆத்மார்த்தமான சிறப்புகள் மற்றும் அர்த்தங்களையும் அது ஆத்மாவை உடையதாக இருப்பின் ஆத்மாவையும் நித்தியமானதாக ஆக்கிவிடுகிறான். உதாரணமாக இந்த உலகில் மனிதனை ஒரு பூரணத்துவத்துக்குப் பாத்திரமானவனாக ஆக்கியது மாத்திரமன்றி அந்தப் பூரணத்துவத்திலிருந்து வெளிப்படுகின்ற அர்த்தங்களையும் கனிகளையும் நித்தியமானதாக ஆக்குகின்றான். நன்றியுள்ள ஓர் அடியான் அழிந்து போகக்கூடிய ஒரு கனியை உட்கொண்ட பின்னர் செலுத்துகின்ற நன்றியை ஒரு சுவனத்துக் கனியாக மீண்டும் அவனுக்கே வழங்குகிறான். இந்த உண்மையூடாக ரஹ்மத்துடைய ஓர் அகிலார்ந்த நியதியின் ஓர் அந்தப் புள்ளியைக் காண முடியும். மேலும் ஈடிணையற்ற அந்தப் படைப்பாளனுடைய எந்த ஒரு காரியத்திலும் வீண்விரயத்தையோ அர்த்தமற்ற தன்மையையோ காண முடியாது. இலையுதிர் காலத்தில் தமது பணிகளை முடித்துவிட்டு மரணித்த படைப்பினங்களுடைய சட ரீதியான எச்சங்களை வசந்த காலத்துக்குரிய படைப்பினங்களின் வடிவமைப்பிலும் நிர்மானத்திலும் பயன்படுத்துகிறான். எனவே நிச்சயமாக ﻳَﻮْﻡَ ﺗُﺒَﺪَّﻝُ ﺍﻟْﺎَﺭْﺽُ ﻏَﻴْﺮَ ﺍﻟْﺎَﺭْﺽِ என்ற வசனத்தில் பொதிந்துள்ள தாத்பரியத்துக்கும் ﻭَﺍِﻥَّ ﺍﻟﺪَّﺍﺭَ ﺍﻟْﺎٰﺧِﺮَﺓَ ﻟَﻬِﻰَ ﺍﻟْﺤَﻴَﻮَﺍﻥُ என்ற வசனம் சுட்டிக்காட்டுகின்ற சத்தியத்துக்கும் அமைவாக இந்த உலகில் காணப்படுகின்ற பிரக்ஞையற்ற சாமான்யமான அணுக்கள் நிச்சயமாக கற்கள், மரங்கள் என்று அனைத்துமே பிரக்ஞையுடையவையாக இருக்கின்ற மறுமை உலகின் சில நிர்மானங்களில் பயன்படுத்தப்படுவது தெய்வீக ஞானத்தின் வேண்டலாகும். ஏனெனில் அழிந்து போன உலகின் அணுக்களை உலகத்திலேயே விட்டுவிடுவது அல்லது இல்லாமைக்குள் தள்ளிவிடுவது வீண்விரயமாகும். இந்த உண்மையூடாக இறை ஞானத்துடைய ஓர் அகிலார்ந்த நியதியின் ஓர் அந்தப் புள்ளியைக் காண முடியும். மேலும் இந்த உலகுக்குரிய ஏராளமான வஸ்துகளும் கனிகளும் ஆத்மீக அம்சங்களும் மனித, ஜின் வர்க்கத்தினரின் ஆத்மாக்களும் உடல்களும் செயல்களும் அவற்றின் விளைவுகளும் மறுமை உலகுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. எனவே நிச்சயமாக அந்தக் கனிகளுக்கும் விளைவுகளுக்கும் அர்த்தங்களுக்கும் சேவகம் செய்து பக்கபலமாக இருக்கின்ற பூலோக அணுக்களும் கூட தன்னளவில் நிர்ணயிக்கப்பட்ட பூரணத்துவத்தை அடைந்த பின்னர், அதாவது உயிர் அல்லது வாழ்வு என்ற ஒளிக்கும் உயிரோட்டமான துதிகளுக்கும் ஏராளமான தடவைகள் சேவகம் செய்த பின்னர் அவற்றை இந்த உலகின் இடிபாடுகளுக்கு மத்தியிலிருந்து மறுமை உலகத்துக்குரிய நிர்மானங்களில் பயன்படுத்துவது நீதி மற்றும் ஞானத்தின் வேண்டலாகும். இந்த உண்மையூடாக இறை நீதிக்குரிய ஓர் அகிலார்ந்த நியதியின் ஓர் அந்தப் புள்ளியைக் காண முடியும். மேலும் ஆத்மா உடலின் மீது அதிகாரம் கொண்டதாக இருப்பதைப் போன்றே இறை விதியின் பிரகாரம் சாமான்ய வஸ்துகளின் மீது எழுதப்பட்ட நியதிகளும் கூட அவற்றின் மீது அதிகாரம் கொண்டவையாகும். அந்த வஸ்துகள் இறை விதியுடைய ஆத்மார்த்தமான எழுத்துகளின் பிரகாரம் தமக்குரிய நிலையையும் ஒழுங்கையும் பெற்றுக்கொள்கின்றன. உதாரணமாக வகை வகையான முட்டைகளையும் முட்டை - இந்திரியக் கலவைகளையும் விதைகளையும் எடுத்துக்கொண்டால் விதியால் எழுதப்பட்டுள்ள வெவ்வேறு நியதிகளின் பிரகாரம் ஒவ்வொன்றும் வெவ்வேறு பதவிகளையும் அந்தஸ்துகளையும் பெற்றுக்கொள்கின்றன. ஆம், ஒரே வகையான பதார்த்தங்களால் ஆக்கப்பட்டு ஒரே தன்மை உடையவையாக இருக்கின்ற அவை வித விதமான எண்ணற்ற படைப்புகளுக்கு மூங்களாக இருக்கின்றன. [குறிப்பு: ஆம், அவை அனைத்தும் வெறும் நான்கு வகையான பதார்த்தங்களால் ஆக்கப்பட்டவையாகும். ஐதரசன், ஒட்சிசன், நைட்ரஜன், காபன் என்பவையே அவையாகும். அதாவது பதார்த்தங்களின் அடிப்படையில் அனைத்தையும் ஒன்றாகப் பார்க்க முடியும். அவற்றுக்கு மத்தியிலுள்ள வேறுபாடுகள் விதியின் ஆத்மார்த்தமான திட்டங்கள் அல்லது எழுத்துகளிலிருந்துமுள்ளவையாகும்.] அவற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஒவ்வொரு படைப்பும் வெவ்வேறு பதவிகளையும் அந்தஸ்துகளையும் உடையவையாக வெளிப்படுகின்றன. எனவே ஓர் அணு பல தடவைகள் வாழ்க்கைக்குச் சேவகம் செய்கின்ற பணியிலும் வாழ்க்கையின் விளைவாகிய இறை துதியிலும் பங்கேற்றிருக்கும் என்றால் அந்த அணுவின் நெற்றியில் அதாவது தலைவிதியில் அந்த அத்தனை நிலைகளும் அர்த்தங்களும் நிச்சயமாக எழுதப்பட்டே இருக்கும். இது எந்த ஒன்றையும் தவறிவிடாமல் பாதுகாக்கின்ற அகிலார்ந்த அறிவின் வேண்டலாகும். ஆம் இந்த உண்மையூடாக தெய்வீக அறிவின் ஓர் அகிலார்ந்த விதியுடைய ஓர் அந்தப் புள்ளியைக் காண முடியும். ஆகவே அணுக்கள் தான்தோன்றித்தனமானவை அல்ல என்பதை மேற்படி ஏழு உண்மைகளும் ஏழு நியதிகளும் தெளிவாகக் காட்டித் தருகின்றன. மேலே கூறப்பட்ட உதாரணங்களுக்கமைய ருபூபியத், இறை ஈகை, தெய்வீக அழகு, ரஹ்மத், ஹிக்மத், இறை நீதி, இறை அறிவு ஆகிய தெய்வீகப் பண்புகளுக்குரிய ஏழு நியதிகளையும் போல் இன்னும் ஏராளமான அகிலார்ந்த நியதிகளின் இத்தகைய புள்ளிகள் தமக்குப் பின்னணியில் ஒவ்வொரு உன்னதமான இறை நாமத்தையும் அந்த இறை நாமத்துடைய அதி உன்னதமான பிரதிபலிப்பையும் காட்டித் தருகின்றன. அந்தப் பிரதிபலிப்பின் மூலம் எல்லா வஸ்துகளையும் போன்று அணுக்களின் இயக்கங்கள் மற்றும் நடத்தைகளிலும் கூட மிக உன்னதமான தாத்பரியங்கள் பொதிந்திருப்பதையும், அவை இறை விதியால் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் இறை வல்லமையால் வழங்கப்பட்ட கட்டளைகளுக்கமைய தெய்வீக அறிவு ஞானத்தின் மிகத் துல்லியமான விதிகளின் பிரகாரமே இயங்குகின்றன என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இவை அனைத்தும் இங்கிருந்து வேறோர் உலகுக்குச் செல்வதற்கான தயார்படுத்தல்களாகும். [குறிப்பு: ஆம், மிகவுமே அற்பமான இந்த சட உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் மிகுந்த பரோபகாரத்தோடு வாழ்வின் ஒளியைப் பாய்ச்சுவதும் அழுகிய பொருட்களிலிருந்தும்கூட அந்த ஒளியைப் பெருக்கெடுக்கச் செய்து சாமான்யமான அந்த சடப் பொருட்களை ரம்மியமானதாக மாற்றுவதும் பட்டவர்த்தனமாச் சொல்லித் தருகின்ற உண்மை யாதெனில் இவை அனைத்தும் இத்தோடு முடிவடைந்து போகின்ற காரியங்கள் அல்ல என்பதாகும். ஆம் இந்த சாமான்யமான சட உலகை மொத்தமாகவே ஆத்மார்த்தமான வாழ்க்கை ஒளியால் நிரம்பி, ரம்மியமான ஓர் உலகத்துக்கு நிலை மாற்றம் செய்வதற்காக அணுக்களின் இயக்கங்கள் மூலமும் வாழ்வு என்ற ஒளியின் மூலமும் அதைப் பதப்படுத்திப் பிரகாசிக்கச் செய்கின்றான். மனிதனுடைய மீள்பிறப்பைக் கிரகித்துக்கொள்ள முடியாத, புத்தித் தட்டுப்பாடு உடையவர்கள் குர்ஆனுடைய ஒளியினூடாகப் பார்த்தால், ஒட்டுமொத்த அணுக்களையும் ஒரு படையை ஒன்றுதிரட்டுவதைவிட இலகுவாக ஒன்றுதிரட்ட முடியுமான ஓர் அகிலார்ந்த கய்யூமியத் கோலோச்சுவதைக் காண்பார்கள். இதைக் கண்களுக்கு முன்னால் சதாவும் பார்த்துக்கொண்டே இருக்கின்றோம்.] இந்த வகையில் உயிருள்ள உடல்கள் அனைத்தும் இயங்கும் அணுக்களுக்கான ஒவ்வொரு பாடசாலை அல்லது பயிற்சிக் கூடமாகும். சுருக்கமாக: முதலாவது வார்த்தையில் நிறுவப்பட்டுள்ளதைப் போன்று அனைத்து வஸ்துகளுமே “பிஸ்மில்லாஹ்” என்று மொழிகின்றன. ஆம் எல்லா வஸ்துகளையும் போன்றே ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு அணுக் கூட்டமும் அணுக்களின் தொகுப்பாக இருக்கின்ற ஒவ்வொரு வஸ்தும் “பிஸ்மில்லாஹ்” என்று கூறியே இயங்குகின்றன. மேலுள்ள மூன்று குறிப்புகளிலும் உள்ள தாத்பரியங்களுக்கமைவாக ஒவ்வொரு அணுவும் தன்னுடைய இயக்கத்தின் ஆரம்பத்தில் தனது மெய்ம்மொழியால் ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّٰﻪِ ﺍﻟﺮَّﺣْﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ என்று கூறுகின்றது. அதாவது “நான் அல்லாஹ்வின் பெயரால், அவனுடைய கணக்கில், அவனுடைய அனுமதியோடு, அவனுடைய பலத்தைக் கொண்டு ஆரம்பிக்கிறேன்” என்று தனது இயக்கத்தை ஆரம்பிக்கும். பின்னர் இயக்கத்தின் விளைவில் எல்லா வஸ்துகளையும் போன்று ஒவ்வொரு அணுவும், ஒவ்வொரு அணுக் கூட்டமும் தத்தமது மெய்ம்மொழிகளால் ﺍَﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠّٰﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ என்று கூறுகின்றன. அதாவது இறை புகழ்பாடும் வார்த்தைகள் போன்ற அழகிய கலைச் சிற்பங்களில் குத்ரத்துடைய பேனாவின் முனையைப் போன்று தம்மைக் காட்சிப்படுத்துகின்றன. دَع۟وٰيهُم۟ فٖيهَا سُب۟حَانَكَ اللّٰهُمَّ وَتَحِيَّتُهُم۟ فٖيهَا سَلَامٌ وَ اٰخِرُ دَع۟وٰيهُم۟ اَنِ ال۟حَم۟دُ لِلّٰهِ رَبِّ ال۟عَالَمٖينَ سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ رَبَّنَا لَا تُزِغ۟ قُلُوبَنَا بَع۟دَ اِذ۟ هَدَي۟تَنَا وَهَب۟ لَنَا مِن۟ لَدُن۟كَ رَح۟مَةً اِنَّكَ اَن۟تَ ال۟وَهَّابُ اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَاةً تَكُونُ لَكَ رِضَاءً وَ لِحَقِّهٖ اَدَاءً وَ عَلٰى اٰلِهٖ وَ صَح۟بِهٖ وَ اِخ۟وَانِهٖ وَ سَلِّم۟ وَسَلِّم۟نَا وَ سَلِّم۟ دٖينَنَا اٰمٖينَ يَا رَبَّ ال۟عَالَمٖينَ

