Lem'alar

Second Chapter of the Twenty-Ninth Gleam

ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

அற்புத தெளிவுரையாகிய குர்ஆன் لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ * لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ * اَوَلَمْ يَتَفَكَّرُوا فِى اَنْفُسِهِمْ مَا خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَ اْلاَرْضَ * َلاۤيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ போன்ற வசனங்கள் மூலம் ஊக்குவிக்கின்ற, تَفَكُّرُ سَاعَةٍ خَيْرٌ مِنْ عِبَادَةِ سَنَةٍ போன்ற ஹதீஸ்கள் ஒரு மணித்தியாளத்தை ஒரு வருட வணக்க வழிபாடுகளுக்கு ஈடானதாக சிலாகிக்கின்ற தஃபக்குர் எனப்படும் சிந்தனைச் சஞ்சாரத்தில் கடந்த பதிமூன்று வருடங்களாக உள்ளமும் பகுத்தறிவும் ஒருமிக்க உலாவிய போது குறித்த காலப்பகுதிக்குள் உள்ளத்திலும் பகுத்தறிவிலும் தோன்றிய மகத்தான ஒளிகளையும் நீண்ட சத்தியங்களையும் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் சிந்தனைச் சஞ்சாரத்தை இலகுபடுத்துவதற்காகவும் சில வார்த்தைகளை அந்த ஒளிகளுக்கான அத்தாட்சிகளாக அன்றி அவற்றின் இருப்பை நினைவூட்டுகின்ற குறிப்புகள் வடிவில் கோர்த்தேன். இவ்வாறு மிகவும் வேறுபட்ட அரபு மொழியிலான பிரயோகங்களில் கோர்க்கப்பட்ட அந்தக் குறிப்புகளை அந்த சிந்தனைச் சஞ்சாரங்களின் போது நானே மீட்டிக்கொள்வேன். இந்த நீண்ட காலப் பகுதிக்குள் பல்லாயிரம் தடவைகள் மீட்டிய போதும் அது எனக்கு அலுப்பைத் தரவோ அல்லது அதன் மூலம் கிடைத்த சுவையில் குறைவுகள் ஏற்படவோ அல்லது அதற்கான ஆத்மார்த்த தேவை தீரவோ இல்லை. ஏனெனில் அந்த சிந்தனைகள் அனைத்தும் குர்ஆனிய வசங்களின் ஒளிக் கீற்றுகளாக இருப்பதால் குர்ஆனிய வசனங்களின் சிறப்பாகத் திகழும் அலுப்பை ஏற்படுத்தாமை, சுவையைப் பேணுதல் போன்ற பண்புகள் அந்த சிந்தனைக் கண்ணாடியிலும் பிரதிபலித்துள்ளது. இந்த இறுதிக் காலப்பகுதியில் ரிஸாலே நூரின் நிவாரணங்களிள் உள்ள பலம்வாய்ந்த உயிர்ப்பியல் முடிச்சும் பிரகாசமான ஒளிகளும் சங்கிலித் தொடரான அந்த சிந்தனைச் சஞ்சாரத்தின் ஒளிக் கீற்றுகளாகும் என்பதைக் கண்டுகொண்டேன். எனவே அவை என்னில் ஏற்படுத்திய தாக்கத்தை ஏனையவர்களிலும் ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் இப்போது அதை முழுமையாக எழுத நிய்யத்து வைத்தேன். உண்மையில் இதன் முக்கியமான பகுதிகள் ஏலவே ரிஸாலே நூரில் உள்வாங்கப்பட்டுள்ளன. எனினும் இந்த முழுமையான வடிவத்தின் சக்தியும் பெறுமதியும் அலாதியானதாக இருக்கும் என்பதால் இங்கு முழுமையான வடிவில் இணைத்துக்கொள்ளப்படுகிறது. இறுதிக் காலம் எவ்வாறிருக்கப் போகின்றது என்பதை அறிய முடியாத காரணத்தினாலும் தற்போது சிறைச்சாலையில் அனுபவித்துக்கொண்டுள்ள நிலை மரணத்தைவிட மோசமான ஒரு வடிவில் இருப்பதாலும் எனது சகோதரர்களின் வறுபுறுத்தல்களாலும் இன்னும் பிற்போடாமல் அந்த சங்கிலித் தொடரான சிந்தனைகளை எத்தகைய மாற்றங்களுமின்றி “ஆறு நுழைவாயில்கள்” ஆக எழுத்து வடிவில் கொண்டுவரப்பட்டது. (ஈந்த மின்னலின் ஏனைய ஆறு நுழைவாயில்களும் உதுமானிய மொழி மூலத் தொகுப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.)

§2

முப்பது பதவிகளுள் ஏழு பதவிகளைக் குறிப்பிடுகிறோம். அந்தப் பதவிகளின் பெரும்பகுதி இருபதாவது கடிதத்தின் இரண்டாவது பாகத்திலும் முப்பத்தி இரண்டாவது வார்த்தையுடைய இரண்டாவது பகுதியின் இறுதியிலும் மூன்றாவது பகுதியின் ஆரம்பத்திலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த பதவிகளிளுள்ள சத்தியங்களைப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் குறித்த இடங்களில் விண்ணப்பிக்கவும்.

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters