சூரதுல் பத்ஹின் இறுதியில் வருகின்ற வசனத்திலுள்ள ஏழு வகை மறைவான செய்திகளோடு தொடர்பானதாகும். بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ لَقَد۟ صَدَقَ اللّٰهُ رَسُولَهُ الرُّؤ۟يَا بِال۟حَقِّ لَتَد۟خُلُنَّ ال۟مَس۟جِدَ ال۟حَرَامَ اِن۟ شَٓاءَ اللّٰهُ اٰمِنٖينَ مُحَلِّقٖينَ رُؤُسَكُم۟ وَ مُقَصِّرٖينَ لَا تَخَافُونَ فَعَلِمَ مَا لَم۟ تَع۟لَمُوا فَجَعَلَ مِن۟ دُونِ ذٰلِكَ فَت۟حًا قَرٖيبًا هُوَ الَّذٖٓى اَر۟سَلَ رَسُولَهُ بِال۟هُدٰى وَدٖينِ ال۟حَقِّ لِيُظ۟هِرَهُ عَلَى الدّٖينِ كُلِّهٖ وَ كَفٰى بِاللّٰهِ شَهٖيدًا مُحَمَّدٌ رَسُولُ اللّٰهِ وَالَّذٖينَ مَعَهُٓ اَشِدَّٓاءُ عَلَى ال۟كُفَّارِ رُحَمَٓاءُ بَي۟نَهُم۟ تَرٰيهُم۟ رُكَّعًا سُجَّدًا يَب۟تَغُونَ فَض۟لًا مِنَ اللّٰهِ وَ رِض۟وَانًا سٖيمَاهُم۟ فٖى وُجُوهِهِم۟ مِن۟ اَثَرِ السُّجُودِ ذٰلِكَ مَثَلُهُم۟ فِى التَّو۟رٰيةِ وَ مَثَلُهُم۟ فِى ال۟اِن۟جٖيلِ كَزَر۟عٍ اَخ۟رَجَ شَط۟ئَهُ فَاٰزَرَهُ فَاس۟تَغ۟لَظَ فَاس۟تَوٰى عَلٰى سُوقِهٖ يُع۟جِبُ الزُّرَّاعَ لِيَغٖيظَ بِهِمُ ال۟كُفَّارَ وَعَدَ اللّٰهُ الَّذٖينَ اٰمَنُوا وَ عَمِلُوا الصَّالِحَاتِ مِن۟هُم۟ مَغ۟فِرَةً وَ اَج۟رًا عَظٖيمًا ஸூரா பத்ஹுடைய இந்த மூன்று வசனங்களும் பல கோனங்களில் அற்புதத்தன்மை வாய்ந்தவையாகும். சங்கைமிக்க குர்ஆனில் இருக்கின்ற -விசாலாமான பரப்பைக் கொண்ட- பத்து வகையான அற்புதங்களில் மறைவான விடயங்களின் முன்னறிவிப்போடு தொடர்பான அற்புத வகையானது இந்த மூன்று வசனங்களிலும் ஏழு, எட்டு வடிவங்களில் காணப்படுகின்றது.
மூல உரை பாதுகாக்கப்படுகிறது. மாதிரி கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு காட்டப்படும்.
Lem'alar
The Seventh Gleam
لَقَدْ صَدَقَ اللَّهُ رَسُولَهُ الرُّوءْيَا என்று தொடரும் வசனமானது மக்கா வெற்றியை அது நிகழ்வதற்கு முன்னரே மிகவும் திட்டவட்டமாக முன்னறிவிப்புச் செய்கின்றது. இரண்டு வருடங்களுக்குப் பின்னர் முன்னறிவிப்புச் செய்யப்பட்டதைப் போன்றே நிகழ்ந்தேறியது.
فَجَعَلَ مِنْ دُونِ ذَلِكَ فَتْحًا قَرِيبًا என்ற வார்த்தையானது, ஹுதைபியா உடன்படிக்கையானது உண்மையில் வெளிப் பார்வைக்குத் தீங்கானதாக, அதாவது முஸ்லிம்களுக்குத் தோல்வியையும் குரைஷிகளுக்கு வெற்றியையும் கொண்டு வந்த ஒன்றாகத் தென்பட்ட போதிலும் யதார்தத்தில், உளவியல் ரீதியில் பாரியதொரு வெற்றியாக இருக்கப் போவதோடு கூடவே எதிர்வர இருக்கும் மகத்தான வெற்றிகளைக் கட்டியம் கூறுகின்ற ஒரு திருப்புமுனையாக அமையப் போகின்றது என்பதை முன்னறிவிப்புச் செய்கின்றது. உண்மையில் ஹுதைபிய்யா உடன்படிக்கையினூடாக சடரீதியான வால் குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு உறையிலிடப்பட்டது. ஆனால் சங்கைமிக்க குர்ஆனுடைய மின்னல் போன்று பிரகாசமான வைர வால் களத்தில் வெளிப்பட்டு எதிரிகளின் உள்ளங்களையும் மனசாட்சிகளையும் வெற்றி கொண்டது. பரஸ்பரம் ஒப்பந்தத்தின் மூலமாக ஒருவரோடொருவர் புழங்க ஆரம்பித்தார்கள். இஸ்லாத்தின் அழகும் குர்ஆனிய ஒளியும் பிடிவாதக் குணத்தையும் கோத்திரப் பெறுமைகளையும் கிழித்தெறிந்து அவர்களுடைய உள்ளங்களில் தமது ஆட்சியை நிலைநாட்டின. உதாரணமாக, யுத்த தந்திரத்தில் வித்துவானாகத் திகழ்ந்த காலித் பின் வலீதையும் அரசியல் ஞானத்தில் விற்பன்னராகத் திகழ்ந்த அம்ர் இப்னுல் ஆஸையும் போன்ற தோல்வியை சீரணித்துக்கொள்ள முடியாத வீரபுருஷர்களை, ஹுதைபியா உடன்படிக்கையைத் தொடர்ந்து தனது பிரகாசத்தை வெளிப்படுத்திய அந்தக் குர்ஆனிய வால் மண்டியிடச் செய்தது. அவர்கள் மதீனா முனவ்வராவுக்குள் பூரண சரனாகதியோடு நுழைந்து இஸ்லாத்தில் புகழிடம் கண்டார்கள். பின்னர் ஹழரத் ஹாலித் இப்னு வலீத் அவர்கள் இன்னுமொரு ஸைஃபுல்லாஹ்வாக ரூபமெடுத்து இஸ்லாத்தின் ஒரு வெற்றி வாலாக மாறினார்கள். முக்கியமானதொரு கேள்வி அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாகவும் ரப்புல் ஆலமீனுடைய நேசராகவும் திகழ்ந்த ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடைய தோழர்கள், முஷ்ரிகீன்களுக்கு முன்னால் உஹதின் முடிவிலும் ஹுனைனின் ஆரம்பத்திலும் ஏன் தோல்வியைத் தழுவினார்கள். இதற்குப் பின்னாலுள்ள தாத்பரியம் என்ன? பதில் எதிர்காலத்தில் அப்போது ஸஹாபாக்கள் அணியிலிருந்த மாபெரும் ஸஹாபாக்களுக்கு நிகரானவர்களாக வரக்கூடிய ஹழரத் ஹாலித் போன்ற வீரபுருஷர்கள், அந்த யுத்தங்களின் போது முஷ்ரிகீன்களுடைய அணயில் இருந்தமையால், கண்ணியத்திற்கும் அந்தஸ்திற்குமுரிய அவர்களது எதிர்காலங்களை முன்னிருத்தி, முற்று முழுதாக அவர்களது வீரத்துக்கும் உத்தமத்தன்மைக்கும் கலங்கம் ஏற்படாதிருப்பதற்காகவும், அவர்களது அழகிய எதிர்காலங்களுக்கான ஒரு நன்மாராயமாக அமையும் வகையிலும் இறை ஞானமானது அந்த வெற்றிகளை அவர்களுக்கு வழங்கியது. இதன் மூலம் அவர்களுடைய கண்ணியம் கலங்கம் ஏற்பட்டு விடாமல் பாதுகாக்கப்பட்டது. அதாவது அப்போதைய ஸஹாபாக்கள் எதிர்கால ஸஹாபாக்களுக்கு முன்னால் தோல்வியைத் தழுவினார்கள். ஆம், அந்த எதிர்கால ஸஹாபாக்கள் வாலோசைகளுக்குப் பயந்தல்ல, மாறாக சத்திய ஒளியின் மீது கொண்ட பற்றால் தான் இஸ்லாத்தினுள் நுழைந்து கொண்டார்கள். மேலும் இந்த ரப்பானிய ஞானம் காரணமாக அஞ்சா நெஞ்சம் கொண்ட அவர்களது இயல்புகள் இஸ்லாத்தினுள் நுழையும் போது அதிகம் அசௌகரியப்படவில்லை.
لاَ تَخَافُونَ என்ற வரையறையினூடாக “நீங்கள் பூரண பாதுகாப்போடு கஃபாவை தவாஃப் செய்வீர்கள்” என்ற விடயம் முன்னறிவிப்புச் செய்யப்படுகின்றது. ஆனால் அப்போதைய கள நிலவரங்களின் படி அராபியத் தீபகட்பத்திலிருந்த அதிகமான கோத்திரங்கள் எதிரிகளாக இருந்ததைப் போன்றே கஃபாவைச் சூழ இருந்தவர்களும் குறைஷிக்களுக்கு மத்தியில் அதிபெரும்பாண்மையினரும் இஸ்லாத்தின் கடும் எதிரிகளாகவே இருந்தார்கள். எனவே இப்படிப்பட்ட ஒரு காலத்தில் எந்த வித அச்சமும் இல்லாமல் கஃபாவைத் தவாப் செய்யப் போகின்றீர்கள் என்ற முன்னறிவிப்பானது, அராபியத் தீபகட்பம் பூரண கட்டுப்பாட்டுக்குள் வருவதன் மூலமும், குரைஷிகள் மொத்தமாக இஸ்லாத்துக்குள் நுழைவதன் மூலமுமே சாத்தியமாகு முடியும். எந்தவிதமான அச்சங்களுமற்ற பூரண பாதுகாப்பு உத்தரவாதம் இதையே அத்தாட்சிப்படுத்தி உறுதிப்படுத்துகின்றது. ஆம், இந்த விடயம் இவ்வாறு முன்னறிவிப்புச் செய்யப்பட்டதைப் போன்றே அச்சொட்டாக நடந்தேறியது.
هُوَ الَّذٖٓى اَر۟سَلَ رَسُولَهُ بِال۟هُدٰى وَ دٖينِ ال۟حَقِّ لِيُظ۟هِرَهُ عَلَى الدّٖينِ كُلِّهٖ என்ற வசனம் திட்டவட்டமாக “மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கொண்டு வந்த மார்க்கம், ஒட்டுமொத்த மார்க்கங்களையும் மிகைக்கப் போகின்றது” என்ற உண்மையை முன்னறிவிப்புச் செய்கின்றது. ஆனால் அன்றைய நிலவரங்களைப் பொருத்தவரை, ஒவ்வொன்றும் குறைந்த பட்சம் ஒவ்வொரு நூறு மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட கிறிஸ்தவ, யூத மற்றும் மஜூஸி மதங்கள் ஒரு புறமும் இவையும் இவை போன்ற இன்னும் பிற மதங்களையும் தமது உத்தியோகபூர்வ மதங்களாகக்கொண்ட பலநூறு மில்லியன் சனத்தொகையைக் கொண்ட ரோம், சீனா, பாரசீகம் போன்ற சாம்ராஜ்யங்கள் மறுபுறமாகவும் இருக்க, தன்னுடைய சிறிய சொந்தக் கோத்திரத்தின் மீதே பூரண அதிகாரம் இல்லாத நிலையிலிருந்த முஹம்மதே அரபி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் ஒட்டுமொத்த மார்க்கங்களையும், ஒட்டுமொத்த சாம்ராஜ்யங்களையும் வெற்றிகொள்ளப் போகின்றது என்பதை முன்னறிவிப்புச் செய்து மிக உறுதியாகவும் திட்டவட்டமாகவும் உத்தரவாதப்படுத்துகின்றது. ஆம், பசுபிக் சமுத்திரத்திலிருந்து அட்லான்டிக் சமுத்திரம் வரையிலான அகண்டு விரிந்த நிலப்பரப்புகளெல்லாம் இஸ்லாத்தின் கரங்களால் அரவணைக்கப்பட்டதன் மூலம் காலம் அந்த மறைவான செய்தியை உண்மைப் படுத்தியது.
مُحَمَّدٌ رَسُولُ اللّٰهِ وَالَّذٖينَ مَعَهُٓ اَشِدَّٓاءُ عَلَى ال۟كُفَّارِ رُحَمَٓاءُ بَي۟نَهُم۟ تَرٰيهُم۟ رُكَّعًا سُجَّدًا ... اِلٰى اٰخِرِ என்று தொடரும் வசனத்தின் ஆரம்பப் பகுதியானது, மனிதகுலத்தில் நபிமார்களுக்கு அடுத்த வரிசையிலுள்ள உத்தம புருஷர்களாகத் திகழும் ஸஹாபாக்களை அந்த அந்தஸ்துக்கு உயர்த்துவதற்குக் காரணமாக அமைந்த சிரேஷ்டமான பண்புகளையும் உயர் விழுமியங்களையும் கொண்டு அறிமுகப்படுத்துகின்றது. இந்த வகையில் மேற்படி வசனத்துடைய தெளிவான அர்த்தமானது, ஸஹாபா சமூகத்தில் பல்வேறு அந்தஸ்துக்குரியவர்களை அவர்களுடைய சிறப்பம்சங்களையும் பதவிகளையும் கொண்டு அறிமுகப்படுத்துவதைப் போன்றே அந்த வசனத்தின் சாடையான அர்த்தமும் கூட –சத்தியவான்களுடைய ஏகோபித்த அத்தாட்சிக்கமைய- நபியுடைய வபாத்துக்குப் பிறகு அடுத்தடுத்து கிலாபத் பதவிக்கு வர இருந்த குலபாஉர் ராஷிதீன்களை, அவர்கள் ஒவ்வொருவரிடமும் காணப்பட்ட பிரசித்தமானதும் தனித்துவமானதுமான சிறப்புப் பண்புகளை முற்படுத்துவதனூடாக, அவர்கள் கலீபாவாகத் தெரிவு செய்யப்பட்ட வரிசைப்படியே முன்னறிவிப்புச் செய்கின்றது. அதாவது, وَالَّذِينَ مَعَهُ என்ற வார்த்தையானது, மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் தனக்கிருந்த அதி சிரேஷ்டமான நட்பு, நெருக்கம், பரஸ்பர புரிந்துணர்வு என்பவற்றால் ஸஹாபாக்களுக்கு மத்தியில் பிரசித்தம் பெற்று, நால்வருக்கும் மத்தியில் முதலாவதாக வபாத்தாக நேர்ந்ததன் மூலம் இந்த விடயத்திலும் அண்ணலவர்களோடுள்ள நெருக்கத்தில் முந்திய ஹழரத் அபூபக்கர் ஸித்தீக் அவர்களைக் குறிக்கின்றது. அவ்வாறே, اَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ என்ற வார்த்தையும் கூட, பாரெங்கும் கோலோச்சிய பெரும் பெரும் சாம்ராஜ்யங்களைத் தன்னுடைய மகத்தான வெற்றிகள் மூலம் நடுநடுங்க வைத்து, தான் நிலைநாட்டிய அசைக்கவோ பிசைக்கவோ முடியாத நீதியைக் கொண்டு அக்கிரமக்காரர்களைக் கதிகலங்க வைத்த ஹழரத் உமரே ஃபாரூக் (ரழி) அவர்களை அவர்களுடைய எதிர்கால நிலமைகளுடன் சுட்டிக்காட்டுகின்றது. அதனைத் தொடர்ந்து வருகின்ற رُحَمَاءُ بَيْنَهُمْ என்ற வார்த்தை, தன்னைச் சூழ மிகக் பயங்கரமான ஒரு பித்னாவுக்கான சூழ்ச்சிகள் தீட்டப்பட்டுக்கொண்டிருந்த போது, தன்னுடைய உன்னதமான கருணை, இரக்க சுபாவம் என்பவற்றின் வெளிப்பாடாகவும், முஸ்லிம்களுக்கு மத்தியில் இரத்தம் சிந்தப்படாதிருக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவும் பூரண மனத்திருப்தியோடு தனது உயிரைத் தியாகம் செய்வதைத் தெரிவு செய்து, குர்ஆன் ஓதிய நிலையில் ஷஹீதாகிய ஹழரத் உஸ்மான் (ரழி) அவர்களை அவர்களுடைய எதிர்கால நிலமைகளுடன் குறித்துக் காட்டுகின்றது. அவ்வாறே, تَرَيهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلاً مِنَ اللَّهِ وَ رِضْوَانًا என்ற வார்த்தையும் கூட ஓர் இஸ்லாமியக் கதாநாயகனாக பூரண தகுதியோடு அதிகாரத்தையும் கிலாபத்தையும் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னரும் பூரண உலகப்பற்றவர்களாக மிகுந்த சிக்கனத்தோடும் எளிமையோடும் வாழ்ந்து, நீண்ட ருகூஃ ஸுஜூத்களில் அதிகமதிகம் ஈடுபடுபவர்களாக இருந்த ஹழரத் அலி (ரழி) அவர்களை அவர்களுடைய எதிர்கால நிலமைகளுடன் கட்டியம் கூறுகின்றது. கூடவே அண்ணாருடைய காலத்தில் தோன்றிய பித்னாக்களுக்கும் யுத்தங்களுக்கும் அவர்கள் பொருப்புதாரியல்ல என்பதையும் அவர்களுடைய எண்ணங்களும் ஆசைகளும் எப்போதும் அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்துக்குட்பட்டதாக இருந்தன என்பதையும் உத்தரவாதப்படுத்துகின்றது.
ذَلِكَ مَثَلُهُمْ فِى التَّوْرَيةِ என்ற வசனம் இரண்டு கோணங்களில் மறைவான செய்தியாகும்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் போன்ற ஓர் உம்மியைப் பொறுத்தவரை மறைவான நிலையில் இருக்கின்ற -ஸஹாபாக்களுடைய பண்புகளைப் பற்றிய- தவ்ராத்துடைய செய்திகளை இந்த வசனம் எடுத்துரைக்கின்றது. ஆம் –பத்தொன்பதாவது கடிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதைப் போன்று- தவ்ராத்தில் இறுதி நபியையும் அவர்களுடைய தோழர்களையும் பற்றிப் பேசுகின்ற இடத்தில் “புனிதர்களுடைய கொடிகள் அவர்களிடமிருக்கும்” என்ற வசனம் காணப்படுகின்றது. அதாவது அண்ணலவர்களின் தோழர்கள் கட்டுப்படுபவர்களாகவும், இபாதத் விடயத்தில் மேலானவர்களாகவும், ஸாலிஹானவர்களாகவும், விலாயத்தை உடையவர்களாகவும் இருந்தமையினால், தவ்ராத் அந்த ஒட்டுமொத்த பண்புகளையும் புனிதர்கள் அதாவது என்ற பிரயோகத்தினூடாகக் குறிப்பிடுகின்றது. தவ்ராத், ஏராளமான மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டு சிதைவுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்ட போதிலும் கூட சூரா ஃபத்ஹுடைய مَثَلُهُمْ فِى التَّوْرَيةِ என்ற வசனத்தின் தீர்ப்பை உண்மைப்படுத்துகின்ற ஏராளமான வசனங்கள் அதில் இன்னும் காணப்படுகின்றன.
مَثَلُهُمْ فِى التَّوْرَيةِ என்ற வசனத்தினூடாக “ஸஹாபாக்கள் மற்றும் தாபிஈன்களுடைய உள்ளங்களில் இருந்த ஒளி முகங்களில் பிரகாசிக்கின்ற அளவு அவர்கள் இபாதத் விடயத்தில் உயர்ந்த அந்தஸ்துகளை அடையப்போகின்ற விடயத்தையும், அவர்களுடைய நெற்றிகளில் அதிகமான ஸுஜூத்கள் காரணமாகத் தோற்றமெடுக்கும் விலாயத் முத்திரைகள் காணப்படும் என்ற விடயத்தையும்” முன்னறிவிப்புச் செய்கின்றது. உண்மையில் ஸஹாபாக்களுடைய வாழ்வு இந்த உண்மையைத் தெட்டத் தெளிவாகவும் நிரூபித்து விட்டது. தாபிஈன்களுக்கு மத்தியிலும் கூட அப்படிப்பட்ட பயங்கரமான பித்னாக்களும் அரசியல் குழப்பங்களும் மேலோங்கிய காலகட்டத்தில் ஜைனுல் ஆப்தீன் போன்ற, இரவிலும் பகலிலுமாக ஆயிரம் ரகஅத் தொழுகையை நிறைவேற்றிய இறை நேசர்களும், தாஊஸு யெமனீ போன்ற, நாற்பது வருடங்கள் இஷாவுடைய வுழுவோடு ஃபஜ்ருடைய தொழுகையை நிறைவேற்றிய நல்லடியார்களும் مَثَلُهُمْ فِى التَّوْرَيةِ என்ற வசனத்திலுள்ள முன்னறிவிப்பை நிதர்சனப்படுத்தினார்கள்.
وَ مَثَلُهُمْ فِى اْلاِنْجِيلِ كَزَرْعٍ اَخْرَجَ شَطْاَهُ فَاۤزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ என்ற வசனமும் இரண்டு கோணங்களில் மறைவான செய்தியை முன்னறிவிப்பதாகும்.
உம்மி நபியைப் பொறுத்தவரையில் மறைவான நிலையில் இருக்கின்ற -ஸஹாபாக்களைப் பற்றி- இஞ்ஜீலில் வருகின்ற முன்னறிவிப்புக்கள் பற்றிய செய்தியாகும். ஆம் இஞ்ஜீலில் இறுதி நபியின் பண்புகள் சம்பந்தமாக مَعَهُ قَضِيبٌ مِنْ حَدِيدٍ وَاُمَّتُهُ كَذَلِكَ போன்ற வசனங்கள் காணப்படுகின்றன. அதாவது, “ஹழரத் ஈஸா (அலை) அவர்களைப் போன்று வாலேந்தாத நிலையிலன்றி, வாலுக்கு சொந்தக்காரனான ஒரு நபி வர இருக்கின்றார். அவர்கள் ஜிஹாதில் பங்கேற்பவராக இருப்பார்கள். அவர்களின் தோழர்களும் கூட வாலேந்தி ஜிஹாதில் பங்குகொள்பவர்களாக இருப்பார்கள். வாலுக்கு சொந்தகாரனான அந்த நபி உலகின் தளபதியாக மாறுவார்” என்று இஞ்சீலுடைய வசனங்கள் கூறுகின்றன. ஆம், இஞ்ஜீலின் பிறிதொரு இடத்தில் “நான் போகிறேன், உலகத்தின் தலைவர் வருகின்றார்” என்று கூறப்பட்டுள்ளது. இஞ்ஜீலிலுள்ள இந்த வசனங்கள் அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால் பின்வருமாறு அர்த்தப்படுகின்றது. “உண்மையில் ஸஹாபாக்கள் விதைகளாக இருந்த போது குறைவானவர்களாகவும் பலமற்றவர்களாகவும் தோற்றமளிப்பார்கள். ஆனால் அந்த விதைகள் விருட்சமாகி ஓங்கி வளர்ந்து வியாபித்துப் பலம்பெறும்போது அது காபிர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். என்றாலும் அவர்கள் அந்த வெறுப்புக்குள்ளேயே புதைந்து விடுவார்கள். பின்னர் அந்தத் தோழர்கள் தமது வால்களைக் கொண்டு மனித குலத்தை அழிவிலிருந்தும் அநியாயக்காரர்களிடமிருந்தும் மீட்டெடுத்து தமக்குத் தலைவராகத் திகழும் நபிய்யுனா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமக்கு மாத்திரமன்றி உலகமக்கள் அனைவருக்கும் தலைவராவார்கள் என்பதை நிரூபிப்பார்கள்.” ஆம் இந்த வகையில் இஞ்சீலுடைய வசனங்கள் சூரதுல் ஃபத்ஹுடைய மேற்படி வசனங்களின் அர்தத்தை உண்மைப்படுத்துகின்றன.
மேற்படி மறை வாக்கு பின்வரும் விடயத்தைக் கட்டியம் கூறுவதாக இருக்கின்றது. “உண்மையில் ஸஹாபாக்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாகவும் பலம் குன்றியவர்களாகவும் இருந்தமையினால் ஹுதைபியா உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகினார்கள். ஆனால் அல்லாஹ்வுடைய குத்ரத் கரங்களால் பூமிப்பந்தின் மீது விதைக்கப்பட்டுத் தளிர்களாக மாறியிருந்த அந்த சொற்பத் தொகையினர் மனிதர்களுடைய பொடுபோக்குப் பார்வைக்கு அன்று அற்பமாகவும் பலவீனமாகவும் சொற்பமாகவும் தென்பட்டாலும் சிறியதொரு காலத்துக்குள் மிகவேகமாக அசாதாரணமானதொரு வளர்ச்சியையும் எழுச்சியையும் பலத்தையும் அடையப்போகின்றார்கள், அந்தத் தளிர்கள் ஓங்கி வளர்ந்து பலம் பெற்று கணிமயமானதாகவும் பரக்கத் பொருந்தியவையாகவும் பல்கிப்பெருகி ஆழ வேரூண்டப்போகின்றன. அவர்களைப் பார்த்து பெரும் பெரும் சாம்ராஜ்யங்கள் கூட பொறாமையும் வயிற்றெறிச்சலும் கொள்வார்கள்” போன்ற விடயங்களையெல்லாம் கட்டியம் கூறுகின்றன. ஆம், உண்மையில் எதிர்காலம் இந்த மறைவான செய்தியை வெட்ட வெளிச்சமாகத் திரையிட்டுக் காட்டியது. மேலும் இந்த வசனத்தில் இன்னுமொரு சாடையான எதிர்வு கூறலும் காணப்படுகின்றது. அதாவது, ஸஹாபாக்களை அவர்களது உன்னத பண்புகளைக் கொண்டு போற்றுகின்ற இந்த இடத்தில் இடப்பொருத்தப்பாட்டுக்கமைய அவர்களுக்குக் கிடைக்கப்போகின்ற மிகப்பெரிய கூலிகளைப் பற்றிய சுபசோபனங்கள் தேவைப்படுவதாக இருக்கின்ற போது அவற்றுக்குப் பதிலாக مَغْفِرَةً என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஸஹாபாக்களுக்கு மத்தியில் ஏற்பட இருக்கும் பித்னாக்கள் காரணமாக அவர்களுக்கிடையே பெரும் தவறுகள் நிகழும் என்ற விடயம் சாடையாக சுட்டிக்காட்டப்படுகின்றது. ஏனெனில் பாவமண்ணிப்பு என்பது தவறுக்கான அத்தாட்சியாகும். ஆகவே அப்படிப்பட்ட பித்னாக்கள் நிறைந்த ஒரு காலத்தில் அந்த ஸஹாபாக்களைப் பொருத்தவரை அவர்களுடைய உச்சமட்ட எதிர்பார்ப்பாகவும், அவர்களுக்கு செய்ய முடியுமான மிகப்பெரிய உதவியாகவும், அவர்களுக்கான மிகப் பெரிய கூலியாகவும் இருக்கப்போவது மஃபிரத்தாகும்; அவர்களுடைய தவறுகளுக்காக அவர்களைத் தண்டிக்காதிருப்பதாகும். ஆம் مَغْفِرَةً என்ற சொல் இந்த அழகிய அர்த்தத்தைப் பொதியப்பெற்றதாக இருப்பதைப் போன்றே இந்த சூராவின் ஆரம்பத்தில் வரும் لِيَغْفِرَلَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَاَخَّرَ என்ற வசனத்துடனும் தொடர்புபட்டதாகும். சூராவின் ஆரம்பத்திலுள்ள இந்த வசனம் உண்மையில் ஹகீகத்தான பாவங்களுக்கான பாவமண்ணிப்பு சம்பந்தமாகப் பேசுவதில்லை. ஏனெனில் நபியவர்கள் பாவங்களுக்கு இடமில்லாத பரிசுத்தத்தன்மை மிக்கவர்களாவார்கள். எனவே நாம் புரிந்து கொள்கின்ற அர்த்தத்தில் அன்றி நுபுவ்வத்துடைய அந்தஸ்துக்கு ஏற்றாற்போன்ற ஓர் அர்த்தத்தில் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மஃபிரத்தைக் கொண்டு சுபசோபனம் கூறப்பட்டுள்ளது. இதன் தொடரில் இறுதியில் ஸஹாபாக்களுக்கும் மஃபிரத்தைக் கொண்டு சுபசோபனம் கூறுவதானது மேலுள்ள சாடையான எதிர்வுகூறலுக்கு இன்னுமோர் அழகைச் சேர்க்கின்றது. ஆம் பத்ஹின் இருதியிலுள்ள மேற்கூறப்பட்ட மூன்று வசனங்களிலும் குர்ஆனுடைய பத்து வகையான அற்புதங்களுக்கு மத்தியில், வெறும் மறைவானவற்றை எதிர்வுகூறுதல் சம்பந்தமான அற்புத வகையிலிருந்து ஏழு அம்சங்களை விவரித்தோம். சுயதெறிவாற்றல் மற்றும் விதி சம்பந்தமாகப் பேசும் இருபத்தி ஆறாவது வார்த்தையின் இறுதியில், மேலே இறுதியாக வரும் வார்த்தையிலுள்ள எழுத்துக்களின் அமைவுகளில் காணப்படும் முக்கியமானதோர் அற்புதத்தன்மை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம் இந்த இறுதி வசனம், மொத்தமாக ஸஹாபாக்ளோடு சம்பந்தப்பட்டதாக இருப்பதைப் போன்றே அது முன்வைக்கும் வரையறைகளும் கூட ஸஹாபாக்களுடைய பல்வேறுபட்ட நிலமைகளோடு சம்பந்தப்பட்டதாகவே இருக்கின்றது. அவ்வாறே அதிலுள்ள வார்த்தைகள் ஸஹாபக்களுடைய பண்புகளை வர்ணிப்பதைப் போன்றே, அதிலுள்ள எழுத்துக்களும் குறிப்பிட்ட சில எழுத்துக்களின் கூட்டுத்தொகையும், பத்ர் ஸஹாபாக்களையும், உஹத், ஹுனைன், ஸுஃப்பா, ரிழ்வான் போன்ற அணிகளில் காணப்பட்ட பிரபலமான ஸஹாபாப் பெருமக்களையும் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. அத்தோடு இல்முல் ஜிஃப்ருடைய ஒரு பகுதியாகவும் ஒரு திறவுகோளாகவும் இருக்கின்ற தவாஃபூக் எனப்படும் பரஸ்பர அமைவுப் பொருத்தத்தின் அடிப்படையிலும் அப்ஜத் கணக்கின் அடிப்படையிலும் பார்க்கின்ற போது இந்த வசனம் இன்னும் ஏராளமான இரகசியங்களை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ சூரா பத்ஹின் இறுதி வசனத்தில் சாடையான பொருள்படுத்தல் மூலமாக முன்வைக்கின்ற மறைவான செய்திகளோடுள்ள தொடர்பு காரணமாகவும்,, அதே செய்தியை அதேவகையானதொரு மறைபொருளினூடாக சாடை செய்வதன் காரணமாகவும் பின்வரும் வசனமும் இவ்விடத்தில் விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
وَلَهَدَيْنَاهُمْ صِرَاطًا مُسْتَقِيمًا وَمَنْ يُطِعِ اللَّهَ وَ الرَّسُولَ فَاُولَئِكَ مَعَ الَّذِينَ اَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَ الصِّدِّيقِينَ وَ الشُّهَدَاءِ وَ الصَّالِحِينَ وَ حَسُنَ اُولَئِكَ رَفِيقًا இந்த வசனத்தின் விரிவுறையிலிருக்கும் ஆயிரக்கணக்கான குறிப்புக்களிலிருந்து இரண்டை மாத்திரம் இவ்விடத்தில் குறிப்பிடுகின்றோம்.
அற்புத குர்ஆனானது, அதன் சொற்கள் மூலமாகவும் நேரடி அர்த்தங்கள் மூலமாகவும் சத்தியத்தைப் பிரஸ்தாபிப்பதைப் போன்றே, அதன் உரைநடையும், அதன் தொனியும், அதன் பிரயோகங்களும், தொகுதிகளும் கூட ஏரளமான சாடையான அர்த்தங்களைப் பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு தனி வசனத்திலும் ஏராளமான அர்த்த மண்டலங்கள் காணப்படுகின்றன. குர்ஆன், அனைத்தையும் வியாபித்த அறிவு ஞானத்திலிருந்து வெளிப்பட்டமையினால் அனைத்து அர்த்தங்களுமே நோக்கமாகக் கொள்ளப்பட்டிருக்க முடியும். மனிதனின் குறுகிய, வரையறுக்கப்பட்ட சிந்தனையிலிருந்தும் சுய தேர்விலிருந்தும் பிறக்கும் வார்த்தைகளைப் போன்று ஓரிரு அர்த்தங்களோடு வரையறுக்கப்பட்டவையாக அவை இருப்பதில்லை. ஆம், இந்தத் தாத்பரியம் காரணமாகத் தான் குர்ஆனிய வசனங்களிலிருந்து பிரவாகிக்கும் எண்ணற்ற சத்தியங்கள் தஃப்ஸீர் ஆசிரியர்களால் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. அவர்களால் தெளிவுபடுத்தப்படாத எண்ணற்ற சத்தியங்கள் இன்னும் அதனுள் பொதிந்து காணப்படுகின்றன. மேலும் குறிப்பாக அதன் எழுத்துகளிலும், சாடையான அர்த்தங்களிலும் பல்வேறு மகத்தான அறிவியல்கள் காணப்படுகின்றன.
ஆம் இந்தப் புனித வசனம் وَلَهَدَيْنَاهُمْ صِرَاطًا مُسْتَقِيمًا وَمَنْ يُطِعِ اللَّهَ وَ الرَّسُولَ فَاُولَئِكَ مَعَ الَّذِينَ اَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَ الصِّدِّيقِينَ وَ الشُّهَدَاءِ وَ الصَّالِحِينَ وَ حَسُنَ اُولَئِكَ رَفِيقًا என்ற பிரயோகத்தினூடாக நபிமார்களும் ஸித்தீகீன்களும் ஷுஹதாக்களும் ஸாலிஹீன்களும் தாபிஈன்களும் மனித குலத்துக்கு மத்தியில் நேரான பாதையிலும் ஹகீகத்தான இறை அருட்கொடைகளுக்குப் பாத்திரமானவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை எடுத்துக் கூறுவதோடு கூடவே, இஸ்லாமிய உலகில் அந்த ஐந்து பிரிவினரிலும் அதி சிரேஷ்டமானவர்களைத் தனித்தனியாகச் சுட்டிக் காட்டுவதற்காக அந்த ஒவ்வொரு கூட்டத்துக்குமுரிய முன்னன் இமாம்களை அவர்களது பிரபல்யமான பண்புகளைக் கொண்டு அடையாளப்படுத்தி அத்தாட்சிப்படுத்துகின்றது. மேலும் மறைவான செய்திகள் வகைக்குற்பட்ட ஓர் அற்புதமாக அந்தக் கூட்டங்களின் முன்னோடிகளுடைய எதிர்கால நிலமைகளையும் ஒருவகையில் எதிர்வுகூறுகின்றது. ஆம் مِنَ النَّبِيِّينَ என்பது எவ்வாறு குறிப்பாக ஹழரத் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் குறிப்பிடுகின்றதோ, وَالصِّدِّيقِينَ என்ற பிரயோகமும் கூட குறிப்பாக அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்களைக் குறிப்பிடுகின்றது. அத்தோடு மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அடுத்த ஸ்தானத்துக்குரியவராகவும் அண்ணாருக்குப் பிறகு தலைமைக்கு வரப்போகின்றவரும் அண்ணவர்களே என்ற விடயத்தையும், ‘ஸித்தீக்’ என்ற நாமம் உம்மத்தளவில் அவர்களுக்கான ஒரு சிறப்புப்பெயராக ஆகப்போவதோடு ஸித்தீகீன்களின் தலைவராக ஆகுவார் என்ற விடயத்தையும் எதிர்வு கூறுகின்றது. அவ்வாறே وَالشُّهَدَاءِ என்ற சொல்லும் கூட குறிப்பாக ஹழரத் உமர், ஹழரத் உஸ்மான், ஹழரத் அலி (ரிழ்வானுல்லாஹி அலைஹிம் அஜ்மஈன்) ஆகியோரைக் குறிப்பிடுகின்றது. அத்தோடு இந்த மூவரும் ஸித்தீக் (அலை) அவர்களைத் தொடர்ந்து நுபுவ்வத்துடைய கலீபாக்களாக பதவியேற்கப் போகின்றனர் என்ற விடயத்தையும், மூவருமே ஷஹீதாக மரணிக்கப் போகின்றார்கள் என்ற விடயத்தையும், அந்த ஷஹாதத் அந்தஸ்த்து அவர்களுடைய ஏனைய அனைத்து அந்தஸ்துக்களிற்கும் முத்தாய்ப்பாய் அமையப் போகின்றது என்ற விடயத்தையும் சாடையான அர்த்தங்களின் மூலம் குறிப்பிடுகின்றது. பின்னர் وَالصَّالِحِينَ என்ற சொல்லினூடாக திண்ணைத் தோழர்கள், பத்ர் ஸஹாபாக்கள் போன்ற தெரிவுசெய்யப்பட்ட ஸஹாபாக்கள் குறிப்பாக அடையாளப்படுத்துகின்றனர். தொடர்ந்து வரும் وَ حَسُنَ اُولَئِكَ رَفِيقًا என்ற வசனத்தின் நேரடி அர்த்தமானது, மேலுள்ள இமாம்களுக்கு வழிப்பட்டு நடப்பதற்கான ஆர்வத்தை ஊட்டுவதோடு, தாபிஈன்களிடமுள்ள தபஇய்யத்தை கண்ணியத்துக்குரிய அழகிய ஒரு செயலாகவும் பிரஸ்தாபிக்கின்றது. அதே நேரம் சாடையான அர்த்தத்தினூடாக اِنَّ الْخِلاَفَةَ بَعْدِى ثَلاَثُونَ سَنَةً என்ற ஹதீஸின் தீர்ப்புக்கமைய ஐந்தாவது கலீபாவாக வர இருக்கின்ற ஹழரத் ஹஸன் (ரழி) அவர்களை (அவர்களுடைய கிலாபத் காலம் மிகக் குறுகியதாக இருந்தாலும், உச்சமட்ட முக்கியத்துவத்தைப் பறைசாற்றுவதற்காக) மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றது. சுருக்கமாக ஸூரதுல் பத்ஹின் இறுதியிலுள்ள வசனம் நான்கு கலீபாக்களையும் வரிசையாகக் குறிப்பிடுவதைப் போன்றே, இந்த வசனமும் அதற்குப் பலம் சேர்க்கும் விதமாக அந்த கலீபாக்களை அவர்களுடைய எதிர்கால நிலமைகளை வைத்து குறித்துக் காட்டுகின்றது. ஆம் குர்ஆனில் காணப்படுகின்ற பல்வேறுபட்ட அற்புத வகைகளுக்குள் மறைவானவற்றை எதிர்வுகூறும் வகையைச் சேர்ந்த அற்புதங்கள் எண்ணி முடிக்க இயலாத அளவு ஏரளமாக முழுக் குர்ஆனிலும் பரவிக் காணப்படுகின்றன. மேம்போக்கான அவதானிகள் இந்த எண்ணிக்கையை நாற்பது ஐம்பதோடு மட்டுப்படுத்துவது அவர்களுடைய மேலோட்டமான அவதானத்தைக் கொண்டாகும். ஆனால் உண்மையில் இந்த எண்ணிக்கை பல ஆயிரங்களை இலகுவாகத் தாண்டி விடும். சிலபோது ஒரே வசனத்தில் நான்கைந்து கோணங்களில் மறைவான செய்திகளின் எதிர்வுகூறல்கள் காணப்படுகின்றன. رَبَّنَا لَا تُؤَاخِذ۟نَٓا اِن۟ نَسٖينَٓا اَو۟ اَخ۟طَا۟نَا سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ
فَاُولَئِكَ مَعَ الَّذِينَ اَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَ الصِّدِّيقِينَ وَ الشُّهَدَاءِ وَ الصَّالِحِينَ وَ حَسُنَ اُولَئِكَ رَفِيقًا என்ற வசனமானது, சூரா ஃபத்ஹுடைய இறுதிப்பகுதியிலுள்ள மறைவான செய்திக்கு வலுச்சேர்க்கின்ற ஒரு வசனமாகவும், ஸூரா ஃபாதிஹாவில் வருகின்ற ஸிராதுல் முஸ்தகீமை உடையவர்கள் யார் என்பதை வியாக்கியானம் செய்கின்ற ஒரு வசனமாகவும், صِرَاطَ الَّذِينَ اَنْعَمْتَ عَلَيْهِمْ என்ற வசனத்தின் மூலம் நாடப்படுபவர்கள் யார் என்பதைத் தெளிவுபடுத்துக்ன்ற ஒரு வசனமாகவும், முடிவில்லாமல் வியாபித்திருக்கின்ற நித்தியத்தை நோக்கிய பாதையில் தோழமைக்கும் நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் கண்ணியத்துக்கும் நெருக்கத்துக்கும் பாத்திரமான பிரகாசமான கூட்டத்தினர் யார் என்பதைத் தெளிவாக அடையாளப்படுத்துகின்ற ஒரு வசனமாகவும், இப்படிப்பட்டவர்களுக்கு வழிப்பட்டு அவர்களோடு தோழமை கொள்ளுமாறு ஈமான் கொண்டவர்களுக்கும் பிரக்ஞையுள்ளவர்களுக்கும் அற்புதமானதொரு வகையில் ஆர்வமூட்டுகின்ற ஒரு வசனமாகவும் திகழ்கின்றது. கூடவே சூரா ஃபத்ஹின் இறுதி வசனத்தை ஆராய்ந்ததைப் போன்றே, சொல்லாட்சிக் கலையின் கிளைகளாக இருக்கின்ற “சொற்களின் மறைபொருள்” மற்றும் “பிரயோகங்களின் சாடை அர்த்தம்” போன்ற அடிப்படைகளை வைத்துப் பார்க்கும் போது, இந்த வசனமானது, அதில் நாடப்படுகின்ற நேரடி அர்த்தத்துக்கு அப்பால் சாடையான மற்றும் மூடப்பட்ட அர்த்தங்களுக்கூடாக நான்கு கலீபாக்களுடன் ஐந்தாவதாக ஹஸன் (ரழி) அவர்களையும் குறித்துக் காட்டுகின்ற ஒரு வசனமாக இருக்கின்றது. அத்தோடு வேறு சில மறைவான அம்சங்களையுன் வேறு சில கோணங்களில் முன்னறிவிப்புச் செய்கின்றது. ஆம், இந்த வசனத்தின் தெளிவான அர்த்தமானது, அல்லாஹ்வுடைய அதி சிரேஷ்டமான அருள்பாக்கியங்களுக்குப் பாத்திரமானவர்களாக இருந்து நேரான பாதையை அடைந்துகொண்ட நபிமார்கள் சமூகத்தையும், ஸித்தீகீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள் கூட்டத்தினரையும் தாபிஈன்களையும் சங்கைப்படுத்தி, இஸ்லாமிய உலகில் அதி சிறப்புக்குரியவர்கள் இந்தக் கூட்டத்தினரே என்பதை திட்டவட்டமாக அறிவிப்புச் செய்கின்றது. அத்தோடு இறுதி நபியின் நுபுவ்வத் வாரிஸுத்துவத்தின் அடிப்படையில் சங்கிலித் தொடராக நீளப்போகும் நபியுடைய வாரிஸுத்துவத்துக்குப் பாத்திரமான சமூகத்தையும், சித்தீகுல் அக்பர் அபூபக்கர் (ரழி) அவர்களுடைய உண்மைத்துவ ஊற்றிலிருந்து சங்கிலித்தொடரெடுக்கும் ஸித்தீகீன்கள் சமூகத்தினரையும், பின்னைய மூன்று கலீபாக்களும் அடைந்து கொண்ட ஷஹாதத் அந்தஸ்தால் பிணைப்புற்ற ஷுஹதாக்கள் சமூகத்தினரையும், وَ الَّذِينَ اۤمَنُوا وَ عَمِلُوا الصَّالِحَاتِ என்ற மறை வசனத்தால் பிணைக்கப்பட்ட ஸாலிஹீன்கள் கூட்டத்தினரையும், قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِى يُحْبِبْكُمُ اللَّهُ என்ற மறை வசனத்திற்கான உதாரணபுருஷர்களாக இருந்து, ஸஹாபாக்களுக்கும் குலபாஉர் ராஷிதீன்களுக்கும் பக்கபலமாக வாழ்ந்து அவர்களுக்கு வழிப்பட்ட தாபிஈன்கள் வகுப்பினரையும் மறைவாக மேற்படி வசனம் சுட்டிக் காட்டுகின்றது. மேலும் وَالصِّدِّيقِينَ என்ற சொல்லானது, மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குப் பின்னர் கலீபாவாகத் தெரிவு செய்யப்பட்டு, உம்மத்தால் ஸித்தீக் என்ற சிறப்புப் பெயரைக் கொண்டு பிரபலமாகப் போகும் ஸித்தீகீன்கள் சமூகத்தின் தலைவராகிய ஹழரத் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அண்ணவர்களை சாடையாகக் குறிப்பிடுகின்றது. மேலும், وَالشُّهَدَاءِ என்ற சொல்லானது நான்கு கலீபாக்களுக்கு மத்தியில் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்களைத் தொடர்ந்து மூன்று ஷஹீத்கள் கலீபாவாக வரப்போவதை குறிப்பாக அறிவிக்கின்றது. ஏனெனில் “ஷுஹதா” என்பது பண்மையாகும். பண்மையின் குறைந்த பட்ச எண்ணிக்கை (அரபியில்) மூன்றாகும். ஆம், இங்கு சாடையாகக் கூறப்பட்டுள்ளதைப் போன்றே இந்த மறைவான முன்னறிவிப்பு நிகழ்ந்தேறியது. وَالصَّالِحِينَ என்ற சொல்லானது, திண்ணைத் தோழர்களைப் போன்று, கட்டுப்பாடு மற்றும் இபாதத் விடயங்களில் தவ்ராத்திலிருக்கும் புகழ்ச்சிக்குப் பாத்திரமான நல்லடியார்களும் தக்வாதாரிகளும் வணக்கசாலிகளும் எதிர்காலத்தில் ஏராளமாகத் தோன்ற இருக்கின்றார்கள் என்பதைக் கட்டியம் கூறுகின்றது. மேலும் وَ حَسُنَ اُولَئِكَ رَفِيقًا என்ற கூற்று, அறிவு மற்றும் அமல்கள் விடயத்தில் ஸஹாபாக்களைச் சார்ந்திருந்து அவர்களுக்கு வழிப்பட்ட தாபிஈன்களுடைய தபஇய்யத்தும் நித்திய உலகத்தை நோக்கிய பாதையில் அந்த நான்கு கலீபாக்களுக்கும் அவர்கள் உறுதுணையாக நின்ற விடயமும் எவ்வளவு அழகானது (ஹஸனானது) என்பதை சிலாகித்துப் பேசுகின்ற அதே வேளை ஹழரத் ஹஸன் (ரழி) அவர்களுடைய -காலத்தின் அடிப்படையில் சிறிய, ஆனால் முக்கியத்துவத்தின் அடிப்படையில் பெரிய- ஒரு சில மாதங்களைக் கொண்ட கிலாபத்தையும் குறிப்பிடுகின்றது. இங்கு இந்த அர்த்தங்களைக் கொடுப்பது ஏற்கனவே கூறப்பட்டதைப் போன்று சொல்லாட்சிக் கலையில் காணப்படும் “சொற்களின் மறைபொருள்” மற்றும் “பிரயோகங்களின் சாடை அர்த்தம்” போன்ற விதிமுறைகளாகும். ஆம், உண்மையில் கிலாபத் காலம் குறைவானதாக இருந்தாலும் நபிகளாருடைய اِنَّ الْخِلاَفَةَ بَعْدِى ثَلاَثُونَ سَنَةً என்ற எதிர்வு கூறலையும், اِنَّ ابْنِى حَسَنٌ هَذَا سَيِّدٌ سَيُصْلِحُ اللَّهُ بِهِ بَيْنَ فِئَتَيْنِ عَظِيمَتَيْنِ என்ற எதிர்வுகூறலையும் உண்மைப்படுத்தும் விதமாக, இரண்டு பெரும் இஸ்லாமியப் படைகள் எதிரெதிரே வந்த போது அவர்களுக்கு மத்தியில் ஒப்பந்தம் செய்து முஸ்லிம்களது இரத்தம் சிந்தப்படாது பாதுகாத்த ஹழரத் ஹஸன் (ரழி) அவர்களது கிலாபத்துடைய முக்கியத்துவத்தின் காரணமாக நான்கு கலீபாக்களோடு ஐந்தாவதாக அண்ணவர்களுடைய பெயரும் وَ حَسُنَ اُولَئِكَ رَفِيقًا என்ற வார்த்தையி மேற்கூறப்பட்ட விதிக்கமைவாக சாடை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம், இந்த வசனத்தில் மேற்கூறப்பட்ட சாடையான முன்னறிவிப்புக்களைப் போன்றே இன்னும் பல இரகசியங்களும் காணப்படுகின்றன. எமது விடயப் பரப்போடு சம்பந்தப்படாமையின் காரணமாக இப்போதைக்குத் திரைகள் நீக்கப்படவில்லை. ஆம், சர்வஞானமிக்க குர்ஆனுடைய ஏராளமான வசனங்கள் பல கோணங்களில் மறைவான எதிர்வுகூறல் வகையைச் சார்ந்தவையாகக் காணப்படுகின்றன. குர்ஆனில் வரும் இந்த வகைக்குற்பட்ட மறைவான எதிர்வுகூறல்கள் பல ஆயிரங்களாகும். رَبَّنَا لَا تُؤَاخِذ۟نَٓا اِن۟ نَسٖينَٓا اَو۟ اَخ۟طَا۟نَا سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ

